நவராத்திரி: ஆயுதபூஜை, விஜயதசமி கொண்டாடுவது ஏன் தெரியுமா - புராண கதை
தொழில் வளம் சிறக்க ஆயுதபூஜை செய்கிறோம்.புதிய தொழில் தொடங்கவும் விஜயதசமி சிறந்த தினமாகும். குழந்தைகளை பள்ளியில் சேர்க்க இந்த தினம் சிறப்பானது. இப்படி நல்ல செயல்களை விஜயதசமி அன்று செய்தால் சிறப்பான பலன் கிடைக்கும்.
சென்னை: தமிழ்நாட்டில் இன்று ஆயுதபூஜை, சரஸ்வதி பூஜை சிறப்பாக கொண்டாடப்படுகிறது. நம்முடைய தொழிலுக்கு உதவும் ஆயுதங்களையும் கருவிகளையும் சுத்தம் செய்து பூஜை செய்கிறோம். தொழில் வளம் சிறக்க ஆயுதபூஜை செய்வது போல புதிய தொழில் தொடங்க விஜயதசமி சிறந்த தினமாகும்.
ஆயுத பூஜையில் அன்று வீட்டில் சமையலுக்கு பயன்படுத்தும் கத்தி, சமையல் பாத்திரங்களில் ஒரு சில பாத்திரங்கள் மற்றும் வீட்டின் உபயோக பொருட்களுக்கு விபூதி தெளித்து சந்தனம் பொட்டு வைத்து குங்குமம் வைக்க வேண்டும். நம் அலுவலகத்தில் உள்ள பொருட்களுக்கும் வாகனங்களுக்கும் பூஜை செய்ய வேண்டும். காரணம், அந்த பொருட்களை வாங்குவதற்கு பொருளாதர வசதி தந்த முப்பெரும் தேவிகளுக்கு மரியாதையும் நன்றியும் செய்வதாக ஐதீகம்.
ஒரு சமயம், மிகப்பெரிய பேரழிவு ஏற்பட்டது. திரும்ப உலகத்தை உருவாக்கும் பெரிய கடமை இறைவனுக்கு உண்டானது. அதனால் இச்சா சக்தி-விருப்பம் நிறைவேறுதல், ஞான சக்தி- ஞானம்,அறிவுபெறுதல், கிரியா சக்தி- ஆக்கம், உருவாக்குதல் என்ற பூலோக மக்களுக்கு தேவையானதை முதலில் உருவாக்கினார் என்கிறது புராணம். இதனால் நவராத்திரி அன்று முப்பெரும் தேவிகளின் ஆசியை பரிபூரணமாக பெறுகிறோம்.

கொலு வைத்து கொண்டாட்டம்
நவராத்திரியின் முக்கிய அம்சமே கொலுதான். படிப்படியாக இறைவனின் அருள் நிறைந்த பொம்மைகளை அடுக்கி வைத்து வழிபடுகிறோம். இதற்கு ஒரு புராண கதை உள்ளது. ஒரு காலத்தில் தன் எதிரிகளை அழிப்பதற்காக மகாராஜா சுரதா, தன் குரு சுமதாவின் ஆலோசனையைக் கேட்டார். குரு கூறியபடி தூய்மையான ஆற்றுக் களிமண்ணைக் கொண்டு, காளி ரூபத்தைச் செய்து, அதை ஆவாஹனம் செய்து, உண்ணாவிரதம் இருந்து, காளி தேவியை வேண்டினான். அந்த வேண்டுதலின் பயனாக அந்த மகாராஜா தன் பகைவர்களை அழித்து, பின் ஒரு புதுயுகத்தையே உருவாக்கினான்.

வழிபாட்டின் முக்கியத்துவம்
ஐம்பூதத்தில் ஒன்றான மண்ணால் ஆன பொம்மையால் என்னை பூஜித்தால், நான் பூஜிப்போருக்கு சகல சுகங்களையும், சௌபாக்கியங்களையும் அளிப்பேன் என்று என்று, தேவி புராணத்தில் அம்பிகை கூறியுள்ளபடி, சுரதா மகாராஜா செயல்பட்டதால், அவன் பகைவர்களை எளிதில் வீழ்த்தி, அவர்களின் இன்னல்களிலிருந்து விடுதலை பெற்றான்.எனவே, அம்பிகைக்கு பிடித்த பொம்மைகளைக் கொண்டு கொலு வைத்து வழிபாடு செய்வது, நவராத்திரியில், குறிப்பாக சரஸ்வதி பூஜை வழிபாட்டின் முக்கிய அங்கமாக இடம் பெறுகிறது.

