Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

குரு பெயர்ச்சி பலன் 2021: கும்ப ராசிக்கு போகும் குருபகவானால் லாபத்தை அடையப்போவது யார் தெரியுமா

குரு பகவான் மகர ராசியில் இருந்து கும்ப ராசிக்கு இடப்பெயர்ச்சியாவதால் மேஷம் முதல் மீனம் வரை 12 ராசிக்காரர்களுக்கு என்ன பலன் கிடைக்கப் போகிறது என்பதை சுருக்கமாக பார்க்கலாம்.

Subscribe to Oneindia Tamil

சென்னை: குரு பகவான் மகர ராசியில் இருந்து கும்ப ராசிக்கு வாக்கியப்பஞ்சாங்கப்படி ஐப்பசி 27ஆம் தேதியன்று நவம்பர் 13ஆம் தேதி சனிக்கிழமை மகர ராசியில் இருந்து கும்ப ராசிக்கு இடப்பெயர்ச்சியாகிறார். திருக்கணித பஞ்சாங்கப்படி குரு பகவான் கார்த்திகை மாதம் 4ஆம் தேதி நவம்பர் 20ஆம் தேதியன்று சனிக்கிழமையன்று மகர ராசியில் இருந்து கும்ப ராசிக்கு இடப்பெயர்ச்சியாகிறார். குருபகவான் கோச்சார ரீதியாக 2,5,7,9,10,11 ஆகிய இடங்களில் பயணம் செய்யும் போது நன்மையே செய்வார். இந்த குரு பெயர்ச்சி மேஷம் முதல் மீனம் வரை 12 ராசிக்காரர்களுக்கும் என்ன மாதிரியான பலன்களைத் தரப்போகிறார் என்று பார்க்கலாம்.

புராண காலத்தில் குருவால் ஏற்பட்ட மாற்றங்களை எடுத்துரைக்கும் பாடல் இது. 1, 3, 4, 6, 8, 12 ஆகிய இடங்களில் குரு சஞ்சரிக்கும் போது என்ன நடந்தது என்று இந்த பாடல் மூலம் சொல்லப்பட்டுள்ளது. 'ஜென்ம ராமர் வனத்திலே சீதையைச் சிறை வைத்ததும்,தீதிலா தொரு மூன்றிலே துரியோதனன் படை மாண்டதும்,
இன்மை எட்டினில் வாலி பட்டமிழந்து போம் படியானதும், ஈசனார் ஒரு பத்திலே தலையோட்டிலே யிரந்துண்டதும்
தருமபுத்திரர் நாலிலே வனவாசம் அப்படிப் போனதும்,சத்திய மாமுனி ஆறிலே இரு காலிலே தளை பூண்டதும்,
வன்மை யற்றிட ராவணம் முடி பனிரெண்டினில் வீழ்ந்ததும்.மன்னு மா குரு சாரி மாமனை வாழ்விலா துறமென்பவே!'

குரு பகவான் சுப கிரகம் நிறைய நன்மைகளைக் கொடுப்பார். குருவின் பார்வை சுபிட்சங்களைத் தரும். இந்த குரு பெயர்ச்சியால் எந்த ராசிக்காரர்களுக்கு எந்த இடத்தில் குரு பயணம் செய்யப்போகிறார் என்ன மாதிரியான பலனைத் தரப்போகிறார் என்று பார்க்கலாம்.

லாப குரு - மேஷம்

லாப குரு - மேஷம்

செவ்வாயை ராசி அதிபதியாகக் கொண்ட மேஷ ராசிக்காரர்களுக்கு லாப ஸ்தானத்தில் அமரப்போகிறார் குருபகவான் தொட்டது துலங்கப்போகிறது. பொன்னான காலம். இந்த காலத்தில் வரும் வாய்ப்பை பயன்படுத்திக்கொள்ளுங்கள். நல்லது நிறைய நடைபெறும். வேலையில் புரமோசன் கிடைக்கும். செய்யும் தொழில் விருத்தியாகும். புதிய தொழில் தொடங்கலாம். பிரிந்தவர்கள் ஒன்று சேருவார்கள். திருமணம் நடைபெறும். விவாகரத்தானவர்களுக்கு மறுமணம் நடைபெறும். திருமணமான தம்பதியினருக்கு புத்திரபாக்கியம் கிடைக்கும்.

