குரு பெயர்ச்சி 2021: குரு பார்வையால் பொன்னாக ஜொலிக்கப் போகும் ராசிக்காரர்கள் யார் தெரியுமா
சனிபகவானுடன் இணைந்து நீச்சம் பெற்ற நிலையில் பயணிக்கும் குரு பகவான் விரைவில் மகர ராசியில் இருந்து கும்ப ராசிக்கு இடப்பெயர்ச்சியாகப்போகிறார். குருவின் பார்வை கும்ப ராசியில் இருந்து மிதுனம், சிம்மம், துலாம் ராசிகளின் மீது வ
சென்னை: குரு பார்க்க கோடி புண்ணியம் என்பார்கள். குரு பலம் இருந்தாலே எதையும் சாதிக்கலாம் என்றும் வெற்றி மீது வெற்றி வந்து சேரும் என்றும் ஜோதிடத்தில் கூறப்பட்டுள்ளது. திருக்கணித பஞ்சாங்கப்படி குரு பகவான் மங்களகரமான பிலவ ஆண்டு கார்த்திகை மாதம் 4ஆம் தேதி நவம்பர் 20ஆம் தேதியன்று மகர ராசியில் இருந்து கும்ப ராசிக்கு இடப்பெயர்ச்சியாகிறார். இந்த குரு பெயர்ச்சியால் குரு பார்வையால் எந்தெந்த ராசிக்காரர்கள் பலனடையப்போகிறார்கள். குரு பலம் எந்த ராசிக்காரர்களுக்கு கிடைக்கப்போகிறது என்று பார்க்கலாம்.
காலச்சக்கரத்திற்கு லாப ஸ்தானமான 11ஆம் வீட்டில் குரு அமரப்போகிறார். குருவின் பார்வை மிதுனம், சிம்மம், துலாம் ராசிகளின் மீது விழப்போகிறது. பொன்னவன் குருவின் அருள் பார்வை கிடைத்தால் திருமண யோகம் கை கூடி வரும் எனவேதான் திருமணத்திற்கு வரன் பார்க்கும் போதே குரு பலம் வந்து விட்டதா என்று கேட்பார்கள். குருவின் அருள் இருந்தாலே திருமண யோகம் கை கூடி வரும். வேலை செய்யும் இடத்தில் மதிப்பு மரியாதை கூடும். பதவி உயர்வும் சம்பள உயர்வும் தேடி வரும்.
குரு பார்வை பட்டாலே நம்முடைய ஜாதகத்தில் உள்ள தோஷங்கள் நீங்கிவிடும். களத்திர தோஷம், மாங்கல்ய தோஷம் நீங்கி திருமணம் கை கூடி வரும். நிதி நெருக்கடிகள் நீங்கி பண வரவு அதிகரிக்கும். அதிகம் பணம் புழக்கம் உள்ள இடத்தில் வேலை கிடைக்கும். இந்த குரு பெயர்ச்சியால் குரு பலம் கிடைக்கப் போகும் ராசிக்காரர்களுக்கு திருமணம் கை கூடி வரும் குரு பார்வை கிடைக்கும் ராசிக்காரர்களின் தோஷங்கள் நீங்கி அந்தஸ்து உயரப்போகிறது. இது கோச்சார ரீதியான பலன்தான். உங்களின் சுய ஜாதகத்தில் கிரகங்களின் சஞ்சாரம் தசாபுத்தியைப் பொறுத்து பலன்கள் மாறுபடலாம்.

குருவின் பார்வை
குரு பகவான் தான் நின்ற இடத்தில் இருந்து 5,7,9ஆகிய இடங்களை பார்வையிடுவார். கும்ப ராசிக்கு சென்ற பின்னர் அங்கிருந்து 5ஆம் பார்வையாக மிதுன ராசியையும், 7ஆம் பார்வையாக சிம்ம ராசியையும், 9ஆம் பார்வையாக துலாம் ராசியையும் பார்வையிடுகிறார். குரு பார்வை கிடைக்கும் இந்த மூன்று ராசிக்காரர்களுக்கு அபரிமிதமான யோகங்கள் தேடி வரப்போகிறது. ஆனந்தம் ஆனந்தம் என்று பாடப்போகிறீர்கள். கவலைகள் நீங்கி சந்தோஷம் அதிகரிக்கப் போகிறது.

