மேஷம் முதல் மீனம் வரை... 2018ம் ஆண்டுக்கான உங்களோட அதிர்ஷ்ட எண்

Posted By:
Subscribe to Oneindia Tamil
  சனி பெயர்ச்சி யாருக்கு எப்படி இருக்கும் ? மின்னல் வேக ராசிபலன்- வீடியோ

  சென்னை: 2018ம் ஆண்டு இதோ வந்து விட்டது. நம்முடன் கை குலுக்கி முத்தமிட்டு நம்முள் கலந்து நம்மோடு இணைந்து நடை போடத் தயாராக காத்திருக்கிறது.

  இந்த ஆண்டில் ஒவ்வொரு ராசிக்காரருக்கும் என்னென்ன மாதிரியான பலன்கள் கிடைக்கவுள்ளது என்பது இப்போதே அனைவரிடத்திலும் பேரார்வத்தை கிளறி விட்டுக் கொண்டுள்ளது. ராசி பலன்களும் வந்த வண்ணம் உள்ளன.

  அந்த வரிசையில் பிறந்த தேதிக்கேற்ற, அடுத்த வருடத்துக்கான அதிர்ஷ்ட எண் குறித்த ஒரு பார்வை இது. ஒவ்வொரு ராசிக்கும் விரிவான முறையில் இங்கே தரப்பட்டுள்ளது. பாருங்கள். அதை பின்பற்றி அதற்குரிய நற்பலன்களை அடையுங்கள்.

  மேஷம் (மார்ச் 21 முதல் ஏப்ரல் 20 வரை)

  மேஷம் (மார்ச் 21 முதல் ஏப்ரல் 20 வரை)

  மேஷம் ராசிக்காரர்கள் மிகவும் பலமான, ஆற்றல் வாய்ந்த, துணிச்சல் மிக்கவர்களாக இருப்பார்கள். செவ்வாய் ஆதிக்கத்தில் பிறந்த இவர்கள் சாகசங்கள் செய்வதில் ஆர்வம் கொண்டவர்கள். மேஷ ராசிக்காரர்களுக்கான 2018ம் ஆண்டுக்கான அதிர்ஷ்ட எண்கள்: 5, 9, 10, 12, 20, 31. முடிந்தவரை இந்த எண்களை பயன்படுத்துங்கள். உரிய பலன்களைப் பெறுங்கள்.

  ரிஷபம் (ஏப்ரல் 21 முதல் மே 21 வரை)

  ரிஷபம் (ஏப்ரல் 21 முதல் மே 21 வரை)

  ரிஷபம் ராசிக்காரர்கள் ஒரு சிக்கலான சூழ்நிலையை பொறுமையுடன் சமாளித்து வருவார்கள்.
  ரிஷப ராசிக்காரர்களுக்கான அதிர்ஷ்ட எண்கள் 6, 9, 7, 13, 21, 9. வாழ்க்கையில் பெரும் வெற்றி பெற இந்த எண்களை மனதில் கொள்ளுங்கள்.

  மிதுனம் (மே 22 முதல் ஜூன் 21 வரை)

  மிதுனம் (மே 22 முதல் ஜூன் 21 வரை)

  கிரகங்களின் மாறுதல்களுக்கு ஏற்ப ஒவ்வொரு ராசிக்காரர்களுக்கும் கிரகநிலை மாற்றத்துக்கு ஏற்ப அதிர்ஷடங்களும் மாறிக்கொண்டிருக்கும். இந்த வருடம் நீங்கள் கடவுளை பிராத்தனை செய்து நல்ல பலனை பெறலாம். 2018ஆம் ஆண்டில் மிதுன ராசிக்காரர்களே உங்களுக்கான அதிர்ஷ்ட எண்கள் இவைதான்: 2, 6, 9, 25, 30, 31

  கடகம் (ஜூன் 22 முதல் ஜூலை 22 வரை)

  கடகம் (ஜூன் 22 முதல் ஜூலை 22 வரை)

  கடகம் ராசிக்காரர்கள் மிகச்சிறந்த கற்பனை திறன் கொண்டவர்களாக இருப்பார்கள். பணவரவு ஓரளவுக்கு திருப்தி தரும். வீண் செலவுகள் குறையும். உறவினர்களுடன் இணக்கமான சூழ்நிலையே உண்டாகும். வேலை மற்றும் குடும்ப விஷயமாக எதிர்பார்த்துக் காத்திருந்த நல்ல செய்தி வந்து சேரும். கடக ராசிக்காரர்களுக்கு 2018ம் அதிர்ஷ்ட ராசி எண்கள் இவை: 2, 20, 25, 32, 40

  சிம்மம் (ஜூலை 23 முதல் ஆகஸ்ட் 21 வரை)

  சிம்மம் (ஜூலை 23 முதல் ஆகஸ்ட் 21 வரை)

  சிம்மம் ராசிக்காரர்கள் அறநெறி மற்றும் விசுவாசமானவர்களாக இருப்பார்கள். இந்த ஆண்டு உங்களது வாழ்க்கையில் மிக சிறந்த மாற்றங்கள் எல்லாம் நடக்கும். இவர்களுக்கு 2018ஆம் ஆண்டு அதிக நன்மைகள் நடக்கும். சிம்ம ராசிக்காரர்களுக்கான அதிர்ஷ்ட எண்கள்: 2, 4, 11, 22, 30, 32.

