• search

கூடாரவல்லி: மனம் போல் கணவன் கிடைக்க ஸ்ரீ தன்வந்திரி பீடத்தில் மாங்கல்ய பூஜை

By Mayura Akilan
FOLLOW ONEINDIA TAMIL ON
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS
For Daily Alerts

  வேலூர்: திருமணம் ஆகாத பெண்கள் தாங்கள் விரும்பும் நல்ல மணமகனைப் பெறுவதற்கும் திருமணமான பெண்கள் கணவனுடன் நல்லன்போடு குடும்பம் நடத்தவும் தம்மை விட்டு பிரியாமல் இருக்கவும், தீர்க்க சுமங்கலி பாக்யம் கிடைக்கவும், தன்வந்திரி பீடத்தில் மாங்கல்யபூஜை, ஹோமம் நடைபெற்றது.

  வாலாஜாபேட்டை ஸ்ரீ தன்வந்திரி பீடத்தில் ஸ்தாபகர் மற்றும் பீடாதிபதி கயிலை ஞானகுரு டாக்டர் ஸ்ரீ முரளிதர் ஸ்வாமிகளின் ஆக்ஞைப்படி ஒவ்வொரு வருடமும் மார்கழி மாதம் திருப்பாவை, திருவெம்பாவை ஆண்டாள் பாசுரங்களை பாராயணம் செய்வதும் சுதர்சன் ஹோமம் நடைபெறுகிறது.

  தன்வந்திரி ஹோமம், ஆரோக்ய லக்ஷ்மி ஹோமம், சூக்த ஹோமம், ருத்ர ஹோமம், காலபைரவர் ஹோமம் போன்ற ஹோமங்களும், வைகுண்ட ஏகாதசி, சொர்கவாசல் திறப்பும் மாரகழி திருவாதிரை முன்னிட்டு சிறப்பு பூஜைகளும் நடைபெற்று வருகிறது.

  புண்ணியம்

  புண்ணியம்

  தட்சிணாயன புண்ணிய காலத்தின் இறுதி மாதமான மார்கழியில் பல யாகங்கள் செய்வதை விடவும் அனைத்து புண்ணிய நதிகளிலும் தீர்த்தங்களில் நீராடுவதை விடவும் அதிகமான புண்ணிய பலன்களை இந்த மாதத்தில் மேற்கொள்ளும் பகவான் வழிபாட்டின் மூலம் பெற முடியும் என்று புராணங்கள் கூறுகின்றன.

  ஆயிரம் ஆண்டுகள்

  ஆயிரம் ஆண்டுகள்

  மாதங்களில் சிறந்தது மார்கழி. அதை தனுர் மாதம் என்றும் போற்றுகிறோம். மார்கழி மாதம் தேவர்களின் நேரமான விடியற்காலையில் "யார் ஒருவர் பிரம்ம முகூர்த்தத்தில் எழுந்து, பக்தியுடன் இறைவனை வழிபடுகிறார்களோ அவர்கள், ஆயிரம் ஆண்டுகள் பகவானை வழிபாடு செய்த பலன்களை தனுர்மாதமான் மார்கழி மாத ஒருநாள் வழிபாட்டில் கிடைக்க பெறுகிறார்கள்.

  திருப்பாவை வழிபாடு

  திருப்பாவை வழிபாடு

  மாதம் முழுவதும் வழிபட்டால் எப்படிப்பட்ட பலன்கள் கிடைக்கும் என்பது கணக்கில் அடங்காது. சிவ-பார்வதியின் அருளைப் பெறுவதற்காக திருவெம்பாவையையும் பகவான் ஸ்ரீமன் நாராயணன் அருள் பெறுவதற்கு திருப்பாவையையும் மார்கழியில் அதிகாலையில் பாராயணம் செய்பவர்களுக்கு இறை அருள் விரைவில் பெறுவர்.

