கடக ராசியில் பயணிக்கும் சூரியன்.. ஆடி மாதத்தில் எந்த ராசிக்காரர்களுக்கு டாப் ஆக இருக்கும்?
சூரியன் வடக்கில் இருந்து தெற்கு நோக்கி பயணத்தை தொடங்குகிறார். கடக சூரியனால் எந்த ராசிக்காரர்களுக்கு என்ன நன்மை கிடைக்கப்போகிறது என்று பார்க்கலாம்.
சென்னை: ஆடி மாதம் இன்னும் சில நாட்களில் பிறக்க உள்ளது. ஆடி மாதத்தில் சூரியன் கடக ராசியில் பயணம் செய்யும் மாதம். தட்சிணாயன புண்ணிய காலம் ஆரம்பமாகிறது. சூரியன் வடக்கில் இருந்து தெற்கு நோக்கி பயணத்தை தொடங்குகிறார். இந்த மாதத்தில் நவ கிரகங்களின் சஞ்சாரம் இடப்பெயர்ச்சி, பார்வைகளைப் பொறுத்து மேஷம் முதல் கன்னி ராசி வரை பிறந்த ராசிக்காரர்களுக்கு என்னென்ன யோகங்கள் தேடி வரும் என்று பார்க்கலாம்.
ஆடி மாதத்தில் அம்மன் கோவில்களில் சிறப்பு வழிபாடுகள் நடைபெறும். ஆடி மாதத்தில் கூழ் ஊற்றி அம்மனை வணங்குவார்கள். விஷ்ணு சயன ஏகாதசி, ஆடிப்பூரம், ஸ்வர்ண கவுரி விரதம், குரு பூர்ணிமா,ஆடி கிருத்திகை, ஆடி 18ஆம் பெருக்கு, நாக பஞ்சமி, கருட பஞ்சமி, கருடாழ்வார் ஜெயந்தி, பானு சப்தமி போன்ற பண்டிகைகள் கொண்டாடப்படுகின்றன.
இந்த மாதத்தில் கிரகங்கள் சஞ்சாரத்தைப் பார்த்தால் மேஷ ராசியில் செவ்வாய், ராகு, மிதுன ராசியில் சுக்கிரன், கடக ராசியில் சூரியன், புதன், துலாம் ராசியில் கேது, மகர ராசியில் சனி, மீன ராசியில் குரு என நவ கிரகங்கள் பயணம் செய்கின்றன. ஆடி 12ஆம் தேதியன்று குருபகவான் வக்ரமடைகிறார். 16ஆம் தேதியன்று புதன் சிம்ம ராசிக்கு செல்கிறார். 21ஆம் தேதியன்று சுக்கிரன் சிம்ம ராசிக்கு செல்கிறார். 25ஆம் தேதியன்று செவ்வாய் பகவான் ரிஷப ராசிக்கு செல்கிறார்.

மேஷம்
மேஷ ராசிக்காரர்களுக்கு ஆடி மாதம் அற்புதமான மாதமாக அமைந்துள்ளது. உங்களின் திறமை தன்னம்பிக்கை அதிகரிக்கும். புத்திசாலித்தனம் பலிச்சிடும். மன தைரியம் அதிகரிக்கும். பண வரவு நன்றாக இருக்கும். சேமிப்பு அதிகரிக்கும். உடல் ஆரோக்கியத்தில் இருந்த பிரச்சினைகள் நீங்கும். தொழில், வேலையில் இருந்த சிக்கல்கள் நீங்கும். மதிப்பு மரியாதை அதிகரிக்கும். போட்டி தேர்வுகளில் வெற்றி பெறுவீர்கள். வேலை செய்யும் இடத்தில் உங்களின் பணி பாராட்டப்படும். நீண்ட நாள் எதிர்பார்த்த காரியம் நிறைவேறும். நோய்கள் நீங்கி ஆரோக்கியத்தில் முன்னேற்றம் ஏற்படும். வீடு மற்றும் வாகனம் வாங்குவீர்கள்.

ரிஷபம்
ரிஷப ராசிக்காரர்களுக்கு தைரியம் தன்னம்பிக்கை அதிகரிக்கும். எதிர்பார்த்த நல்ல செய்தி தேடி வரும். மன நிம்மதியும் சந்தோஷமும் அதிகரிக்கும். சொத்துக்கள் வாங்க யோகம் வரும். பங்குச்சந்தை முதலீடுகள் லாபத்தை தரும். ஆடி மாதத்தில் அவசரப்பட வேண்டாம்.கையில் இருக்கும் வேலையை விட்டு விட வேண்டாம். வேலை மாறுவதற்கு இது ஏற்ற காலம் அல்ல. குல தெய்வ அனுகூலம் இருப்பதால் நன்மைகள் அதிகம் நடைபெறும். இளைய சகோதரர்களால் நன்மைகள் நடைபெறும்.

மிதுனம்
மிதுனம் ராசிக்காரர்களுக்கு நீண்ட நாட்களாக நினைத்திருந்த காரியங்கள் கை வரும். உறவினர்களால் உதவிகள் தேடி வரும். கோபத்தை கட்டுப்படுத்தவும். உங்களின் பேச்சிற்கு மதிப்பு மரியாதை கூடும். உங்களுடைய முயற்சிகளுக்கு வெற்றி கிடைக்கும். எதிர்பாராத பண வரவு வரும். வேலையில் இருந்த சிக்கல்கள் நீங்கும். சிலருக்கு புதிய வேலை கிடைக்கும். புரமோசனும் சம்பள உயர்வும் கிடைக்கும். அரசு வேலைக்கு போட்டித் தேர்வு எழுதியவர்களுக்கு நல்ல வேலை கிடைக்கும். அடுத்தவரின் விசயங்களில் தேவையில்லாமல் தலையிட வேண்டாம். உயர்கல்விக்காக முயற்சி செய்யலாம்.

