For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

உங்கள் வீட்டில் பணம் கொட்ட வேண்டுமா? மகாலட்சுமியின் அருள் கிடைக்க இதை மறக்காதீங்க

நம்முடைய வீட்டில் பணமழை பொழிய மறக்காமல் சில காரியங்களைச் செய்ய வேண்டும். மகாலட்சுமியின் அருள் கிடைக்க சில விசயங்களைப் பின்பற்றினால் செல்வ வளம் அதிகரிக்கும்.

Google Oneindia Tamil News

மதுரை: எந்த ஒரு வீட்டிலும் பெண்களின் கண்களில் இருந்து கண்ணீரை வரவழைக்கக் கூடாது. குறிப்பாக செவ்வாய் மற்றும் வெள்ளிக்கிழமைகளில் பெண்களிடம் சண்டை போடக்கூடாது அதற்கு பதிலாக மணம் வீசும் மல்லிகைப் பூக்களை வாங்கிக் கொடுத்தால் உங்கள் வீடு தேடி வந்து மகாலட்சுமி ஆசி தருவார்.

ஒவ்வொருக்குமே உடல் ஆரோக்கியம்.... நீண்ட ஆயுள்...குறைவில்லாத செல்வம் வேண்டும் என்று விரும்புவார்கள். பணம் சம்பாதிக்க வேண்டும் கை நிறைய செலவு செய்ய வேண்டும்... செலவு செய்தது போக சேமித்து வைக்க வேண்டும் என்றும் நினைப்பார்கள்.

 இனி 5 வயது வரை உள்ள குழந்தைகள்.. அரசு பேருந்துகளில் இலவசமாக பயணிக்கலாம்.. அமைச்சர் சிவசங்கர் அதிரடி இனி 5 வயது வரை உள்ள குழந்தைகள்.. அரசு பேருந்துகளில் இலவசமாக பயணிக்கலாம்.. அமைச்சர் சிவசங்கர் அதிரடி

சிலருக்கு பணமழை பொழியும் கை நிறைய சம்பாதிப்பார்கள். சிலரோ தினசரி கூலி வேலை செய்து சம்பாதித்து இருப்பதைக் கொண்டு சிறப்புடன் வாழ்வார்கள். பணம் சேமிக்க வேண்டும் நம்முடைய வீட்டில் செல்வ வளம் பெருக வேண்டும் என்று நினைப்பவர்கள் சில காரியங்களை மறக்காமல் செய்ய வேண்டும். அப்படி செய்தால் செல்வத்திற்கு அதிபதியான அன்னை மகாலட்சுமியின் அருள் கிடைக்கும்.

லட்சுமியின் வடிவங்கள்

லட்சுமியின் வடிவங்கள்

லட்சுமிக்கு முன் தோன்றியவள் மூதேவி. லட்சுமிக்குப் பிறகு பிறந்தவள் வாருணி. இவள் மது போன்ற மயக்கம் தரும் வஸ்துக்களுக்கு தேவதை. லட்சுமியின் திருக்குமாரர்கள் கர்தமர், சிக்லீதர். ஸ்ரீ மகாலட்சுமிக்கு இரண்டு ரூபங்கள் உண்டு. ஒன்று ஸ்ரீதேவி என்ற லட்சுமி. மற்றொன்று பூதேவி என்ற பூமிதேவி வடிவம். லட்சுமிதேவி, வைகுண்டத்தில் ரமாதேவி, சொர்க்கத்தில் சொர்க்கலட்சுமி, பாதாள உலகில் நாகலட்சுமியாக இருக்கிறாள். அவள் ராஜாக்களிடம் ராஜ லட்சுமியாகவும் விளங்குகின்றாள். விலங்குகளிடத்தில் சோம லட்சுமியாகவும், புண்ணியவான்களிடம் ப்ரீதிலட்சுமியாகவும் வேதாந்திகளிடம் தயாலட்சுமியாகவும் இருக்கிறாள்.

