குல தெய்வத்தின் மகிமையை உணர்த்திய மூக்குத்தி அம்மன் நயன்தாரா
திருப்பதி போய் ஏழுமலையானை தரிசனம் செய்ய அவரது அருள் வேண்டும் என்று சொல்வார்கள். குலதெய்வம் உத்தரவு கொடுத்தால்தான் அந்த ஏழுமலையானையே தரிசனம் செய்ய முடியும் என்பது எத்தனை பேருக்கு தெரியும்.
சென்னை: குலதெய்வம் நம்முடைய குலத்தை காக்கும் தெய்வம். பரம்பரை பரம்பரையாக நம்முடைய முன்னோர்களால் கையெடுத்து வணங்கப்பட்ட குல தெய்வத்தை மறந்தவர்களுக்கு எந்தவித நல்ல விசயங்களும் நடைபெறாது. காரிய தடைகளும், தாமதங்களும் ஏற்படும். குலதெய்வத்தை மனதார வேண்டிக்கொண்டு காசு முடிந்து வைத்தால் நாம் நினைத்த காரியம் நிறைவேறும். குல தெய்வத்தின் பெருமையை உணர்த்தும் வகையில் தற்போது வெளியாகியுள்ளது மூக்குத்தி அம்மன்.
அம்மன் படங்கள் எத்தனையோ வந்திருக்கின்றன. அம்மன், பாளையத்து அம்மன், மேல்மருவத்தூர் ஆதிபராசக்தி, கோலவிழி பராசக்தி அம்மன், பொட்டு அம்மன் என எத்தனையோ படங்கள் வந்திருக்கின்றன. கே ஆர் விஜயா தொடங்கி ரம்யா கிருஷ்ணன், மீனா, ரோஜா என பல நடிகைகள் அம்மன் வேடம் போட்டு அசத்தியுள்ளனர். பக்தர்களின் கனவில் கூட அம்மன் என்றால் ரம்யா கிருஷ்ணன்தான் வந்து அருள்புரிந்திருக்கிறார் அந்த அளவிற்கு பாந்தமாக பொருந்தியிருக்கும்.
மூக்குத்தி அம்மனாக கையில் சூலம் ஏந்தி அருள்பாலித்திருக்கும் நயன்தாராவிற்கு அம்மன் வேடம் அத்தனை பொருத்தமாக இருக்கிறது. 2கே கிட்ஸ்களின் பேவரைட் அம்மனாகி விட்டார் நயன்தாரா. தீபாவளிக்கு ஓடிடியில் ரிலீஸ் ஆன மூக்குத்தி அம்மன் குட்டீஸ்களின் பேவரைட் படமாகி விட்டது.

குலம் காக்கும் குல தெய்வம்
நம்முடைய குல தெய்வம் எங்கிருக்கிறது என்பதை அறிந்து கொள்வது மிக முக்கியம். ஆண்களுக்கு ஒரே குல தெய்வம்தான். பெண்களுக்கு பிறந்த வீட்டு குலதெய்வம், புகுந்த வீட்டு குல தெய்வம் என இரண்டு கோவில்கள் உள்ளன. திருமணத்திற்கு முன்பு பிறந்த வீட்டு குல தெய்வத்தை வணங்கும் பெண்கள் திருமணத்திற்கு பிறகு புகுந்த வீட்டு குல தெய்வத்தை வணங்குகின்றனர். அவ்வப்போது பிறந்த வீட்டு குல தெய்வத்தையும் மறக்காமல் கும்பிட வேண்டும். இதன் மூலம் இரண்டு தெய்வங்களின் ஆசியும் பெண்களுக்கு கிடைக்கும்.

குல தெய்வத்தின் அருள்
பல ஆயிரம் செலவு செய்து பல கோவில்களுக்கு ஆன்மீக சுற்றுலா செல்வதை விட அருகில் இருக்கும் குல தெய்வ கோவிலுக்கு குடும்பத்தோடு சென்று வணங்கி வந்தாலே நாம் நினைத்த காரியம் எளிதில் நிறைவேறும் என்பது நிரூபிக்கப்பட்ட உண்மை.

