Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

செல்வங்களை வாரி வழங்கும் திருச்சானூர் பத்மாவதி தாயாருக்கு மகா புஷ்ப யாகம்

திருச்சானூர் பத்மாவதி தாயார் கோவிலில் வெள்ளிக்கிழமை முதல் 24ஆம் தேதி வரை 9 நாட்கள் கனகாம்பரம், கோடி மல்லி பூக்களால் மகா புஷ்ப யாகம் நடைபெற உள்ளது.

Subscribe to Oneindia Tamil

திருச்சானூர்: திருச்சானூர் பத்மாவதி தாயார் கோவிலில் 9 நாட்கள் நடைபெறும் மகா புஷ்ப யாகம் வெள்ளிக்கிழமை தொடங்கியுள்ளது. கனகாம்பரம், கோடி மல்லி பூக்களால் மகா புஷ்ப யாகம் நடக்கிறது. பக்தர்கள் பங்கேற்பு இன்றி நடைபெறும் இந்த விழா திருமலை திருப்பதி பக்தி சேனலில் ஒளிபரப்பாகிறது.

திருப்பதி ஏழுமலையானை தரிசனம் செய்ய வரும் பக்தர்கள் அதற்கு முன்பு திருச்சானூர் பத்மாவதி தாயாரை வணங்கிய பின்பு தான் ஏழுமலையானை தரிசிக்க வேண்டும் என்பது நமது முன்னோர்களின் நம்பிக்கையாக பக்தர்கள் இன்றளவும் கடைப்பிடித்து வருகின்றனர்.

திருச்சானூர் பத்மாவதி தாயார் தரிசனம் கிடைக்க கொடுத்து வைத்திருக்க வேண்டும். பத்மாவதி தாயாரை தரிசிப்பவர்களுக்கு சகல செல்வங்களும் அளிக்குமாறு ஏழுமலையான் ஆணையிட்டுள்ளார். அவ்வாறு செல்வம் பெற்ற பக்தர்கள் அதில் ஒரு பகுதியை ஏழுமலையான் உண்டியலில் காணிக்கையாக செலுத்துகின்றனர்.

திருச்சானூர் பத்மாவதி தாயார்

திருச்சானூர் பத்மாவதி தாயார்

வைகுண்டத்தில் நாராயணின் திருமார்பில் உறையும் மகாலட்சுமியே திருச்சானூரில் பத்மாவதி தேவியாய் அருள்கிறாள். தன் மார்பை எட்டி உதைத்த பிருகு முனிவரை மன்னித்த திருமால் மீது கோபம் கொண்ட திருமகள் அவரை விட்டு நீங்கி பூவுலகம் வர, அவளை சமாதானப்படுத்தி அழைத்து வர நாராயணனும் புறப்பட்டு வந்தார்.

சீனிவாசன் திருக்கல்யாணம்

சீனிவாசன் திருக்கல்யாணம்

பூலோகம் வந்த மகாலட்சுமி சந்திரவம்சத்தைச் சேர்ந்த ஆகாசராஜன் எனும் மன்னன் செய்த புத்திரகாமேஷ்டி யாகத்தில் பெண் மகவாகத் தோன்றி, பத்மாவதி எனும் பெயருடன் வளர்ந்தாள். பருவம் வந்த உடன் பெண் கேட்டு வந்தார் சீனிவாசன். பொருள் இல்லாததால் திருமணச் செலவிற்கு குபேரனிடம் ஒரு கோடியே பதினான்கு லட்சம் ராமநிஷ்காம பொற்காசுகளைக் கடனாகப் பெற்று கலியுகம் முடியும் வரை கடனுக்கு வட்டி செலுத்துவதாக வாக்களித்தார் ஸ்ரீனிவாசன்.

