மகாளய அமாவாசை 2021: மாங்கல்ய தோஷமும் களத்திர தோஷமும் நீங்கி மங்கள வாழ்வு தரும் அவிதவா நவமி
மகாளய பட்சத்தின் 9ம் நாள், அவிதவா நவமி தினமாக அனுஷ்டிக்கப்படுகிறது. இந்த நாளில், நம் வீட்டில் சுமங்கலியாக மரணம் அடைந்த முன்னோரை நினைத்து, வழிபாடு செய்வது சிறப்பு.
சென்னை: அவிதவா பெண்கள் என்றால் சுமங்கலி என்று அர்த்தம். நம்முடைய குடும்பத்தில் சுமங்கலியாக இறந்தவர்களுக்காக, அவிதவா நவமி அனுஷ்டிக்கப்படுகிறது. மகாளய பட்சத்தின் பதினைந்து நாட்களும் மறைந்த முன்னோர்கள் நம் வீடு தேடி வருவார்கள். மகாளய பட்சத்தின் 9ஆம் நாள் அவிதவா நவமி தினமாக அனுஷ்டிக்கப்படுகிறது. இந்த நாளில் நம் வீட்டில் சுமங்கலியாக மரணம் அடைந்த முன்னோரை நினைத்து, வழிபாடு செய்வது சிறப்பு.
அவிதவா நவமி நாளில், தன் கணவருக்கு முன்னதாக இறந்துவிட்டவர்களின் ஆன்மா சாந்தி அடையும் பொருட்டு, அவர்களை திருப்திப்படுத்தும் விதமாக, சுவாசினி என்று சொல்லப்படும் கன்னிப்பெண்களை வீட்டுக்கு அழைத்து, அவர்களுக்கு வஸ்திரம் தந்து, அவர்களுக்கு உணவளித்து மங்கலப் பொருட்கள் வழங்க வேண்டும்.

சுமங்கலி வழிபாடு, திதி செய்வதற்கு சமமாக கருதப்படுகிறது. குடும்பத்தில், சுமங்கலியாக இறந்த பெண்களை நினைத்து செய்வது தான், சுமங்கலி வழிபாடு.திருமணமாகி, பல ஆண்டுகள் வாழ்ந்து, பூவும், பொட்டுமாக இறந்த பெண்மணியருக்கு, அவர்களின் திதிக்கு மறுநாள் சுமங்கலி வழிபாடு செய்ய வேண்டியது அவசியம்.
சுமங்கலி வழிபாட்டை ஒற்றைப் படையில் பெண்களை வைத்து செய்ய வேண்டும். வீட்டுப் பெண்கள் அதாவது இதைச் செய்யும் பெண்ணின் நாத்தனார் மகள் போன்ற உறவுகளை முக்கியமாக உட்கார வைக்க வேண்டும். சொந்தமல்லாதவேறு சுமங்கலிப் பெண்கள் யாராவதும் உட்காரலாம். ஏழு அல்லது எட்டு வயது பெண் குழந்தை சுமங்கலிகளுடன் உட்கார வைப்பது சிறப்பு.
பெண்ணானவள், தன் கணவருடன் சேர்ந்து வாழ்ந்து, தர்ம காரியங்கள் பலவற்றையும் செய்கிறாள். சடங்கு, சாங்கியம், தர்மம் உட்பட எல்லாவற்றையும் கணவன் செய்யும் போது, மனைவியும் உடன் இருக்க வேண்டும் என்கிறது சாஸ்திரம்.
பெண்ணானவள், அதாவது மனைவியானவள், சுமங்கலியாக இறந்துவிட்டாலும் கூட, அவளின் கணவர் செய்யும் எல்லாக் காரியங்களிலும் அவளை இருத்தியே, முன்னிலைப்படுத்தியே எல்லாம் செய்வதாகச் சொல்கிறார்கள் ஆச்சார்யர்கள். அப்போது அவிதவா என்று சாஸ்திரம் அழைக்கிறது.
அவிதவா நவமி நாளில், தன் கணவருக்கு முன்னதாக இறந்துவிட்டவர்களின் ஆன்மா சாந்தி அடையும் பொருட்டு அவர்களை திருப்திப்படுத்தும் விதமாக சுவாசினி என்று சொல்லப்படும் கன்னிப்பெண்களை வீட்டுக்கு அழைத்து அவர்களுக்கு வஸ்திரம் தந்து அவர்களுக்கு உணவளித்து மங்கலப் பொருட்கள் தானமாக வழங்கவேண்டும்.
