சனி பெயர்ச்சி 2022: சனிபகவான் தரும் சச யோகம்...எந்த ராசிக்காரர்களுக்கு வெளிநாடு வேலை கிடைக்கும்
சனிபகவான் ரிஷப ராசிக்கு தொழில் கர்ம சனியாகவும் சிம்ம ராசிக்கு ஏழாம் வீட்டில் கண்டச்சனியாக அமர்கிறார். விருச்சிக ராசிக்கு நான்காம் வீட்டில் அர்த்தாஷ்டம சனியாகவும் சஞ்சரிக்கிறார்.
சென்னை: சனி பகவான் கும்ப ராசியில் அமர்ந்துள்ளார். இந்த சனிப்பெயர்ச்சியால் சில ராசிக்காரர்களுக்கும் சில பாதிப்புகள் ஏற்படும். ஜென்ம சனி, கண்டச்சனி, அர்தாஷ்டம சனி, தொழில் சனி காலங்களில் சச மகா யோகம் கிடைக்கப்போகிறது. கும்ப ராசியில் ஆட்சி பெற்று அமர்ந்துள்ள சனிபகவானால் எந்த ராசிக்காரர்களுக்கு வெளிநாடு செல்லும் யோகம் தேடி வரப்போகிறது என்று பார்க்கலாம்.
சனிபகவான் தனது சொந்த வீடான கும்ப ராசியில் ஆட்சி பெற்று அமர்ந்துள்ளார். இது கால சக்கரத்திற்கு 11ஆம் வீடு.
சனி கும்ப ராசியில் ஆட்சி பெற்று அமரும் காலம் ரிஷபம், சிம்மம், விருச்சிக ராசிக்காரர்களுக்கு சச மகாயோக காலமாக அமைகிறது.
சிம்ம ராசிக்கு சனி ஆறு, ஏழாம் வீட்டு அதிபதி, விருச்சிக ராசிக்கு சனி பகவான் மூன்று மற்றும் நான்காம் வீட்டுக்கு அதிபதி, ஐந்துக்கு அதிபதி. எனவே சிம்மம் கண்டச்சனி, விருச்சிக ராசிக்கு அர்த்தாஷ்டம சனி காலத்தில் பாதிப்புகளை விட அதிக நன்மையே நடைபெறும். ஒருவருடைய ஜனன கால ஜாதகத்தில் சனி பகவான், துலாம், மகரம் மற்றும் கும்பம் ஆகிய வீடுகளில் அமர்ந்துள்ள நிலையில், அந்த வீடுகள் லக்னம் அல்லது ராசி ஆகியவற்றுக்கு 1,4,7,10 என்ற கேந்திர ஸ்தானங்களாக அமைந்திருந்தால் இந்த யோகம் ஏற்படுகிறது. கோச்சார ரீதியாக சனிபகவான் கும்ப ராசியில் பயணம் செய்வதால் இந்த முறை ரிஷபம், சிம்மம், விருச்சிக ராசிக்காரர்களுக்கு சச மகா யோகம் கிடைக்கப்போகிறது.

ரிஷபம்
தொழில் ஸ்தானமான பத்தாவது வீட்டில் சனிபகவான் ஆட்சி பெற்று அமர்கிறார். பத்துக்கு உரிய அதிபதி பத்தாம் வீட்டில் ஆட்சி பெற்று அமர்வது யோகமான காலம். கர்ம காரகன் கர்ம ஸ்தானத்தில் ஆட்சி பெற்று அமர்வதால் நல்ல வேலை கிடைக்கும். சிலருக்கு வேலையில் இடமாற்றம் கிடைக்கும். செய்யும் தொழில் வளர்ச்சியடையும். ஆட்சி பெற்ற சனியால் சச யோகம் செயல்படும். புது வேலை கிடைக்கும். பதவியில் புரமோசன் கிடைக்கும். சனியால் கொடுக்கும் பதவி, சொத்துக்களை யாராலும் அசைக்க முடியாது. சமூகத்திர் கவுரவம் அந்தஸ்து அதிகரிக்கும். கோடீஸ்வர யோகம் தேடி வரப்போகிறது. சனி கொடுப்பதை பத்திரமாக பாதுகாத்து தான தர்மங்கள் செய்யுங்கள்.

சிம்மம்
இந்த சனி பெயர்ச்சியால் சிம்ம ராசிக்காரர்களுக்குத் தலைமை பதவி கிடைக்கும். கண்டச்சனியாக இருந்தாலும் யோகம்தான். அரசியல் அரசாங்க துறையில் உள்ளவர்களுக்கு யோகம். தலைமைப்பதவி தேடி வரும் தொழில் அற்புதமாக இருக்கும். கடல் வழி தொழில் செய்பவர்களுக்கு நன்மை செய்வார். வேலை மாற்றம் இடமாற்றத்திற்கு காத்திருப்பவர்களுக்கு வேலை கிடைக்கும். விசா கிடைக்கும். வேலையில் வியாபாரத்தில் இருப்பவர்களுக்கு உயர்வு கிடைக்கும்.