  ஆண்டாள் பாசுரம்

  ஆண்டாள் பாசுரம்

  "கூடாரை வெல்லும் சீர் கோவிந்தா'' இது ஸ்ரீ ஆண்டாள் இயற்றிய திருப்பாவையின் 27 ஆவது பாசுரம். இதைப் பாடியதும் கோதையாகிய ஆண்டாளுக்கு கோவிந்தன் திருமண பாக்கியம் அருளியதாக் கூறப்படுகிறது. இருந்தாலும் சூடிக்கொடுத்த சுடர்கொடியான ஸ்ரீ ஆண்டாள், முப்பது பாசுரங்களையும் பாடி முடித்தாள்.

  நெய் பிரசாத நைவேத்தியம்

  நெய் பிரசாத நைவேத்தியம்

  கூடாரவல்லி அன்று பெருமாள் கோயில்களில் குறிப்பாக ஆண்டாள் அவதரித்த ஸ்ரீவில்லிபுத்தூரில் " முழங்கை வழியே நெய் ஒழுகுமாறு' சர்க்கரைப் பொங்கல் நைவேத்தியம் செய்து பக்தர்களுக்கு விநியோகிப்பார்கள். இன்று பெருமாளைத் தரிசித்து பிரசாதம் பெற்றால் கன்னியர்களுக்கு அவர்கள் விரும்பும் இடத்தில் நல்ல கணவன் கிட்டுவார் என்பது ஐதீகம்.

  மார்கழி பூஜை

  மார்கழி பூஜை

  கூடாரவல்லியை முன்னிட்டு 11.01.2018 காலை முதல் கோபூஜையுடன் வேத பாராயணம், பாசுரங்கள் பாராயணம், சிறப்பு ஹோமத்துடன் ஸ்ரீ தன்வந்திரி பெருமளுக்கும் ஆரோக்ய லக்ஷ்மிக்கும் புஷ்பாஞ்சலியுடன் துளசி அர்ச்சனை, குங்குமார்ச்சனை நடைபெற்று அக்காரைவரைசல் எனும் பாயசத்துடன் சர்க்கரை பொங்கல் நிவேதனம் செய்து பக்தர்களுக்கு பிரசாதமாக வழங்கப்பட்டது.

  மனம் போல் மாங்கல்யம்

  மனம் போல் மாங்கல்யம்

  திருமணம் ஆகாத பெண்கள் தாங்கள் விரும்பும் நல்ல மணமகனைப் பெறுவதற்கும் திருமணமான பெண்கள் கணவனுடன் நல்லன்போடு குடும்பம் நடத்தவும் தம்மை விட்டு பிரியாமல் இருக்கவும், தீர்க்க சுமங்கலி பாக்யம் கிடைக்கவும், தன்வந்திரி பீடத்தில் உள்ள நவகன்னி சன்னதியிலும் ஆரோக்ய லக்ஷ்மி சன்னதியிலும் மஞ்சள், குங்குமம், மாங்கல்ய சரடு போன்ற சௌபாக்ய பொருட்களை வைத்து ஆண்டாள் நாச்சியாரை பிரார்த்தனை செய்து இங்கு உள்ள அத்திமரத்தினை வலம் வந்து மாங்கல்ய சரடு கட்டும் மாங்கல்ய பூஜை செய்தனர். வருகை புரிந்த பக்தர்களுக்கு சௌபாக்ய பொருட்கள் பிரசாதமாக வழங்கப்பட்டது.

  வரன் பார்க்கணும்னா தமிழ் மேட்ரிமோனிதான்! - பதிவு இலவசம்!

  English summary
  Koodaravalli is celebrated on 11th January 2018 at Dhanvanthiri peedam in Valajapet. Every year Koodaravalli is celebrated on the 27th day of Margazhi, the Tamil calendar fall in the month (Dec-Jan). Sri Andal in the Thiruppavai 27th verse describes the reward of Pavai Nombu.

  நாள் முழுவதும் oneindia
  செய்திகளை உடனுக்குடன் பெற

  We use cookies to ensure that we give you the best experience on our website. This includes cookies from third party social media websites and ad networks. Such third party cookies may track your use on Oneindia sites for better rendering. Our partners use cookies to ensure we show you advertising that is relevant to you. If you continue without changing your settings, we'll assume that you are happy to receive all cookies on Oneindia website. However, you can change your cookie settings at any time. Learn more