மகாளய பட்சத்தின் அவிதவா நவமி இன்றைய தினம் கடைபிடிக்கப்படுகிறது. இந்தநாளில் வழக்கம் போல், பித்ரு தர்ப்பணம் செய்யவேண்டும். மேலும் சுமங்கலிப் பெண்கள் எவருக்கேனும் புடவை அல்லது ஜாக்கெட் மங்கல பொருட்கள் வழங்கலாம். இதனால் பித்ருக்களின் ஆசீர்வாதமும் சுமங்கலியாக இறந்துவிட்ட பெண்களின் ஆசீர்வாதமும் கிடைக்கும்.
சுமங்கலியாக இறந்த பெண்கள், அம்பிகையின் வடிவமாய் மாறி நம் குடும்பத்தைக் காப்பர். அப்படிப்பட்ட பெண்களை நினைவுகூர்ந்து இந்த நாளில் அவர்களுக்குரிய கர்மா காரியங்களைச் செய்வது சுமங்கலிகளின் பரிபூரண ஆசியைப் பெற்றுத்தரும். நம்முடைய குடும்பத்தில் நிம்மதி ஏற்படும் சகல ஐஸ்வரியமும் கிடைக்கும். தம்பதியர் ஒற்றுமை அதிகரிக்கும். களத்திர தோஷமும், மாங்கல்ய தோஷமும் நீங்கும். வாழ்க்கைத்துணையின் ஆயுள் நீடிக்கும் என்பது ஐதீகம்.
-
வெளிநாடு போயிருக்கதே 'ரீல்ஸ்' பார்த்துதான் தெரியுது.. அமைச்சர் கீர்த்தனாவை கலாய்த்த மேயர் பிரியா! -
"எதிரிகள் சர்வ நாசம்".. எம்ஜிஆர், ஜெ., பாணியில் விஜய்.. கொல்லூர் மூகாம்பிகை கோவிலுக்கு செல்வது ஏன்? பின்னணி -
தங்கப்பத்திரத்தில் 1.50 கோடி முதலீடு செய்தவர்களுக்கு 6 கோடி தந்த மத்திய அரசு.. லாபம் 4.85 கோடி -
"ஜனவரி 1 முதல் ஆர்.எஸ்.பாரதி அரை மீசை பாரதி என்று அழைக்கப்படுவார்" - மாணிக்கம் தாகூர் கிண்டல்! -
"3 சேனல்கள் நீக்கம் இல்லை.. தொழில்நுட்ப கோளாறால் தற்காலிக ஒளிபரப்பு பாதிப்பு” - அமைச்சர் ராஜ்மோகன் -
முதல்வர் விஜய்யின் முதல் அரசு நிகழ்ச்சி.. ஒரே ஏஐ வீடியோவில் இத்தனை தமிழ்ப் பிழைகளா! -
ஸ்டாலின் கையில் ஆழ்வார்பேட்டை ரிப்போர்ட்! அப்பவே சொன்னோம்ல.. கழண்டு விழுகிறதா திமுக கூட்டணி கியர்? -
டிசிஎஸ் சைலெண்டாக செய்யும் விஷயம்.. 50000 ஊழியர்களுக்கு டார்கெட்.. தனி பிரிவு உருவாக்க முடிவு! -
கூட்டுறவு வங்கி பயிர்க்கடன் தள்ளுபடி.. அரசாணையில் குளறுபடி? "அப்பவே சொன்னோமே" சீறும் கோவை விவசாயிகள் -
நேற்று இந்திரா, நாளை நேரு.. 62 வருட சாதனை முறியடிப்பு! மிக நீண்ட கால பிரதமர் என்ற வரலாறு படைத்த மோடி -
காவலாளிக்கு லாட்டரியில் விழுந்த ரூ.78 கோடி பரிசு.. ஐக்கிய அரபு அமீரகத்தில் ‘மெகா ஜாக்பாட்’ -
2 மனைவிகளும் எனக்கு வேணும் சார்.. ஒரு நிமிஷம் போலீசுக்கே தலைசுத்திருச்சு.. திகைத்த திண்டுக்கல்












Click it and Unblock the Notifications