கடகம்
ஆடி மாதம் கடக ராசிக்காரர்களுக்கு ஆதாயங்கள் நிறைந்த மாதம் கிடைக்கும். ராகு லாப ஸ்தானத்தில் இருப்பதால் நிறைய பண வரவு அதிகரிக்கும். தகவல் தொடர்புத்துறையில் நன்மைகள் நடைபெறும். எதிர்பாராத பண வரவு வரும். புதிய வாய்ப்புகள் தேடி வரும். நிறைய சுப காரியங்களில் பங்கேற்பீர்கள். காதல் கை கூடி வரும் கணவன் மனைவி இடையே இருந்த சிக்கல்கள் நீங்கும். முன்னோர்களின் ஆசி கிடைக்கும். பெரிய மனிதர்களின் ஆதரவு கிடைக்கும். தெய்வ அனுகிரகத்தினாலும் முன்னோர்களின் ஆசியினாலும் உங்களுக்கு நன்மைகள் நடைபெறும்.

சிம்மம்
சிம்ம ராசிக்காரர்களுக்கு ஆடி மாதத்தில் அம்மன் அருள் அதிகம் கிடைக்கப் போகிறது. சூரியன் விரைய ஸ்தானத்தில் பயணம் செய்வதால் வரவுக்கு ஏற்ற செலவு கிடைக்கும் சிக்கனம் தேவைப்படும். உடல் ஆரோக்கியத்தில் இருந்த சிக்கல்கள் தீர்ந்து விடும். கோபத்தை கட்டுப்படுத்துங்கள். எதிர்பாராத பண வரவு வரும். தந்தையின் சொத்து விற்பனையில் பங்கு கிடைக்கும். குல தெய்வ வழிபாடு செய்வது நல்லது. இந்த மாதம் பங்குச்சந்தை முதலீடுகளைத் தவிர்த்து விடவும்.

கன்னி
புதன் பகவானை ராசி நாதனாகக் கொண்ட கன்னி ராசிக்காரர்களே, ஆடி மாதத்தில் பொறுமையும் நிதானமும் தேவைப்படும் மாதம். சகோதரர்களின் உடல் ஆரோக்கியத்தில் கவனம் தேவை. பண வரவு அதிகம் வந்தாலும் கூடவே செலவுகளும் வரும். செலவுகளை குறைத்துக்கொள்வது நல்லது. குரு பார்வை கோடி நன்மையைக் கொடுக்கும். வேலை தொழில் மாற்றம் ஏற்படும். ஆடி அமாவாசை நாளில் முன்னோர்களுக்கு படையல் இட்டு வணங்கவும்.
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தலை எதிர்கொள்ள திமுகவின் இரட்டை வியூகம்.. இள ரத்தத்திற்கு முக்கியத்துவம்! -
96,000 வாக்குகள் வித்தியாசத்தில்.. தவெக வேட்பாளரை ஜெயிக்க வைத்த தொகுதிக்கு இந்த நிலைமையா? -
இந்தியாவை தாக்கும் பெரிய ஆபத்து.. விஷயம் கேட்டு எலான் மஸ்க் கூட அதிர்ந்து போனார்! பேரழிவு கன்பார்ம்? -
அதிகாலையே கணக்கில் வரவு வைக்கப்பட்ட ரூ.3000.. வந்தது மே மாதம் பேமெண்ட்.. அரசின் அசத்தல் மூவ்! -
சொத்துகளை மறைக்கும் சென்னை மேயர் பிரியா.. துணை மேயர் உள்பட 75% கவுன்சிலர்கள் 4 ஆண்டுகளாக ‘டிமிக்கி' -
அதிமுக + திமுகவிற்கு ஷாக்.. 4 மாஜி அமைச்சர்கள் - 8 எம்எல்ஏக்கள் உள்பட 60 பேர் தவெகவில் ஐக்கியம் -
அடித்து ஆடும் விஜய்.. வருகிறது ராமநாதபுரம் புதிய விமான நிலையம்.. பொருளாதார புரட்சிக்கு அடித்தளம்! -
ரஷ்யா வச்ச ஆப்பு.. தள்ளுபடிலாம் தர முடியாது.. பிரீமியம் கட்டணம்! கச்சா எண்ணெய்க்கு 425% கூடுதல் தொகை -
ரூ.15 லட்சம் கோடி பஸ்பம் ஆகும்? சரிகிறது இந்தியாவின் தங்க’ சாம்ராஜ்யம்.. நாட்டையே உலுக்கும் சம்பவம் -
"அண்ணாமலை வந்ததால் பாஜக ஒன்னும் பலமாகவில்லை".. ஒரு இதழை கூட அசைக்க முடியாது.. தமிழிசை ‘அட்டாக்' -
நாங்க தோத்துட்டோம்.. ஆனா சாகலை! விஜய்க்கு ஏதாவது ஆச்சுனா கம்பெனி பொறுப்பில்லை! மாஜி கொடுத்த வார்னிங் -
ஒரு மேயர் பதவியையாவது ஜெயிச்சு பாருங்க..நான் என் ஒரு பக்க மீசையை எடுத்துக்குறேன்! ஆர்எஸ் பாரதி சவால்












Click it and Unblock the Notifications