சனி பெயர்ச்சி பலன் 2023: காணும் இடமெங்கும் எதிரிகளே இல்லை..வெற்றி முரசு கொட்டப்போகும் ராசிக்காரர்!

Subscribe to Oneindia Tamil

மதுரை: சனி பகவான் திருக்கணித பஞ்சாங்கப்படி மகர ராசியில் இருந்து கும்ப ராசிக்கு இடப்பெயர்ச்சி அடைந்துள்ளார். திருக்கணித பஞ்சாங்கப்படி சனி பெயர்ச்சி நிகழ்ந்துள்ளது. கன்னி ராசிக்காரர்களுக்கு சனி பகவான் ஆறாம் வீட்டில் ருண ரோக சத்ரு ஸ்தானத்தில் பயணம் செய்வதால் நோய்கள் நீங்கும் மன உளைச்சல் நீங்கி நிம்மதி உண்டாகும். எதிரிகளின் தொல்லை ஒழியும். காணும் இடமெங்கும் எதிரிகளே இல்லை என்று வெற்றி முரசு கொட்டப்போகிறீர்கள். கன்னி ராசிக்காரர்களுக்கு கடந்த சில ஆண்டுகாலமாக இருந்த பிரச்சினைகளுக்கு விடிவு காலம் பிறக்கப்போகிறது.

சனிபகவான் ஆறாம் வீடான ருண ரோக சத்ரு ஸ்தானத்தில் அமர்ந்து கொண்டு உங்கள் ராசிக்கு முயற்சி ஸ்தானமான 3ஆம் இடம், ஆயுள் ஸ்தானமான 8ஆம் இடம், மற்றும் உங்கள் ராசிக்கு 12ஆம் இடமான விரைய ஸ்தானத்தையும் பார்வையிடுகிறார். இந்த சனிப்பெயர்ச்சியால் கன்னி ராசியில் பிறந்தவர்களுக்கு தொழில், கல்வி, வேலைவாய்ப்பு, வருமானம், குடும்ப வாழ்க்கை எப்படி இருக்கிறது என்று பார்க்கலாம்.

Sani Peyarchi Palan 2023: Kanni Rasi Sani Peyarchi palan

கன்னி ராசியில் பிறந்தவர்களுக்கு இந்த சனிப்பெயர்ச்சியால் இனி தொட்டதெல்லாம் ஜெயமே. தடைபட்ட காரியங்கள் எளிதில் கைகூடும். உங்களின் வாழ்க்கையில் வெற்றிக்கனியை ருசிக்கப் போகிறீர்கள். சோதனைகளை தாங்கிக் கொண்டு வைரம் பாய்ந்த மனதுடையவராக மாறியிருக்கிறீர்கள். இதுநாள்வரை வேலை இல்லாமல் இருந்தவர்களுக்கு வேலை கிடைக்கும்.

கன்னி ராசியில் உத்திரம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு இந்த சனி பெயர்ச்சியால் திடீர் இடமாற்றம் நிகழும் மறைமுக எதிரிகளிடம் இருந்த பிரச்சினைகள் நீங்கும். எதிர்மறையான சிந்தனைகள் நீங்கி நேர்மறை சிந்தனைகள் அதிகரிக்கும். உங்களின் பொருளாதார நிலைமை உயரும். வியாபாரிகளுக்கு பணம் கொடுக்கல் வாங்கல் நன்றாக இருக்கும். தொழில் வியாபாரிகளுக்கு நல்ல லாபம் கிடைக்கும். கோர்ட் வழக்குகள் உங்களுக்கு சாதகமாக அமையும். வழக்குகளுக்கு வெற்றி கிடைக்கும். இதுநாள் வரை இழுத்தடித்த வழக்குகளில் ஜெயிப்பீர்கள். கேட்ட இடத்தில் கடன் கிடைக்கும். கடன்கள் அதிகரிக்கும், எதிரிகள் பிரச்சினைகள் முடிவுக்கு வரும். புது புதுப் பிரச்சனைகள் வந்தாலும் எளிதில் தீர்வு காண்பீர்கள்.

கன்னி ராசியில் அஸ்தம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு நோய்கள் நீங்கி ஆரோக்கியம் அதிகரிக்கும். நீண்ட நாட்களுக்கு பிறகு கடனாக கொடுத்த பணம் கைக்கு வந்து சேரும். நினைத்த காரியங்களை வெற்றிகரமாக முடித்து வெற்றிவாகை சூடுவீர்கள். பொருளாதார முன்னேற்றம் உண்டாகும். நிதி நிலைமை அதிகரிக்கும். கணவன் மனைவி இடையே ஏற்பட்டிருந்த சிக்கல்கள் நீங்கும். உடன்பிறந்த சகோதரிகளால் எதிர்பாராத நன்மை ஏற்படும். குழந்தை பாக்கியம் இல்லாதவர்களுக்கு அதற்கான வாய்ப்பு கை கூடி வரும். குடும்பத்தில் சுபகாரியங்கள், சுப நிகழ்வுகள் நடக்க வாய்ப்புகள் தானாக வந்து சேரும். அடிக்கடி சுப நிகழ்ச்சிகளில் கலந்து கொள்ள வாய்ப்பு ஏற்படும். குழந்தைகளின் அன்பும் ஆதரவும் அதிகரிக்கும். அவர்களால் எதிர்பாராத நன்மைகள் ஏற்படும். அம்மாவின் உடல் நலத்தில் அதிக கவனம் தேவை. மாணவர்கள் கல்வியில் வெற்றிக்கொடியை பறக்கவிடுவீர்கள்.

