உடல் பருமன் எதிர்ப்பு தினம் : குண்டு உடலுக்கு காரணமான குரு, சுக்கிரன் - பரிகாரம் என்ன?
நவ கிரகங்களின் சுப கிரகங்களான குருவும் சுக்கிரனும் ஒருவருக்கு ஹம்ச யோகம், மளாவியா யோகங்களை கொடுத்தாலும் கூடவே உடல் பருமனையும் சேர்த்தே கொடுப்பதாக சொல்கிறது மருத்துவ ஜோதிடம்.
சென்னை: அவனுக்கென்ன ராஜா நல்ல யோகக்காரன் என்று பணக்காரர்களைப் பார்த்து சொல்வார்கள்.
இன்றைக்கு யோகக்காரர்கள் எந்த அளவிற்கு செல்வ செழிப்போடு இருக்கிறார்களோ அதே அளவிற்கு நோய்களாலும் பாதிக்கப்படுகிறார். சில பணக்கார்களுக்கு தொப்பை இருக்கும்போது அதை பணத்தொப்பை எனக் குறிப்பிடும் வழக்கம் இன்றளவும் இருக்கிறது. பணத்திற்கும் செல்வ செழிப்பிற்கும் காரகரான தனகாரக குருதான் கொழுப்பு சத்துக்கும் காரகர் என்பதை சொல்கிறது மருத்துவ ஜோதிடம். உடல் பருமன் எதிர்ப்பு தினம் அனுசரிக்கப்படும் இந்த நேரத்தில் ஜோதிட ரீதியாக உடல் பருமனுக்கான காரணத்தையும் அதனால் ஏற்படும் நோய்களையும் பார்க்கலாம்.
உலகம் முழுவதும் நவம்பர் 26ஆம் தேதியன்று பல நாடுகளில் சர்வதேச உடல் பருமன் எதிர்ப்பு தினம் அனுசரிக்கப்பட்டு வருகிறது. உடல் பருமனால் ஏற்படும் தீமையை விளக்கவே இந்த தினம் கடைப்பிடிக்கப்படுகிறது. உடல் பருமன் ஒரு பெரிய சுகாதாரப் பிரச்னையாகக் கருதப்படுகிறது. உடல் பருமனால் ஆண்டிற்கு 3 மில்லியன் மக்கள் உலகளவில் மரணமடைகின்றன. ஒபிசிட்டி எனப்படும் உடற்பருமன், முன் எப்போதும் இல்லாத அளவுக்கு இன்று அதிகரித்துள்ளதாக மருத்துவத் தகவல்கள் எச்சரித்து வருகின்றன.
ஒபிசிட்டி இன்று இந்தளவுக்கு அதிகரித்து வருவதற்குக் காரணம், மாறிவரும் வாழ்க்கை முறைதான் காரணம் என உடல் நல மருத்துவர்கள் கூறுகின்றனர். எல்லோருமே இன்றைக்கு ஃபாஸ்ட் ஃபுட் உணவு வகைகளிடம் அடிமையாகிவிட்டனர். ஜங்க் ஃபுட் வகைகள், உடலின் கொழுப்பை அதிகரிக்கச் செய்து பலவிதமான நோய்களை இலவசமாகக் கொடுக்கின்றன. ஜாதக ரீதியாகவும் உடல் பருமனம் ஏற்படுகிறது. ஒருவரின் உடல் பருமனுக்கு குருவும், சுக்கிரனும் காரணமாகின்றனர். உடல் பருமனுக்கு ஜோதிட ரீதியாக ஏற்படும் காரணங்களையும் அதற்கான பரிகாரங்களையும் பார்க்கலாம்.

பருமனுக்கு என்ன காரணம்
உலகம் முழுவதும் குழந்தைகள் மற்றும் இளம்வயதினர் உடல் பருமன் விரைவாக அதிகரித்து வருகிறது. உலகில், அனைவரும் மன அழுத்தத்துடன், அதிக உடல் எடையாலும் பாதிக்கப்படுகின்றனர். இதற்குக் காரணம் ஒரே இடத்தில் அமர்ந்து வேலை செய்வது நேரம் கெட்ட நேரத்தில் கண்டதை வாங்கி வயிற்றுக்குள் தள்ளுவது என மாறிவிட்டனர். இதனால் கொழுப்பு அதிகரிக்கிறது. அதிக நேரம் டிவி பார்ப்பது, பகலில் அதிக நேரம் தூங்குவதும் ஒபிசிட்டி ஏற்பட காரணமாகிறது. இதனால் உடலில் பல நோய்கள் வருவதோடு, எதையும் சரியாக செய்ய முடியாத நிலை ஏற்படுகிறது.

