For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

ரஜினி கட்சி... அரசியல் வருகையை அறிவித்து விட்டார் - கிரகங்கள் சாதகமா? ஜாதகம் சொல்வதென்ன

ரஜினியின் ஜாதகப்படி அவருக்கு சனி திசை முடிந்து புதன் திசை தொடங்கியுள்ளது. யார் தடுத்தாலும் அவர் இந்த முறை தனியாகத் தான் அரசியலுக்கு வருவார் என்று ஜோதிடர்கள் கணித்தது போல கட்சி அறிவிப்பை வெளியிட்டுள்ளார்.

Google Oneindia Tamil News

சென்னை: தமிழகம் மற்றும் தேசிய அரசியல் என அனைத்திலுமே பரபரப்பாக பேசப்படக்கூடிய ஜாதகக்காரர் தான் ரஜினிகாந்த் என்றும் அரசியலில் தனித்துவமாக இருப்பார் என்றும் ஜாதகப்படி அவரை உயர்ந்த நிலைக்கு கொண்டு செல்லக்கூடிய காலக்கட்டம் இது என்று ஜோதிடர்கள் கணித்துள்ளனர். ரஜினிகாந்த் ட்வீட் செய்தால் அன்றைக்கு அதுதான் ட்ரெண்ட். இதே அவரது ரசிகர்களின் நீண்ட கால காத்திருப்புக்கும் கேள்விக்கும் பதில் கிடைத்துள்ளது. அரசியல் வருகையை அறிவித்து விட்டார் ரஜினிகாந்த். அவரது ஜாதகத்தில் இப்போது கிரக சூழ்நிலைகள் எப்படி இருக்கிறது என்று பார்க்கலாம்.

நாடாள வேண்டும் என்று ஆசை இருந்தால் மட்டும் போதாது அதற்கான யோகம், ஜாதகத்தில் அம்சங்கள் கிரகங்களின், சேர்க்கை, பார்வை இருக்க வேண்டும். ராஜ கிரகங்கள் நமக்கு சாதகமாக இருந்தால்தான் சாதகமான நேரத்தில் ராஜ பதவி தேடி வரும். இதை நன்றாக உணர்ந்திருக்கிறார் ரஜினி.

ரஜினியின் ஜாதகப்படி அவருக்கு சனி திசை முடிந்து புதன் திசை தொடங்கியுள்ளது. யார் தடுத்தாலும் அவர் இந்த முறை தனியாகத் தான் அரசியலுக்கு வருவார் என்று ஜோதிடர்கள் கணித்தது போல கட்சி தொடங்கப்போவதற்கான அறிவிப்பை வெளியிட்டுள்ளார் ரஜினிகாந்த்.

தமிழக மக்களுக்காக என் உயிர் போனாலும் சந்தோஷம்தான்.. அரசியலுக்கு வருவது உறுதி- ரஜினிகாந்த் பேட்டி தமிழக மக்களுக்காக என் உயிர் போனாலும் சந்தோஷம்தான்.. அரசியலுக்கு வருவது உறுதி- ரஜினிகாந்த் பேட்டி

ரஜினி அரசியல்

ரஜினி அரசியல்

முப்பது ஆண்டுகாலமாக சஸ்பென்ஸ் வைத்துக்கொண்டே வந்த ரஜினிகாந்த், கடந்த 2017ம் ஆண்டில் அரசியல் கட்சி தொடங்கப்போவதாகவும், தனது அரசியல் ஆன்மீக அரசியல்தான் என்றும் தெரிவித்தார். ரஜினியின் வெற்றியை இந்த காலகட்டத்தில் யாராலும் தடுக்க முடியாது என்பது ஜோதிடர்களின் கணிப்பாகும். ரஜினிகாந்துக்கு 2018ஆம் ஆண்டு ஜனவரி 21 தேதியுடன் சனி திசை முடிந்து புதன் திசை தொடங்கி நடைபெற்று வருகிறது. புதன் திசையில் அவர் கவனமாக இருக்க வேண்டியது உடல் ஆரோக்கியத்தில் மட்டும் தானே தவிர மற்ற அனைத்து விசயங்களிலும் அவருக்கு வெற்றி கிடைக்கும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

அரசியல் கட்சி அறிவிப்பு

அரசியல் கட்சி அறிவிப்பு

ரஜினி கட்சி தொடங்கப்போவதை விடமும், அவரது ஆன்மீக அரசியல் என்ற கொள்கைதான் விவாதத்திற்கு உள்ளானது. நீண்ட காலத்திற்கு அது குறித்து விவாதங்கள் நடந்து வந்தன. இன்றைக்கு அவர் 2021ஆம் ஆண்டு ஜனவரி மாதத்தில் கட்சி தொடங்கப்போவதாகவும், டிசம்பர் 31ஆம் தேதி அன்று கட்சி குறித்த அறிவிப்பும் வெளியிடப்போவதாக தெரிவித்திருக்கிறார்.

