செல்வ வளம் பெருகும் நவராத்திரி பண்டிகை நாடு முழுவதும் கொண்டாட்டம் - கோவில்களில் அம்மன் கொலு

நவராத்திரியின் ஒன்பது நாட்களும்; ஒன்பது விதமாக அம்பிகையை பூஜித்து வழிபட வேண்டும். இதனால், நம் வாழ்க்கை இன்னும் அழகாகும், நலம் பெறும் என்பதே இவ்விழாவின் சிறப்பம்சமாகும்.

Subscribe to Oneindia Tamil

சென்னை: நாடு முழுவதும் நவராத்திரி பண்டிகை கோலாகலமாகத் தொடங்கியுள்ளது. சிவனை வழிபடத் தகுந்த ஒரு ராத்திரி சிவராத்திரி. சக்தியை வழிபடத் தகுந்த ஒன்பது ராத்திரி நவராத்திரி. நவம் என்பது ஒன்பது. நவராத்திரி என்பது விரமிருந்து வீட்டில் பத்து நாட்கள் கொண்டாடப்படுகிறது. இதனால் இந்த விழா வீடு என்ற கோயிலுக்கு ஒரு'பிரம்மோற்சவம்' என்றும் கூறப்படுகிறது. நவராத்திரி பூஜை என்பது ஒன்பது நாட்கள் இரவில் செய்யக்கூடிய பூஜையாகும்.

புரட்டாசி அமாவாசைக்கு மறுநாள் இருந்துதான் நவராத்திரி கொண்டாடப்படுகிறது. இந்த நவராத்திரியில் மட்டுமே கொலு வைக்கிறார்கள். இந்த வருடம் நேற்று முதல் நவராத்திரி பண்டிகை ஆலயங்களில் தொடங்கியுள்ளது. வரும் 15ஆம் தேதி வரை நவராத்திரி கொண்டாடப்படுகிறது.

ஆனி மாதம் அமாவசைக்கு அடுத்து வரும் பிரதமை முதல் ஒன்பது நாட்கள் வாராஹி நவராத்திரி என்று அழைக்கப்படுகிறது. புரட்டாசி மாதம் அமாவசைக்கு அடுத்து வரும் பிரதமை முதல் ஒன்பது நாட்கள் சாரதா நவராத்திரி என்று அழைக்கப்படுகிறது. தை மாதம் அமாவசைக்கு அடுத்து வரும் பிரதமை முதல் ஒன்பது நாட்கள் சியாமளா நவராத்திரி என்று அழைக்கப்படுகிறது. பங்குனி மாதம் அமாவசைக்கு அடுத்து வரும் பிரதமை முதல் ஒன்பது நாட்கள் வசந்த நவராத்திரி என்று அழைக்கப்படுகிறது.

 நவராத்திரி உற்சவம்

நவராத்திரி உற்சவம்

புரட்டாசி மாதம் சாரதா நவராத்திரி விழாதான் இந்தியாவில் எல்லா மாநிலங்களிலும் கொண்டாடப்படுகிறது. வசந்த நவராத்திரி மேற்கு வங்காளம் குஜராத் போன்ற சில மாநிலங்களிலும் வாராஹி நவராத்திரியும் சியாமளா நவராத்திரியும் சில ஊர்களிலும் கோயில்களிலும் கொண்டாடப்படுகிறது. நவராத்திரி நாட்களில் இரவு ஏழு மணி முதல் ஒன்பதரை மணி வரை தேவி வழிபாடு செய்ய உகந்த நேரமாகும். சோழர் காலத்தில் நவராத்திரி திருவிழா அரசு விழாவாகக் கொண்டாடப்பட்டது.நவராத்திரி நாட்களில் பெண்கள் கன்யா பூஜை செய்வதால் சகல செல்வங்களையும் பெறலாம். விஜயதசமி தினத்தன்று பெருமாள் கோவில்களில் வன்னி மரக்கிளையை வைத்து அதில் பெருமாளை எழுந்தருளச் செய்து பூஜை நடத்துவார்கள். இந்த வழிபாட்டில் கலந்து கொண்டால் கிரக தோஷங்கள் விலகி ஓடி விடும்.

நவராத்திரியில் செய்யக்கூடாதவை

நவராத்திரியில் செய்யக்கூடாதவை

நவராத்திரி நாட்களில் வீட்டில் கோலமிடுவதற்க்கு சுண்ணாம்பு மாவை பயன்படுத்தக்கூடாது அரிசி மாவைப் பயன்படுத்திதான் கோலமிட வேண்டும். இவ்வாறு செய்வதால் குடும்ப ஒற்றுமையும், செல்வமும் வளரும். சுண்ணாம்பு மாவு பயன்படுத்தினாலோ, எதிர்மறையான விளைவுகளே உருவாகும் என்பது ஐதீகம். நவராத்திரி கோலத்தை செம்மண் கலந்து போட்டால் அம்பாள் மனமகிழ்ந்து வருவார். நவராத்திரி நாட்களில் அம்பாள் ஊசி மேல் அமர்ந்து தவம் செய்வதாக சொல்வார்கள். எனவேதான் இந்த நாட்களில் நம் வீட்டில் கிழிந்த துணிகளைத் தைக்கக் கூடாது. முடிந்தவரை ஊசியைப் பயன்படுத்தாமல் இருப்பது நல்லது என்கின்றனர்.

