நரகாசூர வதம் : கோவத்வ துவாதசி முதல் யம துவிதியை வரை 5 நாட்கள் கொண்டாடப்படும் தீபாவளி
ராவண வதம் முடிந்து வனவாசம் முடிந்து ராமர் சீதை லட்சுமணன் நாடு திரும்பிய நாளே தீபாவளியாக கொண்டாடப்படுகிறது என்று வட இந்தியாவில் கூறுகின்றனர்.
சென்னை: தீபாவளி பண்டிகை கொண்டாட பல காரணங்கள் கூறப்படுகிறது. நரகாசுரனை வதம் செய்த தினமே தீபாவளியாக கொண்டாடப்படுவதாக கூறுகின்றனர். அதே நேரத்தில் ராவண வதம் முடிந்து வனவாசம் முடிந்து ராமர் சீதை லட்சுமணன் நாடு திரும்பிய நாளே தீபாவளியாக கொண்டாடப்படுகிறது என்று வட இந்தியாவில் கூறுகின்றனர்.
நவம்பர் 1 ஆம் தேதி முதல் 6ஆம் தேதி வரை தீபாவளிப்பண்டிகை கொண்டாடப்பட வேண்டும் என்கிறது சாஸ்திரம். தீபாவளி ஒவ்வொரு ஊரிலும் ஒவ்வொரு வகையில் விமரிசையாக கொண்டாடப்படுகிறது. வடமாநிலங்களில் தீபாவளித் திருநாள் ஐந்து நாள் பண்டிகையாகக் கொண்டாடப்படுகிறது. கோவத்ச துவாதசி, தனத் திரயோதசி, லட்சுமி பூஜை, கோவர்த்தன பூஜை, காளி பூஜை, யம துவிதியை, மார்வாரிப் புத்தாண்டு, பஹு பீஜ் என தீபாவளியை ஒட்டிய ஒருவார காலமும் பண்டிகையாக பல மாநிலங்களில் பலவிதங்களில் கொண்டாடுகின்றனர்.
ஐப்பசி மாதம் அமாவாசைக்கு முதல் நாள் நரக சதுர்த்தி நாளில் நரகாசுரன் என்ற அசுரனை கிருஷ்ணர் வதம் செய்த நாளே தீபாவளியாக கொண்டாடப்படுகிறது என்று ஒரு பக்கம் கூறப்பட்டாலும் 14 ஆண்டுகள் வனவாசம் முடிந்து ராமர் நாடு திரும்பிய நாள் என்றும், லட்சுமி பூஜைக்கு உகந்த நாள் என்றும் கூறப்படுகிறது.

கோவத்ச துவாதசி
இன்றைய தினம் கோவத்ச துவாதசி கடைபிடிக்கப்படுகிறது. மாலை நேரத்தில் பசு, கன்றுக்கு வாழைப்பழம் கொடுத்து வழிபட குடும்பம் செழிக்கும். தீபாவளியின் முதல் நாளை 'தந்தேரஸ்'என்று அழைக்கிறார்கள். 'தந்தேரஸ்' அன்று நாம் செய்யப்படும் தானமானது பலமடங்கு பலனளிக்கும் என்பது வட மாநில மக்களின் நம்பிக்கை.

யமதீபம்
சனி பகவானும் யமனும் சகோதரர்கள். ஆயினும்,தம்முள் கருத்து வேறுபாடு உள்ளவர்கள். இருவரும் இறைவனை வழிபட்டுத் தகுந்த பதவியினைப் பெற்று பூலோகவாசிகளுக்கு அவரவர் செய்யும் பாவ,புண்ணியங்களுக்கு ஏற்ப பலன்களை அளிக்கிறார்கள். யமனும் சனியும் தீபாவளி அன்று மட்டும் தங்களை மகிழ்விக்கும் மக்களுக்கு நன்மைகள் செய்வார்கள் என்பது நம்பிக்கை.

