தசரா பண்டிகை திருவிழாக்கோலம் பூண்ட மைசூரு : கொரோனா பரிசோதனை அறிக்கை கட்டாயம் - வழிகாட்டு நெறிமுறை
வரலாற்று சிறப்புமிக்க தசரா விழா கொரோனா பரவல் காரணமாக கடந்த ஆண்டும் எளிமையாக நடந்தது. அது போல் நடப்பாண்டும் தசரா விழா எளிமையாக நடக்கிறது. அதன்படி தொடக்க விழாவில் 400 பேரும், ஜம்பு சவாரி ஊர்வலத்தில் 300 பேர் கலந்து கொள்ள அ
மைசூரு: மக்களை கொடுமைப்படுத்தி வந்த மகிஷாசூரனை சாமுண்டீஸ்வரி அம்மன் வதம் செய்த நாளே தசரா விழாவாக மைசூரு மக்களால் கொண்டாடப்படுவதாக வரலாறு கூறுகிறது. வரலாற்று சிறப்புமிக்க தசரா விழா கொரோனா பரவல் காரணமாக கடந்த ஆண்டும் எளிமையாக நடந்தது. அது போல் நடப்பாண்டும் தசரா விழா எளிமையாக நடக்கிறது. அதன்படி தொடக்க விழாவில் 400 பேரும், ஜம்பு சவாரி ஊர்வலத்தில் 300 பேரும் கலந்து கொள்ள அனுமதி வழங்கப்பட்டு உள்ளது.
கர்நாடகாவின் புகழ்பெற்ற மைசூரு தசரா திருவிழா இன்று தொடங்கி 15ஆம் தேதி வரை நடைபெற இருக்கிறது. இது 411-வது தசரா விழாவாகும். தசரா விழாவை தொடங்குவதையொட்டி மைசூரு மாநகர் திருவிழாக்கோலம் பூண்டுள்ளது. வீதிகள், அரசு கட்டிடங்கள், புராதன சின்னங்கள் அமைந்துள்ள பகுதிகளில் மின்னொளி அலங்காரம் செய்யப்பட்டுள்ளது.
தசரா தொடக்க விழா மைசூரு சாமுண்டிமலையில் உள்ள சாமுண்டீஸ்வரி அம்மன் கோவிலில் இன்று காலை நடைபெற்றது. முதல்வர் பசவராஜ் பொம்மை முன்னிலையில், முன்னாள் முதல்வர் எஸ்.எம்.கிருஷ்ணா, சாமுண்டீஸ்வரி அம்மனுக்கு சிறப்பு பூஜை செய்து மலர் தூவி தசரா விழாவை தொடங்கி வைத்தார். இதில் அமைச்சர்கள் பங்கேற்கின்றனர்.

கொ ரோனா வைரஸ் பரவலை தடுக்கும் நடவடிக்கையாக, மைசூரு தசரா விழாவையொட்டி புதிய வழிகாட்டுதலை கர்நாடக அரசு வெளியிட்டு உள்ளது. தசரா விழாவில் கலந்து கொள்ளும் அதிகாரிகள், கலைஞர்களுக்கு கொரோனா பரிசோதனை அறிக்கை கட்டாயம் என்று அரசு அறிவித்து உள்ளது.
கர்நாடக மாநிலத்தின் பாரம்பரியமிக்க மைசூரு தசரா விழா உலக பிரசித்தி பெற்றதாகும். மன்னர் காலத்தில் இருந்தே கொண்டாடப்படும் இந்த விழா வரலாற்று சிறப்பு மிக்கது. பத்து நாட்களும் கோலாகலமாக இந்த விழா கொண்டாடப்படும். இதையொட்டி மைசூரு அரண்மனையில் மன்னர் யதுவீர் இன்று முதல் தங்க சிம்மாசனத்தில் அமர்ந்து தனியார் தர்பார் நடத்துகிறார்.
