Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

தீபாவளி, கந்த சஷ்டி விரதம் - ஐப்பசி மாதத்தில் என்னென்ன விரத நாட்கள் இருக்கு தெரியுமா

ஐப்பசி மாதம் பிறந்துள்ளது. ஒவ்வொரு தமிழ் மாதத்திலும் பல்வேறு சிறப்பம்சங்கள் காணப்படுகின்றன. பலவிதமான பண்டிகைகள் விழாக்கள் கொண்டாடப்படுகின்றன ஐப்பசி மாதத்தில் என்னென்ன விஷேசங்கள் இருக்கின்றன என்று பார்க்கலாம்.

Subscribe to Oneindia Tamil

சென்னை: துலாம் ராசியில் சூரியன் சஞ்சரிக்கும் ஐப்பசி மாதம் பிறந்துள்ளது. இந்த மாதத்தில் தீபாவளி பண்டிகை, கந்த சஷ்டி, ஐப்பசி பவுர்ணமி அன்னாபிஷேகம், இந்திர ஏகாதசி, பிரபோதினி ஏகாதசி உள்ளிட்ட பல்வேறு பண்டிகைகள் கொண்டாடப்படுகின்றன. எந்த நாளில் என்ன பண்டிகை கொண்டாடப்படுகிறது என்று பார்க்கலாம். பண்டிகை நாட்களை உங்கள் டைரியில் குறித்துக்கொள்ளவும்.

ஐப்பசி 3ஆம் தேதி நவம்பர் 20ஆம் நாள் புதன்கிழமையன்று பவுர்ணமி. ஐப்பசி மாதம் வரக்கூடிய பௌர்ணமி அன்று வருடந்தோறும் அன்னாபிஷேகம் சிறப்பாக நடைபெற்று வருகிறது. கர்ப்ப கிரகத்தில் உள்ள சிவலிங்கத்திற்கு சமைத்த சாதங்கள், காய்கறிகள் மற்றும் பழங்களை கொண்டு அபிஷேகம் செய்யப்படுகிறது. நாம் உண்ணுவதற்கு உணவளித்த சிவனுக்கு நன்றி கூறும் விதமாக இந்த அன்னாபிஷேகம் செய்யப்படுகிறது. எல்லா சிவாலயங்களிலும் அன்னாபிஷேகம் நடைபெற்றாலும் பெயர் பெற்ற தலமான தமிழகத்தின் நெற்களஞ்சியமான தஞ்சை மாவட்டத்தில் உள்ள பிரகதீஸ்வரர் ஆலயம் மற்றும் கங்கைகொண்ட சோழபுரம் பிரகதீஸ்வரர் ஆலயங்களில் சிறப்பாக வழிபாடு செய்யப்படுகிறது. சிறப்புவாய்ந்த அன்னாபிஷேக வழிபாட்டில் கலந்துக்கொண்டு இறைவனின் பரிபூரண அருளைப் பெற்று நமது குறைகளை நீக்கி பேறு அடையலாம்.

Deepavali, Kanda Sashti fasting - so many specials for the month of Aaippai

ஐப்பசி 11ஆம் தேதி வியாழக்கிழமை வாஸ்து நாளாகும். வீடுகட்ட, கட்டிட பூஜை செய்ய வாஸ்து பூஜை செய்யலாம்.

ஐப்பசி 15, நவம்பர் 1ஆம் தேதி திங்கட்கிழமையன்று இந்திரா ஏகாதசி விரதம் கடைபிடிக்கப்படுகிறது. இந்திரா ஏகாதசியில் விரதமிருந்தால் நாம் செய்த பாவம் மட்டுமின்றி நம் முன்னோர்களின் பாவங்களும் நீங்கும்.

ஐப்பசி 15, நவம்பர் 1 கோவத்ச துவாதசி ஆகும். இன்று மாலை நேரத்தில் பிரதோஷ காலத்தில் பசுவுக்கும் கன்றுக்கும் உணவு கொடுத்து பூஜித்து வழிபட்டால் வீட்டில் பெண்களும் குழந்தைகளும் ஆரோக்கியத்துடன் மகிழ்ச்சியுடன் வாழ்வார்கள். யம துவாதசி நாளில் தெற்கு நோக்கி விளக்கேற்றி எமனுக்கு பூஜை செய்ய முன்னோர்கள் மகிழ்வார்கள். ஆயுள் நீடிக்கும் எம பயம் நீங்கும்.

ஐப்பசி மாதம் 16 தேதி நவம்பர் 02 ஆம் தேதி ருண விமசோன பிரதோஷம். யமதீபம் ஏற்றலாம். தன்வந்திரி ஜெயந்தி கொண்டாடப்படுகிறது. தனத் திரயோதசி ஆகும். இன்று தங்கம் வெள்ளி உள்ளிட்ட விலை உயர்ந்த பொருட்கள் வாங்குவது சிறப்பு. இதனால் பொருள் பணம் சேர்க்கை உண்டாகும். இன்று தன்வந்திரி ஜெயந்தி தன்வந்திரியை பூஜித்து வழிபட்டால் அனைவரும் நோய் நீங்கி ஆரோக்கியமாக வாழலாம்.