நோய்கள் ஏற்பட காரணம்
கொரோனா காலத்தில் உடல் பருமனால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை பல மடங்கு அதிகரித்துவிட்டது என்று ஆய்வுகள் கூறுகின்றன. ஒரு தனி நபரின் உயரத்துக்கு ஏற்ப உடல் எடை இருப்பதை பிஎம்ஐ என்ற அளவீட்டால் அளவிடுகின்றனர். 25க்கு மேல் இருந்தால் அதிகப்படியான உடல் எடை என்றும், 30க்கு மேல் இருந்தால் உடல் பருமன் என்றும் உலக சுகாதார நிறுவனம் வகைப்படுத்துகிறது.

நோய்களின் கூடாரம்
உடல் பருமனுக்கும் நமக்கு ஏற்படும் நோய்களுக்கும் ஜோதிட ரீதியாக பல காரணங்கள் இருக்கின்றன. உடல் பருமனாய் இருப்பதால், நீரிழிவு, இதய நோய், மாரடைப்பு, கீல்வாதம், சில புற்று நோய் வகைகள், மிகை இரத்த அழுத்தம், இளமையில் மிகை கொலஸ்ட்ரால் ஆகிய பாதிப்புகள் ஏற்படும் ஆபத்து உள்ளது. உடல் பருமனுக்கு காரகர் குரு என்றும் ஊளைச் சதைக்கு காரகர் சுக்கிரன் என்றும் பாரம்பரிய ஜோதிடம் கூறுகிறது.

மருத்துவ ஜோதிடம்
ஜோதிட ரீதியாக உடல் பருமனை ஏற்படுத்தும் பாவங்களாக கால புருஷனுக்கு போஜன ஸ்தானமான ரிஷபம் மற்றும் அதன் அதிபதி சுக்கிரன், ஜெனன ஜாதக இரண்டாம்பாவம், அதன் அதிபதி, கால புருஷனுக்கு ஒன்பதாம் பாவமான தனுசு மற்றும் அதன் அதிபதி, ஜெனன ஜாதகத்தில் ஒன்பதாம் பாவம் மற்றும் அதன் அதிபதி லக்னத்தோடு தொடர்புகொள்ளும் போது உடல் பருமன் ஏற்படுகிறது என மருத்துவ ஜோதிடம் கூறுகிறது.

குண்டு உடம்பு
ஒருவரின் ஜாதகத்தில் குருவும், சுக்கிரனும் லக்னதில் ஆட்சி பெற்று நிற்பது, உச்சம், மூல திரிகோணம், கேந்திர திரிகோணங்களில் நின்று லக்னத்தை பார்ப்பது, பஞ்ச மகா புருஷ யோகங்களில் குருவால் ஏற்படும் ஹம்ச யோகம், சுக்கிரனால் ஏற்படும் மாளவியா யோகம் ஆகிய யோகங்கள் பெற்று நின்று தனது தசா புத்தியை நடத்தும்போது உடல் பருமனும் ஊளைச் சதையும் ஏற்படுகின்றது. முக்கியமாகக் கொழுப்பின் காரகரே குரு தான் என மருத்துவ ஜோதிடம் கூறுகிறது.

குண்டாவது ஏன்
பொதுவாக குரு தான் இருக்கும் வீட்டின் காரகத்தை வளர்த்துவிடுவார் என்பது ஜோதிட விதி. அந்த வகையில் எந்த லக்னமானாலும், காலபுருஷனுக்கு ஐந்தாமிடமான சிம்மம் வயிறு பாகத்தையும் ஆறாமிடமும் அடி வயிற்றினை குறிக்கும் இடங்களாகும். குரு சிம்மத்தில் அல்லது ஜெனன ஜாதக ஐந்தாமிடத்தில் ராகுவோடு சேர்ந்து நிற்கும் போது மிகப்பெரிய வயிற்றுடன் கூடிய உடல் பருமன் ஏற்படுகிறது. ராகுவோடு சேராமல் தனித்து சிம்மத்தில் நின்றாலும் குறைந்த அளவிலாவது தொப்பை இருக்கும்.