  கன்னி (ஆகஸ்ட் 22 முதல் செப்டம்பர் 23 வரை)

  கன்னி (ஆகஸ்ட் 22 முதல் செப்டம்பர் 23 வரை)

  கன்னி ராசிக்காரர்கள் இயற்கையாகவே உதவும் மனப்பான்மை கொண்டவர்கள். கன்னி ராசிக்காரர்களுக்கான அதிர்ஷ்ட எண்கள்: 3, 4, 13, 14, 29, 30.

  துலாம் (செப்டம்பர் 24 முதல் அக்டோபர் 23 வரை)

  துலாம் (செப்டம்பர் 24 முதல் அக்டோபர் 23 வரை)

  துலாம் ராசிக்காரர்கள் வாழ்க்கையை அனுபவித்து வாழ கூடியவர்களாக இருப்பார்கள்.
  துலாம் ராசிக்காரர்களுக்குரிய அதிர்ஷ்ட எண்கள்: 9, 11, 13, 20, 26, 35.

  விருச்சிகம் (அக்டோபர் 24 முதல் நவம்பர் 21 வரை)

  விருச்சிகம் (அக்டோபர் 24 முதல் நவம்பர் 21 வரை)


  விருச்சிகம் ராசிக்காரர்கள் சுயமாக யோசித்து முடிவு எடுக்க கூடியவர்களாக இருப்பார்கள்.
  விருச்சிக ராசி அன்பர்களே உங்களுக்கான அதிர்ஷ்ட எண்கள்: 9, 10, 11, 13, 22.

  தனுசு ( நவம்பர் 22 முதல் டிசம்பர் 22 வரை)

  தனுசு ( நவம்பர் 22 முதல் டிசம்பர் 22 வரை)

  தனுசு ராசிக்காரர்கள் தன்னம்பிக்கை மற்றும் தைரியம் மிக்கவர்கள். நேர்மையானவர்கள். 2018ஆம் ஆண்டு
  தனுசு ராசிக்காரர்களுக்கான அதிர்ஷ்ட எண்கள்: 4, 6, 15, 17, 30, 31.

  மகரம் (டிசம்பர் 23 முதல் ஜனவரி 20 வரை)

  மகரம் (டிசம்பர் 23 முதல் ஜனவரி 20 வரை)

  மகரம் ராசிக்காரர்கள் விடாப் பிடியாக நினைத்த இலக்கை அடைய அதிகமாக போராடும் திறன் கொண்டவர்கள்.
  மகர ராசிக்காரர்களுக்கான அதிர்ஷ்ட எண்கள்: 9, 15, 16, 29, 33, 40. இந்த எண்கள் உங்களுக்கு அதிஷ்டத்தை கொடுக்கும்.

  கும்பம் (ஜனவரி 21 முதல் பிப்ரவரி 19 வரை)

  கும்பம் (ஜனவரி 21 முதல் பிப்ரவரி 19 வரை)

  கும்பம் ராசிக்காரர்கள் தன்னடக்கம், தோழமை குணம் போன்றவற்றை உடையவர்கள்.
  கும்ப ராசிக்காரர்களுக்கு இந்த ஆண்டுக்கான அதிர்ஷ்ட எண்கள் இவைதான்: 8, 10, 11, 29, 40, 42. இந்த எண்கள் உங்களுக்கு அதிஷ்டத்தை தருவதோடு, உங்கள் வாழ்க்கையில் கஷ்டமான சூழ்நிலைகளை சமாளிக்க உதவும்.

  மீனம் (பிப்ரவரி 20 முதல் மார்ச் 20 வரை)

  மீனம் (பிப்ரவரி 20 முதல் மார்ச் 20 வரை)

  மீனம் ராசிக்கார்கள் எதையும் சிந்தித்து செயல்படும் வல்லமை கொண்டவர்கள். குரு பகவானை ராசி நாயகனாக கொண்ட மீனம் ராசிக்காரர்களுக்கு 2018ஆம் ஆண்டில் இவைதான் உங்களுக்கான அதிர்ஷ்ட எண்கள்: 5, 6, 11, 12, 20, 31. இந்த எண்கள் உங்களுக்கு அதிஷ்டத்தை அள்ளித்தரும்.

  திருமணம் ஆகாதவரா? இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் - பதிவு இலவசம்!

  English summary
  2018 brings mixed prospects for the natives of different zodiac signs. In order to beacon success to favor you in 2018, choose one from your lucky numbers depending on which is appropriate to the situation.

  நாள் முழுவதும் oneindia
  செய்திகளை உடனுக்குடன் பெற