ஆடித்திருவிழா: ராமேஸ்வரம் ராமநாதசுவாமி கோவிலில் திருக்கல்யாணம் - மறுவீடு நிகழ்ச்சி ரத்து
ராமேஸ்வரம் ராமநாதசுவாமி கோவிலில் ஆடி திருக்கல்யாண திருவிழா பக்தர்கள் பங்கேற்பு இன்றி நடைபெறுகிறது. சுவாமி அம்பாள் மறு வீட்டிற்கு செல்லும் நிகழ்ச்சியும் இந்த ஆண்டு ரத்து செய்யப்படுவதாக கோவில் நிர்வாகம் அறிவித்துள்ளது.
ராமநாதபுரம்: ராமேஸ்வரத்தில் உள்ள ராமநாதசுவாமி கோவில் ஆடி திருவிழாவின் முக்கிய நிகழ்ச்சியான ராமநாதசுவாமி-பர்வதவர்த்தினி அம்பாள் திருக்கல்யாண நிகழ்ச்சி பக்தர்கள் பங்கேற்பின்றி நடைபெறுகிறது. கொரோனா பரவல் தடுப்பு நடவடிக்கையால் 17ஆம் தேதி சுவாமி அம்பாள் மறு வீட்டிற்கு செல்லும் நிகழ்ச்சி ரத்து செய்யப்படுவதாக கோவில் நிர்வாகம் அறிவித்துள்ளது.
ராமேஸ்வரத்தில் உள்ள புகழ்பெற்ற ராமநாதசுவாமி ஆலயத்திற்கு சாமி தரிசனம் செய்ய நாடு முழுவதிலும் இருந்தும் பக்தர்கள் வருகை தருவது வழக்கம். இங்கு ஆண்டுதோறும் ஆடி திருக்கல்யாண திருவிழா மற்றும் மாசி மகா சிவராத்திரி திருவிழா வெகு சிறப்பாக நடைபெறுவது வழக்கம். இந்த ஆண்டின் ஆடி திருக்கல்யாண திருவிழா 1ஆம் தேதி முதல் கொடியேற்றத்துடன் தொடங்கி நடைபெற்று வருகிறது. கொரோனா பரவல் காரணமாக திருத்தேரோட்டம் ரத்து செய்யப்பட்டது. கோவில் வளாகத்திற்குள் தங்கத்தேரோட்டம் நடைபெற்றது.
இன்றைய தினம் ராமநாதஸ்வாமிக்கும், பர்வதவர்த்தினி அம்மனுக்கும் திருக்கல்யாண வைபவம் இன்று நடைபெறுகிறது. இந்த திருக்கல்யாணத்தைக் காண பக்தர்களுக்கு அனுமதி மறுக்கப்பட்டுள்ளது. மறுவீடு செல்லும் வைபவமும் ரத்து செய்யப்பட்டுள்ளது.

ஆடித்திருவிழா கொடியேற்றம்
கொரோனா பரவல் தடுப்பு தட்டுப்பாடு காரணமாக ராமேஸ்வரம் கோவிலில் பக்தர்கள் இல்லாமலே ஆகஸ்ட் 1ஆம் தேதி கொடியேற்ற நிகழ்ச்சிகள் நடைபெற்றன. கொரோனா பரவல் கட்டுப்பாடு தடுப்பு முன்னெச்சரிக்கை காரணமாக இந்த ஆண்டு திருவிழாவில் நடைபெறும் சாமி வீதி உலா நிகழ்ச்சிகள் அனைத்தும் கோவிலின் உள்பகுதியில் 3ஆம் பிரகாரத்தில் நடைபெற்றது.

தீர்த்தவாரி ரத்து
திருவிழாவின் முக்கிய நிகழ்ச்சியான அக்னி தீர்த்த கடற்கரைக்கு சாமி எழுந்தருளும் நிகழ்ச்சி ரத்து செய்யப்பட்டது. கோவிலின் உள்ளேயே உள்ள சிவ தீர்த்தத்தில் தீர்த்தவாரி பூஜை நடைபெற்று கோவிலின் 3ஆம் பிரகாரத்தில் சாமி உலா வரும் நிகழ்ச்சி நடைபெற்றது.

தங்கத் தேரோட்டம்
அம்பாள் திருத்தேரோட்ட நிகழ்ச்சியும் ரத்து செய்யப்பட்டது. தங்க தேரில் அம்மன் எழுந்தருளி மூன்றாம் பிரகாரத்தில் உலா வந்தார் பர்வதவர்த்தினி அம்மன். ராம தீர்த்தம் தபசு மண்டகப்படியில் வைத்து நடைபெறும் மாலை மாற்றுதல் நிகழ்ச்சி நேற்றைய தினம் கோவில் வளாகத்தில் நடைபெற்றது.

