Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

செப்டம்பர் மாத ராசி பலன் 2021: சிம்மம், கன்னி ராசிக்காரர்களுக்கு மகிழ்ச்சி அதிகரிக்கும்

செப்டம்பர் மாதம் சிம்மம், கன்னி ராசிக்காரர்களுக்கு கவலைகள் நீங்கி சந்தோஷங்கள் அதிகரிக்கும் மாதமாகும்.

Subscribe to Oneindia Tamil

சென்னை: சூரியனை ராசி அதிபதியாகக் கொண்ட சிம்ம ராசிக்காரர்களே, புதன் பகவானை ராசி அதிபதியாகக் கொண்ட கன்னி ராசிக்காரர்களே, உங்கள் ராசிக்கு இந்த செப்டம்பர் மாதத்தில் யோகங்கள் நிறைந்த மாதமாக அமைந்துள்ளது. உங்களின் தைரியமும் தன்னம்பிக்கையும் அதிகரிக்கும். கவலைகள் நீங்கி மனதில் நிம்மதி ஏற்படும் மாதமாக செப்டம்பர் மாதம் அமைந்துள்ளது. நவ கிரகங்களின் சஞ்சாரம் கூட்டணி, பார்வையைப் பொறுத்து இந்த மாதத்தில் பலன்கள் எப்படி இருக்கும் என்று பார்க்கலாம்.

தமிழ் மாதங்கள் ஆவணி மாதம் 15 நாட்களும் புரட்டாசி மாதம் 15 நாட்களும் இணைந்த மாதம் செப்டம்பர் மாதம். சூரியனின் பயணம் சிம்மராசியிலும் கன்னி ராசியிலும் இருக்கும். ரிஷப ராசியில் ராகு, விருச்சிக ராசியில் கேது, மகர ராசியில் சனி, குரு, கன்னி ராசியில் புதன், கன்னி ராசியில் உள்ள சுக்கிரன் செப்டம்பர் 5ஆம் தேதி துலாம் ராசிக்கு இடப்பெயர்ச்சியாகிறார். சிம்ம ராசியில் உள்ள செவ்வாய் மாத முற்பகுதியிலேயே இடப்பெயர்ச்சியாகி கன்னி ராசியில் பயணம் செய்கிறார். அதிசாரமாக கும்ப ராசிக்கு சென்றிருந்த குரு பகவான் மகர ராசிக்கு வக்ர கதியில் திரும்பி பின் நேர்கதியில் பயணத்தை தொடங்குகிறார்.

செப்டம்பர் மாதத்தில் நவ கிரகங்களின் சஞ்சாரம் கூட்டணி சேர்க்கையினால் மிதுனம், கடக ராசியில் பிறந்தவர்களுக்கு என்ன மாதிரியான பலன்கள் கிடைக்கும் என்று பார்க்கலாம்.

