ஆங்கில புத்தாண்டு ராசி பலன் 2023: மேஷ ராசிக்காரர்கள் அதிர்ஷ்டசாலிகள்..பணமழை பொழியப்போகிறது
சென்னை: நவ கிரகங்களும் 2023ஆம் ஆண்டு இடப்பெயர்ச்சியாகப்போகிறது. முக்கியமான 3 கிரகங்கள் மேஷ ராசிக்காரர்களுக்கு சாதகமான பலன்களைத் தரப்போகிறது. கடந்த ஆண்டு உடல் ரீதியாகவும் பொருளாதாரரீதியாகவும் எத்தனையோ பிரச்சினைகளை சந்தித்து இருப்பீர்கள். இந்த ஆண்டு புதிய விடியல் பிறக்கப்போகிறது. மேஷ ராசிக்காரர்களுக்கு பிறக்கப்போகும் புத்தாண்டு என்னென்ன பலன்களைத் தரப்போகிறது என்று பார்க்கலாம்.
பொதுவாகவே மேஷ ராசிக்காரர்களுக்கு கடந்த சில ஆண்டுகளாக சனிபகவான் பத்தாம் வீட்டில் பயணம் செய்தார். குருவின் பயணமும், ராகு கேதுவின் பயணமும் பெரிய அளவில் எந்த நன்மைகளையும் கொடுக்கவில்லை. இந்த ஆண்டு உங்களுக்கு சனியும், குருவும் 100க்கு 100 நன்மையை செய்யப்போகின்றன.
உடல் ஆரோக்கியம், பொருளாதார நிலை எல்லாமே 2023ஆம் ஆண்டில் மேஷ ராசியில் பிறந்தவர்களுக்கு அற்புதமாக இருக்கப்போகிறது. எத்தனையோ அற்புதங்கள் உங்கள் வாழ்க்கையில் நிகழப்போகிறது. என்னென்ன நன்மைகள் நிகழப்போகிறது என்று பார்க்கலாம்.

குரு பகவான்
மேஷ ராசி நேயர்களே.. 2023ஆம் ஆண்டு புத்தாண்டு நல் வாழ்த்துக்கள். உங்களுக்கு 2023ஆம் ஆண்டு அற்புதமான ஆண்டாக அமைந்துள்ளது. ராகு உங்கள் ராசியிலும் கேது ஏழாம் வீட்டிலும் பயணம் செய்கின்றனர். குரு பகவான் உங்கள் ராசிக்கு வருகிறார். சனி பகவான் உங்கள் ராசிக்கு லாப ஸ்தானத்திற்கு வரப்போகிறார். உங்களின் அதிர்ஷ்டம் செயல்படப்போகிறது. உடல் ஆரோக்கியத்தில் அலட்சியம் காட்ட வேண்டாம். அது தேவையற்ற சிக்கலை ஏற்படுத்தி விடும். உடற்பயிற்சியும் மெடிடேசனும் செய்யுங்கள் உங்கள் ஆரோக்கியம் அற்புதமாக இருக்கும்.

வருமானம் அதிகரிக்கும்
மன அமைதி நிறைந்த ஆண்டாக அமைந்துள்ளது. உங்கள் வேலை தொழிலில் உழைப்பிற்கு ஏற்ப ஊதியம் கிடைக்கும். உங்களுடைய ஐந்தாம் இடமான பூர்வ புண்ணிய ஸ்தானம் செயல்படத் தொடங்குகிறது. காரணம் ஜனவரி மாதம் உங்கள் ராசிக்கு லாப ஸ்தானத்திற்கு இடப்பெயர்ச்சி ஆகும் சனிபகவான் உங்கள் ராசிக்கு ஐந்தாம் வீட்டினை பார்வையிடுகிறார். அதே போல குரு பகவான் உங்கள் ராசிக்கு வந்து அமர்ந்து ஐந்தாம் வீட்டினை பார்வையிடுகிறார். உங்களின் பிள்ளைகள் மூலம் நல்ல செய்திகள் தேடி வரும். பூர்வீக சொத்துக்கள் மூலம் இருந்த பிரச்சினைகள் முடிவுக்கு வரப்போகிறது. கோபத்தை கட்டுப்படுத்துங்கள். உங்களின் மன அமைதிக்காக வழி பிறக்கும்.

பொருளாதார நிலைமை
இந்த ஆண்டு உங்களுக்கு வருமானம் அபரிமிதமாக இருக்கும். உங்களுக்கு நிறைய பணம் வரும். வரப்போகும் பணத்தை நல்ல முறையில் சேமியுங்கள். ஆண்டின் துவக்கத்தில் மெதுவாக ஆரம்பிக்கும் வருமானம் வருட மத்தியில் உங்களுக்கு நிறைய வருமானம் அதிகரிக்கும். அதற்கு காரணம் உங்கள் ராசிக்கு 5ஆம் வீடான பூர்வ புண்ணிய ஸ்தானம் செயல்படத் தொடங்குகிறது. இந்த ஆண்டு உங்களுக்கு வருமானம் வரும் வழி பல வழிகளிலும் திறந்திருக்கும். பங்குச்சந்தையில் செய்யும் முதலீடுகள் மூலம் நல்ல வருமானம் வரும். இந்த ஆண்டில் பிற்பகுதியில் திருமணமான தம்பதியினருக்கு புத்திரபாக்கியம் கிடைக்கும். ஆலயங்களுக்கு ஆன்மீக பயணம் செல்வீர்கள். உங்களின் நேர்மறை எண்ணங்கள் அதிகரிக்கும். உங்களுக்கு இந்த ஆண்டு வரும் பணத்தை பத்திரமாக சேமியுங்கள்.

உடல் ஆரோக்கியம்
இந்த ஆண்டு உங்கள் ராசிக்கு கிரகங்கள் சாதகமாக உள்ளன. ராகு அக்டோபர் மாதம் வரைக்கும் உங்கள் ராசிக்குள் பயணம் செய்கிறார். மனதில் இருந்த பிரச்சினைகள் குழப்பங்கள் முடிவுக்கு வரப்போகிறது. சனிபகவானும் உங்கள் ராசிக்கு லாப ஸ்தானத்திற்கு வரப்போகிறார். உங்களின் சக்தி அதிகரிக்கப் போகிறது. உடல் ஆரோக்கியம் அதிகரிக்கும் உற்சாகம் கூடும். குரு பகவான் உங்கள் ராசிக்கு வரப்போகிறார். சனிபகவானின் பார்வையும் உங்கள் ராசிக்கு கிடைக்கப்போகிறது.

ஆரோக்கியம் அற்புதம்
முக்கியமான 3 கிரகங்கள் மேஷ ராசியில் பிறந்தவர்களுக்கு நன்மை செய்யப்போகிறது. உங்களின் அழகும் ஆரோக்கியமும் இந்த ஆண்டு அற்புதமாக இருக்கும். உடல் ஆரோக்கியத்தில் சின்னச் சின்ன பிரச்சினைகள் வந்து போகும் எந்த பிரச்சினைகளையும் அலட்சியப்படுத்த வேண்டாம். ஆண்டின் பிற்பகுதியில் மருத்துவ செலவுகள் வரலாம். காரணம் உங்கள் ராசிநாதன் செவ்வாய் பகவான் ஆறாம் வீட்டிற்கு வரும் ஆரோக்கியத்தில் அலட்சியம் காட்ட வேண்டாம். மன அமைதிக்காக தியானம் பழகுங்கள். உங்களுடைய சக்தியை சேமிக்க தொடங்குங்கள் உற்சாகமாக வலம் வரலாம்.












Click it and Unblock the Notifications