மாலை மாற்றுதல்
பர்வதவர்த்தினி அம்பாள் வெள்ளி கமல வாகனத்தில் 3ஆம் பிரகாரத்தின் மையப்பகுதியில் எழுந்தருளினார். தொடர்ந்து ராமநாதசாமி பிரியாவிடையுடன் தங்க ரிஷப வாகனத்தில் 3ஆம் பிரகாரத்திற்கு எழுந்தருளினார்.
சாமியை அம்பாள் மூன்று முறை சுற்றி வரவே சாமி கழுத்திலிருந்து அம்பாள் கழுத்திலும், அம்பாள் கழுத்திலிருந்து சாமி கழுத்திலும் மூன்று முறை மாலை மாற்றப்பட்டு மாலை மாற்றும் நிகழ்ச்சி நடைபெற்றது. தொடர்ந்து சாமி மற்றும் அம்பாளுக்கு சிறப்பு மகா தீபாராதனை பூஜைகள் நடைபெற்றன.

சுவாமி அம்மன் திருக்கல்யாணம்
திருவிழாவின் முக்கிய நிகழ்ச்சியான ராமநாதசுவாமி-பர்வதவர்த்தினி அம்பாள் திருக்கல்யாண நிகழ்ச்சி இன்று இரவு தெற்கு கோபுர வளாகப் பகுதியில் உள்ள திருக்கல்யாண மண்டபத்தில் வைத்து நடைபெறுகிறது. திருக்கல்யாண நிகழ்ச்சியை காணவும் பக்தர்களுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. திருவிழாவின் கடைசி நாள் நிகழ்ச்சியாக வருகிற 17ஆம் தேதி அன்று சுவாமி அம்பாள் மறு வீட்டிற்கு அதாவது கந்தமாதன பர்வதம் மண்டகப்படி செல்லும் நிகழ்ச்சியும் இந்த ஆண்டு ரத்து செய்யப்படுவதாக கோவில் நிர்வாகத்தால் தெரிவிக்கப்பட்டுள்ளது.
-
அதெப்படி திமிங்கலம்.. தமிழ்நாட்டிற்கு வரவேண்டிய ஒப்பந்தம் வரிசையா.. கரெக்ட்டா ஆந்திராவுக்கு போகுது! -
டெல்லியில் இந்தியா கூட்டணி ஆலோசனை.. திமுக, ஆம் ஆத்மி புறக்கணிப்பு.. வைகோ, திருமாவளவன் பங்கேற்பு -
மாதம் 2500 மகளிர் உரிமை தொகை தருவதற்கு தமிழக அரசுக்கு எவ்வளவு பணம் தேவை.. அரசுக்கு மாற்று வழிகள் -
கேஸ் சிலிண்டர் விலை ரூ.1,600.. விலை உயர்வை அறிவித்த கையோடு.. மத்திய அரசு சொன்ன முக்கியமான பாயிண்டு -
மீண்டும் சொதப்பிய திமுக.. திணறுகிறார்களே.. லாவகமாக நர்ரேட்டிவ் செட் செய்த விஜய்.. கவனிச்சீங்களா? -
இன்னும் சில மணி நேரம் தான்.. பூமியை நோக்கி வரும் 'சூரிய புயல்'! மெகா அலர்ட் கொடுத்த நாசா -
மாரிதாஸ் கைது தவறு ஏன்.. உச்ச நீதிமன்றத்தின் இரண்டு பாயிண்டுடன் இன்பத்துரை விளக்கம் -
ஸ்டாலின் உடனே கொடுத்த கிரீன் சிக்னல்.. விஜய்யை மதிமுக துரை வைகோ சந்தித்த அடுத்த நிமிடமே அதிரடி? -
மினி பஸ்சில் லைட்டை ஆப் செய்து.. 45 நிமிடம் அட்டகாசம்! கிளம்பும்போது கோவை ஜோடி எடுத்து சென்ற பொருள்? -
கோவையில் கிழியுது இரட்டை இலை..வேலையைக் காட்டிய வேலுமணி! அழுகையை அடக்க முடியாமல் மா.செ.! ரொம்ப மோசம்! -
கஜானாவை நிரப்ப விஜய் அதிரடி நடவடிக்கை.. டாஸ்மாக் விதித்த கூடுதல் கட்டணம்.. மதுபான விலை உயர்வு? -
ராகுலுக்கு ஷாக் கொடுத்த திமுக! INDIA கூட்டணி தலைவர்களுடன் இடம்பெற்ற பேனர்.. காங். இதை எதிர்பார்க்கல!












Click it and Unblock the Notifications