For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

நவராத்திரி.. புதன் வக்ர நிவர்த்தி..உங்களுக்கு பத்ர யோகம் இருக்கா? பேசுவதில் நீங்கள் கில்லிதான்!

Google Oneindia Tamil News

சென்னை: கோடி கோடியாக செல்வம் இருந்தாலும் கல்விச்செல்வம் இருந்தால் அதன் மதிப்பே தனிதான். அறிவால் எதையும் சாதிக்கலாம். அரசியல் தலைவர்களில் சிலர் பேசி பேசியே ஆட்சியை பிடித்தவர்கள் இருக்கிறார்கள். அவர்கள் சரஸ்வதி யோகமும் பத்திர யோகமும் கொண்டவர்களாக இருப்பார்கள். நல்ல அறிவாற்றல், சிறப்பான ஞாபக சக்தி, புக்தி கூர்மை அனைத்தும் அமையும். பிறந்த ஜாதகத்தில் கிரகங்கள் எப்படி இருந்தால் கல்வி செல்வம் அதிகரிக்கும், பத்ர யோகம் கிடைக்கும் என்று பார்க்கலாம்.

வித்யாகாரகன்,கல்விகாரகன், அறிவுகாரகன் எனப் போற்றப்படும் புதன் பகவான் ஒருவர் ஜாதகத்தில் ஆட்சியோ, உச்சமோ பெற்று ஜென்ம லக்னத்திற்கோ சந்திரனுக்கோ கேந்திர ஸ்தானங்களில் அமைந்திருந்தால் பத்திர யோகம் உண்டாகிறது. பத்திர யோகம் அமைந்துள்ள ஜாதகருக்கு நல்ல அறிவாற்றல், சிறப்பான ஞாபக சக்தி, புத்தி கூர்மை கிடைக்கும்.

இதுநாள் வரை வக்ர நிலையில் இருந்த புதன் பகவான் வக்ர நிவர்த்தி அடையப்போகிறார். உச்சம் பெற்று அமர்ந்திருக்கும் புதன் சில ராசிக்காரர்களுக்கு பத்ர யோகத்தை தரப்போகிறார். சரஸ்வதி பூஜை கொண்டாடப்படும் இந்த நேரத்தில் உங்களுக்கு எப்படி இருக்கிறது என்று பார்க்கலாம்.

அதிரடி விலை குறைப்பு.. வணிக பயன்பாட்டு சிலிண்டர் விலை ரூ.36 சரிந்தது.. சென்னையில் எவ்வளவு தெரியுமா? அதிரடி விலை குறைப்பு.. வணிக பயன்பாட்டு சிலிண்டர் விலை ரூ.36 சரிந்தது.. சென்னையில் எவ்வளவு தெரியுமா?

பத்ர யோகம்

பத்ர யோகம்

வித்யாகாரகன்,கல்விகாரகன், அறிவுகாரகன் எனப் போற்றப்படும் புதன் பகவான் ஒருவர் ஜாதகத்தில் ஆட்சியோ, உச்சமோ பெற்று ஜென்ம லக்னத்திற்கோ சந்திரனுக்கோ கேந்திர ஸ்தானங்களில் அமைந்திருந்தால் பத்திர யோகம் உண்டாகிறது. பத்திர யோகம் அமைந்துள்ள ஜாதகருக்கு நல்ல அறிவாற்றல், சிறப்பான ஞாபக சக்தி, புத்தி கூர்மை யாவும் அமையும். பத்திர யோகம் உள்ளவர்கள் கற்றவர்களின் சபையில் ஒரு முக்கியமான பங்கு வகிப்பவராக இருப்பார். பலருக்கு ஆலோசனை வழங்கும் திறன் இருக்கும்.

பேச்சில் திறமைசாலிகள்

பேச்சில் திறமைசாலிகள்

பத்திர யோகம் அமையப்பெற்றவர்கள் தன்னுடைய பேச்சாற்றலால் அனைவரையும் கவர்ந்து விடுவார், கல்வி அறிவு மிகச் சிறப்பாக இருக்கும், கணிதத்தில் மேதையாக இருப்பார். பேச்சால், வாக்கால் முன்னேற்றம் ஏற்படும்.
வக்கீல் பணியில் திறமைசாலியாக இருப்பார். சமுதாயத்தில் மற்றவர்களால் மதிக்கப்படக்கூடிய அளவிற்கு உன்னதமான நிலை உண்டாகும். சகல கலைகளையும் கற்று தேறக்கூடிய ஆற்றல் உண்டாகும். வாக்கு சாதுர்யமும், கற்பனை திறனும் உண்டாகும் என்பதால் கலைத்துறையில் பெரிய இடத்தை பிடிக்கும் வாய்ப்பு அமையும்.