ஐஸ்வர்யம் பெருகும்

ஐஸ்வர்யம் பெருகும்

நவராத்திரி ஒன்பது நாட்களும் வாசலில் மாவிலை கட்டி பூஜை செய்தால் ஐஸ்வர்யம் உண்டாகும். கொலு வைத்திருப் பவர்கள் அதன் முன் நவக்கிரக கோலம் போட்டால் அம்பாள் அனுக்கிரகமும், நவக்கிரகப் பலன்களும்கிடைக்கும்.
தினந்தோறும் நவராத்திரி பூஜையின் நிறைவாக, பலவிதமான மங்கலப் பொருட்களை ஏழைகளுக்கு தானமாக அளிக்க வேண்டும். தனித்து தானம் செய்வதை விட, சத்சங்கமாகப் பலரும் ஒன்று சேர்ந்து, மங்கலப் பொருட்களை மிகப் பெரிய அளவில் தானமாக அளிப்பதே சிறப்பானது. தான தர்மங்கள்தான் நவராத்திரி பூஜைகளை நி

ஒன்பது நாட்களும் கொண்டாட்டம்

ஒன்பது நாட்களும் கொண்டாட்டம்

நவராத்திரியின் ஒன்பது நாட்களும்; ஒன்பது விதமாக அம்பிகையை பூஜித்து வழிபட வேண்டும். இதனால், நம் வாழ்க்கை இன்னும் அழகாகும், நலம் பெறும் என்பதே இவ்விழாவின் சிறப்பம்சமாகும் ஒன்பது மலர்கள், ஒன்பது பழங்கள், ஒன்பது தானியங்கள், ஒன்பது பிரசாதங்கள், ஒன்பது விதமான அலங்காரங்கள், என ஒன்பது விதமான நிவேதனங்களால் முப்பெருந்தேவியரையும் பூஜித்து வழிபடுவது நவராத்திரி விழாவின் சிறப்பம்சமாகும். இவற்றுடன், கோலங்கள், பொட்டுக்கள், திரவியங்கள், தானங்கள், மந்திரங்கள், வாத்தியங்கள், பெயர்கள் என ஒவ்வொன்றும் ஒன்பது விதமாக அலங்கரிக்கப்படுகிறது.

திருமணம் கைகூடும்

திருமணம் கைகூடும்

நவராத்திரி ஒன்பது நாட்களில் வரும் வெள்ளிக் கிழமையன்று ஐந்து சுமங்கலி பெண்களுக்கு அன்னதானம் செய்து புடவை மற்றும் தாம்பூலம் கொடுத்து ஆசி பெற்றால் திருமணம் ஆகாதவர்களுக்கு உடனடியாக திருமணம் கைகூடும். இந்த நாட்களில் 'ஓம் ஸ்ரீ லலிதா தேவியே நம:' என்ற மந்திரத்தை 108 தடவை சொன்னாலே போதும். உரிய பலன் கிடைக்கும். நவராத்திரி ஒன்பது நாட்களில் வரும் திங்கட்கிழமையன்று லலிதாம்பிகையின் அவதார தினமாக கொண்டாடப்படுகிறது. அன்று ஒன்பது சிறுமிகளுக்கு பட்டுப்பாவாடை தானம் செய்தால் நினைத்தது நடக்கும். நவராத்திரி ஒன்பது நாட்களும் சர்க்கரைப் பொங்கல், உளுந்து வடை, நைவேத்தியம் செய்தால் கூடுதல் பலன்கள் கிடைக்கும்.

 நவராத்திரி துர்கா பூஜை

நவராத்திரி துர்கா பூஜை

இந்த ஒன்பது நாள் நவராத்திரியை வட மாநிலங்களில் துர்கா பூஜை என்ற பெயரில் கொண்டாடுகிறார்கள். மேலும், நவராத்திரியில் ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு விதமாக அம்பிகையை அலங்கரித்து வழிபடுவது நமது மரபாக இருக்கிறது.அனைத்து நவராத்திரி விழாக்களும் இரவு நேரங்களில் மட்டுமே பூஜை செய்யப்படும். இந்த பூஜைகள், தேவர்கள் செய்யப்படுவதாக கருதப்பட்டு, இரவில் நாவராத்திரியை வழிபடுகிறார்கள். மறுநாள் விஐயதசமி அன்றுதான், பெரும்பாலனவர்கள் தங்களது குழந்தைகளுக்கு புதிய கல்வி கற்பிப்பதைத் முறையாக தொடங்குவார்கள்.

