ஆடிக்கிருத்திகை முருகன் கோவில்கள் முன்பு குவிந்த பக்தர்கள்... நேர்த்திக்கடன் செலுத்தி வழிபாடு
ஆடிக்கிருத்திகை நாளில் பக்தர்கள் கோவிலுக்கு செல்ல அனுமதி மறுக்கப்பட்டுள்ள நிலையில் கோவிலுக்கு முன்பாக குவிந்த பக்தர்கள் தங்களின் நேர்த்திக்கடனை செலுத்தி வழிபட்டு சென்றனர்.
பழனி: பழனி முருகன் கோவிலில் ஆடி கிருத்திகை மற்றும் ஆடி18 முன்னிட்டு 2ம் தேதி மற்றும் 3 ம் தேதி இரண்டு நாட்களில் பக்தர்கள் சாமி தரிசனம் செய்ய அனுமதி இல்லை என மாவட்ட நிர்வாகம் அறிவிப்பு இருந்தபோதிலும் தங்களுடைய நேர்த்திக் கடனை செலுத்துவதற்காக கோவில் முன்பு நின்று வழிபாடு செய்து பக்தர்கள் செல்கின்றனர்.
தமிழகத்தில் ஆடி மாதத்தில் கோவில்களில் திருவிழாக்கள் நடைபெறுவது வழக்கம். குறிப்பாக முருகன் மற்றும் அம்மன் கோவில்களில் ஆடி மாதத்தில் திருவிழாக்கள் நடைபெறுவது வழக்கம்.
ஆடி கிருத்திகையை ஒட்டி, பழனி தண்டாயுதபாணி சுவாமி திருக்கோயிலிலும், மக்கள் கூட்டத்தை தடுக்கும் நோக்கில் பக்தர்கள் சாமி தரிசனம் செய்ய தடை விதிக்கப்பட்டுள்ளது.

தெப்ப திருவிழா
திருத்தணி சுப்பிரமணிய சுவாமி திருக்கோயிலிலும் பக்தர்கள் சாமி தரிசனம் செய்ய ஆகஸ்ட் 4ஆம் தேதி வரை அனுமதி மறுக்கப்பட்டுள்ளது. திருத்தணி கோயில் சிறப்பு பூஜைகள், தெப்ப உற்சவ விழாக்களை இணையதளத்திலும், யூடியுப் சேனலிலும் நேரடியாக மாலை ஐந்து மணி அளவில் ஒளிபரப்பப்படும் என்றும் மாவட்ட நிர்வாகம் தெரிவித்துள்ளது.

குவிந்த பக்தர்கள்
ஆறுபடை வீடுகளில் மூன்றாம் படைவீடான பழனி முருகன் கோயிலில் சாதாரண நாட்களில் ஆயிரக்கணக்கான பக்தர்களும் விசேஷ நாட்களில் லட்சக்கணக்கான பக்தர்கள் சாமி தரிசனம் செய்வது வழக்கம் கொரோனா நோய் பரவலை குறைவின் காரணமாக கடந்த 20 நாட்களுக்கு முன்பு சாமி தரிசனம் செய்ய பக்தர்களுக்கு தமிழக அரசு அனுமதி அளித்திருந்தது அதன்படி பழனி கோவிலில் சாமி தரிசனம் செய்ய வரும் பக்தர்களுக்கு கோவில் நிர்வாகம் அனுமதி அளித்திருந்தது.

பக்தர்களுக்கு தடை
கொரோனா பரவல் அதிகரிப்பதை முன்னிட்டு தமிழகத்தில் உள்ள பக்தர்கள் அதிகம் கூடும் முக்கிய கோவில்களுக்கு பக்தர்களுக்கு அனுமதி இல்லை என மாவட்ட நிர்வாகம் அறிவித்து வருகிறது. மேலும் முருகனுக்கு உகந்த நாளான ஆடி கிருத்திகை க்கு ஏராளமான பக்தர்கள் சாமி தரிசனம் செய்ய வருவார்கள் என்பதாலும் ஆடி பதினெட்டாம் நாள் திருவிழாவினை முன்னிட்டு நாளை அதிக அளவில் பக்தர்கள் கூடுவார்கள் என்பதால் கொரோனா தொற்று பரவாமல் இருக்க நடவடிக்கை எடுக்கும் பொருட்டு இன்றும் நாளையும் நாட்களில் பழனி திருக்கோவிலில் சாமி தரிசனம் செய்ய பக்தர்களுக்கு அனுமதி இல்லை என மாவட்ட நிர்வாகம் அறிவித்துள்ளது.

