• search
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

மக்களின் பசிப்பிணியை போக்கிய வள்ளலார் - 197ஆவது பிறந்த நாள் கோலாகலம்

|

கடலூர்: வாடிய பயிரை கண்ட போதெல்லாம் வாடினேன் என்ற வாக்கியத்திற்கு சொந்தக்காரர் வள்ளலார். மக்களின் பசிப்பிணி போக்கிய வள்ளலாரின் இயற்பெயர் ராமலிங்க அடிகளார் அக்டோபர் 5, 1823 கடலூர் மாவட்டம் மருதூரில், ராமையாபிள்ளை - சின்னமைய்யார் தம்பதிக்கு மகனாக பிறந்தார்.

சிறந்த சொற்பொழிவாளர், நூலாசிரியர், மொழி ஆய்வாளர், சித்த மருத்துவர் , சமூக சீர்திருத்தவாதி என பன்முகங்களை கொண்டவர் வள்ளலார். சன்மார்க்கத்திற்காக வாழ்வை அர்பணித்த வள்ளலாரின் 197 ஆவது பிறந்த நாளையொட்டி சிறப்பு பிராத்தனைகள் மற்றும் அன்னதானங்கள் நடைப்பெற்றன.

1867ஆம் ஆண்டு வடலூரில் தர்ம சாலை ஒன்றை தொடங்கி அனைவருக்கும் உணவு வழங்கினார். மக்களின் பசியை போக்க வழி கண்டவர் வள்ளலார். வள்ளலார் வாழ்ந்த காலத்தில் அவரது கருத்துக்கள் அனைத்தும் முற்போக்காகவே பார்க்கப்பட்டன. அருட்பெருஞ்சோதி தனிப்பெருங்கருணை என்று முழங்கியவர் வள்ளலார்.

இவர் பாடிய ஆறாயிரம் பாடல்கள், திருவருட்பாவாக தொகுக்கப்பட்டுள்ளது. ஆறு திருமுறைகளாக பகுக்கப்பட்டுள்ள இது, முதலில் இராமலிங்கஅடிகளின் தலைமைச் சீடர் தொழுவூர் வேலாயுதனாரால் நான்கு திருமுறைகளாக வெளியிடப்பட்டது.

இராமலிங்க அடிகளாரின் கொள்கைகள்

இராமலிங்க அடிகளாரின் கொள்கைகள்

கடவுள் ஒருவரே. அவர் அருட்பெருஞ்சோதி ஆண்டவர். புலால் உணவு உண்ணக்கூடாது. எந்த உயிரையும் கொல்லக்கூடாது. சாதி, மதம், இனம், மொழி முதலிய வேறுபாடு கூடாது. இறந்தவர்களை எரிக்கக் கூடாது. சமாதி வைத்தல் வேண்டும். எதிலும் பொது நோக்கம் வேண்டும்.

கல்வி வளம் தரும் சரஸ்வதி - விஜயதசமி நாளில் வாணி சரஸ்வதிக்கு மகா அபிஷேகம்

பசித்தவருக்கு உணவு

பசித்தவருக்கு உணவு

பசித்தவர்களுக்கு சாதி, மதம், இனம், மொழி முதலிய வேறுபாடு கருதாது உணவளித்தல் வேண்டும். சிறு தெய்வ வழிபாடு கூடாது. அவற்றின் பெயரால் பலி இடுதலும் கூடாது. எல்லா உயிர்களும் நமக்கு உறவுகளே. அவற்றைத் துன்புறுத்தக்கூடாது.

குழந்தைகளுக்கு வள்ளலார் வழங்கிய அறிவுரைகள்

குழந்தைகளுக்கு வள்ளலார் வழங்கிய அறிவுரைகள்

நல்லோர் மனதை நடுங்க செய்யாதே. தானம் கொடுப்போரைத் தடுத்து நிறுத்தாதே. மனமொத்த நட்புக்கு வஞ்சகம் செய்யாதே. ஏழைகள் வயிறு எரியச் செய்யாதே. பொருளை இச்சித்து பொய் சொல்லாதே.

தாய் தந்தை சொல் கேள்

தாய் தந்தை சொல் கேள்

பசித்தோர் முகத்தைப் பாராதிராதே. இரப்போர்க்கு பிச்சை இல்லை என்னாதே. குருவை வணங்கக் கூசி நிற்காதே. வெயிலுக்கு ஒதுங்கும் விருட்சம் அழிக்காதே. தந்தை தாய் மொழியைத் தள்ளி நடக்காதே என்று குழந்தைகளுக்கு அறிவுறுத்தினார்.

ஜோதி வடிவான வள்ளலார்

ஜோதி வடிவான வள்ளலார்

1874ஆம் ஆண்டு தை 19ஆம் தேதி ஜனவரி 30 ஆம் நாள் பூச நட்சத்திரமும் பௌர்ணமியும் கூடிய நல்ல நாளில் வள்ளலார் ஜோதி வடிவாக கலந்தார். அந்த அருட்பெருஞ்சோதி தனிப்பெரும் கருணையை இன்றைக்கும் அனைவரும் போற்றி வணங்கி வருகின்றனர். ஜோதி திருவிழா வடலூரில் மூன்று நாட்கள் சிறப்பாக நடைபெறுகிறது.

197வது பிறந்தநாள்

197வது பிறந்தநாள்

அவர் வாழ்ந்த காலத்தில் அவருடைய சிந்தனைகள் மிகவும் முற்போக்குடையதாக கருதப்பட்டாலும், தற்பொழுது உலகெங்கும் அவருடைய கொள்கைகள் புரிந்துகொள்ளப்பட்டு பின்பற்றப்படுகிறது. வருடந்தோறும் வள்ளலாரின் பிறந்த நாள் வடலூரில் விமர்சையாக கொண்டாடப்படுவது வழக்கம். அந்த வகையில் இந்தாண்டும் வள்ளாலாரின் 197 பிறந்த நாளையொட்டி கோயில்களில் சிறப்பு பிராத்தனைகள், விஷேச பூஜைகள் நடத்தப்பட்டன. அன்னாத்தானங்களும் வழங்கப்பட்டன.

திருமணம் ஆகாதவரா? இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் பதிவு இலவசம்!

 
 
 
English summary
Ramalinga to the lovers and devotees of Vallalar of the Light of Divine,Vallalar started the Jyoti Darshan on Thai Poosam in the year 1872. This festival is very devotionally celebrated since. Today 197th Vallalar Birthday celebration at Vadalur in Cuddalore district.
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
We use cookies to ensure that we give you the best experience on our website. This includes cookies from third party social media websites and ad networks. Such third party cookies may track your use on Oneindia sites for better rendering. Our partners use cookies to ensure we show you advertising that is relevant to you. If you continue without changing your settings, we'll assume that you are happy to receive all cookies on Oneindia website. However, you can change your cookie settings at any time. Learn more