எளிமையான தெய்வங்கள்
குல தெய்வங்கள் எல்லாம் எளிமையாக இருக்கும். கருப்பசாமி, அய்யனார், பேச்சியம்மன், சவுண்டம்மன், வீரபத்திர சாமி, வீரு பண்ணம்மா, காமாட்சியம்மன், வனப்பேச்சி என நம்முடைய முன்னோர்களே குல தெய்வங்களாக அருள்பாலிக்கின்றனர். காட்டுக்குள் சிறு கோவில்களில் அருள்பாலிக்கும் நம்முடைய குல தெய்வங்கள் நம்முடனேயே பயணிப்பவர்கள்.

ஜொலித்த நயன்தாரா
எத்தனையோ தமிழ் சினிமாக்களில் அம்மன் படங்கள் எடுக்கப்பட்டிருந்தாலும் மூக்குத்தி அம்மன் குல தெய்வமாக அருள்பாலிக்கிறார். குல தெய்வம் கூடவே வந்து வரம் கொடுத்தால் அதை நாம் பயன்படுத்திக்கொள்வது என்பதை உணர்த்தியுள்ளது தீபாவளிக்கு ஓடிடியில் வெளியான மூக்குத்தி அம்மன். அதுவும் அம்மனாக நடித்த நடிகை நயன்தாரா அழகான அம்மனாக ஜொலிக்கிறார். இந்த கால இளசுகள், கிட்ஸ்களுக்கு இனி அம்மன் என்றாலே நயன்தாரா கனவில் வந்தாலும் ஆச்சரியமில்லை.
-
75 பவுன்ஸ் ஆன செக்குகள்.. நடிகர் கரண் வாழ்க்கையை கெடுத்தது அந்த பெண்ணா? உண்மையை உடைத்த பிரபலம் -
எலக்ட்ரீஷியன் நள்ளிரவில் வாஷ்பேசினில் பண்ண காரியம்! உறைந்து போன 4 பிஞ்சு குழந்தைகள்! பதைபதைத்த கேரளா -
பனையூர் பாபுவின் மாஸ் மூவ்... அந்த தொகுதிதான் காரணமா? 7ம் தேதி திமுகவில் சர்ப்ரைஸ்.. ஆடிப்போன விசிக -
விஜய்யை இப்படியே விடக்கூடாது.. பாஜக பாணியை கையில் எடுக்கும் திமுக.. பெரிய மாற்றம் வரப்போகுது -
மம்தாவை கதறவிடும் முதல் முறை எம்எல்ஏ.. 60 எம்எல்ஏக்களை அபகரித்தது எப்படி? தி.காங்கிரஸ் பிளவு பின்னணி -
காங்கிரஸுக்கு ராஜ்யசபா சீட்.. அலேக்காக தப்பிக்கும் தவெக! பிளான் இதுதான்! -
அழுதபடி அலிசா அப்துல்லா புகார்.. ஒரே நாளில் திருச்சி சூர்யாவை தூக்கிய போலீஸ்! தலைமறைவான முக்தார்? -
பயங்கரமான ஆளுங்க விஜய்! காங்கிரஸுக்கு தான் சீட்டு.. ஆனா எம்பி எங்களுங்க! ராஜ்சபா சீட்டு யாருக்கு? -
துன்பத்திலும் ஒரு இன்பம்.. மத்திய அமைச்சராகும் நயினார்! தமிழக பாஜக புதிய தலைவர் இவரா? கலகல கமலாலயம்! -
ரூ.72 லட்சம் பணம் அக்கவுண்டில் ஏறியதும் ஊரைவிட்டே ‘எஸ்கேப்’.. மோசடி புகாரில் தவெக நிர்வாகி கைது! -
தவெக பெண் எம்எல்ஏவை அவமானப்படுத்திய சென்னை மேயர் பிரியா? குத்துவிளக்கேற்றுவதில் வெடித்த மோதல்! -
திருச்செந்தூர் முருகனின் விஸ்வரூப தரிசனம்! அடுத்தடுத்து முதல்வர்களான விஜய், டி.கே.சிவக்குமார்!












Click it and Unblock the Notifications