சனி பெயர்ச்சி பலன் 2023: சனி பகவான் தரப்போகும் ராஜ யோகம்.. 5 ராசிக்காரர்கள் வீட்டில் பண மழை
சென்னை: சனி பகவான் ராஜ கிராகம். கால புருஷ தத்துவப்படி தொழில் காரகன், லாப காரகன், ஒரு ராசியில் இரண்டரை ஆண்டு காலம் தங்கும் சனிபகவான் ஒரு ஆண்டில் 4 மாத காலம் வக்ரமடைவார். ஜூன் 17ஆம் தேதி முதல் சனிபகவான் வக்ரமடைவதால் சனிப்பெயர்ச்சியால் யாருக்கெல்லாம் பாதிப்பாக இருந்ததோ அவர்களுக்கு சில நன்மைகளையும் யாருக்கெல்லாம் சாதகமாக இருந்ததோ அவர்களுக்கு சில பாதிப்பு உண்டாக வாய்ப்புகள் அதிகம். ஜூன் 17 முதல் நவம்பர் 4ஆம் தேதி வரை சனிபகவான் வக்கிரமாக செல்வதனால் யாருக்கெல்லாம் ராஜயோகம் கிடைக்கப்போகிறது யாருடைய வாழ்க்கையில் அதிரடி மாற்றங்கள் ஏற்படப்போகிறது என்று பார்க்கலாம்.
மேஷம்: உங்கள் ராசிக்கு 11வது வீட்டில் லாப ஸ்தானத்தில் சனிபகவான் பயணம் செய்கிறார். ஆட்சி பெற்ற சனி பகவான் வக்ரமடைவதால் பார்க்கும் வேலையில் அதிக கவனமாகவும் எச்சரிக்கையாகவும் இருத்தல் வேண்டும். அவசரப்பட்டு வேலையை விடுவதோ அலல்து வேறு வேலைக்கு முயற்சிப்பதோ கூடாது. ஒருமுறைக்கு இரண்டு முறை கவனமாகச் சிந்தித்து செயல்படுதல் வேண்டும். சுப காரியங்கள், சுப நிகழ்ச்சிகளில் தடையேற்பட்டுப் பின் இனிதே நடந்தேறும். குழந்தைகள் விஷயத்தில் தேவையற்ற மனவருத்தங்கள் பிரச்சனைகள் ஏற்பட்டு விலகும். வாடகை வீட்டிலிருந்து சொந்த வீட்டுக்கு மாறுவீர்கள். தடைபட்ட பல வேலைகள் நடைபெறும். அரைகுறையாக நின்ற பல வேலைகளை முடிப்பீர்கள். நோய்கள் குணமடையும், வெளியூர் பயணங்கள் வெற்றிகரமாக நிறைவேறும். முடங்கிக் கிடந்த வேலைகள் முழுமையடையும்.

ரிஷபம்: சனிபகவான் உங்கள் ராசிக்கு 10வது வீட்டில் சஞ்சரிக்கிறார். இது தொழில் ஸ்தானமாகும். இது கர்ம ஸ்தானம். வேலையில் நெருக்கடி நிலை ஏற்படும். தொழிலில் நெருக்கடிகள் ஏற்படும். நல்ல கல்வி உயர்கல்வி அமைய வாய்ப்புகள் அமையும். மேலும் தாயாரால் எதிர்பாராத உதவிகள் கிட்டும். வேலையில் ஒரு திருப்தியற்ற சூழ்நிலை நிலவும். பார்க்கும் வேலையில் அவசரப்பட்டு விட்டு விடக் கூடாது. காலி மனை, விடு, வண்டி வாகனங்கள் வாங்க வாய்ப்பு அமையும். அதே சமயம் உடல் ஆரோக்கியம் சற்று சுமாராகவே இருந்து வரும். நேரத்திற்கு சாப்பிடுவது நல்லது. அலுவலகத்தில் கவனமும் அக்கறையும் தேவை.
