ராகு கேது பெயர்ச்சி 2022 தமிழ் : ரிஷப ராசிக்காரர்களுக்கு அதிர்ஷ்ட காலம் ஆரம்பம்
ராகு கேது பெயர்ச்சியால் ரிஷப ராசிக்காரர்களுக்கு என்னென்ன பலன்கள் கிடைக்கும் என்ன பரிகாரம் செய்யலாம் என்று பார்க்கலாம்.
சென்னை: ராகு கேது பெயர்ச்சி மார்ச் 21ஆம் தேதி நிகழப்போகிறது. ரிஷப ராசியில் உள்ள ராகு மேஷ ராசிக்கும் விருச்சிக ராசியில் உள்ள கேது துலாம் ராசிக்கும் இடப்பெயர்ச்சி ஆகின்றனர். இரண்டு கிரகங்களும் நிழல் கிரகங்கள் என்பதால் எதிர்திசையில் சுழலும். சொந்த வீடு இல்லை என்பதால் எந்த கிரகத்தில் வீட்டில் அமர்கின்றனவோ அந்த கிரகத்தைப் போல செயல்பட்டு பலனைத் தரப்போகின்றனர். ராகு கேது பெயர்ச்சியால் ரிஷப ராசிக்காரர்களுக்கு என்னென்ன பலன்கள் கிடைக்கும் என்ன பரிகாரம் செய்யலாம் என்று பார்க்கலாம்.
மேஷ ராசியில் அமரும் ராகு செவ்வாயைப் போலவும், துலாம் ராசியில் அமரும் கேது சுக்கிரனைப் போலவும் செயல்பட உள்ளனர். 21.3.2022 முதல் 8.10.2023 வரை உள்ள காலகட்டங்களில் ராகுவும், கேதுவும் இணைந்து சில ராசிக்காரர்களுக்கு நன்மைகளையும் சில ராசிக்காரர்களுக்கு சுமாரான பலன்களையும் சில ராசிக்காரர்களுக்கு பாதிப்பையும் தருவார்கள்.
ரிஷப ராசிக்காரர்களுக்கு ராகு ஜென்ம ராசியில் இருந்து இடப்பெயர்ச்சியாகி 12ஆம் வீட்டில் அமர்கிறார். ஏழாம் வீட்டில் இருந்து கேது இடப்பெயர்ச்சியாகி ஆறாம் வீட்டில் அமர்கிறார். இந்த கிரகப்பெயர்ச்சியால் நோய்கள் நீங்கி ஆரோக்கியம் அதிகரிக்கும். மனதில் இருந்த பாரங்கள் நீங்கி நிம்மதியும் சந்தோஷமும் பிறக்கும். பயமும் பதற்றமும் நீங்கும் தைரியமும் தன்னம்பிக்கையும் அதிகரிக்கும்.

குடும்பத்தில் உற்சாகம்
ராகு முதலில் சூரியனின் நட்சத்திரமான கார்த்திகை நட்சத்திரம் 1ஆம் பாதத்தில் இரண்டு மாதங்கள் பயணம் செய்யும் போது குடும்பத்தில் இருந்த பிரச்சினைகள் முடிவுக்கு வரும். கணவன் மனைவி இடையே இருந்த பிணக்குகள் நீங்கும். திருமண சுபகாரியங்கள் நடைபெறும், வீடு கட்டுபவர்களுக்கு கிரகப்பிரவேசம் நடைபெறும். அம்மாவின் உடல் ஆரோக்கியம் நன்றாக இருக்கும் ஆலய தரிசனம் செல்வீர்கள். சொத்து பிரச்சினைகள் சுமூகமாக முடிவுக்கு வரும். செய்யும் தொழிலில் லாபம் அதிகரிக்கும். உங்கள் வார்த்தைகளுக்கு மதிப்பு மரியாதை கூடும்.

பணவரவு அதிகரிக்கும்
மே மாதம் முதல் ராகு பகவான் சுக்கிரனின் நட்சத்திரமான பரணியில் பயணம் செய்வார். 9 மாத காலங்கள் பயணம் செய்வார் ராகு பகவான் இந்த பயணத்தின் போது உங்களுக்கு அபரிமிதமான பணவரவு அதிகரிக்கும். சுறுசுறுப்பாக இருப்பீர்கள். தடைகள் நீங்கி சுபகாரியங்கள் நடைபெறும். திருமணம் விசயமாக பேசி முடிவு செய்யலாம். புத்திரபாக்கியம் கிடைக்க வாய்ப்பு உள்ளது. பெண்களுக்கு பொன் பொருள் சேர்க்கை ஏற்படும். அலுவலகத்தில் உயரதிகாரிகளின் ஆதரவு கிடைக்கும். புரமோசனும் சம்பள உயர்வும் கிடைக்கும்.