வாசலில் வழிபட்ட பக்தர்கள்
இந்த நாட்களில் கோவிலில் ஆகம விதிப்படி அனைத்து நிகழ்வுகளும் நடைபெறும் என மாவட்ட நிர்வாகம் தெரிவித்துள்ளது. இருந்தபோதிலும் சில பக்தர்கள் தங்களுடைய நேர்த்திக் கடனை செலுத்துவதற்காக கோவில் வாசலில் சூடம் பொருத்தி வழிபாடு செய்து பக்தர்கள் செல்கின்றனர்.

நேரலையில் சாமி தரிசனம்
சென்னையில் உள்ள வடபழனி, கந்தகோட்டம் உள்ளிட்ட பிரசித்தி பெற்ற முருகன் கோவில்களிலும், அம்மன் கோவில்களிலும் பக்தர்கள் தரிசனத்திற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. சிறப்பு அபிஷேக ஆராதனைகளை பக்தர்கள் ஆன்லைன் மூலம் தரிசனம் செய்யலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது. கடந்த சில மாதங்களுக்கு முன்பு சித்திரை திருவிழா, வைகாசி விசாகம் உள்ளிட்ட திருவிழாக்களை ஆன்லைனில் மட்டுமே தரிசனம் செய்தனர். இன்று ஆடிக்கிருத்திகை நாளில் பக்தர்கள் நேரடியாக சென்று வழிபட முடியாமல் நேரலையில் தரிசனம் செய்து வருகின்றனர்.
-
எடப்பாடி அனுப்பிய மெசேஜ்.. சி.வி. சண்முகம் வீட்டில் உறுதிபடுத்திய கே.சி வீரமணி.. இணைகிறது அதிமுக -
நாளுக்கு நாள் மோசமாகும் இந்தியா.. குட்டி குட்டி நாடெல்லாம் நம்மை முந்திக்கொண்டு செல்கிறது! -
விஜய் நியமித்த 2 நாளில்.. IPS அருணை கோர்ட்டிலேயே காத்திருக்க சொன்ன நீதிபதி சுவாமிநாதன்.. ஏன்? -
420 யூனிட் ஓடியிருக்கிறது.. ஆனால் 200 யூனிட் கழிக்காமல் 100 யூனிட் கழித்தது ஏன்? விளக்கம் -
'நீங்க உம் மட்டும் கொட்டுங்க தெய்வமே.. மற்றதை நான் பார்த்துக்கிறேன்' தெறிக்கும் ஆதவ் அர்ஜுனா மீம்ஸ்! -
அவரை முதல்ல தூக்கணும்.. பிளான் போட்டு வேலை பார்த்த மூவர் அணி.. விஜய்க்கு எகிறிய பிரஷர்.. என்னாச்சு? -
கடைகளை மூடிய பணியாளர்கள்.. ஸ்தம்பித்த டாஸ்மாக்.. இரவோடு இரவாக அமைச்சர் விக்னேஷ் வெளியிட்ட அறிவிப்பு -
கோவை மக்களே 5 ஆண்டுகளுக்கு பின் வந்த குட்நியூஸ்.. விஜய் கொடுத்த கிரீன் சிக்னல் - டூயல் கான்செப்ட் பஸ் ஸ்டாண்ட்! -
அப்பறம் வச்சிக்கிறேன்.. கடுப்பான விஜய்.. கோபத்தின் உச்சிக்கே போயிட்டாராமே.. அப்படி என்ன நடந்தது? -
இடைத்தேர்தலில் பொது வேட்பாளர்களை நிறுத்தி வெற்றி பெறச் செய்வோம்.. விஜய்க்கு அன்புமணி எச்சரிக்கை -
தமிழ்த்தாய் வாழ்த்து விவகாரத்தை கையில் எடுத்த விஜய்.. உள்துறை அமைச்சகத்திடம் சொல்லுங்க.. விஜய் வைத்த கோரிக்கை! -
எடப்பாடி வீட்டிற்கு வந்த எஸ்பி வேலுமணி.. சிவி சண்முகம் மட்டும் மிஸ்ஸிங்.. தனித்துவிடப்படுகிறாரா?












Click it and Unblock the Notifications