For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

2020 புத்தாண்டில் இந்த 4 ராசிக்காரர்களுக்கு ஆரோக்கியம் எப்படி இருக்கும் தெரியுமா

நோய் நொடியில்லாத ஆரோக்கியமான வாழ்க்கை வாழவே அனைவரும் ஆரோக்கியம் முக்கியமானது. உடல் ஆரோக்கியம் எல்லோருக்கும் ரொம்ப அவசியமானது. 2020ஆம் புத்தாண்டில் அதிக வருமானம் வருவது பற்றி யோசித்தாலும் உடல் ஆரோக்கிய

Google Oneindia Tamil News

சென்னை: 2020 ஆம் ஆண்டு பிறந்து விட்டது. இந்த புத்தாண்டில் நமது ஆரோக்கியம் எப்படி இருக்கும் என்பதே பலரது எதிர்பார்ப்பாக இருக்கிறது. ஏனெனில் நோய் நொடியில்லாத ஆரோக்கியமான வாழ்க்கை வாழவே அனைவரும் ஆரோக்கியம் முக்கியமானது. உடல் ஆரோக்கியம் எல்லோருக்கும் ரொம்ப அவசியமானது. 2020ஆம் புத்தாண்டில் அதிக வருமானம் வருவது பற்றி யோசித்தாலும் உடல் ஆரோக்கியம் பற்றியும் அதிகம் யோசிப்பார்கள். இறைவனிடம் வேண்டுவதே நீண்ட ஆயுளோடும் ஆரோக்கியத்தோடும் வாழவேண்டும் என்பதாகத்தான் இருக்கும். சிம்மம் முதல் விருச்சிகம் வரை 2020ஆம் ஆண்டில் ஆரோக்கியம் எப்படி இருக்கும் என்று பார்க்கலாம்.

ஒருவரின் ஆரோக்கியத்தினை கிரகங்களின் சஞ்சாரமும் தீர்மானிக்கின்றன. சூரியன்,சனி, புதன், குரு, சுக்கிரன், செவ்வாய், ராகு கேது சில நேரங்களில் சந்திரன் கூட சாதகமில்லாத நிலையில் இருந்தால் உடல் ஆரோக்கியம் பாதிக்கப்படும். பெற்றோர்கள், வயது மூத்தவர்களின் ஆரோக்கியத்தையும் கிரகங்கள் தீர்மானிக்கின்றன. குரு உடன் சேரும் கிரகங்கள், குருவின் பார்வையும் நோய்களை நீக்குகின்றன. சனியின் சஞ்சாரமும் ஒருவருக்கு நல்ல ஆரோக்கியத்தை கொடுக்கிறது.

ஏழரை சனி, கண்டச்சனி, அர்த்தாஷ்டம சனி, அஷ்டம சனி காலங்களிலும் ஒருவருக்கு உடல் ஆரோக்கியம் பாதிக்கப்படும். ஆறாம் வீட்டில் குரு சஞ்சரிக்கும் காலத்திலும் குருவின் பார்வை ஆறாம் வீடான ருண ரோக சத்ரு ஸ்தானத்தின் மீது விழும் போதும் ஒருவரின் உடலில் உள்ள நோய்கள் வெளிப்படும். இந்த 2020ஆம் ஆண்டில் குரு, சனியின் சஞ்சாரம் பார்வைகளினால் சிம்மம் முதல் விருச்சிகம் வரையிலான நான்கு ராசிக்காரர்களின் உடல் ஆரோக்கியம் எப்படி இருக்கும் என்று பார்க்கலாம்.

சிம்மம்

சிம்மம்

சூரியனை ராசி நாதனாகக் கொண்ட சிம்ம ராசிக்காரர்களே, உங்களின் ஆரோக்கியம் 2020ஆம் ஆண்டில் சிறப்பானதாக இருக்கும். உடல் ஆரோக்கியத்தில் அக்கறை காட்டுவீர்கள், ஜனவரி முதல் மார்ச் வரை உடற்பயிற்சி செய்து ஆரோக்கியத்தை மேம்படுத்துவீர்கள். குரு பகவான் உங்க ராசிக்கு ஆறாம் வீட்டில் அமர்ந்து இருப்பதால் நோய்கள் வெளிப்படும். எனவே நீங்கள் அதிக கொழுப்பு நிறைந்த உணவுகளை தவிர்த்து விடுங்கள். காரமான உணவுகளை சாப்பிடாதீர்கள் ஏனெனில் நாள்பட்ட நோய்களால் பாதிக்க நேரிடலாம். சரியான உணவுப்பழக்கம், நிம்மதியான உறக்கம் உங்களுக்கு நோய் பாதிப்புகளில் இருந்து தீர்வு கிடைக்கும். வேலைப்பளு மன அழுத்தத்தை தரலாம் அவ்வப்போது ரிலாக்ஸ் படுத்திக்கொள்ளுங்கள் அப்போதுதான் உங்களின் ஆரோக்கியம் மேம்படும்.