முன்னோர்களுக்கு வழிபாடு
மகாளய பட்ச நாட்களில் ,தாங்கள் வசித்த ஊருக்கு தங்கள் சந்ததியினரை பார்க்க வரும் மறைந்த நம் முன்னோர்களுக்கு மகாளய பட்ச நாட்களிலும் மகாளய அமாவாசையிலும் தர்ப்பணம் செய்வது வழக்கத்தில் உள்ளது. பிதுர்லோகத்திலிருந்து தங்கள் ஊருக்கு வந்தவர்கள் உடனே திரும்பிச் செல்வதில்லை. தீபாவளி சமயத்தில்தான் தங்கள் உலகத்திற்குச் செல்வதாகச் சொல்லப்படுகிறது. அதனால் வடநாட்டில் வீட்டைச் சுற்றி விளக்குகள் ஏற்றி வைப்பது வழக்கமாக வைத்திருக்கிறார்கள். இந்த தன திரயோதசி நாளில் யம தீபம் என்ற விளக்கை ஏற்ற வேண்டும் என்றும் சாஸ்திரம் சொல்கிறது.

எமதர்மன் மகிழ்ச்சி
தீபாவளிக்கு முதல் நாள் திரயோதசியன்று மாலை நேரத்தில் யமதீபம் ஏற்றி, அந்த தீபத்தினை வீட்டின் உயரமான இடத்தில் ஏற்றுவார்கள். இதனால் முன்னோர்கள் மட்டுமல்ல, யமனும் மகிழ்ந்து அருளுவானாம். யமதீபம் ஏற்றி, எமதர்மராஜனை வணங்கினால், விபத்துகள், எதிர் பாராத மரணம் ஆகியவை ஏற்படாமல் ,ஆரோக்கியமாக வாழ யமன் அருள் புரிவார் என்பது தொன்று தொட்டு இருந்து வரும் நம்பிக்கை.

ராமர் நாடு திரும்பிய நாள்
ஒரு திரைப்படத்தில் தலை தீபாவளி பற்றிய பேச்சு வரும் அப்போது ராமரும் சீதையும் தலை தீபாவளியை அரண்மனையில் கொண்டாடினார்களா? அல்லது காட்டில் கொண்டாடினார்களா என்ற கேள்வி வரும் அதற்கு கிருஷ்ணா அவதாரத்தில்தான் நரகாசுர வதம் நிகழ்ந்தது. எனவே தலைதீபாவளியை ராமர் சீதை கொண்டாடியிருக்க மாட்டார்கள் என்று கதாநாயகி பதில் சொல்வார். ஆனால் தீபாவளி பண்டிகையை வாமன அவதாரம், ராம அவதாரம், கிருஷ்ண அவதாரத்துடன் இணைத்து புராணங்களில் கூறப்பட்டுள்ளதாக தெரிவிக்கின்றனர். 14 ஆண்டுகாலம் வனவாசம் சென்ற ராமன், சீதா, லட்சுமணன் ராவண வதம் முடிந்து நாடு திரும்பிய நாளில் தீபங்கள் ஏற்றி மக்கள் வரவேற்றனராம் இந்த நாளே தீபாவளித் திருநாள் என்கின்றனர்.

விக்ரமாதித்ய மன்னன்
சக்தியின் 21 நாள் விரதமான கேதாரகவுரி விரதம் முடிவுற்றதும் அந்த நாளன்று சிவன் சக்தியை தனது பாதியாக ஏற்றுக் கொண்டு "அர்த்தநாரீஸ்வரர்" ஆக உருவெடுத்ததால் தீபாவளி கொண்டாடப்படுவதாக ஸ்கந்த புராணத்தில் கூறப்படுகிறது. உஜ்ஜயினியை ஆண்ட மன்னன் விக்ரமாதித்தன் பட்டம் சூட்டிய நாள் தீபாவளியாக கொண்டாடப்பட்டதாக வரலாற்று ஆய்வாளர்கள் கூறியுள்ளனர்.

ஜெயின் சமூகத்தினர்
மகாவீரர் நிர்வாணம் அடைந்த தினத்தை நினைவு கூறும் வகையில் இத்தினத்தை சமணர்கள் கொண்டாடுகின்றனர். 1577ம் ஆண்டு நரக சதுர்த்தி தினத்தன்று பொற்கோவில் கட்டுமானப் பணிகள் துவங்கியதை சீக்கியர்கள் கொண்டாடுகின்றனர்.