ஆயுதபூஜை, சரஸ்வதி பூஜை
நம்மை வாழவைக்கும் தெய்வங்களையும் ஆயுதங்களையும் வணங்கும் நாள் ஆயுதபூஜை. கல்விக்கு அதிபதி சரஸ்வதி. ஞானத்தை அருள்பவள் அவளே. அந்த அன்னையை வணங்க நவராத்திரி பண்டிகையின் நவமி நாள் நல்ல நாள். அன்றைய தினம் ஆயுதங்களையும் வணங்குகிறோம். நாம் உபயோகப்படுத்தும் பொருட்கள் மட்டுமின்றி பைக், கார்,சிறுவர்களின் சைக்கிள்கள் வரை பூஜை போட்டு வணங்குகின்றனர். சரஸ்வதி பூஜையையொட்டி, பூஜையறையில் புத்தகம், பேனா போன்றவற்றை வைத்து, சரஸ்வதி அருளை பெற வழிபடுகின்றோம். அதேபோல தீயவை அழிந்து நல்லவை வெற்றி பெற்றதை கொண்டாடும் நாளே விஜயதசமி திருநாளாகும்.

ஆயுதங்களுக்கு வழிபாடு
ஆயுதம் என்பதன் உண்மையான பயனை உணர்த்தத்தான் ஆயுத பூஜை கொண்டாடப்படுகிறது. இறைவன் அனைத்திலும் நீக்கமறை நிறைந்திருக்கிறான் என்பதை உணர்த்துவதே இதன் ஐதீகம். இதுவரை தொழில் சிறப்பாக நடந்ததற்கு கடவுளுக்கு நன்றி தெரிவிக்கும் வகையிலும் இனி சிறப்பாக நடப்பதற்கு அருள் வேண்டும் வகையிலும் ஆயுதபஜை கொண்டாடப்படுகிறது.

தொழில் சிறக்கும்
நமது பணி, தொழில், வியாபாரத்துக்கு உதவும் கருவிகள், இயந்திரங்கள், கம்ப்யூட்டர், அக்கவுன்ட்ஸ் புத்தகங்கள் போன்றவற்றுக்கு சந்தனம், குங்குமம் வைத்து, மாலையிட்டு அலுவலகங்களில் பூஜைகள் நடத்தப்படும். தொழிலையும் தொழிலாளர்களையும் போற்றும் இப்பண்டிகை இந்தியாவில் காலம் காலமாக கொண்டாடப்பட்டு வருகிறது.

மகாபாரதத்தில் ஆயுதபூஜை
பாண்டவர்கள் வன்னிமரத்தில் தங்களுடைய ஆயுதத்தை மறைத்து வைத்துவிட்டு விராட நகரத்தில் அஞ்ஞான வாசம் செய்தார்கள். இதை அறிந்த துரியோதனன் எப்படியாவது பாண்டவர்களை வெளியே கொண்டு வர வேண்டும் என்ற எண்ணத்தில் விராட நகரத்தில் இருந்த பசுமாட்டை எல்லாம் சிறைபிடித்தான். அவனின் நோக்கம், வீண் சண்டை இழுத்து பாண்டவர்களை வெளிகொண்டு வர வேண்டும் என்பதுதான். அமைதியாக இருந்தாலும் அதை பொருக்காத சிலர் வீண் சண்டைக்கு இழுப்பதுதானே சிலரின் குணம். இதை யாராலும் மாற்ற முடியாது அல்லவா. அதுபோல் துரியோதனனும் பாண்டவர்களை போருக்கு அழைத்தான்.

விஜயதசமி
இதனால் கோபம் கொண்ட விஜயனான அர்ஜூனன், விராடன் மகன் உத்தரனை முன்னிறுத்தி கொண்டு வன்னிமர பொந்தில் மறைத்து வைத்திருந்த ஆயுதங்களை எடுத்து கௌரவப்படையை வென்றார். மகாநவமி அன்று ஆயுதங்களுக்கு பூஜை செய்ததால் ஆயுதபூஜை என்ற பெயரும் ஏற்பட்டது. தசமி அன்று வென்றதால் ஊர்மக்கள், நம் விஜயன், தசமி அன்று கௌரவப்படையை வீழ்த்தினார். இனி பாண்டவர்களுக்கு வெற்றிதான் என்று பேச ஆரம்பித்தார்கள். அன்றிலிருந்து விஜயதசமி என்ற பெயர் ஏற்பட்டது.

