மண்டைக்காடு பகவதி அம்மன் கோவில் மாசிக்கொடை விழா - ஒடுக்கு பூஜை காண அலைமோதும் கூட்டம்
பெண்களின் சபரிமலை என்று போற்றப்படும் மண்டைக்காடு பகவதி அம்மன் கோயிலில் பிரசித்தி பெற்ற மாசிக் கொடைவிழாவில், தீவட்டி ஊர்வல நிகழ்ச்சி வெகு விமரிசையாக நடைபெற்றது.
கன்னியாகுமரி: பெண்களின் சபரிமலை என்று போற்றப்படும் மண்டைக்காடு பகவதி அம்மன் கோயிலில் பிரசித்தி பெற்ற மாசிக் கொடைவிழாவில், தீவட்டி ஊர்வல நிகழ்ச்சி வெகு விமரிசையாக நடைபெற்றது. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்துகொண்டனர். இவ்விழாவின் முக்கிய நிகழ்ச்சியான ஒடுக்கு பூஜை இன்று நள்ளிரவு நடைபெறுகிறது. இவ்விழாவில் கலந்து கொண்டு அம்மனை தரிசிக்க இப்போதிருந்தே கூட்டம் அலைமோதுகிறது.
Recommended Video
குமரி மாவட்டத்தில் உள்ள மிக முக்கியமான ஆலயங்களில் மண்டைக்காடு பகவதி அம்மன் கோயில் மிகவும் பிரசித்தி பெற்ற ஒன்றாகும். பெண்களின் சபரிமலை என்று போற்றப்படும் இங்கு குமரி மாவட்டம் மட்டுமல்லாது, அண்டை மாவட்டங்கள் மற்றும் அண்டை மாநிலமான கேரளாவில் இருந்தும் ஏராளமான பெண் பக்தர்கள் வந்து சுவாமி தரிசனம் செய்வதுண்டு.

இங்கு நடைபெறும் திருவிழாக்களில் மிகவும் பிரசித்த பெற்றது மாசிக்கொடை விழாவாகும். இந்த ஆண்டு மாசிக்கொடை விழா கடந்த பிப்ரவரி 27ஆம் தேதியன்று கொடியேற்ற வைபவத்துடன் தொடங்கியது.
அதைத் தொடர்ந்து விழா நாட்களில் சமய மாநாடு, வெள்ளிப் பல்லக்கில் அம்மன் பவனி வரும் நிகழ்ச்சி, யானை மீது களப பவனி, பஜனை, பரத நாட்டியம் உள்ளிட்ட பல்வேறு கலைநிகழ்ச்சிகளும் நடைபெற்றன.
விழாவின் 6ஆம் நாளன்று நள்ளிரவு 12 மணிக்கு வலிய படுக்கை பூஜை நடைபெற்றது. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு பகவதி அம்மனை தரிசனம் செய்தனர்.
விழாவின் 9ஆம் நாளான நேற்று காலையில் பகவதி அம்மன் வெள்ளிப் பல்லக்கில் பவனி வருதல் வைபவமும், மாலை 6:30 மணியளவில் சாயரட்சை தீபாராதனையும், இரவு 9 மணியளவில் அத்தாழ பூஜையும், அதைத் தொடர்ந்து 9:30 மணியளவில் பகவதி அம்மன் வெள்ளிப் பல்லக்கில் பவனி வரும் வைபவமும், பெரிய சக்கர தீவட்டியில் அலங்கார பவனி வருதல் வைபவமும் நடைபெற்றன.
விழாவின் முக்கிய நிகழ்ச்சியாக, இன்று அதிகாலை 2 மணிக்கு மண்டைக்காடு சாஸ்தா கோயிலில் இருந்து புனித நீர் கொண்டு வரும் நிகழ்ச்சியும், அதைத் தொடர்ந்து 3:30 மணியளவில் அம்மன் வெள்ளிப் பல்லக்கில் பவனி வருதல் வைபவமும், அதிகாலை 4 மணியளவில் அடியந்திர பூஜையும், காலை 6 மணியளவில் குத்தியோட்டம், 6:30 மணிக்கு சாயரட்சை பூஜையும் நடைபெற்றது. இன்று மாலை 4 மணியளவில் நலத்திட்ட உதவிகள் மற்றும் சமய மாநாடும் நடைபெறுகிறது.
இன்றிரவு 9:30 மணியளவில், அம்மன் வெள்ளிப் பல்லக்கில் பவனி வரும் வைபவமும், நள்ளிரவு 12 மணி முதல் 1 மணி வரை ஒடுக்கு பூஜை நிகழ்ச்சியும் நடைபெறுகிறது. இந்தப் பூஜையில் கலந்து கொள்ள குமரி மாவட்டம் மட்டுமல்லாது, அண்டை மாநிலமான கேரளாவில் இருந்தும் ஏராளமான பக்தர்கள் வந்து கொண்டிருக்கிறார்கள். இதனால் பகவரி அம்மனை தரிசிக்க இப்போதிருந்தே கூட்டம் அலைமோதுகிறது.
-
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
ஆனானப்பட்ட அமெரிக்காவுக்கே இந்த நிலைமையா..? அப்போ இந்தியா? -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
கோட்டைச்சாமி.. எந்திரி.. இப்போ நீதான் முதலமைச்சர்.. இன்னமும் பிரச்சாரமா? விஜய்யை கிண்டலடித்த திமுக -
வாசலுக்கு வந்த புகார் பெட்டி.. இனி தலைமை செயலகத்தில் எல்லோருக்கும் அனுமதி இல்லை.. தவெக அரசு கறார் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா?












Click it and Unblock the Notifications