நரகாசூரன்
வாமன அவதாரத்தின் போது கடலுக்கு அடியில் சிறை வைக்கப்பட்டிருந்த பூமாதேவியை மகா விஷ்ணு விடுவித்தார், அப்போது பிறந்தவனே நரகாசுரன் என்கின்றன புராணங்கள். கிருஷ்ணாவதாரத்தில் நரகாசுரனை கிருஷ்ணர் வதம் செய்தார் என்றும் இந்த வெற்றியை புத்தாடை அணிந்து தீபங்கள் ஏற்றி கொண்டாடுகின்றனர்.

பிரதோஷம் தனத்திரயோதசி
நவம்பர் 02ஆம் தேதி ஐப்பசி 16ஆம் தேதி பிரதோஷம் தனத்திரயோதசியாக கடைபிடிக்கப்படுகிறது. சிவ ஆலயங்களுக்கு சென்று வணங்கலாம்.பிரதோஷ காலத்தில் நரசிம்மரை வணங்கலாம். நவம்பர் 03ஆம் தேதி ஐப்பசி 17ஆம் தேதி புதன்கிழமை இரவு 11 மணி முதல் 12.30 வரை லிங்கோத்பவர் காலத்தில் சிவ பூஜை செய்யலாம்.

தீபாவாளி நல்லெண்ணெய் குளியல்
இந்த ஆண்டு நவம்பர் 4 ஆம் தேதி தீபாவளி பண்டிகையாக கொண்டாடப்படுகிறது. 4ஆம் தேதி அமாவாசை வருவதால் சிலரது வீடுகளில் நவம்பர் 3ஆம் தேதியே எண்ணெய் தேய்த்து குளித்து தீபாவாளி கொண்டாடுகின்றனர். அதிகாலையில் சூரியன் உதயம் ஆவதற்கு முன்பே எழுந்து நல்ல எண்ணெய் எனப்படும் எள்ளு எண்ணையை உடல் முழுதும் தேய்த்து வெந்நீரில் குளிக்க வேண்டும். அதில் நாயுருவி இலை சுரைக்காய் கோடி இலை போன்றவை சேர்த்து கொள்ளலாம். இதனால் லட்சுமி கடாக்ஷம் உண்டாகும். பொதுவாக சூரியன் உதயத்திற்கு முன்பு எண்ணெய் தேய்த்து குளித்து வர கூடாது என்பது சாஸ்திரம். ஆனால் இந்த நரக சதுர்தசியில் மட்டும் செய்யலாம். இதனால் ஆரோக்கியம் உண்டாகும். உடலில் உள்ள சூடு குறையும். அதனால் வியாதிகள் நீங்கும். செல்வ வளம் பெருகும். குளித்து முடித்த உடன் சூரிய உதயத்தில் கிழக்கு நோக்கி இருந்து கொண்டு யமனுக்கும் சித்திர குப்தனுக்கும் யம தீர்த்தம் என தர்ப்பணம் செய்ய வேண்டும். இதனை தாய் தந்தை உள்ளவர் இல்லாதவர் என அனைவரும் செய்யலாம். ஜோதிட ரீதியாக இந்த தீபாவளி பண்டிகை திதியை அடிப்படையாக கொண்டு உள்ளது. திதிக்கு சூரிய சந்திரர்கள் மட்டுமே முக்கியம். சூரியனுக்கும் சந்திரனுக்கும் உள்ள இடைவெளி தொலைவை திதி என்கிறோம். சதுர்தசியில் குளித்து விட்டு யம தர்ப்பணம் செய்து விட்டு பின்னர் குடும்பத்தோடு தெய்வ பூஜைகள் செய்து பின்னர் மாலையில் தீபம் வைக்க வேண்டும். மத்தாப்பு போன்ற வெளிச்சம் தரும் வெடிகளை சந்தோஷமாக வைக்க வேண்டும். லட்சுமி குபேர பூஜை செய்யலாம்.

