ஜூலை மாத ராசி பலன் 2022: குடும்பத்தில் குழப்பம்..போட்டிகளை சமாளிக்கும் ராசிக்காரர்கள் யார்?
சென்னை: ஜூலை மாதம் ஐந்து கிரகங்கள் வரிசையாக ஆட்சி பெற்று பயணம் செய்கின்றன. கிரகமாலிகா யோகம் கைகூடி வரும் இந்த மாதம் நவ கிரகங்களின் சஞ்சாரம், சேர்க்கை பார்வையினால் துலாம் ராசிக்காரர்களின் வாழ்க்கையில் என்ன மாதிரியான அதிர்ஷ்டம் கிடைக்கும் என்னென்ன மாற்றங்கள் ஏற்படும் என்று பார்க்கலாம்.
ஆனி மாதமும் ஆடி மாதமும் இணைந்த மாதம் ஜூலை மாதம். சூரியன் முதல் 15 நாட்கள் மிதுன ராசியிலும் பிற்பாதி 15 நாட்கள் கடக ராசியிலும் பயணம் செய்வார். இந்த மாதத்தில் சுக்கிரன் ரிஷப ராசியில் ஆட்சி பெற்று பயணம் செய்வார். செவ்வாய் மேஷ ராசியில் ராகு உடன் பயணம் செய்வார். குரு பகவான் மீன ராசியிலும், கும்ப ராசியில் சனிபகவானும் பயணம் செய்வார்கள். சந்திரன் மாத முற்பகுதியில் கடக ராசியில் ஆட்சி பெற்று பயணம் செய்வார்.
புதன் ரிஷபம், மிதுனம், கடக ராசியிலும் பயணம் செய்வார்.
இந்த மாதம் கும்பம் தொடங்கி மிதுனம் வரை வரிசையாக ஐந்து கிரகங்கள் ஆட்சி பெற்று பயணம் செய்கின்றன. நவகிரகங்களின் சஞ்சாரம், கூட்டணி, சேர்க்கை, கிரகங்களின் பார்வைகளைப் பொருத்து துலாம் ராசியில் பிறந்தவர்களுக்கு என்னென்ன பலன்கள் கிடைக்கும் என்ன பரிகாரம் செய்யலாம் என்று பார்க்கலாம்.
அக்டோபர் 21ல் தீபாவளி... நாளை முதல் ரயில் டிக்கெட் முன்பதிவு..தெற்கு ரயில்வே அறிவிப்பின் முழுவிபரம்

துலாம்
சுக்கிரனை ராசி அதிபதியாகக் கொண்ட துலாம் ராசிக்காரர்களே, உங்கள் ராசி நாதனும் எட்டாம் வீட்டு அதிபதியுமான சுக்கிரன் எட்டாம் வீட்டில் பயணம் செய்கிறார். விபரீத ராஜயோக காலமாகும். தொழில் வியாபாரத்தில் லாபம் அதிகரிக்கும். வேலை செய்பவர்களுக்கு அலுவலகத்தில் பதவி உயர்வு கிடைக்கும். போட்டிகளையும் எதிர்ப்புகளையும் எளிதில் சமாளிப்பீர்கள்.

தொழில் வியாபாரத்தில் லாபம்
ராசிக்கு நேர் எதிரில் செவ்வாய் ராகு பயணம் செய்கிறார். செவ்வாய் பகவானின் பார்வையில் குடும்பத்தில் ஏற்பட்ட பிரச்சினைகள் முடிவுக்கு வரும். கூட்டு தொழில் சிறப்படையும். தொழில் முதலீடுகள் இரட்டிப்பு லாபத்தை தரும். புதிய தொடர்புகள் மூலம் தொழிலில் லாபம் அதிகரிக்கும். பழைய பங்குதாரர்கள் மூலம் பண வரவு அதிகரிக்கும். மாணவர்கள் கடுமையாக உழைக்க வேண்டியிருக்கும். கடும் போட்டிகளையும் எதிர்ப்புகளையும் சந்திப்பீர்கள்.

பண விசயத்தில் கவனம்
ராகுவின் பார்வையும் செவ்வாயின் பார்வையும் உங்களின் ராசியின் மீது விழுகிறது. குடும்பத்தில் சண்டை சச்சரவுகள் அதிகரிக்கும். கோபத்தை கட்டுப்படுத்துங்கள். விட்டுக்கொடுத்துச் செல்வது நல்லது. காதல் விசயங்களில் கவனம் தேவை. பதற்றத்தை தவிருங்கள். பணம் கடனாக கொடுப்பதை தவிருங்கள். யாருக்கும் ஜாமீன் கையெழுத்து போட வேண்டாம்.

ஆரோக்கியத்தில் கவனம்
சூரியன் புதனுடன் இணைந்து ஒன்பதாம் வீட்டில் பயணம் செய்வதால் அப்பாவின் ஆதரவு கிடைக்கும். ஆரோக்கியத்தில் அக்கறை காட்டுங்கள் நோய்கள் வெளிப்படும் மாதமாக அமைந்துள்ளது. வெள்ளிக்கிழமை பெருமாள் கோவில்களில் விளக்கேற்றி வழிபடுங்கள் பாதிப்புகள் குறைந்து நன்மைகள் நடைபெறும்.