கர்ம ஸ்தான குரு - ரிஷபம்

கர்ம ஸ்தான குரு - ரிஷபம்

சுக்கிரனை ராசி அதிபதியாகக் கொண்ட ரிஷப ராசிக்காரர்களுக்கு பத்தாம் வீடான கர்ம ஸ்தானத்தில் குருபகவான் பயணம் செய்கிறார். பத்தில் குரு பதவி பறிபோகும் என்று சொல்வார்கள். பதவியில் மாற்றம் ஏற்பட வாய்ப்பு உள்ளது. வேலையில் கவனமும் நிதானமும் தேவை. உயரதிகாரிகள் சொல்வதை கேட்டு நடப்பது நல்லது. அலுவலகத்தில் உயரதிகாரிகளிடம் வம்பு வைத்துக்கொண்டால் வேலை பறிபோகும் ஆபத்து உள்ளது. தொழில் வியாபாரத்தில் அகலக்கால் வைக்க வேண்டாம்.

பாக்ய குரு - மிதுனம்

பாக்ய குரு - மிதுனம்

புதன் பகவானை ராசி அதிபதியாகக் கொண்ட மிதுன ராசிக்காரர்களுக்கு குரு பாக்ய ஸ்தானத்தில் பயணம் செய்கிறார். அஷ்டம குரு ஆட்டிப்படைத்தார். பாக்ய குரு ஆன்மீக பயணத்தை தருவார். ராகு 11ஆம் வீட்டிற்கு போகிறார். வெளிநாட்டு வேலை கிடைக்கும். குடும்பத்தில் இருந்த பிரச்சினைகள் முடிவுக்கு வரும். குருவின் பார்வையும் உங்கள் ராசிக்கு கிடைப்பதால் இனி கவலைகள் கஷ்டங்கள் நீங்கி சந்தோஷம் அதிகரிக்கப்போகிறது. வேலையிழந்தவர்களுக்கு நல்ல வேலை கிடைக்கப் போகிறது. அஷ்டம சனியின் பாதிப்பு நீங்கும்.

அஷ்டம குரு - கடகம்

அஷ்டம குரு - கடகம்

சந்திரனை ராசி அதிபதியாகக் கொண்ட கடக ராசிக்காரர்களே, குரு பகவான் உங்கள் ராசிக்கு எட்டாவது வீட்டில் பயணம் செய்கிறார். சஷ்ட அஷ்டக குரு. அஷ்டம ஸ்தானத்தில் பயணிக்கும் குரு திடீர் ராஜயோகத்தை தருவார்கள். திருமணமாகி நீண்ட நாட்களாக பிள்ளை இல்லாதவர்களுக்கு குழந்தை பாக்கியத்தை தருவார். வெளியூர் வெளிநாட்டு பயணங்களைத் தரப்போகிறார் குருபகவான்

களத்திர குரு - சிம்மம்

களத்திர குரு - சிம்மம்

சூரியனை ராசி அதிபதியாகக் கொண்ட சிம்ம ராசிக்காரர்களே, குரு பகவான் உங்கள் ராசிக்கு ஏழாம் வீட்டில் அமர்ந்து உங்கள் ராசியை நேரடியாக பார்வையிடுகிறார். குருபார்வை கிடைத்தாலே வாழ்க்கை பொன்னாக ஜொலிக்கும். 12 ராசிகளில் அதிக பலனை அடையப்போவது சிம்ம ராசிக்காரர்கள்தான். திருமண யோகம் கைகூடி வரும். குழந்தைக்காக காத்திருப்பவர்களுக்கு புத்திர பாக்கியம் கிடைக்கும். சிம்ம ராசி சிம்ம லக்னத்திற்கு பிறந்தவர்களுக்கு குரு நிறைய நன்மைகளைத் தரப்போகிறார் மன மகிழ்ச்சியை அனுபவிக்கத் தயாராகுங்கள்.

