For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

குரு பெயர்ச்சி 2020: கஜகேசரி யோகம், ஹம்சயோகம் குரு பகவான தரும் யோகங்கள் பலன்கள்

ஜோதிடத்தில் மகா சுபர் குருபகவான். ஹம்ச யோகம் யாருக்கு வரும் என்றால், குரு பகவான் லக்ன கேந்திரங்களில் ஆட்சி உச்சம் பெற்று வலுக்கும் போது ஹம்ச யோகம் அமைகிறது. குருபகவான் சந்திரன், செவ்வாய் உடன் இணைந்து இருந்தாலோ, பார்வை பெற்றாலோ சில யோகங்க

Google Oneindia Tamil News

சென்னை: குருபகவான் தரும் அற்புதமான யோகங்களில் ஹம்சயோகம் முக்கியமானது. வாழ்க்கையில் அனைத்து அம்சங்கள் நிறைந்திருக்கும். லக்ன கேந்திரங்களில் குரு ஆட்சி உச்சம் பெறும் ஹம்ச யோகம் அமைகிறது. கஜகேசரி யோகம், குரு மங்கள யோகம், குரு சந்திர யோகமும் குரு பகவானால் கிடைக்கக் கூடியது எந்த யோகம் கொண்ட ஜாதகக் காரர்களுக்கு என்னென்ன பலன்கள் கிடைக்கும் பார்க்கலாம்.

குரு என்றாலே சுப கிரகம். குரு என்றாலே நன்மை. ஜாதகத்தில் உள்ள கெடுதல்களையும் பார்வையால் நன்மை தரும் அமைப்பாக மாற்றுபவர். குரு லக்னத்துடன் தொடர்பு கொள்ளும் போது அதிக நன்மை கொண்டவராக இருப்பார்கள். ரொம்ப நல்லவராகவும், எளிதில் எதையும் விட்டுக்கொடுப்பார். குரு பகவான் வலுவாக அமர்ந்து பார்க்கின்ற இடங்களை எல்லாம் வலுப்படுத்தி ஜாதகருக்கு நீண்ட புகழ், நிறைவான செல்வம் என அள்ளி அள்ளி கொடுப்பார்.

ஒருவரது ஜாதகத்தில் குரு பகவான் அவரது சொந்த ராசியான தனுசு ராசியிலேயோ, மீன ராசியிலேயோ இருந்தாலும், குரு பகவான் உச்சம் பெறும் ராசியான கடக ராசியிலே சஞ்சாரம் செய்தாலும் அந்த ஜாதகருக்கு ஹம்ச யோகம் ஏற்படுகிறது.ஜாதக ரீதியாக ஹம்சயோகம் அமையப்பெற்றவர்களுக்கு அம்சமான வாழ்க்கை அமையும். கேந்திரங்களான 1, 4, 7,10 ஆகிய நான்கு இடங்களில் ஏதேனும் ஒன்றில் குரு வலுப்பெற்று அமரவேண்டும். இந்த ஹம்ச யோகத்தில் பிறந்த ஜாதகர்களின் குடும்பம் ராஜயோக அம்சத்துடன் இருப்பார்கள்.

சபரிமலை ஐயப்பன் திருவாபரண பெட்டியில் என்னென்ன இருக்கும் தெரியுமாசபரிமலை ஐயப்பன் திருவாபரண பெட்டியில் என்னென்ன இருக்கும் தெரியுமா

தோஷமும் யோகமும்

தோஷமும் யோகமும்

மேஷ லக்கினத்திற்கு 4ல் குரு கடக ராசியில் உச்சம் பெறுவது. மிதுன லக்கினத்திற்கு 7 மற்றும் 10ல் குரு ஆட்சி பெறுவது. கடக லக்கினத்திற்கு லக்கினத்தில் உச்சம் பெறுவது. கன்னி ராசிக்கு 4 மற்றும் 7ல் குரு ஆட்சி பெறுவது. துலாம் லக்கினத்திற்கு 10ல் குரு ஆட்சி பெறுவது. தனுசுவிற்கு லக்கினம் மற்றும் 4ல் குரு ஆட்சி பெறுவது. மகரத்திற்கு 7ல் குரு உச்சம் பெறுவது. மீனத்திற்கு லக்கினம் மற்றும் 10ல் குரு ஆட்சி பெறுவது ஹம்சயோக அமைப்பாகும். இது ஹம்ச யோக அமைப்பாக இருந்தாலும் கேந்திரஆதிபத்ய தோஷத்தை தரும்.

அழகானவர்கள் அறிவானவர்கள்

அழகானவர்கள் அறிவானவர்கள்

ஹம்ச யோகத்தில் பிறந்தவர்கள் நல்ல உயரமான தோற்றத்தையும், வெளிர் நிற மேனியையும் கொண்டவர்களாக இருப்பார்கள். இவர்களின் முகத்தில் இயற்கையாகவே ஒரு தெய்வீக தேஜஸ் இருக்கும். இயற்கையாகவே பிறரை வசீகரிக்கக்கூடிய தன்மை கொண்டவர்களாக இருப்பார்கள். பல விதமான சாஸ்திரங்களை கற்றுத்தேர்ந்து பண்டிதர்களாக இருப்பார்கள். அதை பிறருக்கு உபதேசிக்கவும் செய்வார்கள்.