பத்மாவதி

பத்மாவதி

லட்சுமி மாதுளம் கனியிலிருந்து உதித்ததால் மாதுளங்கி என்றும், பத்மாசனால் வளர்க்கப்பட்டதால் பத்மா என்றும், அக்னி குண்டத்தில் வாசம் செய்ததால் அக்னிகர்ப்பை என்றும், ரத்தின வடிவம் எடுத்ததால் ரத்தினாவதி என்றும், ஜனக மகாராஜனுக்கு மகளானதால் ஜானகி என்றும், பூமிக்குள்ளே கலப்பையின் நுனியிலிருந்து வெளியேற்றப்பட்டமையால் சீதை என்றும் பாற்கடலிலிருந்து தோன்றியதால் ஸ்ரீ என்றும் போற்றப்படுகிறாள்.

 மகாலட்சுமி வாசம் செய்யும் இடங்கள்

மகாலட்சுமி வாசம் செய்யும் இடங்கள்

மகாலட்சுமி தாமரைப் பூவில் வாசம் செய்பவள். லட்சுமிக்கு பிரியமான பூ செவ்வந்தி எனப்படும் சாமந்திப்பூ. மகாலட்சுமியை சாமந்திப்பூ, தாழம்பூ இலைகளாலும் அர்ச்சிக்கலாம். நெல்லிமரத்தில் மகாலட்சுமி வாசம் செய்வதால் துவாதசியன்று நெல்லிக்கனியை உணவில் சேர்த்துக் கொண்டால் ஏகாதசி விரதத்தின் பலன் கிடைக்கும். மகாலட்சுமி வில்வ மரத்தில் இருப்பதால் மாதப்பிறப்பு, அமாவாசை, பவுர்ணமி, சதுர்த்தி, அஷ்டமி, நவமி, திங்கட்கிழமை ஆகிய நாட்களில் வில்வத்தை மரத்திலிருந்து பறிக்கக் கூடாது. பசுவின் பின்புறத்தில் மகாலட்சுமி வாசம் செய்கிறாள். இதனால் கோவில்களில் காலையில் கோபூஜை செய்தபின் தரிசனம் ஆரம்பமாகிறது.

துளசி தரிசனம்

துளசி தரிசனம்

மகாவிஷ்ணுவிற்குப் பிடித்த துளசி லட்சுமியின் அம்சம் ஆகும். வீட்டில் துளசி மாடம் வைத்து தினமும் அதை சுற்றி வந்து வழிபட்டு வந்தால் எல்லாச் செல்வங்களும் கிடைக்கும். வாழை, மாவிலை, எலுமிச்சம்பழம் ஆகியவைகளிலும் மகாலட்சுமி வாசம் செய்கிறாள். அதனால்தான் சுபகாரியங்களில் இவை பயன்படுத்தப்படுகின்றன. தலைமுடியின் முன் வகிட்டில் மகாலட்சுமி வாசம் செய்வதால் திருமணமான பெண்கள் முன்வகிட்டில் குங்குமம் இட்டுக் கொள்கின்றனர்.

மகாவிஷ்ணு மார்பில் லட்சுமி

மகாவிஷ்ணு மார்பில் லட்சுமி

திருமால் கோவில்களில் பகவானுடைய மார்பில் உள்ள லட்சுமிக்கு யோகலட்சுமி என்றும் பெயர். மகாலட்சுமியை நாராயணன் திருப்பாற்கடலில் சித்திரை, தை, புரட்டாசி மாதங்களில் பூஜிக்கிறார். பிரம்ம தேவன் மகாலட்சுமியை புரட்டாசி மாத சுக்லாஷ்டமியில் பூஜிக்கிறார். மனுதேவன் மகாலட்சுமியை வருஷ முடிவிலும், தை, மாசில மாத சங்கராந்தியிலும் பூஜிக்கிறார். தேவேந்திரன் மகாலட்சுமியை பூஜித்து அஷ்ட ஐஸ்வர்யங்களையும், ஐராவத்தையும், அமராவதி பட்டணத்தையும் பெற்றார்.

