மகரம் ஏப்ரல் மாத ராசி பலன் 2021: திடீர் பணவரவினால் மன மகிழ்ச்சி அதிகரிக்கும்
சென்னை: மகர ராசிக்காரர்களுக்கு ஏப்ரல் மாதம் மன மகிழ்ச்சியும் உற்சாகமும் நிறைந்த மாதமாக அமையப்போகிறது. கொடுக்கப் போகிறது. ஏப்ரல் மாதம் கிரகங்களின் சஞ்சாரத்தை பார்த்தால் நவகிரகங்களின் நாயகன் சூரியன் மீன ராசியில் பயணிக்கிறார் உச்சம் பெற்ற சுக்கிரன், நீசம் பெற்ற புதன் ரிஷபத்தில் செவ்வாய் ராகு, விருச்சிகத்தில் கேது, மகரத்தில் சனி, குரு, என கிரகங்கள் சஞ்சரிப்பதால் மகர ராசிக்காரர்களுக்கு குதூகலம் நிறைந்த மாதமாக அமைந்துள்ளது.
ஏப்ரல் மாதத்தில் கிரக பெயர்ச்சியைப் பார்த்தால் சூரியன் மீன ராசியில் இருந்து 14ஆம் தேதி மேஷ ராசிக்கு சென்று உச்சமடைகிறார். உச்சம் பெற்ற சூரியனின் பார்வை துலா ராசியின் மீது விழுகிறது. சுக்கிரனும் மேஷ ராசியில் பயணிக்கிறார். புதன் நீசம் பெற்று சஞ்சரிப்பார். 16ஆம் தேதி புதன் மேஷ ராசிக்கு இடப்பெயர்ச்சியாகிறார். 30ஆம் தேதி ரிஷப ராசிக்கு மாறுகிறார்.
குரு பகவான் ஏப்ரல் 5ஆம் தேதி மகர ராசியில் இருந்து அதிசார பெயர்ச்சியாகி கும்ப ராசிக்கு செல்கிறார். ராகு உடன் இணைந்துள்ள செவ்வாய் ரிஷப ராசியில் இருந்து 13ஆம் தேதி மிதுன ராசிக்கு இடப்பெயர்ச்சி அடைகிறார். இந்த மாதத்தில் கிரகங்களின் இடமாற்றம் அதிகம் உள்ளது. இந்த கிரகங்களின் சஞ்சாரம் மாற்றத்தின்படி மகர ராசிக்கு ஏப்ரல் மாதம் பலன்கள் எப்படி இருக்கும் என்று பார்க்கலாம்.

முன்யோசனை அவசியம்
சனி பகவானை ராசி அதிபதியாகக் கொண்ட மகர ராசிக்காரர்களே, இந்த மாதம் உங்களுக்கு கிரகங்களின் சஞ்சாரம் சாதகமாக உள்ளது. குரு பகவான் உங்கள் ராசியில் இருந்து இரண்டாம் வீட்டிற்கு பெயர்ச்சி அடைகிறார். சனி பகவான் உங்கள் ராசியில் ஆட்சி பெற்று சஞ்சரிக்கிறார். மூன்றாம் வீட்டில் சூரியன் புதன் சுக்கிரன், ஐந்தாம் வீட்டில் செவ்வாய், ராகு, லாப ஸ்தானத்தில் கேது என கிரகங்கள் சஞ்சரிக்கின்றன. இந்த மாதம் எந்த விசயத்திலும் அவசரப்பட்டு முடிவு செய்ய வேண்டாம். வீடு சொத்து வாங்கும் போது யோசித்து வாங்கவும்.

பேச்சில் கவனம்
மாத பிற்பகுதியில் சூரியன் சுக்கிரன், புதன் நான்காம் வீட்டிற்கு செல்கின்றனர். வண்டி வாகனங்களில் போகும் போது கவனம் தேவை. குரு உங்கள் ராசிக்கு இரண்டாம் வீட்டிற்கு செல்வதால் பேசும் போது யோசித்து பேசவும் நிதானமாக பேசுவது நல்லது. கோபத்தில் வார்த்தைகளை கொட்டி விட வேண்டாம். சொந்த வீட்டு ரகசியங்களை வெளியாட்களிடம் பகிர்ந்து கொள்ள வேண்டாம்.

புது வேலை கிடைக்கும்
தொழில் வியாபாரத்தில் அதிக முதலீடு செய்ய வேண்டாம். இருக்கிற சரக்குகளை விற்க முயற்சி செய்வது நல்லது. புது வேலைக்கு முயற்சி செய்யலாம். நல்ல வேலை கிடைக்கும். பெண்களுக்கு சமூகத்தில் மதிப்பு மரியாதை கூடும். வேலை செய்யும் இடத்தில் பதவி உயர்வு கிடைக்கும். தாயாரிடம் இருந்து வந்த மனக்கசப்புகள் மாறும் தாய் வழி உறவினர்களிடம் இருந்து வந்த பிரச்சினைகள் நீங்கும்.

மன குழப்பம் நீங்கும்
மாணவர்களுக்கு சாதகமான சூழ்நிலை நிலவுகிறது என்றாலும் இந்த மாதம் கடின உழைப்பு தேவை. படிப்பில் கவனம் அவசியம். ஆன்லைன் கல்வியாக இருந்தாலும் ஆசிரியர்கள் சொல்வதை கேட்டு நடப்பது அவசியம். இளம் பெண்கள், ஆண்கள் திருமணம் சுப காரியம் தொடர்பாக பேசும் போது ஒருமுறைக்கு இருமுறை யோசித்து பேசுவது அவசியம். புதிதாக பேசுபவர்களிடம் குடும்ப விசயங்களை வெளியில் சொல்ல வேண்டாம். குல தெய்வத்தை வணங்க குழப்பங்கள் நீங்கும். வியாழக்கிழமைகளில் ஆஞ்சநேயருக்கு வெற்றிலை மாலை சாற்றி வணங்குவதன் மூலம் பாதிப்புகள் குறைந்து நன்மைகள் அதிகரிக்கும்.