ரஜினிக்கு ஜென்ம சனி

ரஜினிக்கு ஜென்ம சனி

கேரளாவில் இருக்கும் ஜோதிடர் ஒருவரிடம், ரஜினிக்காக அவரது நண்பர் ஒருவர் ஜாதகம் பார்த்திருக்கிறார். ரஜினி, அரசியல் கட்சி ஆரம்பிக்கும் நல்ல நேரம் வந்தாச்சு. இனி எந்த நாளில் அவர் அரசியல் கட்சித் தொடங்கினாலும், அவர் நினைத்தது நடக்கும். தமிழக முதல்வராக வலம் வரக்கூடிய யோகம் அவருக்கு இருக்கிறது என்று அந்த ஜோதிடர் கூறியுள்ளார். ரஜினிகாந்துக்கு தற்போது ஜென்ம சனி, ஜென்ம குரு நடைபெறுகிறது.

நீண்ட கால யோசனைகள்

நீண்ட கால யோசனைகள்

ரஜினிகாந்துக்கு 2018ஆம் ஆண்டு ஜனவரி 21 தேதியுடன் சனி திசை முடிந்து புதன் திசை தொடங்கி நடைபெற்று வருகிறது.
ரஜினி ராசிப்படி, புதன்திசையில் அவர் அரசியலுக்கு வருவது உறுதி என்று என்று ஜோதிடர்கள் கணித்திருந்தனர். சொன்னது போலவே பல கட்ட யோசனைகளுக்குப் பிறகு ஆலோசனைகளுக்குப் பிறகு அரசியல் வருகையை அறிவித்துள்ளார் ரஜினிகாந்த்.

சிம்ம லக்னம் மகர ராசி

சிம்ம லக்னம் மகர ராசி

சிம்ம லக்னம், மகர ராசி, திருவோணம் நட்சத்திரத்தில் பிறந்த ரஜினிக்கு கோச்சாரப்படி ஜென்ம சனி ஜென்ம குரு நடைபெறுகிறது.
இவரது ஜாதகத்தில் 2ம் இடத்தில் ஆன்மிக கிரகமான கேது, சனியுடன் கூடியுள்ள காரணத்தினால் ஆன்மிக வழியையே இவரது மனம் நாடும் என்று ஜோதிடர்கள் கூறியுள்ளனர்.

அரச கிரகங்களின் சஞ்சாரம்

அரச கிரகங்களின் சஞ்சாரம்

அரசியல் யோகம் தரும் கிரகங்களில் முக்கியமான மூன்று கிரகங்கள் சூரிய பகவான்,சனி பகவான் மற்றும் ராகு பகவான் ஆகும்.இவை ஒருவருடைய ஜாதகங்களில் கேந்திரம்,திரிகோண பலம் பெற்றிருக்க வேண்டும். இதற்கு அடுத்த நிலை பெறும் அரசியல் யோகம் தந்து நிர்வாகிக்கும் திறனை அளிக்கக்கூடிய கிரகங்கள் புதன் பகவான்,சுக்கிர பகவான்,செவ்வாய் பகவான் மற்றும் அரசியல் தந்திரத்தை அளிக்கக்கூடிய கேது பகவானின் நிலைகளையும் கவனிக்க வேண்டும்.

நேர்மையான அரசியல்வாதி

நேர்மையான அரசியல்வாதி

ரஜினிக்கு மகரராசி, திருவோணம் நட்சத்திரம், சிம்ம லக்னம், 2ஆம் இடத்தில் சனியுடன் கேது அமர்ந்துள்ளார். 4ஆம் வீட்டில் சூரியனும் 5ஆம் வீடான தனுசில் புதனும், சுக்கிரனும் அமர்ந்துள்ளனர். 5 ஆம் வீடு பொதுவாக மேஷம், சிம்மம், தனுசு ராசிகளாக இருந்தால் அவர் நேர்மையானவராக இருப்பார் என்பது ஜோதிட விதி.