Sani Peyarchi Palan 2023: Kanni Rasi Sani Peyarchi palan

சித்திரை நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு வேலையில் இருப்பவர்களுக்கு சம்பள உயர்வுடன் கூடிய புதிய வேலை அமையும். வேலைக்கு ஏற்ற சம்பளமும் கிடைக்கும். சிலருக்கு புதிய வேலை நல்ல சம்பளத்துடன் கிடைக்கும். இதுநாள்வரை வராமல் இருந்த பணமெல்லாம் தேடி வரும். சமுதாயத்தில் கவுரவம், புகழ் அந்தஸ்து அதிகரிக்கும். சொத்து சேர்க்கை அதிகரிக்கும். பங்குச்சந்தை முதலீடுகளும் இப்போதைக்கு தேவையில்லை. பெண்களுக்கு நகை, ஆடை ஆபரணச் சேர்க்கை அதிகரிக்கும். புதிய தொழில்கள் தொடங்க சந்தர்ப்பமும் சூழ்நிலையும் அமையும். கூட்டுதொழில் சாதகமாக இருந்து வரும். முன்னோர்கள் சொத்து மூலம் எதிர்பாராத தனவரவு பொருள் வரவு அமையும். செலவுகளும் அதிகரிக்கும். பெண்களுக்கு வேலை செய்யும் இடத்தில் புதிய வாய்ப்புகள் தேடி வரும். சிலர் வெளிநாடு, வெளியூர் செல்ல வாய்ப்பு ஏற்படும். சமுதாயத்திலும் வீட்டிலும் வேலை செய்யும் இடத்திலும் மதிப்பும், மரியாதையும் கூடும்.

சனிபகவான் தனது 7வது பார்வையாக உங்கள் ராசிக்கு விரைய ஸ்தானத்தைப் பார்ப்பதால் தேவையற்ற பண விரையம், பொருள் நஷ்டம் ஏற்படும். சனிபகவான் 3வது பார்வையாக 8ஆம் வீட்டை பார்ப்பதால் எச்சரிக்கை தேவை. கணவன் மனைவியின் உறவில் சில உரசல்கள் வரும். உணவு விசயத்தில் கவனமாக இருக்கவும். சரிவிகித சத்தான உணவுகளை சாப்பிடுங்கள். உடல் ஆரோக்கியத்தில் அதிக கவனம் செலுத்த வேண்டியது அவசியம். உடலில் தேமல், அரிப்பு, கட்டி போன்ற நோய்கள் ஏற்படும். ஒரு சிலருக்கு அறுவை சிகிச்சை செய்யும் சூழ்நிலை அமையும். போக்குவரத்து வண்டி வாகனங்களில் அதிகக் கவனம் தேவை. எப்பொழுதும் எச்சரிக்கையுடன் சென்று வருதல் வேண்டும். வேகத்தை குறைத்து நிதானத்தை கடைபிடியுங்கள்.

மாணவர்களுக்கு உயர்கல்வி யோகம் தேடி வரும் நல்ல மதிப்பெண்களுடன் உயர்கல்விக்கு செல்வீர்கள். விளையாட்டு, கலைத்துறை என ஆர்வத்தோடு செயல்பட்டு பரிசுகளை வெல்வீர்கள். சிலருக்கு தன்னம்பிக்கை அதிகரிக்கும். கல்விக்கடன்கள் எளிதாக கிடைத்து வெளிநாட்டிற்கு படிக்கச் செல்வீர்கள். சாமர்த்தியமும் அதிகரிக்கும். போட்டித் தேர்வுகளில் கலந்து கொள்ள தைரியமும் தன்னம்பிக்கையும் அதிகரிக்கும். போட்டித் தேர்வுகளில் வெற்றி கிடைக்கும்.

Sani Peyarchi Palan 2023: Kanni Rasi Sani Peyarchi palan

சனிபகவான் கன்னி ராசிக்கு 5 மற்றும் 6ஆம் வீட்டிற்கு அதிபதி அவர் 6ஆம் இடத்தில் ஆட்சி பெற்று சஞ்சாரம் செய்வது அற்புதமான அமைப்பு. அடுத்து வரும் 30 மாதங்கள் உங்களுக்கு ராஜயோகம்தான். கண்ணுக்கு எட்டிய தூரம் வரை எதிரிகளே இல்லை என்ற நிலை உருவாகப் போகிறது. இதுநாள் வரை மறைந்திருந்த நோய்களை அடையாளம் கண்டுபிடித்து சிகிச்சை எடுத்துக்கொள்வீர்கள். கடன் பிரச்சினைகள் முடிவுக்கு வரும். சனி பெயர்ச்சியால் ஏற்படும் பாதிப்புகள் குறைய வாலாஜாபேட்டை தன்வந்திரி பீடத்தில் அருள்பாலிக்கும் பாதாள சொர்ண சனீஸ்வரரையும், ஜெய மங்கள சனீஸ்வரரையும் வணங்கலாம். கால பைரவரை வணங்க சங்கடங்கள் நீங்கி சந்தோஷம் அதிகரிக்கும்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+