மைசூரு மாகாணத்தை ஆண்ட மன்னர் கிருஷ்ண தேவராயர் போரில் எதிரிகளை வீழ்த்தியதை கொண்டாடும் வகையில் மண்டியா மாவட்டம் ஸ்ரீரங்கப்பட்டணாவில் தசரா விழா கொண்டாடப்பட்டது. அவரது மறைவுக்கு பின்னர் மைசூருவை ஆட்சி செய்த யது வம்சத்தை சேர்ந்த மன்னர்கள் தசரா விழாவை கொண்டாட தொடங்கினார்கள். இருப்பினும் நால்வடி கிருஷ்ணராஜ உடையார் ஆட்சி காலத்தில் தான் மைசூரு தசரா விழா உலகமே அறிந்துகொள்ளும் வகையில் கோலாகலமாக கொண்டாடினார். அவரது மறைவுக்கு பின்னர் ஜெயசாமராஜேந்திர உடையாரும் தசரா விழாவை பிரமாண்டமாக நடத்தி வந்தார். அவரது ஆட்சி காலத்துக்கு பிறகு 1972ஆம் ஆண்டில் இருந்து கர்நாடக அரசு சார்பில் தசரா விழா கோலாகலமாக கொண்டாடப்பட்டு வருகிறது.
மைசூரு தசரா விழாவுக்கு மற்றொரு வரலாறும் இருப்பதாக புராணங்கள் கூறுகிறது. சாமுண்டீஸ்வரி அம்மன், மக்களை கொடுமைப்படுத்தி வந்த மகிஷாசூரனை வதம் செய்த நாளே தசரா விழாவாக கொண்டாடப்படுவதாகவும் கூறப்படுகிறது. இன்று முதல் பத்து நாட்கள் நடைபெறும் தசரா விழாவின் விழாவின் சிகர நிகழ்ச்சியான ஜம்பு சவாரி ஊர்வலம் வருகிற 15ஆம் தேதி நடக்கிறது. அன்றைய தினம் மதியம் 2.45 மணியில் இருந்து 3.15 மணியளவில் ஜம்பு சவாரி ஊர்வலம் தொடங்கப்படும். இதில் அபிமன்யு யானை சாமுண்டீஸ்வரி அம்மன் வீற்றிருக்கும் 750 கிலோ தங்க அம்பாரியை சுமந்து செல்லும். அதையடுத்து மற்ற யானைகளும், கலைக்குழுவினரும் செல்ல உள்ளனர்.
அரசு வழிகாட்டுதல் நெறிமுறை வெளியீடு
இந்த நிலையில் மைசூரு தசரா விழா கொண்டாட்டம் தொடர்பாக கர்நாடக அரசு கொரோனா பரவலை தடுக்க பல்வேறு கட்டுப்பாடுகளை உள்ளடக்கி ஒரு வழிகாட்டுதலை வெளியிட்டுள்ளது. அந்த அறிக்கையில், மைசூரு தசரா விழாவில் கலந்து கொள்ளும் அதிகாரிகள் அனைவரும் ஆர்.டி.பி.சி.ஆர். முறையில் எடுக்கப்பட்ட கொரோனா நெகட்டிவ் சான்றிதழை கட்டாயம் வைத்திருக்க வேண்டும். கலைஞர்கள், பாதுகாப்பு பணியில் ஈடுபடும் போலீசார், ஊடகத்தினர் அனைவருக்கும் இந்த விதிமுறை பொருந்தும். இந்த பரிசோதனை 4ஆம் தேதிக்கு பிறகு எடுக்கப்பட்டு இருக்க வேண்டும். அத்துடன் குறைந்தபட்சம் ஒரு டோஸ் தடுப்பூசி ஆவது போட்டு இருக்க வேண்டும்.