ருண ரோக சத்ரு குரு - கன்னி

ருண ரோக சத்ரு குரு - கன்னி

புதன் பகவானை ராசி அதிபதியாகக் கொண்ட கன்னி ராசியில் பிறந்தவர்களே, உங்கள் ராசியில் இருந்து ஆறாம் வீடான ருண ரோக சத்ரு ஸ்தானத்தில் குரு பயணம் செய்யப்போகிறார். வேலை செய்யும் இடத்தில் நிதானமும் கவனமும் தேவை. அலுவலகத்தில் உயரதிகாரிகளால் தொல்லைகள் ஏற்படும். சிலருக்கு ஜாதகத்தில் குரு இருக்கும் நிலையைப் பொருத்து வேலை பறிபோகவும் வாய்ப்பு உள்ளது. குரு பயணிக்கும் இடம் கடன் வம்பு வழக்கு இடம் என்பதால் வங்கிக் கடன் வாங்கி இடம் வீடு நிலம் வாங்கலாம். ஆவணங்களை சரி பார்த்து வாங்குவது அவசியம்.

பூர்வ புண்ணிய குரு - துலாம்

பூர்வ புண்ணிய குரு - துலாம்

சுக்கிரனை ராசி அதிபதியாகக் கொண்ட துலாம் ராசிக்காரர்களுக்கு குரு பகவான் பூர்வ புண்ணிய ஸ்தானமான

ஐந்தாம் வீட்டில் பயணம் செய்யப்போவதால் பிள்ளைகள் வாழ்க்கையில் சுப காரியங்கள் ஏற்படும். வீடு பராமரிப்பு செய்யலாம். வாக்கு தர வேண்டாம். முன் கோபத்தை குறைப்பது நல்லது. ஜாமீன் கையெழுத்துப் போட்டு பணம் கடனாக வாங்கித் தர வேண்டாம். கையில் இருக்கும் பணத்தை சொந்த பந்தங்களுக்கு கடனாகத் தர வேண்டாம் திரும்ப வர வாய்ப்பு இல்லை. நகை, கார், வண்டி வாகனம் என சுப செலவுகளாக செய்வது நல்லது. 2ஆம் வீட்டில் கேது இருப்பதால் சிலருக்கு பேச்சினால் பிரச்சினை வர வாய்ப்பு உள்ளது. சொன்ன வார்த்தையை காப்பாற்ற முடியாமல் தடுமாற வேண்டியிருக்கும் கவனம் தேவை.

சுக ஸ்தான குரு - விருச்சிகம்

சுக ஸ்தான குரு - விருச்சிகம்

செவ்வாய் பகவானை ராசி அதிபதியாகக் கொண்ட விருச்சிக ராசிக்காரர்களே, உங்கள் ராசிக்கு நான்காம் வீடான சுக ஸ்தானத்தில் குரு பயணம் செய்யப்போகிறார். ஜென்ம கேது, மூன்றாம் வீட்டில் சனி என கிரகங்கள் சூழ்ந்துள்ளது. பல ஆண்டு காலமாக கஷ்டங்களை மட்டுமே சந்தித்து வரும் உங்களுக்கு இனி வரும் காலங்கள் பாதிப்பை குறைத்து சந்தோஷத்தை அதிகரிக்கும். வேலை தொழிலில் மாற்றம் ஏற்படும். வியாபாரத்தில் லாபம் அதிகரிக்கும். கஷ்டங்கள் குறைந்து கவலைகள் நீங்கப் போகிறது இந்த குரு பெயர்ச்சி உங்களின் வாழ்க்கையில் மலர்ச்சியை ஏற்படுத்தப் போகிறது.