நினைத்தது நிறைவேறும்
சுப கிரகத்தின் பார்வை பட்டாலே மனதில் இருந்த குழப்பங்கள் நீங்கும். குடும்பத்தில் இருந்த பிரச்சினைகள் முடிவுக்கு வரும். அஷ்டமத்து சனி ஆட்டி வைத்தாலும் விரையத்தில் உள்ள ராகுவும் ஆறாம் வீட்டில் கேதுவும் சில சங்கடங்களைக் கொடுத்து வந்தாலும் நிகழப்போகும் குரு பெயர்ச்சியால் மனதில் இருந்த கவலைகள் மறைப்போகிறது. எண்ணங்களில் தெளிவு பிறக்கும். தைரியமும் தன்னம்பிக்கையும் அதிகரிக்கப் போகிறது.
களத்திர ஸ்தான அதிபதியும் தொழில் ஸ்தான அதிபதியுமான குரு பாக்ய ஸ்தானத்தில் அமர்ந்து உங்களை பார்வையிடுவதால் நீண்ட நாட்களாக நினைத்த காரியம் நிறைவேறும். திருமண வாழ்க்கையில் ஏற்பட்டிருந்த பிரச்சினை நீங்கும். சிலருக்கு புதிய திருமண வாழ்க்கை கை கூடி வரும். அதிர்ஷ்டமும் நல்ல வாய்ப்புகளும் தேடி வரும். வாசல் கதவை வந்து வாய்ப்பு கதவைத் தட்டும் போது நன்றாக பயன்படுத்திக்கொள்ளுங்கள். காதல் வாழ்க்கையில் ஏற்பட்டிருந்த சிக்கல்கள் நீங்கும். ஆரோக்கியத்தில் ஏற்பட்டிருந்த பிரச்சினைகள் முடிவுக்கு வரும். சகோதரர்களால் சந்தோஷம் அதிகரிக்கும். சுப நிகழ்ச்சிகளில் பங்கேற்பீர்கள். பிள்ளைகளால் சந்தோஷம் அதிகரிக்கும். திருமணமானவர்களுக்கு புத்திர பாக்கியம் கை கூடி வரும். மாணவர்களுக்கு குருவின் ஆதரவு கிடைக்கும். ஆன்மீக தரிசனம் செய்யப் போகிறீர்கள். இந்த குரு பெயர்ச்சியாலும் குருவின் பார்வையாலும் மன மகிழ்ச்சி அதிகரிக்கும்.

மகிழ்ச்சி அதிகரிக்கும்
குரு பகவான் கும்ப ராசியில் அமர்ந்து உங்கள் ராசியை நேரடியாகப் பார்வையிடுகிறார். குரு பகவான் ஏழாம் வீட்டில் அமர்ந்து ஏழாம் பார்வையாக உங்களை பார்வையிடுகிறார். வரம் கேட்கப்போகும் கடவுள் நேரில் வந்தது போல இந்த குரு பெயர்ச்சி அமையப்போகிறது. செல்வாக்கு அதிகரிக்கும். சமூகத்தில் மதிப்பு மரியாதை கூடும். புகழும் அதிர்ஷ்டமும் தேடி வரும். வேலை செய்யும் இடத்தில் உங்களின் செயலுக்கு அங்கீகாரம் அதிகரிக்கும். மதிப்பு மரியாதை தேடி வரும். திருமணத்திற்கு வரன் கிடைக்கும். மனதிற்குப் பிடித்த வரனுடன் திருமணம் நடைபெறும். எதிர்ப்புகள் இன்றி காதல் கை கூடி வரும். புதிய காதல் மனதிற்குள் மணியடிக்கும். திருமணமானவர்களுக்கு புத்திரபாக்கியம் கிடைக்கும். புதிதாக தொழில் தொடங்குபவர்களுக்கு நல்ல காலம் ஆரம்பிக்கப் போகிறது. தொழில் ஆரம்பிக்க வங்கிக் கடன் கிடைக்கும். செய்யும் தொழிலில் லாபம் அதிகரிக்கும். பெண்கள் இல்லத்தரசிகளின் விரும்பம் நிறைவேறும். கோரிக்கைகள் நிறைவேறும். சுபரின் பார்வை உங்களுக்கு கிடைப்பதோடு லாப ஸ்தானத்தின் மீதும், முயற்சி ஸ்தானத்தின் மீதும் விழுவதால் தொட்டது துலங்கும். அரசியல்வாதிகளுக்கு அற்புதமாக கால கட்டம். பதவியும் பட்டமும் தேடி வரப்போகிறது. எதிரிகள் தொழில் ஒழியும் மொத்தத்தில் குரு பெயர்ச்சியாலும் குரு பார்வையாலும் சந்தோஷம் பொங்குதே என்று பாடப்போகிறீர்கள். உங்களுக்கு தசாபுத்திகள் சாதகமாக இருந்தால் கோடிகளை குவிக்கப் போகிறீர்கள்.