தடைகளைத் தாண்டி திருமணம்
சனியின் பார்வை சிம்ம ராசியின் மீது விழுவதால் பாதிப்பு குறையும். ஏழுக்கு உடையவன் ஏழில் இருப்பதால் திருமணம் தடைகளை தாண்டி நடைபெறும். தேவையில்லாத பேச்சுக்களை பேச வேண்டாம் ஒன்பதாம் வீட்டின் மீது சனி பார்வை விழுவதால் ஆரோக்கியத்தில் கவனம், தேவை. கடன் வாங்கி வீடு வாங்குவீர்கள். சிலருக்கு இடமாற்றம் ஏற்படும். கணவன் மனைவி உறவில் கவனமாக இருக்கவும். உடல் நலனில் அக்கறை தேவை. பயணங்களிலும் கவனம் தேவை. வண்டி வாகனம் வாங்குவீர்கள். இருக்கும் இடத்தை மாற்றுவீர்கள்.

விருச்சிகம்
விருச்சிகம் ராசிக்கு நான்காம் வீட்டு அதிபதி நான்கில் ஆட்சி பெற்று அர்த்தாஷ்ட சனியாக அமர்கிறார். தனவரவு அதிகரிக்கும். ஆசைகளை குறிக்கோள்களை சனி நிறைவேற்றுவார். சுகமான இடத்தில் சனி ஆட்சி பெற்று அமர்ந்திருப்பதால் சந்தோசங்கள் அதிகம் நடைபெறும் காலம் கல்வி திருமணத்தடை நீங்கும், குழந்தை பாக்கியம் கிடைக்கும். பணம் சேர்க்க முடியாது அதற்கு பதிலாக சொத்துக்கள் வாங்குவீர்கள்.

வெளிநாடு யோகம் தேடி வரும்
பத்தாவது பார்வையாக சனி பார்வை உங்க ராசி மீது விழுகிறது. சனி யோகம். வீடு, வண்டி வாகன வசதி கிடைக்கும். தீர்க்கப்படாத பிரச்சினைகள் முடிவுக்கு வரும் வழக்குகள் சாதகமாகும். தொழில் வியாபாரத்தில் பெரிய மாற்றம் வரும். வெளிநாடு பயணம் செய்யலாம். காரணம் உங்க ராசிக்கு பத்தாம் வீட்டில் சனி பார்வை விழுகிறது. தொழில் தொடங்காதவர்கள் கூட தொழில் தொடங்குவீர்கள். பயணங்களால் தன வரவும் கிடைக்கும். சனி பார்வை 6ஆம் வீட்டில் விழுவதால் தொல்லைகள் விலகும். ஆட்சி பெற்ற சனியால் பலமடைவீர்கள். அதே நேரத்தில் செலவுகள் அதிகமாகும். திருமணம், குழந்தை பாக்கியத்திற்கு நன்மையான காலம். சொத்துக்கள் வாங்கலாம். சனி பார்வை உங்க ராசி மீது விழுவதால் நிம்மதியும் நம்பிக்கையும் கொடுப்பார்.
-
தமிழ் புத்தாண்டு பலன்: கன்னி ராசிக்கு 100 மார்க்.. ரேஞ்சே மாறப்போகுது.. பொற்காலம் ஆரம்பம் -
கோவை வடக்கு, மயிலாப்பூர்.. பாஜக போட்டியிடும் 27 தொகுதிகள் எவை? எடப்பாடி பழனிசாமி வெளியிட்ட அறிவிப்பு -
பிள்ளையை கிள்ளி விட்ட இஸ்ரேல்.. தொட்டிலை ஆட்டும் அமெரிக்கா! வெறி கொண்டு அடிக்கும் ஈரான்.. குண்டு மழை -
உளவுத்துறை சொன்னது என்ன? 155 சீட் பின்னணியில் அமித்ஷா தந்த கிரீன் சிக்னல்! எடப்பாடி முகம் பிரகாசம் -
3 அமைச்சர்களை எதிர்க்கும் தமாக! அதிமுக – பாஜக வழங்கிய தொகுதியை கவனிச்சீங்களா.. 5 தொகுதியும் கடினம் -
கரண்ட் பில் இலவசம்? இனி கட்ட வேண்டாமா? மத்திய அரசு ₹78,000 மானியம்! உங்க வீட்டிற்கு எப்படி வாங்குவது -
பிடுங்கப்படும் டிரம்பின் பவர்! அதிபர் பதவியிலேயே இருந்தாலும் அதிகாரம் இருக்காது.. நிலைமை மோசம்! -
நல்ல காலம் பொறக்குது.. தங்கம், வெள்ளியை முடிஞ்ச அளவு வாங்குங்க! ‘கோல்டுமேன்’ அடுக்கும் காரணங்கள்! -
மருமகள் உள்ளே, சீனியர் வெளியே? 55 கால சாம்ராஜ்ஜியத்திற்கு செக்! காட்பாடி திருப்பத்தின் பின்னணி என்ன -
இரட்டை இலையை விட்டுவிட்டு.. தாமரைக்கு தாவும் கூட்டணி கட்சிகள்! எங்கேயோ இடிக்குதே! -
ஈரானை சுத்துப்போடும் ‘பாராசூட் அட்டாக்’ டீம்.. டிரம்ப் பெரிய பிளான்.. போர் இப்போதைக்கு முடியாது? -
10 சவரன் கையில், 8 சவரன் பில்லில்! பழைய நகையை மாற்றினால் நடக்கும் ரகசியம்.. ஏமாறாமல் இருக்க இதோ வழி












Click it and Unblock the Notifications