கன்னி

கன்னி

கடந்த சில ஆண்டுகாலமாகவே கன்னி ராசிக்காரர்களின் ஆரோக்கியத்திற்கு சில இடையூறுகள் ஏற்பட்டுக்கொண்டேதான் இருக்கிறது. இனி சனி விலகும் காலத்தில் உங்களின் சங்கடங்கள் தீரும். உடலில் ஏற்பட்டிருந்த நீண்ட நாள் நோய்களின் பாதிப்பு தீரும். இதுவே உங்களின் மகிழ்ச்சியை அதிகப்படுத்தும். புன்னகையே நோய்களை நீக்கும். உறவுகள் உடனான பேச்சுக்கள், உங்களின் நிம்மதியை அதிகமாக்கும். மன மகிழ்ச்சியே நோய்களை நீக்கும். வேலைச்சுமை உங்களுக்கு சோர்வை ஏற்படுத்தும். தொழிலில் ஏற்பட்டிருந்த சிக்கல்கள் உங்களுக்கு மன ரீதியான உடல் ரீதியான நோய்களை ஏற்படுத்தியிருக்கும். இந்த ஆண்டு உங்களின் சிக்கல்கள் தீரும். சாதாரண பிரச்சினைகளைக் கூட நீங்க அலட்சியப்படுத்த வேண்டாம். யோகா, தியானம் என உங்க மனதையும் உடலையும் ஆரோக்கியமாக வைத்துக்கொள்ளுங்கள் யாராலும் உங்களை இந்த 2020ஆம் ஆண்டில் அசைத்து பார்க்க முடியாது.

துலாம்

துலாம்

சுக்கிரனை அதிபதியாகக் கொண்ட துலாம் ராசிக்காரர்களே, உங்களுக்கு ஜனவரி முதல் மார்ச் வரை சுறுசுறுப்பும் உற்சாகமும் அதிகமாக இருக்கும். உங்களின் உற்சாகமே நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும். வாயு கோளாறுகளினால் உங்களுக்கு மூட்டுவலி, அஜீரணம் தலைவலி என சின்னச் சின்ன பாதிப்புகள் எட்டிப்பார்க்கும். அப்போது கவனக்குறைவாக இருக்காதீர்கள் தேவையான நேரத்தில் மருத்துவ ஆலோசனைகளை எடுத்துக்கொள்ளுங்கள். மன அழுத்தமே உங்களுக்கு வரும் நோய்களுக்கு காரணமாக இருப்பதால் நீங்க மன அழுத்தம் போக்க தியானம், யோகா என மன அமைதியை ஏற்படுத்துங்கள். காரமான உணவுகளையும், எண்ணெயில் பொரித்த உணவுகளை தவிர்த்து விடுங்கள் அதுவே உங்களின் ஆரோக்கியத்தை அதிகமாக்கும்.

விருச்சிகம்

விருச்சிகம்

2020ஆம் ஆண்டு விருச்சிகம் ராசிக்காரர்களுக்கு ஆரோக்கியம் அற்புதமானதாக மாறும். மன ரீதியாகவும், உடல் ரீதியாகவும் உற்சாகமாக இருப்பீர்கள். உங்களின் ஆற்றல் சக்தி அதிகமாகும். மன ரீதியாகவும் உடல் ரீதியாகவும் நீங்க சந்தோஷமாக இருக்க யோகா, மூச்சுப்பயிற்சி செய்யுங்கள். வருட மத்தியில் சில மன அழுத்தங்கள் ஏற்படலாம். அல்சர் பிரச்சினைகள் ஏற்படும். குடல் சார்ந்த பிரச்சினைகள் தீர நீங்கள் எண்ணெயில் பொரித்த உணவுகளை தவிர்த்து விடுங்கள். பதற்றத்தை தவிர்த்து விடுங்கள். ரத்த அழுத்தம் தொடர்பான நோய்களை உடனடியாக கவனியுங்கள். சனியும் குருவும் உங்களுக்கு சங்கடங்களை தீர்க்கும்.

English summary
The most valuable aspect in life is health because nothing is more worthwhile than running your body in its full capacity. To add further, we can only be the most efficient in whatever we do, if we take care of our body and do what is necessary! This definitely helps in our longevity and quality of life we live according to the Health Horoscope 2020 for Simmam,kanni, Thulam and Viruchigam Rasigal.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X