For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

காரைக்கால் அம்மையார் கோவில் மாங்கனி திருவிழா கோலாகலம் - பக்தர்கள் தரிசனம்

காரைக்கால் அம்மையார் இறைவனோடு ஐக்கியமாகும் நிகழ்ச்சி இன்று நடைபெற்றது. கோயில் மற்றும் வீதிகளில் விளக்குகள் அனைத்தும் அணைக்கப்பட்டு, அம்மையார் ஜோதி வடிவமாக இறைவனோடு ஐக்கியமானதை விளக்கும் வகையில் காரைக்கால் அம்மையார், பே

Google Oneindia Tamil News

காரைக்கால் : மாங்கனி திருவிழாவின் முக்கிய நிகழ்ச்சியான காரைக்கால் அம்மையார் இறைவனுடன் ஜோதி வடிவில் ஐக்கியமாகும் நிகழ்ச்சி அதிகாலையில் நடைபெற்றது. கோயில் மற்றும் வீதிகளில் விளக்குகள் அனைத்தும் அணைக்கப்பட்டு, அம்மையார் ஜோதி வடிவமாக இறைவனோடு ஐக்கியமானதை விளக்கும் வகையில் காரைக்கால் அம்மையார், பேயுருவில் கைலாயம் சென்ற வைபவம் நடைபெற்றது. காரைக்கால் அம்மையாரை தரிசனம் செய்தால் பேய் பற்றிய பயம் நீங்கும் என்ற நம்பிக்கை உள்ளது.

சிவபெருமானின் திருவாயால் அம்மையே என்றழைக்கப்பட்ட பெருமைக்குரியவர் காரைக்கால் அம்மையார். 63 நாயன்மார்களில் ஒருவரான காரைக்கால் அம்மையாரின் பெருமையை விளக்கும் வகையில் ஆண்டு தோறும் காரைக்கால் கோயிலில் மாங்கனி திருவிழா நடைபெறுவது வழக்கம்.

கொரோனா பரவல் காரணமாக இந்த ஆண்டு விழா எளிமையாக நடைபெற்றது. கைலாசநாதர் கோவில் பிரகாரத்தில் பரமசிவன் பிச்சாண்டவர் கோலத்தில் பிரகார உலா நடைபெற்றது. அப்போது மாங்கனிகளை வாரி இறைக்கும் நிகழ்ச்சி எளிமையாக நடைபெற்றது.

நேரலை தரிசனம்

நேரலை தரிசனம்

நேற்றைய தினம் பக்தர்கள் யாரும் அனுமதிக்கப்படவில்லை. இந்த நிகழ்ச்சி யூ-டியூப் மூலம் நேரடியாக ஒளிபரப்பப்பட்டது. இதனை பக்தர்கள் பக்தி பரவசத்துடன் கண்டு தரிசித்தனர். தொடர்ந்து மதியம் 1 மணிக்கு காரைக்கால் அம்மையார் பிச்சாண்டவருக்கு அமுதுபடைத்தார்.

அமுது படையல்

அமுது படையல்

பிற்பகல் 2 மணிக்கு மேல் சாமி தரிசனத்துக்கு பக்தர்கள் அனுமதிக்கப்பட்டனர். மாங்கனி பிரசாதம் வழங்கப்பட்டது.
முக்கனிகளுள் ஒன்றான மாங்கனிக்கு முக்கியத்துவம் கொடுத்து விழா நடைபெறுவது உலகிலேயே காரைக்காலில் மட்டும்தான் என்பது குறிப்பிடத்தக்கது. இறைவன் மீது இறைக்கப்படும் மாங்கனியை குழந்தைபேறு இல்லாத கணவனும், மனைவியும் உண்டால் அவர்களுக்கு அடுத்த ஆண்டே குழந்தை பாக்கியம் கிடைக்கும் என்பது ஐதீகம்.

இரண்டாவது திருமணம்

இரண்டாவது திருமணம்

நேற்று இரவு பரமதத்தருக்கு இரண்டாவது திருமணம், அதை தொடர்ந்து, புனிதவதியார் புஷ்ப பல்லகில் செல்லுதல் ஆகிய நிகழ்ச்சிகள் எளிமையாக நடைபெற்றது. வெள்ளிக்கிழமையான இன்றைய தினம் அதிகாலை 5 மணிக்கு அம்மையார் இறைவனோடு ஐக்கியமாகும் நிகழ்ச்சி நடைபெற்றது.

ஜோதி வடிவில் கலந்த அம்மையார்

ஜோதி வடிவில் கலந்த அம்மையார்

கோயில் மற்றும் கோயிலில் உள்ள வீதிகளில் விளக்குகள் அனைத்தும் அணைக்கப்பட்டு, அம்மையார் ஜோதி வடிவமாக இறைவனோடு ஐக்கியமானதை விளக்கும் வகையில் காரைக்கால் அம்மையார், பேயுருவில் கைலாயம் சென்ற வைபவம் நடைபெற்றது.

அம்மைக்கு காட்சியளித்த இறைவன்

அம்மைக்கு காட்சியளித்த இறைவன்

அப்போது சிவன், கோயிலுக்குள் இருந்தால் அப்போது இரட்டை மணிமாலை, திருவந்தாதி பாடப்பட்டது. பின்னர் ஊரிலுள்ள அனைத்து விளக்குகளும் அணைக்கப்பட்டு, சிவனுக்கு அருகில் ஒரு தீப்பந்தமும், காரைக்காலம்மையார் அருகில் ஒரு தீப்பந்தமும் ஏற்றப்பட்டது. அம்மையார் கோயில் தீப்பந்தத்தை, சிவனருகே உள்ள தீப்பந்தத்தில் கொண்டு சென்று சேர்த்தனர். அம்மையார், ஜோதி வடிவில் இறைவனை ஐக்கியமாவதாக இதனை சொல்கிறார்கள்.

இறைவனுக்கு படையல்

இறைவனுக்கு படையல்

குலசேகரன்பட்டினத்தில் காரைக்காலம்மையார் பேயுருவம் பெற்ற மண்டபத்தில் அமைந்துள்ள காரைக்காலம்மையார் கோயிலில் ஆனி பவுர்ணமியை முன்னிட்டு மாங்கனித் திருவிழா சிறப்பாக நடைபெற்றது. ஊரடங்கு உள்ளதால் விதிகளுக்குட்பட்டு பூஜை நடை பெற்றது. மாம்பழம் பக்தர்களுக்கு வினியோகம் நடைபெற்றது. இல்லங்குடி மற்றும் சண்முகம் விழா ஏற்பாடுகளை செய்திருந்தனர்.

பேய் பயம் நீங்கும்

பேய் பயம் நீங்கும்

பேய் பயம் கொண்டவர்கள் பங்குனி மாத சுவாதி நட்சத்திரத்தில் குருபூஜை காணும் பேய்வுறு கொண்ட காரைக்காலம்மையை திருவள்ளூர் அருகிலுள்ள திருவாலங்காட்டில் வணங்கி ஆடலரசனையும் வணங்கி அங்குள்ள மந்தனின் புதல்வன் மாந்தியையும் வணங்க பேய் பயமெல்லாம் நீங்கும்.

English summary
The main event of the Mangani Festival, the event of unity in the form of a torch with Lord Karaikal Ammayar was held in the early morning.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X