 புத ஆதித்ய யோகம்

புத ஆதித்ய யோகம்

ஒருவரது ஜாதகத்தில் சூரியனும், புதனும் இணைந்து அமையப் பெறுவது புதாதித்ய யோகம். இந்த யோகம் அமையப் பெற்றவர்களுக்கு கல்வியில் ஈடுபாடு, பல கலைகளை கற்றுத் தேறும் வாய்ப்பு, நல்ல அறிவாற்றல், பேச்சாற்றல், எழுத்தாற்றல் யாவும் உண்டாகும். அரசு வழியில் அனுகூலம், வியாபாரத்தில் அதிக ஈடுபாடு உண்டாகும். புதன் சூரியனுக்கு பின் அஸ்தங்கமாகாமல் ஏற்படும் புத ஆதித்ய யோகமே சிறந்த பலனளிக்கிறது. மேலும் சூரியனை கடந்து புதன் நிற்கும்போது அது சுபவெசி யோகமாகவும் ஆகிறது.

சரஸ்வதி யோகம்

சரஸ்வதி யோகம்

பிறந்த ஜாதகத்தில் தனகாரகன் குரு களத்திரகாரகன் சுக்ரன் வித்யாகாரகன் புதன் ஆகிய மூவரும் லக்ன கேந்திரம், திரிகோணம் அல்லது இரண்டாமிடம் ஆகிய இடங்களில் இருந்தால் சரஸ்வதி யோகம் என பாரம்பரிய ஜோதிட நூல்கள் போற்றுகின்றன. இந்த யோகம் பெற்றவர்கள் ஆயகலைகள் 64ல் குறைந்தது 6,7 கலைகளிலாவது பாண்டித்தியம் பெற்று இருப்பார்கள்.

கல்வி திறமை பளிச்சிடும்

கல்வி திறமை பளிச்சிடும்

சுக்கிரன், குரு, புதன் ஆகிய கிரகங்கள் கேந்திர திரிகோணத்திலோ அல்லது 2ம் வீட்டிலோ அமைந்து, குருபகவானும் ஆட்சி அல்லது உச்சம் பெற்றோ நட்பு வீட்டிலோ அமையப் பெற்றால், சரஸ்வதி யோகம் உண்டாகிறது. பெயரிலேயே சரஸ்வதியிருப்பதால் இந்த யோகத்தால் நல்ல கல்வியாற்றல் தேவைக்கேற்ற செல்வம், சமுதாயத்தில் ஓர் கௌரவமான நிலை யாவும் உண்டாகும்.

சரஸ்வதியை வணங்குவோம்

சரஸ்வதியை வணங்குவோம்

ஒருவரின் ஜாதகத்தில் சந்திரனுக்கு கேந்திரத்தில் புதன் இருந்தால் வித்யா யோகம். வித்தை, கல்வி, புகழ் கிடைக்கும். பிறந்த ஜாதகத்தில் 1, 2, 4, 5, 9 ஆகிய வீடுகள், அவற்றின் அதிபதிகள் பலம் பெறுவது முதல்தர கல்வி யோகமாகும். இந்த யோகம் அமையப் பெற்றவர்களுக்கு நல்ல அறிவாற்றல், பேச்சாற்றல், எழுத்தாற்றல் யாவும் உண்டாகும். அரசு வழியில் அனுகூலம், வியாபாரத்தில் அதிக ஈடுபாடு உண்டாகும். இந்த சரஸ்வதி பூஜை கொண்டாடப்படும் நாளில் கல்வி கடவுளான சரஸ்வதியை வணங்கி சரஸ்வதி யோகத்தை பெற்று சிறப்பாக வாழ்வோம்.

English summary
Buthan Vakara nivarthi Saraswathi Poojai: Saraswathi yogam and Pathra yogam Here you will find information about the rare Saraswati Yoga and its benefits. Saraswati Puja will celebrate on October 4th 2022worshipers of Mother Saraswati get education, wisdom and prosperity and success.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X