நீரிழிவு நோய்
ஒருவரின் ஜாதகத்தில் கும்ப லக்னத்தில் ராகு நின்று சிம்மத்தில் கேது நிற்கும்போது கால புருஷனுக்கு வயிறு பாகம் பாதிப்படைவதால் பானை போன்ற வயிறு ஏற்படுகிறது. ஜாதகத்தில் மேற்கண்ட கிரக நிலைகள் ஒருவருக்கு இருந்து குரு தசை ராகு புக்தி, குரு சாரம் பெற்ற ராகு தசை குரு புக்தி போன்றவை நடைபெறும் காலங்களில் உடல் பருமன் ஏற்படுகிறது. ஒருவரின் ஜாதகத்தில் குருவும் சுக்கிரனும் லக்னாதிபதியாகவோ, இரண்டாம் ஸ்தானதிபதியாகவோ இருப்பது மற்றும் லக்னத்தையோ அல்லது இரண்டாம் ஸ்தானத்தையோ தொடர்பு கொள்ளும்போது ஜாதகருக்கு இனிப்புகளில் அதிகம் நாட்டம் ஏற்படும். அதனால் உடல் பருமன் ஏற்படும்.

நீரிழிவு உடல் பாதிப்பு
கன்னி மற்றும் ஜனன ஜாதக ஆறாமிடத்தில் குரு நிற்பது முக்கியமாக லிவர் எனப்படும் கல்லீரல் பாதிப்பால் உடல் பருமன் ஏற்படும். மேலும் கன்னியில் குரு நிற்பவர்களுக்கு சர்க்கரை நோயும் சேர்ந்து வர இதுவே காரணமாகும். அதிலும் சனீஸ்வரனும் சேர்ந்துகொண்டால் நீரிழிவு மற்றும் உடல் பருமன் இரண்டும் சேர்ந்து அமைந்துவிடுகிறது.

பெண்களுக்கு உடல் பருமன்
பெண்களுக்குப் புத்திர காரக குரு பிரசவ காலத்திற்கு பிறகு உடல் பருமனை ஏற்படுத்துகிறார். பிரசவத்திற்கு முன் ஒல்லியாக இருந்தவர்கள் கூட ஒரு குழந்தையை பெற்றவுடன் உடல் பருமனடைவதை பார்க்க முடிகிறது. அதுவே நிரந்தரமாகி அப்புறம் குண்டம்மாக்களாக வளைய வருகின்றனர் பெண்கள். அதே நேரம் திருமணத்தின் போதே உடல் பருமனாக இருக்கும் பலருக்கும் குழந்தை பிறப்பது அரிதாகி விடுகிறது.

பத்தாம் வீட்டில் குரு சுக்கிரன்
ஜாதகத்தில் ஜீவன ஸ்தானம் மற்றும் கர்ம ஸ்தானம் எனப்படும் பத்தாமிடத்தில் இருக்கும் கிரகங்களை பொருத்து ஒருவரின் வேலை மற்றும் வாழ்க்கை முறை அமைந்துவிடுகிறது. பத்திலே அசுப கிரஹங்கள் இருந்தால் அவர்கள் வேலை கடுமையான உடல் உழைப்புடன் அமையும். மாறாக குருவோ சுக்கிரனோ அமர்ந்துவிட்டால் அவர்களுக்கு வேலை வொயிட் காலர் ஜாப் எனப்படும் சொகுசு வேலையிலேயே நாட்டம் இருக்கும். இவர்களையே உடற்பருமன் அதிகம் தாக்குவதை காணலாம்.

யோகா செய்யுங்க
செவ்வாயின் காரகம் கொண்ட யோகா, உடற்பயிற்சி செய்வது போன்றவை உடல் பருமனை குறைக்க வழி செய்யும். கேதுவின் தானியமான கொள்ளை அதிக அளவில் உணவில் சேர்த்துக்கொள்வது உடல் பருமனை குறைக்கும். செவ்வாயின் காரகம் நிறைந்த வெள்ளைப் பூண்டினை அதிக அளவு சேர்க்கும்போது கொழுப்புச்சத்து கரைந்து உடல் பருமன் நோய் நீங்கும் என மருத்துவ ஜோதிடம் கூறுகிறது. செவ்வாயின் காரகம் நிறைந்த இஞ்சி மற்றும் சுக்கு ஆகியவற்றை அதிகளவில் உணவில் சேர்ப்பது ஜீரண கோளாறுகளை நீக்கி உடல் பருமனை தடுக்கிறது.