யோகங்கள் நிறைந்த குரு பெயர்ச்சி
குரு பகவான் உங்கள் ராசிக்கு பூர்வ புண்ணிய ஸ்தானத்தில் அமர்ந்து உங்கள் ராசியைப் பார்வையிடுகிறார். பூர்வீக பந்தங்களினால் நன்மைகள் நடைபெறும். முன்னோர்களின் ஆசி கிடைக்கப் போகிறது. அர்தாஷ்டம சனியால் அவதிப்பட்டு வரும் நீங்கள் இந்த குரு பெயர்ச்சி மற்றும் குருவின் பார்வையால் நிறைய சந்தோஷங்களை அனுபவிக்கப் போகிறீர்கள். நிதி நெருக்கடிகள் நீங்கி பொருளாதார வளம் அதிகரிக்கும். காதலிப்பவர்களுக்கு பெற்றோர்களின் ஆசியோடு திருமணம் நடைபெறும். புதிய தொழில் தொடங்க முயற்சி செய்யலாம். தொழிலில் லாபம் கிடைக்கும். நீண்ட நாட்களாக புத்திரபாக்கியத்திற்காக காத்துக்கொண்டிருப்பவர்களுக்கு மழலைச் செல்வம் மடியில் தவழப்போகிறது. உறவுகளில் இருந்த பிரச்சினைகள் நீங்கும். கணவன் மனைவி இடையே ஏற்பட்ட சிக்கல்கள் நீங்கும். மூத்த சகோதரர்களின் உதவி வீடு தேடி வரும். வண்டி வாகன வசதி வீடு தேடி வரும். குடும்பப் பெண்களுக்கு தேவைகள் பூர்த்தியாகும். உடல் ஆரோக்கியத்தில் ஏற்பட்டிருந்த பிரச்சினைகள் முடிவுக்கு வரும். உடல் ஆரோக்கியத்தில் இருந்த பிரச்சினைகள் முடிவுக்கு வரும். பிள்ளைகளின் கல்விக்காக செலவு செய்ய வருமானம் அதிகரிக்கும். நண்பர்கள், உறவினர்கள் ஆதரவு தேடி வரும்.
-
தமிழ் புத்தாண்டு பலன்: கன்னி ராசிக்கு 100 மார்க்.. ரேஞ்சே மாறப்போகுது.. பொற்காலம் ஆரம்பம் -
கோவை வடக்கு, மயிலாப்பூர்.. பாஜக போட்டியிடும் 27 தொகுதிகள் எவை? எடப்பாடி பழனிசாமி வெளியிட்ட அறிவிப்பு -
பிள்ளையை கிள்ளி விட்ட இஸ்ரேல்.. தொட்டிலை ஆட்டும் அமெரிக்கா! வெறி கொண்டு அடிக்கும் ஈரான்.. குண்டு மழை -
உளவுத்துறை சொன்னது என்ன? 155 சீட் பின்னணியில் அமித்ஷா தந்த கிரீன் சிக்னல்! எடப்பாடி முகம் பிரகாசம் -
3 அமைச்சர்களை எதிர்க்கும் தமாக! அதிமுக – பாஜக வழங்கிய தொகுதியை கவனிச்சீங்களா.. 5 தொகுதியும் கடினம் -
கரண்ட் பில் இலவசம்? இனி கட்ட வேண்டாமா? மத்திய அரசு ₹78,000 மானியம்! உங்க வீட்டிற்கு எப்படி வாங்குவது -
பிடுங்கப்படும் டிரம்பின் பவர்! அதிபர் பதவியிலேயே இருந்தாலும் அதிகாரம் இருக்காது.. நிலைமை மோசம்! -
நல்ல காலம் பொறக்குது.. தங்கம், வெள்ளியை முடிஞ்ச அளவு வாங்குங்க! ‘கோல்டுமேன்’ அடுக்கும் காரணங்கள்! -
மருமகள் உள்ளே, சீனியர் வெளியே? 55 கால சாம்ராஜ்ஜியத்திற்கு செக்! காட்பாடி திருப்பத்தின் பின்னணி என்ன -
இரட்டை இலையை விட்டுவிட்டு.. தாமரைக்கு தாவும் கூட்டணி கட்சிகள்! எங்கேயோ இடிக்குதே! -
ஈரானை சுத்துப்போடும் ‘பாராசூட் அட்டாக்’ டீம்.. டிரம்ப் பெரிய பிளான்.. போர் இப்போதைக்கு முடியாது? -
10 சவரன் கையில், 8 சவரன் பில்லில்! பழைய நகையை மாற்றினால் நடக்கும் ரகசியம்.. ஏமாறாமல் இருக்க இதோ வழி












Click it and Unblock the Notifications