• search
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

கொரோனா வைரஸ்: கொஞ்ச நாளைக்கு தள்ளியே படுங்க... முத்தத்திற்கும் கட்டுப்பாடுதான்

|

சென்னை:உலகம் முழுவதுமே கொரோனா வைரஸ் பற்றிய பேச்சாகத்தான் இருக்கிறது. கூட்டமாக கூடாதீங்க, யாரையும் தொட்டு பேசாதீங்க காதலர்கள், கணவன் மனைவியாகவே இருந்தாலும் கட்டிப்பிடித்து முத்தம் கொடுக்காதீர்கள் என பல உத்தரவுகள் அடுக்கடுக்காக பிறப்பிக்கப்பட்டு வருகிறது. தாம்பத்ய உறவுகளை கூட தள்ளி வையுங்கள் என்று சொல்லும் அளவிற்கு வைத்து விட்டது இந்த கொரோனா வைரஸ். நெதர்லாந்து நாட்டில் சிவப்பு விளக்கு பகுதிகள் அனைத்தும் ஏப்ரல் 6ஆம் தேதி வரை மூடப்பட்டுள்ளது.

கொரோனா வைரஸ் நோய் தாக்கி இறந்தவர்கள் எண்ணிக்கை 8 ஆயிரத்தை தாண்டியது, 2 லட்சம் பேருக்கு தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. கொரெனா வைரஸ் எனப்படும் கோவிட் 19 தீவிரமாகும் பட்சத்தில் நிமோனியா, சிறுநீரக பழுது, தீவிர சுவாசப் பிரச்சனை, தீவிர நிலையில் உயிரிழப்பும் ஏற்படலாம்.

முதன்முதலில் காய்ச்சலாக தொடங்கும் கொரோனா வைரஸ் பின்னர் வறட்டு இருமலாக மாறும் அதன்பின் சுவாசக் கோளாறுகள் ஏற்படும். ஆனால் இந்த அறிகுறிகள் உள்ளவர்கள் அனைவரும் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்கள் என்று அர்த்தமில்லை. இந்த அறிகுறிகள் பிற பொதுவான வைரஸாலும் ஏற்படக்கூடியவை

முத்தம் வேண்டாம்

முத்தம் வேண்டாம்

கொரோனா ஒரு உலகளாவிய தொற்று எனவும் இந்த வைரஸ் தாக்குதலுக்கு உயிரிழப்புகள் மேலும் அதிகரிக்கலாம் எனவும் உலக சுகாதார அமைப்பு எச்சரிக்கை விடுத்துள்ளது. இதனால் உலகம் முழுவதுமே ஒருவித அவசர நிலை தொற்றிக்கொண்டுள்ளது. உடலுறவு கொள்வதால் கொரொனா வைரஸ் பரவுமா என்பது இதுவரை நிரூபிக்கப்படவில்லை. கொரோனா தொடுதல், இருமல் மூலம் பரவுகிறது என்பதால் உடல் சார்ந்த உறவுகள் வேண்டாம் என்பதே மருத்துவர்களின் அறிவுறுத்தல். இருமல் தும்மல் மூலம் கொரோனா பரவும் என்பதால் உதட்டோடு உதடு வைத்து முத்தம் கொடுக்க வேண்டாம் என்றும் மருத்துவர்கள் அறிவுறுத்தியுள்ளனர்.

வீதிகளில் நடமாட தடை

வீதிகளில் நடமாட தடை

இத்தாலியில் அவசரநிலை பிரகடனப்படுத்தப்பட்டு, நாடு முழுவதும் மக்கள் வீதிகளில் நடமாடவும் பயணம் செய்ய தடையும் விதிக்கப்பட்டுள்ளது. பள்ளிகள், கல்லூரிகள் என மக்கள் கூடும் அனைத்து இடங்களுக்கும் விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. வீதிகள் ஆள் நடமாற்றமின்றி காணப்படுகிறது.