மிதுனம்: பாக்கிய சனியால் உங்களுக்கு எந்த தடையும் இன்றி செயல்கள் ஜரூராக நடந்து கொண்டிருக்கின்றன. சனி பகவான் வக்ரமடையும் இந்த கால கட்டத்தில் பணம் விசயங்களில் கவனம் தேவை. லோன் வாங்கிக் கொடுக்க வேண்டாம். மற்றவர்களுக்கு ஜாமீன் கொடுக்கவேண்டாம். உழைப்புக்கு ஏற்ற ஊதியம் கிடைக்காது. முதலாளி தொழிலாளி உறவு சுமுகமாக இருக்காது. வேலை கிடைப்பதில் தடைகள் ஏற்படும். வேலை கிடைத்தாலும் அலைச்சல்களும் நிம்மதியற்ற சூழ்நிலையும் ஏற்படும். தேவையற்ற வகையில் நம்மை பற்றிய வீண் வந்தந்திகள் உலவும். நரம்புத் தளர்ச்சி, கணுக்கால் வலி ஏற்பட்டு நீங்கும். அறுவை சிகிச்சை செய்ய வேண்டிய சூழ்நிலைகள் வந்து சேரும்
கடகம்: அஷ்டமத்து சனி வக்ரம் அடைவதால் தடைப்பட்டிருந்த வேலைகள் முடியும் கணவன் - மனைவி இடையே பிரச்சினை நீங்கி மகிழ்ச்சியான சூழ்நிலை உருவாகும். வழக்குகள் சாதகமாகும். எடுக்கும் முயற்சிகள் ஆரம்பத்தில் தடையேற்பட்டாலும் இறுதியில் எதிர்பாராத வெற்றிகள் கிடைக்கும். கொடுத்த பணம், பொருட்கள் சற்று தாமதமானாலும் வந்து சேரும். அலுவலகத்தில் தேவையற்ற பேச்சுகளை தவிர்ப்பது நல்லது. காதல் இனிக்கும். குடும்பத்தில் கணவன் மனைவி உறவு மகிழ்ச்சிகரமாக அமையும். கிடைத்த வேலையை திருப்திகரமாக செய்து வரவும். வேறு வேலை மாறும் முன் நன்கு ஆலோசித்து செய்யவும். வெளியூர் பயணங்களால் அலைச்சல்களும் வேதனைகளும் ஏற்படும். பெண்கள் தங்கள் உடல் நலனில் அக்கறை காட்டவும்.
சிம்மம்: கண்டச்சனியாக அமர்ந்து உங்களை பார்வையிடுகிறார் சனிபகவான். சனி பகவான் வக்ரமடையும் இந்த கால கட்டத்தில் மனதையும் உடலையும் ரிலாக்ஸ் ஆக வைத்துக்கொள்ளுங்கள். உங்கள் செலவுகளைக் குறைத்து,சேமிக்கத் தொடங்குங்கள். வீட்டு உபயோகப் பொருட்கள் வாங்க சந்தர்ப்பம் அமையும். சிலர் வேலை விசயமாக வெளியூர் செல்வீர்கள். பொறுப்பு அதிகரிக்கும். சுபகாரியங்கள் கைகூடி வரும். உடல் ஆரோக்யத்தில் அதிக அக்கறையும் கவனமும் தேவை. சிலருக்கு காதல் மலரும் திருமணம் நடைபெறும். பிரிந்திருந்த தம்பதிகள் ஒன்று சேர்வார்கள்