பரிகாரம் என்ன
வாயு பொருட்கள், கிழங்குகள், பொரித்த உணவுகள் சனி குருவின் சேர்க்கையால் கொழுப்புச்சத்து அதிகரிக்கிறது. வாயுவை அதிகரிக்கும் உணவுகளைத் தவிர்த்து தன்வந்திரி பகவானை வணங்கலாம். வாயு தொல்லையில் இருந்து நிவாரணம் கிடைக்கும். மேலும் வாயு மைந்தன் ஆஞ்சனேயனை வணங்குவதும் உடல் பருமனை குறைக்கும். வயிறு தொடர்பான பிரச்னைகளை போக்கவும் உடல் பருமனை குறைக்கவும் மருத்துவ குணம் கொண்ட செவ்வாயின் காரகம் நிறைந்த கருஞ்சீரகம் பெருமளவு உதவுகிறது. குரு ஆதிக்கம் பெற்ற எலுமிச்சையை காலையில் வெறும் வயிற்றில் கதகதப்பான சுடு நீரில் தேன் கலந்து குடிப்பது மிகச்சிறந்த மருந்தாகப் பயன்படுவதோடு நோய் எதிர்ப்பு சக்தியை அளித்து புத்துணர்ச்சியை அளிக்கிறது. குருபகவானை வணங்கினால் நோய்கள் நீங்கி உடல் ஆரோக்கியம் அதிகரிக்கும்.
-
அண்ணாமலை கடும் ‘அப்செட்’.. தேர்தலில் போட்டியிட மறுப்பது ஏன்? எடப்பாடியால் கலங்கும் பாஜக! 2 மேட்டர் -
கோவையில் 2022ல் சரவணம்பட்டியில் இடம் வாங்கி போட்டிருந்தால் இன்று நீங்கள் கோடீஸ்வரன்.. மாறிய மதிப்பு -
சென்னையில் அதிமுகவுக்காக இறங்கும் 13 பேர்.. 3 பெண்களுக்கு வாய்ப்பு.. கொளத்தூரில் யாருக்கு வாய்ப்பு? -
இந்தியாவை உலுக்கும் "ஜாம்பி" போதை மருந்து.. 2 மணி நேரமா இன்ச் கூட அசையல.. திகிலூட்டும் வீடியோ! -
"பதிலடி தாக்குதல் நடத்துவோம்.." ஈரானுக்கு எதிராக ஒன்றுகூடும் வளைகுடா.. 6 நாடுகள் கூட்டாக அறிக்கை -
ஆபரண தங்கம் 6 சவரன் 15 வருடம் முன் வாங்கினீங்களா? அப்போ ₹1 லட்சம், இப்ப ரேட் தெரிஞ்சா ஷாக் ஆவீங்க -
"எங்க இப்போ கை வை பார்க்கலாம்.." ஹார்முஸை முடக்கிய ஈரான் தளபதி படுகொலை.. இஸ்ரேல் அறிவிப்பு! -
தோழமை கட்சிகள்.. காங்கிரஸ் பெயரை தவிர்த்த ஸ்டாலின்.. கோபம் உச்சத்தில்.. சத்தமின்றி சொன்ன மெசேஜ்! -
பழம் விழுந்தால் லாபம் எடப்பாடி பழனிசாமிக்கு.. அதிமுக வைத்த செக்கில் சிக்கிய கூட்டணி, திமுக விஐபிகள்! -
சொத்து வைத்திருப்போர் அலர்ட்! 5 நாளில் இதை செய்யாவிட்டால் நில பத்திரப்பதிவில் லட்சக்கணக்கில் நஷ்டம்? -
ஸ்டாலின் VS எடப்பாடி VS விஜய்.. எந்தெந்த ஜாதியினர் யாருக்கு ஆதரவு! News 18 சர்வே ரிசல்ட் இதோ -
"கோடம்பாக்கம் ஏரியா.. ஓட்டு கேட்டு வரியா".. விஜய் பாடலுக்கு நடனமாடிய அரசு பள்ளி தலைமையாசிரியை.. இப்போ வேலை போச்சே












Click it and Unblock the Notifications