சுற்றுலா தலங்களுக்கு சீல்

சுற்றுலா தலங்களுக்கு சீல்

பிரேசில் நாட்டில் உள்ள சுற்றுலா தளங்கள் அடுத்த 15 நாட்கள் மூடப்படும் என அந்நாட்டு அரசு அறிவித்துள்ளது. மெக்சிக்கோவில் கொரோனா வைரஸைக் கட்டுக்குள் கொண்டு வரும் நடவடிக்கையாக நாடு முழுவதும் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. சாலையில் நடமாடும் பொதுமக்கள் அனைவருக்கும் கொரோனா வைரஸ் பரிசோதனை செய்யப்படுகிறது.

மரியாதை போதும்

மரியாதை போதும்

புனித வெள்ளி இன்னும் சில தினங்களில் கொண்டாடப்பட உள்ள நிலையில் உலகம் முழுவதும் அனைத்து தேவாலயங்களுக்கும் சுற்றறிக்கை அனுப்பப்பட்டுள்ளது. கொரோனா வைரஸ் தொற்றுக் காரணமாக தேவாலயங்களில் நண்பர்கள், உறவினர்களைச் சந்திக்கும்போது கைகுலுக்க வேண்டாம், கைகூப்பிக் கும்பிடுங்கள். குறிப்பாகப் புனித வெள்ளி தினத்தில் ஜெப மாலைக்கு யாரும் முத்தமிட வேண்டாம். பதிலாக குனிந்து மரியாதை செலுத்தினால் போதுமானது என அறிவிக்கப்பட்டுள்ளது.

நெதர்லாந்தின் நிலை

நெதர்லாந்தின் நிலை

நெதர்லாந்தில் விலை மாதர்களுக்கும். ஓரினச் சேர்க்கைக்கும், பாலியல் விஷயங்களுக்கும் எந்தக் கட்டுப்பாடும் கிடையாது. விலை மாதர்கள், தங்களைப் பதிவு செய்து கொள்ள வேண்டியது கட்டாயம். மேலும் அவர்கள் மிகுந்த பாதுகாப்புடன் மட்டுமே உறவில் ஈடுபடுவதால், இங்கே செக்ஸ் தொழில் மிகவும் பிரபலமாகவும் பணம் கொட்டுவதாகவும் இருக்கிறது. அங்குள்ள ஆம்ஸ்டர்டாம் நகரில் ரெட்லைட் ஏரியாக்கள் மொத்தமாக மூடி சீல் வைக்கப்பட்டுள்ளது.

ஏப்ரல் 6 ஆம் தேதிவரை அனைத்து கடைகளையும் மூட உத்தரவிட்டுள்ளது அந்நாட்டு அரசு.

நோ டேட்டிங் ஒன்லி சாட்டிங்

நோ டேட்டிங் ஒன்லி சாட்டிங்

காதலர்கள் வெளியே அவுட்டிங் செல்வதை தவிர்த்து விடுங்கள். டேட்டிங் வேண்டாம் போனில் சாட்டிங் மட்டும் போதும் என்பதும் மருத்துவர்களின் அறிவுரையாகும். உறவுகளை தவிர்த்து விடுங்கள். பாலியல் பொம்மைகள் கூட உறவுக்கு பயன்படுத்த வேண்டாம் என்பதே வெளிநாட்டு மருத்துவர்களின் அறிவுரையாகும். கணவன் மனைவியாகவே இருந்தாலும் கொஞ்ச நாளைக்கு தாம்பத்ய உறவுகளை தள்ளி வையுங்கள் என்றும் டாக்டர்கள் கூறியுள்ளனர். இன்னும் இந்த உலகத்தில என்னென்ன நடக்கப் போகுதோ தெரியலையே. என்ன செய்வது உயிரோட இருக்கணும்னா எல்லாரும் கொஞ்ச நாளைக்கு தள்ளியே படுங்க.

 
 
 
English summary
Kissing could definitely spread it, several experts said.Though coronaviruses are not typically sexually transmitted, it’s too soon to know, the WHO said.Sex clubs in Amsterdam’s Red Light district were told to close down
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
We use cookies to ensure that we give you the best experience on our website. This includes cookies from third party social media websites and ad networks. Such third party cookies may track your use on Oneindia sites for better rendering. Our partners use cookies to ensure we show you advertising that is relevant to you. If you continue without changing your settings, we'll assume that you are happy to receive all cookies on Oneindia website. However, you can change your cookie settings at any time. Learn more
X