For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

குரு பெயர்ச்சி நாளில் புளியரை தட்சிணாமூர்த்தியை வணங்குங்கள்!

குரு பெயர்ச்சியை முன்னிட்டு குரு பரிகார தலமான புளியரை தட்சிணாமூர்த்தியை வணங்கலாம்.

Google Oneindia Tamil News

நெல்லை: தமிழக கேரளா எல்லைப்பகுதி மேற்குத்தொடர்ச்சி மலை அடிவாரப்பகுதியான செங்கோட்டை அருகே புளியரையில் அமைந்துள்ள அருள்மிகு சிவகாமியம்மாள் சமேத சதாசிவமூர்த்தி தட்சிணாமூர்த்தி ஆலயம் சிறந்த குரு பரிகார ஆலயமாகும்.

சுமார் 500ஆண்டுகள் பழமை வாய்ந்த இந்த ஆலயத்தில் குருபகவான் தட்சிணாமூர்த்தி தெற்கு நோக்கி அமர்ந்து அருள் பாலித்து வருகிறார். நாளை குரு பகவான் கன்னி ராசியில் இருந்து துலாம் ராசிக்கு இடம்பெயர்கிறார். இதனை முன்னிட்டு குரு பரிகார ஆலயம் பற்றி அறிந்து கொள்வோம்.

Guru parikara temple Puliyarai Dhachinamoorthi

குரு பார்வை கோடி நன்மை என்ற சொல் விளங்க காரணகர்த்தாவான குரு பகவான் சுயம்புவாகத் தோன்றி காட்சி கொடுத்த சதாசிவ மூர்த்தி சுவாமிக்கு நேர் எதிரில் நந்தீஸ்வரருக்கு இடையில் தென்முகமாக அமர்ந்து அருள் பாலிக்கிறார். சாஸ்தாவின் சொரூபத்திலும் நவக்கிரஹங்களுக்கு அதிபதியாகவும் இங்கு வீற்றிருக்கிறார்.

புளியரை ஸ்ரீ தட்சிணாமூர்த்தி ஆலய சிறப்புகள்

இந்த அழகு கொஞ்சும் ஆலயத்தில் மூலவர் ஸ்ரீசதாசிவமூர்த்தி, அம்மன் ஸ்ரீ சிவகாமி அம்பாள் சகிதம் நித்ய திவ்ய திருமணக் கோலத்தில் அருள்பாலிக்கின்றார். சுவாமிக்கு வல பக்கம் வீற்றிருந்து நித்ய திருமணக் கோலத்தில்
அருள்பாலிக்கின்றார். இதனால் எந்த கிரக நிலை தடுத்து நிறுத்திய திருமணமானாலும், இங்கு வந்து தரிசனம் செய்தால் திருமணம் கைகூடி வரும் என்பது ஐதீகம்.

Guru parikara temple Puliyarai Dhachinamoorthi

அதேபோல் சன்னதிக்கு எதிரே அமைந்துள்ள அழகிய ஜடா மகுடதீர்த்தக் குளத்தில் நீராடி விட்டு, அரசரடி விநாயகர வணங்கி, 27 நட்சத்திரங்களே படிகளாக அமக்கப்பட்ட அந்த 27 படிகள படிகளில் கீழிருந்து நட்சத்திர வரிசைப்படி, அவரவர் நட்சத்திர படிகளில் பூஜகள் செய் வழிபட்டு, குருநாமம், சிவ நாமம் சொல்லி வணங்கி வந்து மேலே சன்னதிக்கு வரவேண்டும்.

சந்நிதிக்கு எதிரே நந்தி தேவர், அவருக்கு அடுத்த இடத்தில் குரு பகவான் ஸ்ரீ தெட்சிணாமூர்த்தி, இவர்களை
வணங்கி விட்டு சன்னதியின் உள்ளே அனுக்ஞ விநாயகர் (விநாயகர் சூர்ய அம்சத்தில் உள்ளதால் இந்த ஆலயத்தில் சூரிய பகவானுக்கு சன்னதி கிடயாது, சூரிய பகவான் அம்சமாக விளங்கும் விநாயகருக்குத்தான் முதல் பூஜை நடபெறுகிறது) உள்ளே எழிலுடன் அமர்ந்ள்ளது சுயம்பு நாதர் ஸ்ரீ சதாசிவமூர்த்தி, அதன் வலப் பக்கம் வலம் வந்தால் ஸ்ரீ சிவகாமி அம்மாள் சந்நிதி.

எந்த கிரக அமைப்பு ஆனாலும் இங்கு வந்து நவக்கிரகங்களின் அதிபதியாக வீற்றிருக்கும் குருபகவான் ஸ்ரீ தட்சிணா மூர்த்தியை வணங்கி விட்டு வந்தால் காரியங்கள் அனைத்தும் வெற்றியாகும்.

English summary
Guru parikara temple Puliyarai Dhachinamoorthi is first in the temple. Gurupeyarchi and Thursday special pooja in the temple.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X