குருவின் பார்வை பலம்

குருவின் பார்வை பலம்

புதன் கிரகம் பலம் பெற்று குருவின் பார்வை பெற்று 5ஆம் பாவத்தில் பலம் பெற்ற கிரகம் இருப்பது அமைச்சராகும் யோகம் தரும். லக்னாதிபதி, லக்னத்தில் இருந்தாலும் 4,7,10ல் பலமாக இருப்பது நாடாளும் யோகம் தரும். ரஜினிக்கு லக்னாதிபதி சூரியன் 4ஆம் இடத்தில் அமர்ந்துள்ளார். இந்த விதி பொருந்தி வருகிறது. 5 ஆம் வீட்டு அதிபதியான குரு 7 ஆம் வீட்டில் அமர்ந்துள்ளார். இது களத்திர ஸ்தானம்.

உச்ச நட்சத்திரமான ரஜினிகாந்த்

உச்ச நட்சத்திரமான ரஜினிகாந்த்

புதனும், சுக்கிரனும் இணைந்து சம சப்தம பார்வையாக 11வது வீட்டை பார்வையிடுகின்றனர். இதனாலேயே கலைத்துறையில் உச்ச நட்சத்திரமாக உயர்ந்துள்ளார் ரஜினிகாந்த். சுக்கிரன் 5ல் இருந்தால் வசதி வாய்ப்பு, பூர்வீக சொத்து, கல்வியில் மேன்மை, மகிழ்ச்சியான மண வாழ்வு, பெண் குழந்தை யோகம் உண்டாகும்.

ரஜினிக்கு ராகு கேது எப்படி

ரஜினிக்கு ராகு கேது எப்படி

ரஜினிக்கு 6ஆம் வீட்டில் செவ்வாய் இருக்கிறார். இந்த அமைப்பினால் எதிரிகளை துவம்சம் செய்யக்கூடியவனாக இருப்பான் என்கிறது ஜோதிட விதி. தங்கள் முயற்சியால் மேன்மை அடைவார்கள். புகழ்பெறுவார்கள். 4க்குடையவன் செவ்வாய் மகரத்தில் உச்சம் பெற்றதால் நிறைய சொத்துக்கள் சேர்க்கையும் உண்டானது. அதே நேரத்தில் ரஜினிக்கு கேது குடும்ப ஸ்தானமான இரண்டாவது இடத்திலும் 8வது இடத்தில் ராகுவும் அமர்ந்துள்ளனர். ஆறாம் அதிபதி சனியுடன் கேது இணைந்து இரண்டாம் இடத்தில் உள்ளது. மீனம், கன்னி 2, 8 ஆம் பாவகமாக அமைந்தால் அது நன்மையாகவே இருக்கும் என்கிறது ஜோதிட விதி.

நேர்மை நாணயம் ஊழலற்ற அரசியல்

நேர்மை நாணயம் ஊழலற்ற அரசியல்

வரப்போகும் சட்டமன்ற தேர்தலில் மக்களுடன் பேராதரவுடன் வெற்றி பெற்று தமிழகத்தில் நேர்மையான, நாணயமான, வெளிப்படையான மற்றும் ஊழலற்ற , மாதி மதச்சார்பற்ற அரசியல் உருவாக்குவதாக அவர் அறிவித்திருக்கிறார். முக்கியமாக, ஆன்மீக அரசியல் உருவாகுவது நிச்சயம் என்று தெரிவித்திருக்கும் ரஜினி, அற்புதம்...அதிசயம்...நிகழும் என்றும் தெரிவித்திருக்கிறார் ரஜினிகாந்த். நீண்ட கால யோசனைகள், ஆலோசனைகளுக்குப் பிறகு அரசியலுக்கு வரும் ரஜினிகாந்த் ஜொலிப்பாரா? மக்கள் மனதில் என்ன இருக்கிறது என்பதை இன்னும் சில மாதங்களில் உணர்த்தி விடுவார்கள்.

English summary
Astrologers predict that Rajinikanth will be the most talked about horoscope in Tamil Nadu and national politics and that this will be the time to take him to a higher level according to the horoscope. If Rajinikanth tweets that is the trend for the day. This is the answer to the long-awaited question of his fans. Rajinikanth announces political arrival Let's see how the planetary conditions are now in his horoscope.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X