ஐப்பசி மாதம் 17ஆம் தேதி நவம்பர் 03 நரக சதுர்த்தசி நாளில் தீபாவளி பண்டிகை கொண்டாடப்படுகிறது. ஐப்பசி மாதம் கிருஷ்ண பட்சம்-தேய்பிறை சதுர்தசி திதி நரக சதுர்தசி என்று அழைக்கப்படுகிறது. இந்த நாளன்று கிருஷ்ணர் நரகாசுரனை வதம் செய்தார் என்பது புராணம். இன்று அதிகாலையில் எண்ணெய் தேய்த்து குளித்து விட்டு கிருஷ்ணர் பூஜையும் லட்சுமி குபேர பூஜையும் செய்வது சிறப்பு. மஹாலட்சுமியின் அருளினால் செல்வ வளம் சிறக்கும்.

ஐப்பசி மாதம் 18ம் தேதி நவம்பர் 04 கேதார கௌரி விரதம். இன்று அர்த்தநாரீஸ்வரரை வழிபடுவது சிறப்பு. குடும்பத்தில் ஒற்றுமை சிறக்கும். குடும்பத்தில் கணவன் மனைவி இடையேயான சண்டை சச்சரவுகள் நீங்கும். லட்சுமிபூஜை செய்யலாம். ஐப்பசி 19ஆம் தேதி நவம்பர் 05 வெள்ளிக்கிழமை பிரதமை கோவர்த்தன பூஜை செய்யலாம்.

கந்த சஷ்டி என்பது முருகக் கடவுள் சூரனை அழித்த பெருமையை கொண்டாடும் ஒரு விழாவாகும். சஷ்டி என்றால் ஆறு ஆகும். ஐப்பசி மாதம் சுக்கிலபட்ச பிரதமை முதல் சஷ்டி வரை உள்ள ஆறு நாட்களும் கந்த சஷ்டி காலமாகும். இந்த நாளில் சஷ்டி விரதம் இருக்க சங்கடங்கள் தீரும் எதிரிகள் தொல்லை ஒழியும். குழந்தை இல்லாதவர்களுக்கு குழந்தை பாக்கியம் கிடைக்கும். கந்த சஷ்டி விரதம் ஐப்பசி 19ஆம் தேதி முதல் கந்த சஷ்டி விரதம் ஆரம்பமாகிறது.

ஐப்பசி மாதம் 20 தேதி நவம்பர் 06 யமத் துவிதியை. இந்த நாளில் சகோதர சகோதரிகள் ஒன்று கூடி சகோதரியின் வீட்டில் விருந்து உண்டு மன மகிழ்ச்சியுடன் பரிசுகள் பரிமாறிக் கொள்ள வேண்டும். இதனால் குடும்பத்தார் அனைவரும் தீர்க்க ஆயுளுடன் மகிழ்ச்சியுடன் வாழலாம்.

ஐப்பசி மாதம் 27 நவம்பர் 13ஆம் தேதி ஐப்பசி சதய விழா தஞ்சாவூரில் கொண்டாடப்படுகிறது. ஐப்பசி சதயம் நட்சத்திரத்தில் பிறந்தவர் மா மன்னர் ராஜராஜசோழன். அவரை சிறப்பிக்கும் வகையில் சதய விழா கொண்டாடப்பட்டு வருகிறது.

ஐப்பசி மாதத்தில் வரும் வளர்பிறை ஏகாதசி பிரபோதினி ஏகாதசி என்று அழைக்கப்படுகிறது. இந்த ஆண்டு ஐப்பசி 27, நவம்பர் 13ஆம் தேதி கொண்டாடப்படுகிறது.

துலாமாதமான ஐப்பசி மாதத்தின் கடைசி நாள் கடைமுகம் என்று அழைக்கப்படுகிறது. ஐப்பசி மாதத்தில் அனைத்துப் புண்ணிய நதிகளும் கலந்து புனிதத்தை அள்ளி வழங்கும் என்பர். இந்த மாதத்தில், காவிரி நீராடல் புண்ணியம் மிகுந்தது. அதுவும், ஐப்பசி கடைசி நாளன்று மேற்கொள்ளப்படும் புனித நீராடலை கடை முழுக்கு என்பர். ஐப்பசி மாதம் கடைசி நாளில் காவிரியில் முழுகி, மயூரநாதரை வழிபட்டால் நன்மை உண்டாகும். மேலும் நம் பாவங்கள் கரைந்தோடும்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+