ராமேஸ்வரத்தில் குவிந்த பக்தர்கள்... 15 நாட்களுக்குப் பிறகு சாமி தரிசனம் - புனித நீராடிய பக்தர்கள்
ஆடி அமாவாசை, திருக்கல்யாண விழாக்கள் முடிந்துள்ள நிலையில் ராமேஸ்வரம் ராமநாத சுவாமி கோவிலில் பக்தர்கள் சாமி தரிசனம் செய்ய அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
ராமநாதபுரம்: ராமேஸ்வரம் ராமநாதசுவாமி ஆலயத்தில் 15 நாட்களுக்குப் பிறகு பக்தர்கள் சாமி தரிசனம் செய்ய அனுமதிக்கப்பட்டனர். அக்னி தீர்த்தக்கடலில் புனித நீராடி சாமி தரிசனம் செய்த பக்தர்கள், தீர்தக்கிணறுகளில் புனித நீராட முடியாமல் ஏமாற்றமடைந்துள்ளனர்.

ராமநாதசுவாமி ஆலயத்தில் ஆடித் திருவிழா தொடங்கியதை அடுத்து கொரோனா தொற்று பரவாமல் தடுக்கும் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக தமிழக அரசு உத்தரவின் பேரில் இந்து அறநிலையத்துறை அதிகாரிகள் பக்தர்கள் தரிசனம் செய்வதற்கு கடந்த 1ஆம் தேதி முதல் தடை விதித்தனர். கோவிலில் குருக்கள் மட்டும் அன்றாட பூஜைகள் செய்து வந்தனர். கோவிலில் நடந்த 17 நாட்கள் திருவிழா நிகழ்ச்சிகள் வளாகத்தில் நடைபெற்று முடிந்தது.
இந்து அறநிலையத்துறைக்கு சொந்தமான கோவில்கள் வெள்ளி, சனி, ஞாயிறு ஆகிய தினங்கள் தவிர வருகிற 23ஆம் தேதி வரை மற்ற நாட்களில் மட்டும் பக்தர்கள் தரிசனம் செய்வதற்கு அனுமதி வழங்கி உள்ளது.
ஆடி அமாவாசை நாளில் ராமேஸ்வரத்தில் பல லட்சக்கணக்கான பக்தர்கள் புனித நீராடி முன்னோர்களுக்கு தர்ப்பணம் அளிப்பது வழக்கம். இந்த ஆண்டு கொரோனா பரவலை தடுக்கும் வகையில் புனித நீராடவும் தர்ப்பணம் அளிக்கவும் தடை விதிக்கப்பட்டது. 15 தினங்களுக்கு பிறகு ராமேசுவரம் கோவிலில் இன்று முதல் பக்தர்கள் தரிசனம் செய்ய கோவில் நிர்வாகம் அனுமதி அளிக்கப்பட்டது.
அதை தொடர்ந்து இன்று ராமேஸ்வரத்தில் திரளான பக்தர்கள் குவிந்தனர். அதிகாலையில் காசிக்கு நிகராக கருதப்படும் அக்னி தீர்த்த கடற்கரையில் புனித நீராடினர் பின்னர் ராமேசுவரம் கோவிலில் உள்ள சுவாமி சன்னதி, பர்வதவர்த்தினி அம்மன் சன்னதியில் தரிசனம் செய்தனர்.
கோவிலில் உள்ள 22 புனித தீர்த்தங்களில் பக்தர்கள் நீராட தொடர்ந்து தடை விதிக்கப்பட்டுள்ளது. இதனால் இன்று தரிசனம் செய்ய வந்த பக்தர்கள் புனித நீராட முடியாமல் வேதனையடுத்துள்ளனர். தீர்த்தக்கிணறுகளில் நீராடவும் அனுமதி அளிக்க வேண்டும் என்பது பக்தர்களின் கோக்கையாகும்.
-
“காங்கிரஸ், கம்யூனிஸ்ட்களை விமர்சிக்க அவர்களுக்கு துணிச்சல் இல்லை”.. திருமாவளவன் அட்டாக்! -
டோட்டலாக தனிமைப்படுத்தப்பட்ட திமுக! உச்சக்கட்ட ஹேப்பியில் பாஜக.. தவெக விஜய் அரசுக்கு சிக்கலா? -
மோடி, நிர்மலா சீதாராமன் சந்திப்பின்போது.. கூடவே போன ஜோசியர்! சலசலப்பை கிளப்பிய விஜய்! -
97 ரன்களில் அவுட்.. ஒட்டுமொத்த மைதானமும் சோகம்.. உலக சாதனையை தவறவிட்ட வைபவ் சூர்யவன்ஷி! -
முதல்வர் விஜய்யை சந்திக்க நேரம் ஒதுக்காத அமித் ஷா.. என்ன நடந்தது? -
பிரதமர் மோடிக்கு நன்றி சொன்ன முதல்வர் விஜய்.. அதைவிட முக்கியம் 4 மேஜர் கோரிக்கைகள் -
"ஆர்.எஸ்.எஸ் பேரப்பிள்ளையாக மாறிய விசிக".. திருமா மீது பொன்.ராதாகிருஷ்ணன் கடும் தாக்கு! -
நிர்மலா சீதாராமனும் விஜய் கிட்ட அதையே சொல்வாரோ? 118 மேஜிக் நம்பர்.. தவெகவை அசைக்க முடியாத பின்னணி? -
ஒரே சீசனில் 61 சிக்ஸ்.. கெய்ல் சாதனையை 15 வயது சிறுவன் முடிச்சிட்டான்! தெறிக்கவிட்ட வைபவ் சூர்யவன்ஷி -
குதிரை பேரமா? எடப்பாடி பழனிசாமிதான் அதை செய்தார்! ஒரே போடாக போட்ட அமைச்சர் அருண்ராஜ் -
தமிழக அரசின் அதிரடி அறிவிப்பு! நுகர்வோருக்கு வந்த புதிய வசதி.. வெளியானது முக்கிய அப்டேட் -
“போலீஸ் என்றால் சிரிக்க கூடாதா? இதில் என்ன பிரச்சனை?” அமைச்சர் வன்னி அரசு சரமாரி கேள்வி!












Click it and Unblock the Notifications