திருச்சானூர் வந்தது ஏன்

திருச்சானூர் வந்தது ஏன்

திருமணம் சிறப்பாக நடந்தேறியது. மகாலட்சுமி, திருமலையில் திருவேங்கடனின் திருமார்பில் குடியேறவும் தனது அம்சமான பத்மாவதி கீழ்த் திருப்பதியில், திருச்சானூரில் எழுந்தருளுமாறும் வரம் பெற்றதாக வரலாறு. ஸ்ரீநிவாசன் பத்மாவதி தாயார் திருமண விருந்தில் கருவேப்பிலையும் கனகாம்பரமும் சேர்க்கப்படவில்லை என்பதால், தாயாருக்கும் பெருமாளுக்கும் ஊடல் ஏற்பட்டு தாயார் கீழ்த் திருப்பதியில் அமர்ந்தார் என்கிறது புராண கதை.

ஏழுமலையான் வருகை

ஏழுமலையான் வருகை

திருப்பதி அருகில் உள்ள ஊர் திருச்சானூர். தாயார் அலர்மேல்மங்கை என்றும் பத்மாவதி தாயார் என்றும் வணங்கப்படுகிறார். தினமும் இரவில் திருமலையிலிருந்து திருவேங்கடவன் இறங்கி வந்து அலர்மேல் மங்கைத் தாயாருடன் ஏகாந்தமாக இருந்து விட்டு பின் விடிவதற்குள் திருமலைக்குச் செல்வதாக ஐதீகம்.

மகா புஷ்ப யாகம்

மகா புஷ்ப யாகம்

இந்த ஆலயத்தில் ஆண்டு தோறும் கார்த்திகை மாதத்தில் பிரம்மோற்சவம் நடைபெறுவது வழக்கம். அப்போது அலங்கரிக்கப்பட்ட வாகனங்களில் அம்மன் உலா வந்து அருள்பாலிப்பார். கொரோனா பரவலை முன்னிட்டு திருப்பதி, திருச்சானூரில் திருவிழாக்கள் பக்தர்கள் பங்கேற்பின்றி நடைபெறுகிறது. இந்த நிலையில் 9 நாட்கள் நடைபெறும் மகா புஷ்ப யாகம் வெள்ளிக்கிழமை தொடங்கியுள்ளது.

மகா யாகம் தொடக்கம்

மகா யாகம் தொடக்கம்

புஷ்ப யாகத்தை முன்னிட்டு ஸ்ரீகிருஷ்ணர் முக மண்டபத்தில் தினமும் மாலை 6 மணியில் இருந்து இரவு 8 மணி வரை புண்யாவதனம், ரக்‌ஷா பந்தனம், அனுஜ்னா உள்ளிட்ட நிகழ்ச்சிகள் நடக்கிறது. 24ஆம்தேதி காலை 10.30 மணியில் இருந்து காலை 11 மணி வரை மகாபூர்ணஹூதி நடக்கிறது. இதோடு மகா புஷ்ப யாகம் நிறைவடைகிறது.

அலர்மேல்மங்கை தாயார்

அலர்மேல்மங்கை தாயார்

பக்தர்களுக்கு சுகங்களை வாரி வாரி வழங்குவதால், திருச்சானூர், சுகபுரி என்றும் அழைக்கப்படுகிறது. பத்து ஆழ்வார்கள் மங்களாசாசனம் செய்த சிறப்புடையவள் அலர்மேல்மங்கைத் தாயார்.'வைகரீ ரூபாய அலர்மேல்மங்காய நமஹ' எனும் மந்திரம் மிகவும் பிரசித்தி பெற்றது. தினமும் காலையில் எழுந்த உடன் இந்த மந்திரத்தை கூறினால் பத்மாவதி தேவியின் அருள் கிட்டும் என்பது ஐதீகம். ஆடி மாதத்தில் பத்மாவதி தாயாரை மகிழ்விக்க புஷ்ப யாகம் நடைபெறுகிறது. புஷ்பயாக நிகழ்ச்சிகள் அனைத்தும் பக்தி சேனலில் நேரடியாக ஒளி பரப்பப்படுகிறது.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+