கொரோனா பரிசோதனை மேற்கொள்வதில் கலைஞர்கள், கலாசார நிகழ்ச்சிகளில் பங்கேற்போருக்கு முன்னுரிமை அளிக்கப்படும். இந்த நிகழ்ச்சியை நடத்துகிறவர்கள் மற்றும் பங்கேற்பவர்கள் என அனைவரும் கட்டாயம் முகக்கவசம் அணிய வேண்டும். தனிமனித இடைவெளியை பின்பற்ற வேண்டும். சானிடைசர் கிருமிநாசினி கொண்டு அடிக்கடி கைகளை தூய்மைபடுத்த வேண்டும். இந்த தசரா விழா நிகழ்ச்சி கன்னட தொலைக்காட்சிகள், சமூகவலைத்தளங்களில் நேரடி ஒளிபரப்பு செய்யப்படும். கொரோனா பரவலை தடுக்கும் நோக்கத்தில் குறைந்த எண்ணிக்கையில் மட்டுமே பார்வையாளர்கள் அனுமதிக்கப்படுவார்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
தசரா விழாவை தொடங்குவதையொட்டி மைசூரு மாநகர் திருவிழாக்கோலம் பூண்டுள்ளது. வீதிகள், அரசு கட்டிடங்கள், புராதன சின்னங்கள் அமைந்துள்ள பகுதிகளில் மின்னொளி அலங்காரம் செய்யப்பட்டுள்ளது. பயங்கரவாதிகள் அச்சுறுத்தல் காரணமாக மைசூரு மாநகரில் 3 அடுக்கு பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது. மாவட்ட எல்லைகளில் போலீசார் தீவிர சோதனை மேற்கொண்டு வருகிறார்கள். கண்காணிப்பு கேமராக்கள் மூலமும் கண்காணிப்பு பணியை போலீசார் தீவிரப்படுத்தி உள்ளனர். அத்துடன் ட்ரோன் கேமராக்கள் உதவியுடனும் கண்காணிப்பு பணியை போலீசார் பலப்படுத்தி உள்ளனர்.
-
மம்தாவிற்காக எம்பி பதவியை ராஜினாமா செய்யும் யூசுப் பதான்? பேச்சுவார்த்தையில் சவுரவ் கங்குலி? பின்னணி -
எல்லாமே முக்கிய தலைகள் ஆச்சே.. விஜய் முன்னிலையில்.. மொத்தமாக தவெகவில் இணையும் அதிமுக தலைவர்கள்! -
திருவண்ணாமலை செய்யாறு வீடுகளில் மின்சார மீட்டர்கள் பழுதுக்கு அணில் காரணம்.. மின்சார வாரியம் பதில் -
கேட்கும்போதே நெஞ்சம் உறைகிறது.. சஹாரா பாலைவன மணலில் பழுதான லாரி. தாகத்துடன் அநியாயமாய் மாண்ட 49 பேர் -
விழுப்புரத்தில் திருமாவளவன் திறக்க இருந்த அம்பேத்கர் சிலை.. இரவோடு இரவாக அகற்றப்பட்டது ஏன்? -
சென்னை ரோட்டை கண்ணில் ஒத்திக்கலாம்.. பெங்களூர் நிலைமை படுமோசம்.. டிகே சிவகுமார் என்ன செய்வார்? -
"திமுக இல்லாதது கவலையளிக்கிறது.." ரொம்பவே வருத்தப்பட்டு பேசிய திருமாவளவன்.. என்ன மேட்டர்? -
வாண்டடா வண்டில ஏறிய செ.பா! ஹார்ட் டிஸ்க் திருட்டு என்றதும் பதற்றம் ஏன்? சிடிஆர் நிர்மல்குமார் கேள்வி -
விலகிய 113 ஒன்றிய செயலாளர்கள்.. தவெகவின் ஆபரேஷனால் மிரண்ட அறிவாலயம்! ஸ்டாலின் எடுத்த முக்கிய முடிவு -
"16 ஆண்டுகளுக்கு பின் தாய் வீட்டிற்கு.." வேல்முருகன் எமோஷ்னலாக சொல்ல.. சட்டென குறுக்கிட்ட அன்புமணி -
அதிமுக + திமுகவிற்கு ஷாக்.. 4 மாஜி அமைச்சர்கள் - 8 எம்எல்ஏக்கள் உள்பட 60 பேர் தவெகவில் ஐக்கியம் -
அன்னைக்கே சொன்னாரே டிடிவி தினகரன்! நெருங்கும் கிளைமாக்ஸ்? பாஜக ஸ்கெட்ச்? கொத்து கொத்தாக ஓடும் தலைகள்












Click it and Unblock the Notifications