கவனமும் விழிப்புணர்வும் அவசியம்
அடுத்த ஆண்டு ஜனவரி மாதம் முதல் அக்டோபர் மாதம் முடிய ராகு பகவான் மேஷ ராசியில் கேதுவின் நட்சத்திரமான அஸ்வினி நட்சத்திரத்தில் பயணம் செய்வதால் உடல் ஆரோக்கியத்தில் அதிக கவனம் செலுத்துவது அவசியம். புதிய முக்கிய முடிவுகள் எடுப்பதை இந்த கால கட்டத்தில் தள்ளிப்போடுங்கள். வண்டி வாகனங்களில் போகும் போது கவனம் தேவை.

கேதுவின் பயணம்
கேது பகவான் ஆறாம் வீட்டிற்கு செல்வதால் எதிரிகள் யார் என்று அடையாளம் கண்டு கொள்வீர்கள். நோய்கள் நீங்கும் ஆரோக்கியம் அதிகரிக்கும். கோர்ட் வழக்குகள் சாதகமாக முடியும். குடும்பத்தில் இருந்த பிரச்சினைகள் முடிவுக்கு வரும். பிள்ளைகளால் சந்தோஷ செய்திகள் தேடி வரும். உறவுகளின் வருகை குடும்பத்தில் மகிழ்ச்சியை அதிகரிக்கும். பங்குச்சந்தை முதலீடுகள் லாபத்தை தரும். செப்டம்பர் மாதம் வரை அலைச்சல் அதிகரிக்கும் எதிலும் அகலக்கால் வைக்க வேண்டாம்.

கணவன் மனைவி ஒற்றுமை
உடலில் இருந்த நோய்கள் வெளிப்பட்டு நீங்கும். திடீர் மருத்துவ செலவுகள் வரும். கணவன் மனைவி இடையேயான பிரச்சினைகள் நீங்கும். கூட்டுத்தொழில் சிறப்படையும். அலுவலகத்தில் இருந்த பிரச்சினைகள் நீங்கும். உயரதிகாரிகளின் ஆதரவு கிடைக்கும். புரமோசனும் சம்பள உயர்வும். கோர்ட் வழக்குகளில் வெற்றி கிடைக்கும்.
-
மம்தாவிற்காக எம்பி பதவியை ராஜினாமா செய்யும் யூசுப் பதான்? பேச்சுவார்த்தையில் சவுரவ் கங்குலி? பின்னணி -
எல்லாமே முக்கிய தலைகள் ஆச்சே.. விஜய் முன்னிலையில்.. மொத்தமாக தவெகவில் இணையும் அதிமுக தலைவர்கள்! -
திருவண்ணாமலை செய்யாறு வீடுகளில் மின்சார மீட்டர்கள் பழுதுக்கு அணில் காரணம்.. மின்சார வாரியம் பதில் -
கேட்கும்போதே நெஞ்சம் உறைகிறது.. சஹாரா பாலைவன மணலில் பழுதான லாரி. தாகத்துடன் அநியாயமாய் மாண்ட 49 பேர் -
விழுப்புரத்தில் திருமாவளவன் திறக்க இருந்த அம்பேத்கர் சிலை.. இரவோடு இரவாக அகற்றப்பட்டது ஏன்? -
சென்னை ரோட்டை கண்ணில் ஒத்திக்கலாம்.. பெங்களூர் நிலைமை படுமோசம்.. டிகே சிவகுமார் என்ன செய்வார்? -
"திமுக இல்லாதது கவலையளிக்கிறது.." ரொம்பவே வருத்தப்பட்டு பேசிய திருமாவளவன்.. என்ன மேட்டர்? -
வாண்டடா வண்டில ஏறிய செ.பா! ஹார்ட் டிஸ்க் திருட்டு என்றதும் பதற்றம் ஏன்? சிடிஆர் நிர்மல்குமார் கேள்வி -
விலகிய 113 ஒன்றிய செயலாளர்கள்.. தவெகவின் ஆபரேஷனால் மிரண்ட அறிவாலயம்! ஸ்டாலின் எடுத்த முக்கிய முடிவு -
"16 ஆண்டுகளுக்கு பின் தாய் வீட்டிற்கு.." வேல்முருகன் எமோஷ்னலாக சொல்ல.. சட்டென குறுக்கிட்ட அன்புமணி -
அதிமுக + திமுகவிற்கு ஷாக்.. 4 மாஜி அமைச்சர்கள் - 8 எம்எல்ஏக்கள் உள்பட 60 பேர் தவெகவில் ஐக்கியம் -
அன்னைக்கே சொன்னாரே டிடிவி தினகரன்! நெருங்கும் கிளைமாக்ஸ்? பாஜக ஸ்கெட்ச்? கொத்து கொத்தாக ஓடும் தலைகள்












Click it and Unblock the Notifications