குரோதி தமிழ் புத்தாண்டு ராசி பலன்கள் 2024: குடும்ப குரு.. ஏழரை சனி..யாருடைய வாழ்க்கையில் திடீர் திருப்புமுனை
சென்னை: தமிழ் புத்தாண்டு இன்னும் சில மாதங்களில் பிறக்கப்போகிறது. குரோதி தமிழ் புத்தாண்டில் பலரது வாழ்க்கையில் அதிரடி மாற்றங்கள் ஏற்படப்போகிறது. காரணம் சித்திரை மாதத்திலேயே குரு பகவான் 12 ஆண்டுகளுக்குப் பிறகு ரிஷப ராசிக்கு இடப்பெயர்ச்சி அடையப்போகிறார். 30 ஆண்டுகளுக்குப் பிறகு சனி பகவான் மீன ராசிக்கு சென்று ராகு உடன் இணையப்போகிறார். இந்த கிரகங்களின் மாற்றத்தினால் மேஷ ராசியில் பிறந்தவர்களின் வாழ்க்கையில் என்ன மாற்றங்கள் ஏற்படப்போகிறது என்று பார்க்கலாம்.
மேஷம்: குரோதி தமிழ் புத்தாண்டில் மேஷ ராசிக்காரர்களுக்கு கிரகங்களின் சஞ்சாரத்தை பார்த்தால் ஜென்ம குரு சித்திரை மாதத்தில் இடப்பெயர்ச்சியாகி இரண்டாம் வீட்டிற்கு செல்கிறார். ராகு உங்கள் ராசிக்கு விரைய ஸ்தானத்திலும் கேது உங்கள் ராசிக்கு ஆறாம் வீட்டிலும் பயணம் செய்யப்போகிறார். ஆண்டு முழுவதும் லாப ஸ்தானத்தில் பயணம் செய்யும் சனி பகவான் ஆண்டின் இறுதியில் 12ஆம் வீட்டிற்கு வரப்போகிறார். ஏழரை சனி ஆரம்பமாகப்போகிறது.

வேலை தொழில்: புது வேலைக்காக முயற்சி செய்பவர்களுக்கு நல்ல வேலை கிடைக்கும். அரசு வேலைக்காக தேர்வு எழுதியிருப்பவர்களுக்கு நல்ல வேலை கிடைக்கும். வேலையில் இருப்பவர்களுக்கு பதவி யோகம் தேடி வரும். உயர்பதவியும் சம்பள உயர்வும் கிடைக்கும். செய்யும் தொழில் விருத்தியாகும். வியாபாரத்தில் லாபம் அதிகரிக்கும். எதிரிகள் தொல்லை நீங்கும். எதிரிகளை வெல்லும் ஆற்றல் உண்டாகும். வாடகை வீட்டில் வசிப்பவர்கள் சொந்த வீடு, நிலம் வாங்கலாம்.
குரு பெயர்ச்சி: வெளிநாட்டு வேலைக்காக முயற்சி செய்பவர்களுக்கு குரு பெயர்ச்சிக்குப் பிறகு வைகாசி மாதத்தில் வெளிநாட்டில் நல்ல சம்பளத்தில் வேலை கிடைக்கும். வருமானம் பல மடங்காக உயரும். கடன் பிரச்சினைகள் முடிவுக்கு வரும். கடனாக கொடுத்த பணம் திரும்ப கைக்கு கிடைக்கும். குரு பகவானின் பார்வை உங்கள் ராசிக்கு 6,8,10ஆம் இடங்களின் மீது விழுவதால் பணம் பல வழிகளில் வரும் வேலையில் இருந்த பிரச்சினைகள் நீங்கும்.
குரு பார்வை: தன குடும்ப வாக்கு ஸ்தானத்தில் பயணம் செய்யும் குருவின் பார்வை ஆறாம் வீட்டில் உள்ள கேதுவின் மீது விழுகிறது. நோய்கள் நீங்கும் ஆரோக்கியம் அதிகரிக்கும். புரட்டாசி மாதத்தில் குரு பகவான் வக்ரமடையும் போது பண விசயங்களில் கவனமாக இருக்க வேண்டும். ஜென்ம குருவின் இடமாற்றம் குழப்பத்தை நீக்கும் மனக்கவலைகள் மறையும். குரோதி ஆண்டில் சுப விரைய செலவுகள் அதிகரிக்கும்.
ஏழரை சனி: சனி பகவான் 11 மாதங்களுக்கு லாப ஸ்தானத்தில் பயணம் செய்வது சிறப்பு. தொட்டதெல்லாம் துலங்கும். சனி பகவான் பார்வை உங்கள் ராசியின் மீது விழுவதால் செய்யும் செயல்களில் நிதானம் தேவை. குரோதி ஆண்டின் இறுதியில் 2025ஆம் ஆண்டு மார்ச் மாதம் 29ம் தேதி பங்குனி மாதம் 15ஆம் தேதி முதல் ஏழரை சனி ஆரம்பமாகப்போகிறது. சம்பாதித்த பணத்தை கவனமாக செலவு செய்ய வேண்டும். தொழில் முதலீடுகளில் கவனம் தேவை. பணத்தை யாருக்கும் கடனாகக் கொடுத்து மாட்டிக்கொள்ளாதீர்கள்.
பரிகாரம்: ஆசைகளை நிறைவேற்றுவீர்கள். நினைத்த காரியம் நிறைவேறும். அதே நேரத்தில் தேவையில்லாத விசயங்களில் கவனத்தை செலுத்த வேண்டாம். உங்கள் குல தெய்வ கோவிலுக்கு சென்று சக்திக்கு ஏற்ப படையல் போட்டு வழிபடுங்கள் சர்க்கரை பொங்கல் வைத்து புடவை சாற்றி வழிபட சந்தோஷங்கள் அதிகரிக்கும். மொத்தத்தில் மேஷ ராசிக்காரர்களுக்கு வெற்றிகள் தேடி வரும் ஆண்டாக குரோதி ஆண்டு அமைந்துள்ளது.
-
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
சோறு இல்லைனா விளையாட முடியுமா? விவசாயத்தை விட விளையாட்டு கஷ்டம் என்ற ஆதவ்விற்கு கஸ்தூரி ராஜா கேள்வி












Click it and Unblock the Notifications