நேர்மையானவர்கள்

நேர்மையானவர்கள்

இந்த யோகத்தில் பிறந்தவர்கள் அரசியலில் ஈடுபட்டால் மிகப்பெரிய பதவிகளை பெறக்கூடிய அதிர்ஷ்டமும் உண்டாகும். தர்ம நெறி, நேர்மை குணம் தவறாமல் வாழக்கூடியவர்களாக இருப்பார்கள். ஆன்மீகத்தில் இந்த உலகமே போற்றக்கூட அளவிற்கு ஜெகத் குருவாக உயர்வார்கள்.

மேஷம் கடகம்

மேஷம் கடகம்

மேஷம், கடகம், துலாம், மகரம் ஆகிய ராசிகளை லக்கினமாகக் கொண்டு பிறந்தவர்கள்தான் குரு பகவான் தரும் ஹம்ச யோகத்தின் முழுப் பலனையும் அனுபவிப்பவர்கள். அதிலும் குருவின் நண்பர்களான, செவ்வாய் மற்றும் சந்திரன் ஆகியோரின் ஆட்சிக்குட்பட்ட மேஷம் மற்றும் கடக லக்கினக்கார்களுக்குதான் இந்த யோகம் கூடுதல் நற்பலன்களைத் தரும்.

முழுமையான யோகம்

முழுமையான யோகம்

குரு ஆட்சி, உச்சம் பெறும் நிலையில் அவருக்கு எதிர்த்தன்மையுடைய கிரகங்களான சுக்கிரன், சனி, புதன் ஆகியோர் அவருடன் சேருவது மற்றும் அவரைப் பார்ப்பது யோகத்தைக் குறைத்துவிடும். அதேநேரத்தில் குருவின் நண்பர்களான சந்திரன், சூரியன், செவ்வாய் ஆகியோர் லக்கின சுபர்களாகி குருவைப் பார்த்தாலோ, இணைந்தாலோ யோகம் வலுப்பெறும். ஹம்ச யோகம் தரும் நிலையில், குரு சூரியனுடன் இணைந்து அஸ்தங்கம் அடைந்தால் யோகம் முற்றிலும் வலிமையிழந்துவிடும்.

சிறப்பான வாழ்க்கை

சிறப்பான வாழ்க்கை

குரு வலுவான சுபர். லக்னத்தை பார்க்கும் குரு அற்புதமான பலன்களைத் தருவார். தியாக மனப்பான்மையுடன் இருப்பார்கள். இந்த ஹம்சயோகம் அமையப்பெற்றவர்கள் நேர்மையான வழியில் பணம் சம்பாதிப்பார்கள். குரு பணத்தை அள்ளிக்கொடுப்பார். எதிலும் நேர்மையாக புகழோடு இருப்பார்கள். முகத்தில் ஒரு பொலிவு தெரியும். குரு பொன்னிற காரகன். எனவே முகத்திலும் களை தெரியும். லக்னத்தோடு தொடர்பு கொண்ட குரு பகவான் அதிக வலுவான ஹம்சயோகம் தருவார்.

குரு தரும் செல்வாக்கு

குரு தரும் செல்வாக்கு

குரு சந்திரனுக்கு கேந்திரத்தில் அதாவது 4, 7, 10 ஆகிய இடங்களில் இருந்தால் கஜகேசரி யோகம் உண்டாகிறது.
இந்த யோகத்தைப் பெற்றவர்கள் செல்வம், செல்வாக்கு, வீடு, வாகனம், உயர்ந்த பதவி போன்றவற்றைப் பெற்றவர்களாக விளங்குவர். சந்திரனுக்கு குரு 1, 5, 9ஆம் வீட்டில் குரு சஞ்சரித்தால் குருச்சந்திர யோகம் உண்டாகிறது. இந்த யோகத்தைப் பெற்றவர்கள் புகழ் மிக்கவர்களாகவும் நல்ல அந்தஸ்து படைத்தவர்களாகவும் இருப்பர்.

குரு செவ்வாய் சேர்க்கை

குரு செவ்வாய் சேர்க்கை

குரு செவ்வாய் சேர்க்கை பெற்றிருந்தாலும், குருவுக்கு கேந்திரத்தில் செவ்வாய் இருந்தாலும் குரு மங்கள யோகம் உண்டாகிறது. இந்த யோகத்தைப் பெற்றவர்கள் வீடு, இடம், வாகனம் போன்ற அமைப்பு கிடைக்கும். குருவுக்கு சந்திரன் 6, 8, 12 ஆகிய இடங்களில் இருந்தால் சகட யோகம் உருவாகிறது. வாழ்க்கை வண்டிச் சக்கரம் போல, இன்பமும், துன்பமும் கலந்திருக்கும். ஒரு தொகை செலவழிந்த பிறகே மற்றொரு தொகை வந்து சேரும். வாழ்க்கை ஏற்ற இறக்கம் நிறைந்ததாக இருக்கும்.

English summary
Hamsa Yoga is one of the most important of the wonderful yogas given by Guru. Life is full of all aspects. Hamsa Yoga, the culmination of the Guru's rule, is set in the centers of Lucknow. Kajakesari Yoga, Guru Mangala Yoga, Guru Chandra Yoga are also available by Guru Bhagavan.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X