வெற்றித்திருநாள்
தீயவை அழிந்து நல்லவை வெற்றி பெற்ற நாளாக விஜயதசமி கொண்டாடப்படுகிறது. மகிஷாசுரனை அழிக்க சாமுண்டீஸ்வரி அவதாரம் எடுத்தாள். 9 நாட்கள் நீடித்த போர், விஜயதசமியன்று முடிவுக்கு வந்தது. தீய சக்தியான மகிஷாசுரனை அன்னை சாமுண்டீஸ்வரி வதம் செய்தாள். நல்ல சக்தியின் வெற்றி திருவிழாவாக விஜயதசமி கொண்டாடப்படுகிறது என்கின்றன புராணங்கள்.

வெற்றிகள் தேடி வரும்
கல்வி, கலைகள் என இந்நாளில் எது தொடங்கினாலும் ஜெயமாக முடியும் என்பது நம்பிக்கை. மழலை குழந்தைகளை பள்ளியில் சேர்ப்பதற்கும் பாட்டு, இசைக் கருவிகள் பயிற்சி, நடன பயிற்சி, பிறமொழி பயிற்சி, புதிதாக ஒரு தொழிலை கற்றுக்கொள்வது ஆகியவற்றை இந்த நாளில் தொடங்கினால் சரஸ்வதி தேவியின் அருள் பரிபூரணமாக கிடைக்கும். அன்றைய தினம் குழந்தைகளின் கை பிடித்து, பரப்பி வைத்திருக்கும் நெல்லில் 'அட்சரம்' என்று எழுத கற்றுக் கொடுப்பது வித்யாரம்பம் எனப்படுகிறது.

பூஜை செய்ய நல்ல நேரம்
இன்று ஆயுதபூஜை, சரஸ்வதி பூஜை மாலை நேரத்தில் 4.30 முதல் 6.50 மணிக்குள் பூஜை செய்யலாம். விஜயதசமி நாளான நாளைய தினம் அதிகாலை 5 மணி முதல் 6 மணிவரையிலும் காலை 9.30 மணி முதல் 10.30 மணிவரையிலும் பூஜை செய்யலாம்.
-
டெல்லி தந்த கிரீன் சிக்னல்.. 4 வழியாக மாறும் தமிழ்நாட்டின் மூன்று முக்கிய சாலைகள்.. மெகா பிளான்! -
அதிமுக கூட்டணியில் பாமகவுக்கு 18, அமமுகவுக்கு 11 தொகுதிகள் ஒதுக்கீடு! -
PHH, AAY ரேஷன் கார்டுதாரர்களுக்கு முக்கிய அறிவிப்பு! கார்டு காலி ஆயிடும்..ரேகை வைக்கலைனா ப்ளாக் தான் -
நாகர்கோவில் எம்எல்ஏ காந்திக்கு கல்தா.. பாஜக தலைமை முடிவால் கலக்கம் -
பெட்ரோல் இல்லை.. ஆசிய நாடுகளுக்கு ‘நோ’ சொன்ன அராம்கோ? உலக அரசியலே தடம் புரள போகுது? -
பாரதத்தின் நிரந்தர பிரதமர்.. வட இந்தியாவில் திமுக சிலிண்டர் விளம்பரம் ஹிட்.. தர்ம சங்கடத்தில் பாஜக -
தங்கக் காசு மூலம் டிரம்ப் வேலையை காட்டிட்டாரு! அமெரிக்காவில் தங்க நாணயம் தந்த அதிர்ச்சி -
10 பைசா கூட வராது.. தங்கத்தை மொத்தமாக விற்கும் முதலீட்டாளர்கள்.. நெருங்கி வரும் பேரழிவு? -
தேமுதிகவுக்கு எத்தனை தொகுதிகள்? எங்கெங்கு போட்டியிடுகிறார்கள்? உத்தேச பட்டியல் இதுதானா? -
பாஜகவுக்கு 27 சீட்.. என்.டி.ஏ கூட்டணியில் தொகுதி பங்கீட்டை இறுதி செய்து அறிவித்தார் எடப்பாடி! -
பவரை காட்டுவோம்! மொத்த உலக நாடுகளையும் பீதியில் ஆழ்த்திய டிரம்ப் சொன்ன வார்த்தை! பெருசா நடக்க போகுது -
சர்ருன்னு ஏறிய பாஜக சீட் கணக்கு.. கடந்த தேர்தல்களில் பாஜக போட்டியிட்ட தொகுதிகள் எத்தனை?












Click it and Unblock the Notifications