ராமர் கொண்டாடினார்

ராமர் கொண்டாடினார்

நவராத்திரி பண்டிகையை முதன் முதலில் ராமர்தான் கொண்டாடியதாக புராணங்களில் குறிப்பிடப்பட்டுள்ளது. ராமபிரான் நவராத்திரி விரதத்தை கடைபிடித்த பிறகுதான் அவருக்குச் சீதை இருக்குமிடம் தெரிந்தது என்று தேவி பாகவதம் சொல்கிறது. விசுவாமித்திரர், காளிதாசர், அபிராமி பட்டர், பிரம்மா, வனவாசத்தில் பாண்டவர்கள் ஆகியோர் நவராத்திரி பூஜைகள் செய்து அம்பிகையின் அருளுக்குப் பாத்திரமானார்கள் என்று புராணங்கள் சொல்கின்றன.

முப்பெரும் தேவியர்

முப்பெரும் தேவியர்

நவராத்திரி பண்டிகை நாட்களில் அம்பிகையை 3 விதமாக வழிபடுகிறோம். நவராத்திரி பூஜை மட்டும் ஏன் துர்கா, லட்சுமி, சரஸ்வதி என வணங்குகின்றனர் என்ற கேள்வி எழுவது இயல்பு. கலைமகளுக்குத்தானே முதல் பூஜை செய்யவேண்டும். ஏன் இங்கே அலைமகளுக்கு முதல் பூஜை என்ற கேள்வி நியாயப்படி எழுவது இயல்பு. சிருஷ்டி, வரிசைப்படி பார்த்தால் முறையே சரஸ்வதி, லட்சுமி, துர்கை என்றுதான் வரும். ஆனால் நவராத்திரியின்போது மட்டும் ஏன் இந்த முறை மாற்றமடைந்து, துர்கா, லட்சுமி, சரஸ்வதி என்று வருகிறது என்ற கேள்வி எழாமல் இல்லை.

துர்கா வழிபாடு

துர்கா வழிபாடு

துர்க்கையே முதல் மகளாக இருப்பதால், நவராத்திரியின் முதல் மூன்று நாட்களும் துர்க்கை இடம் பெற்று நம் துயர் துடைக்கிறாள். நவராத்திரியின்போது துர்க்கையை முதலில் பூஜிக்கிறோம் என்பதுதான் காரணம். ராத்திரிக்கு அதிதேவதை துர்க்கை. அகத்தையும், புறத்தையும் அழகுப்படுத்தித் தூய்மைப்படுத்துவதற்காக துர்க்கை முதலில் வருகிறாள். 9 நாட்களிலும் அன்னையை வழிபடும் முறையை அறிந்து கொள்வோம்.

முதல்நாள் விரதம்

முதல்நாள் விரதம்

முதல்நாளன்று துர்க்கா தேவி மகேஸ்வரி ரூபாமாக திகழ்கிறாள். உமா மகேஸ்வரி உமா பிரணவ நாமம். பிரணவத்தின் பொருள். நமக்கும் ஏற்படும் பிரச்சினைகளை அழிப்பவள் அம்பிகை. மகேஸ்வரனின் மனைவி. உமா மகேஸ்வரி. துர்க்கை அழிக்கும் சக்தி கொண்டவள் நம் முடைய உள்ளத்தில் ஏற்படும் கோபத்தை கட்டுப்படுத்தக்கூடியவள். வீரத்தின் சொரூபமாக விளங்குபவள். அம்பிகையை வழிபடுவதன் மூலம் தீமையை அழித்து நன்மையை அளிப்பவள். துர்க்கை அழிக்கும் சக்தி கொண்டவள் நம் முடைய உள்ளத்தில் ஏற்படும் கோபத்தை கட்டுப்படுத்தக்கூடியவள். வீரத்தின் சொரூபமாக விளங்குபவள்.

செல்வ வளம் பெருகும்

செல்வ வளம் பெருகும்

உமா மகேஸ்வரியை வழிபடுவதன் மூலம் வறுமை நீங்கி வாழ்வு செழிக்கும். வாழ்க்கையில் செல்வ வளம் பெருகும். இன்றைக்கு உங்களுக்கு கிடைக்கும் மலர்கள், நைவேத்தியம் கொண்டு பூஜை செய்யலாம். அம்பிகையின் நாமங்களை சொல்லுங்கள். துர்கைக்கு உரிய பூஜைகளை செய்யலாம். தாம்பூலம், மஞ்சள் குங்குமம் கொடுக்கலாம். கொலு வைக்காதவர்கள் வீட்டில் உள்ள பூஜை அறையில் அம்பிகையை 9 நாட்களும் வழிபடலாம். வறுமை நீங்கி செல்வ வளம் பெறுகும்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+