அமாவாசையில் லட்சுமி குபேர பூஜை
அமாவாசை நாளில் 5-11-2021 வெள்ளிக்கிழமை அதிகாலையில் லட்சுமி குபேர பூஜை செய்ய வேண்டும். லட்சுமி குபேர படம் அல்லது கலசம் வைத்து 21 எண்ணிக்கையில் அரளி மொட்டு அரளி இலை அப்பம் பலகாரம் வைத்து தன்னை நன்கு அலங்காரம் செய்து கொண்டு வீட்டில் உள்ள நகைகளை பூஜையில் வைத்து அலங்காரம் செய்து வழிபட வேண்டும். சோடசக்கலை நேரம் உள்ள அதிகாலை 2.30 மணி முதல் 4.37 மணிவரை மும்மூர்த்திகளை நினைத்து தியானம் செய்யலாம். மும்மூர்த்திகளின் அருள் கிடைக்கும்.

யம துவிதியை
அமாவாசை முடிந்து இரண்டாம் நாள் நவம்பர் 6 ஆம் தேதி சனிக்கிழமை துவிதியை யம துவிதியை பண்டிகையாகக் கொண்டாடப்படுகிறது. சகோதரிகள் அழைப்பை ஏற்று சகோதரர்கள் அவர்களின் வீடுகளுக்குச் சென்று கையாலே தலை வாழை இலையில் விருந்து உணவு கொடுக்க வேண்டும். இன்று சகோதரர்கள் சகோதரி வீட்டில் சாப்பிட்டு விட்டு பரிசு பொருட்களை பரிமாறி கொண்டு சந்தோஷமாக இந்த தீபாவளி கொண்டாட வேண்டும். எனவேதான் இந்த 5 நாட்கள் தீபாவளி பண்டிகை சாஸ்திரம் கூறுகிறது.
-
தமிழ் புத்தாண்டு பலன்: கன்னி ராசிக்கு 100 மார்க்.. ரேஞ்சே மாறப்போகுது.. பொற்காலம் ஆரம்பம் -
கோவை வடக்கு, மயிலாப்பூர்.. பாஜக போட்டியிடும் 27 தொகுதிகள் எவை? எடப்பாடி பழனிசாமி வெளியிட்ட அறிவிப்பு -
பிள்ளையை கிள்ளி விட்ட இஸ்ரேல்.. தொட்டிலை ஆட்டும் அமெரிக்கா! வெறி கொண்டு அடிக்கும் ஈரான்.. குண்டு மழை -
உளவுத்துறை சொன்னது என்ன? 155 சீட் பின்னணியில் அமித்ஷா தந்த கிரீன் சிக்னல்! எடப்பாடி முகம் பிரகாசம் -
3 அமைச்சர்களை எதிர்க்கும் தமாக! அதிமுக – பாஜக வழங்கிய தொகுதியை கவனிச்சீங்களா.. 5 தொகுதியும் கடினம் -
கரண்ட் பில் இலவசம்? இனி கட்ட வேண்டாமா? மத்திய அரசு ₹78,000 மானியம்! உங்க வீட்டிற்கு எப்படி வாங்குவது -
பிடுங்கப்படும் டிரம்பின் பவர்! அதிபர் பதவியிலேயே இருந்தாலும் அதிகாரம் இருக்காது.. நிலைமை மோசம்! -
நல்ல காலம் பொறக்குது.. தங்கம், வெள்ளியை முடிஞ்ச அளவு வாங்குங்க! ‘கோல்டுமேன்’ அடுக்கும் காரணங்கள்! -
மருமகள் உள்ளே, சீனியர் வெளியே? 55 கால சாம்ராஜ்ஜியத்திற்கு செக்! காட்பாடி திருப்பத்தின் பின்னணி என்ன -
இரட்டை இலையை விட்டுவிட்டு.. தாமரைக்கு தாவும் கூட்டணி கட்சிகள்! எங்கேயோ இடிக்குதே! -
ஈரானை சுத்துப்போடும் ‘பாராசூட் அட்டாக்’ டீம்.. டிரம்ப் பெரிய பிளான்.. போர் இப்போதைக்கு முடியாது? -
10 சவரன் கையில், 8 சவரன் பில்லில்! பழைய நகையை மாற்றினால் நடக்கும் ரகசியம்.. ஏமாறாமல் இருக்க இதோ வழி












Click it and Unblock the Notifications