பசுவில் வாசம் செய்யும் லட்சுமி

பசுவில் வாசம் செய்யும் லட்சுமி

இந்திரன் மகாலட்சுமியை 4 பாகங்களாக நிலை பெறச் செய்தார். அவை பூமி, அக்னி, நீர் மற்றும் உண்மை பேசும் மனிதர்கள். இந்த இடங்களில் மகாலட்சுமி நிலையாக இருப்பாள். கோமாதாவை தெய்வமாக மகாலட்சுமியின் அம்சமாகக் கருதி பூஜை செய்வது நம் நாட்டில் உள்ள பழக்கம். பசுவின் பின்புறம் மகாலட்சுமி வசிக்கிறாள் என்பதால் அதிகாலையில் பசுவின் பின்புறத்தைத் தொட்டுக் கண்களில் ஒற்றிக் கொள்ள வேண்டும்.

 இறை சக்தி அதிகரிக்க என்ன செய்யலாம்

இறை சக்தி அதிகரிக்க என்ன செய்யலாம்

வீட்டில் உள்ள பூஜையறையில் தேவையில்லாத உடைந்த பொருட்களை சேர்த்து வைக்காதீர்கள். இது இறை சக்தியைக் குறைக்கும். மேலும் அங்கு ஆன்மீக அதிர்வுகள் ஏற்படாது. மிகக்குறைந்த பொருட்களை மட்டும் பூஜையறையில் வைத்து கொள்ளுங்கள். வெறுமனே தூபதீபம் காட்டுவதை விட கடவுளுக்கு மிகவும் பிடித்தமான பாடல்கள், ஸ்லோகங்கள், நாமங்களை உச்சரித்தபடி பூஜை செய்வது மிகவும் சிறந்தது. பஞ்ச பாத்திரத்தில் வைத்திருந்த தீர்த்தத்தை நாம் பருகிய பிறகு மீதம் உள்ளதை மறுநாள் காலையில் செடிகளுக்கும், மரங்களுக்கும் ஊற்ற வேண்டும். தரையில் ஊற்றக்கூடாது.

 கோலம் போடுவது அவசியம்

கோலம் போடுவது அவசியம்

வாரம் ஒரு முறையாவது பூஜையறையில் உள்ள படங்களையும், பூஜைக்குரிய மேஜைகளையும் துடைக்க வேண்டும். செவ்வாய், வெள்ளிக்கிழமைகளில் வெண்ணெயை உருக்கக்கூடாது. செவ்வாய், வெள்ளிக்கிழமைகள் லட்சுமிக்கு உகந்தவை ஆகும். மேலும், வெண்ணெயில் மகாலட்சுமி இருப்பதால் வெண்ணெயை உருக்கக்கூடாது. செல்வத்திற்குரிய தெய்வங்களான வெங்கடாஜலபதி, லட்சுமி, குபேரன் ஆகியோர் படங்களை வீட்டின் வெளிப்புறம் பார்த்து இருக்குமாறு மாட்டக்கூடாது. வீட்டில் கோலம் போடாமலும், விளக்கேற்றாமலும் ஆலயங்களுக்கு செல்லக்கூடாது.

பணம் பர்ச்சில் எங்கு வைக்க வேண்டும்

பணம் பர்ச்சில் எங்கு வைக்க வேண்டும்

பெண்களை அடித்து கண்ணீர் சிந்த வைக்கக் கூடாது. செவ்வாய் வெள்ளி கிழமைகளில் பெண்களிடம் சண்டை போடாமல் இருப்பது நல்லது. மல்லிகை பூக்களை மனைவிக்கு வாங்கித்தரலாம். பண இருப்பை உடலின் முன்பக்கத்தில் சட்டையின் மேல் பகுதியிலும் பேண்ட் பாக்கெட்டில் முன் பகுதியிலும் வைத்துக் கொள்வது, இவைகளையெல்லாம் ஆண்கள் பின்பற்றும் பொழுது மகாலட்சுமியின் ஆசிகள் கிடைக்கும் என்று சோதிட நூல்கள் சொல்கிறது.

English summary
Tears should not be drawn from the eyes of women in any home. Mahalakshmi will bless you if you buy fragrant jasmine flowers instead of fighting with women especially on Tuesdays and Fridays.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X