கன்னி: ருண ரோக சத்ரு ஸ்தானம் எனப்படும். ஆறாம் வீட்டில் உள்ள சனியால் அபரிமிதான யோகங்களை பெற்று வரும் நீங்கள் கவலையற்று இருக்கிறீர்கள். சனியின் வக்ர சஞ்சாரத்தினால் அலைச்சல்கள் அதிகரிக்கும் அதனால் தேவையற்ற மன உளைச்சல்கள் அதிகரிக்கும் சகோதர சகோதரிகளால் தேவையற்ற மனக்குழப்பங்கள் அதிகரிக்கும். நெருங்கிய உறுப்பினர்களால் தேவையற்ற பிரச்சனைகள் ஏற்படும். இருக்கும் பொருட்கள் கையை விட்டுப் போகும் நாணயம் தவறி நடக்கும் சூழ்நிலை அமையும். காதல் விஷயங்கள் மகிழ்ச்சிகரமாகவும் திருமணம் என்று வரும்பொழுது சற்று போராட்டமாகவும் அமையும். திருப்தியான மனநிலை இருந்து வரும். அதே சமயம் பணவரவு சீராக இருந்து வரும். தந்தையாரால் எதிர்பாராத தனவரவு, பொருள் வரவு கிட்டும். நட்பு வட்டாரங்களில். விரிசல்கள் ஏற்படும் விலகும். கணவன் மனைவி உறவு சற்று சுமாராக இருந்து வரும். இந்த காலத்தில் உடல்நலக்குறைவு, ஏமாற்றங்கள், இழப்புகள் ஏற்படும், இழுபறியான வேலைகள் உடனடியாக முடியும். வாகனத்தை ஓட்டும்போது நிதானம் தேவை. பணப்பற்றாக்குறையும், வீண்பழியும், அரசுக் காரியங்களில் இழுபறி நிலையும் உண்டாகும்.
-
மம்தாவிற்காக எம்பி பதவியை ராஜினாமா செய்யும் யூசுப் பதான்? பேச்சுவார்த்தையில் சவுரவ் கங்குலி? பின்னணி -
எல்லாமே முக்கிய தலைகள் ஆச்சே.. விஜய் முன்னிலையில்.. மொத்தமாக தவெகவில் இணையும் அதிமுக தலைவர்கள்! -
திருவண்ணாமலை செய்யாறு வீடுகளில் மின்சார மீட்டர்கள் பழுதுக்கு அணில் காரணம்.. மின்சார வாரியம் பதில் -
கேட்கும்போதே நெஞ்சம் உறைகிறது.. சஹாரா பாலைவன மணலில் பழுதான லாரி. தாகத்துடன் அநியாயமாய் மாண்ட 49 பேர் -
விழுப்புரத்தில் திருமாவளவன் திறக்க இருந்த அம்பேத்கர் சிலை.. இரவோடு இரவாக அகற்றப்பட்டது ஏன்? -
சென்னை ரோட்டை கண்ணில் ஒத்திக்கலாம்.. பெங்களூர் நிலைமை படுமோசம்.. டிகே சிவகுமார் என்ன செய்வார்? -
"திமுக இல்லாதது கவலையளிக்கிறது.." ரொம்பவே வருத்தப்பட்டு பேசிய திருமாவளவன்.. என்ன மேட்டர்? -
வாண்டடா வண்டில ஏறிய செ.பா! ஹார்ட் டிஸ்க் திருட்டு என்றதும் பதற்றம் ஏன்? சிடிஆர் நிர்மல்குமார் கேள்வி -
விலகிய 113 ஒன்றிய செயலாளர்கள்.. தவெகவின் ஆபரேஷனால் மிரண்ட அறிவாலயம்! ஸ்டாலின் எடுத்த முக்கிய முடிவு -
"16 ஆண்டுகளுக்கு பின் தாய் வீட்டிற்கு.." வேல்முருகன் எமோஷ்னலாக சொல்ல.. சட்டென குறுக்கிட்ட அன்புமணி -
அதிமுக + திமுகவிற்கு ஷாக்.. 4 மாஜி அமைச்சர்கள் - 8 எம்எல்ஏக்கள் உள்பட 60 பேர் தவெகவில் ஐக்கியம் -
அன்னைக்கே சொன்னாரே டிடிவி தினகரன்! நெருங்கும் கிளைமாக்ஸ்? பாஜக ஸ்கெட்ச்? கொத்து கொத்தாக ஓடும் தலைகள்












Click it and Unblock the Notifications