தைரிய குரு - தனுசு

தைரிய குரு - தனுசு

குரு பகவானை ராசி அதிபதியாகக் கொண்ட தனுசு ராசிக்காரர்களே, குரு மூன்றாம் வீட்டிற்குப் போகிறார். ஏழரை சனி இருப்பதால் எந்த பிரச்சினை என்றாலும் கவலைப்பட வேண்டாம். பொறுமையும் நிதானமும் தேவை. குரு மூன்றில் மறைவதால் முயற்சிகளை கை விட வேண்டாம். காலம் கடந்தாலும் வெற்றி கிடைக்கும் கவனமாக இருக்க வேண்டிய காலகட்டமாகும். குருபகவானுக்கு மஞ்சள் வஸ்திரம் சாற்றி வணங்கலாம் நன்மைகள் நடைபெறும்.

குடும்ப குரு - மகரம்

குடும்ப குரு - மகரம்

சனி பகவானை ராசி அதிபதியாகக் கொண்ட மகர ராசிக்காரர்களே, ராசிநாதன் சனி ஜென்ம ராசியில் அமர்ந்திருக்க நீச்சமடைந்திருந்த ஜென்ம குரு இரண்டாம் வீட்டிற்கு செல்கிறார். இதுநாள் வரைக்கும் தடை தாமதங்கள் ஏற்பட்டுக்கொண்டே இருக்கிறது. மன உளைச்சல், நிம்மதியற்ற நிலையினை தந்து கொண்டிருக்கிறது. இனி தடைகள் நீங்கி நன்மைகள் நடைபெறும். நல்ல காரியங்கள் நடைபெற மனதில் நிம்மதியும் மகிழ்ச்சியும் அதிகரிக்க சிவ ஆலயங்களில் நவ கிரக குரு பகவானுக்கு நல்லெண்ணெய் தீபம் ஏற்றி வழிபடலாம். தன்வந்திரி ஆலயத்தில் உள்ள மேதா தட்சிணாமூர்த்தியை வணங்கலாம்.

ஜென்ம குரு கும்பம்

ஜென்ம குரு கும்பம்

சனி பகவானை ராசி அதிபதியாகக் கொண்ட கும்ப ராசிக்காரர்களே, தலைமேல் குரு அமரப்போகிறார். இனி நீங்கள் கவனமுடனும் விழிப்புணர்வுடனும் இருக்க வேண்டிய கால கட்டம். வெளிநாட்டுக்கு வேலை, படிப்புக்காக செல்லலாம். தொழில், வேலையில் கவனம் தேவை. பெரிய அளவில் அகலக்கால் வைக்க வேண்டாம். 2022ஆம் ஆண்டின் பிற்பகுதியில் இயல்பு நிலைக்கு திரும்பிய பிறகு வெளிநாடுகளில் தொழில் தொடங்கலாம். வெளிநாட்டு வேலைவாய்ப்பு கிடைக்க வாய்ப்பு உள்ளது.

விரைய குரு மீனம்

விரைய குரு மீனம்

குரு பகவானை ராசி அதிபதியாகக் கொண்ட மீன ராசிக்காரர்களே, விரைய குரு காலம், லாப சனி, மூன்றாம் வீட்டில் ராகு. நிலம், சொத்து வகையில் பணத்தை முதலீடு செய்யலாம். தங்க ஆபரணங்கள் வாங்கலாம். கூட்டுத் தொழில் செய்ய சரியான நேரமில்லை. பணத்தை இழக்க நேரிடும். அரசு வேலைக்கு முயற்சி செய்யலாம். போட்டித்தேர்வில் வெற்றிகள் கிடைக்க வாய்ப்பு உள்ளது.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+