September month Rasi palan 2021: Simmam and Kanni rasi prediction

சிம்மம்

சிம்ம ராசிக்காரர்களுக்கு உங்கள் ராசிநாதன் ராசியில் ஆட்சியுடன் பலத்துடன் பயணம் செய்கிறார். கூடவே செவ்வாய் பயணம் செய்கிறார். பெற்றோர்களின் ஆதரவு கிடைக்கும். தைரியம் தன்னம்பிக்கை அதிகரிக்கும். எடுத்த காரியத்தை தைரியமாக முடிப்பீர்கள். இரண்டாம் வீட்டில் புதன் ஆட்சி உச்சம் பெற்று பயணம் செய்கிறார். கூடவே சுக்கிரன் நீச பங்க ராஜயோகம் பெற்று சஞ்சரிக்கிறார். குடும்பத்தில் சந்தோஷ சம்பவங்கள் நடைபெறும். மனதில் மகிழ்ச்சி அதிகரிக்கும். தெளிவான மனநிலையில் இருப்பீர்கள். செப்டம்பர் 5ஆம் தேதிக்கு மேல் சுக்கிரன் செவ்வாய் இடப்பெயர்ச்சி நடைபெறுகிறது. செவ்வாய் இடப்பெயர்ச்சியாகி ஆறாம் வீட்டில் கன்னி ராசியில் புதனோடு இணைந்து பயணம் செய்கிறார். பயணங்களில் கவனம் தேவைப்படும். கூர்மையான பொருட்களை கையாளும் போது கவனம் தேவை. உடல் ஆரோக்கியத்தில் கவனம் தேவைப்படும். சுக்கிரன் இரண்டாம் வீட்டில் இருந்து இடப்பெயர்ச்சியாகி மூன்றாம் வீட்டிற்குச் செல்வதால் உடன் பிறந்தவர்களின் உதவி கிடைக்கும். தனாதிபதி புதன் வலுவாக பயணம் செய்வதால் பண வரவு அபரிமிதமாக இருக்கும். குடும்பத்தில் ஒற்றுமை அதிகரிக்கும். மாணவர்களின் கல்வித்திறமை பளிச்சிடும். கல்வியில் கவனம் அதிகரிக்கும். தெளிவான மனநிலையில் இருப்பீர்கள்.

சுக்கிரன் மூன்றாம் வீட்டில் ஆட்சி பெற்று பயணம் செய்கிறார். உடன்பிறந்தவர்களின் வீட்டு சுப நிகழ்ச்சிகளில் பங்கேற்பீர்கள். சகோதர சகோதரிகளின் வீட்டு திருமணம் போன்ற சுப காரியங்களில் பங்கேற்பீர்கள். திடீர் அதிர்ஷ்டம் அதிகரிக்கும் புகழ் செல்வாக்கு உயரும். குருபகவான் ஏழாம் வீட்டில் பயணம் செய்கிறார் குருபகவானின் பார்வை 16ஆம் தேதி வரைக்கும் உங்கள் ராசிக்கு கிடைப்பது சிறப்பு. 16ஆம் தேதிக்கு மேல் குருபகவான் மீண்டும் மகர ராசியில் இருந்து நேர்கதியில் பயணம் செய்கிறார். ஆறாம் வீட்டில் பயணம் செய்யும் குரு பகவானால் வீடு, சொத்து வாங்குவதற்கு வங்கிக் கடன்கள் கிடைக்கும். சனியுடன் நீச்சம் பெற்ற குரு இணைந்தாலும் நீச்சபங்க ராஜயோகம் கிடைக்கும். வேலையில் புரமோசன் கிடைக்கும் வேலை செய்யும் இடத்தில் மதிப்பு மரியாதை கூடும்.

திருமணம் சுப காரியம் தொடர்பாக மாத முற்பகுதியில் பேசி முடிவு செய்து கொள்ளலாம். குருவும் சனியும் மாத பிற்பகுதியில் ஆறாம் வீட்டில் இணைந்து பயணம் செய்வதால் தடைகள் ஏற்படும். காதலிப்பவர்களுக்கு வெற்றிகள் தேடி வரும் குடும்பத்தில் விட்டுக்கொடுத்து செல்லவும். மாணவர்களுக்கு உயர்கல்வி படிப்பவர்களுக்கு யோகமான மாதம். செப்டம்பர் மாதம் செலவுகள் அதிகரிக்கும் அதிக கடன் வாங்கி மாட்டிக்கொள்ளாதீர்கள். பெண்களுக்கு குடும்பத்தில் குதூகலம் ஏற்படும். உடல் ஆரோக்கியத்தில் கவனமும் அக்கறையும் தேவை. மொத்தத்தில் இந்த மாதம் பண வரவும் மகிழ்ச்சியும் அதிகரிக்கும் மாதமாக அமைந்துள்ளது.

September month Rasi palan 2021: Simmam and Kanni rasi prediction

கன்னி

புதன் பகவானை ராசி அதிபதியாகக் கொண்ட கன்னி ராசிக்காரர்களே, இந்த மாதம் கிரகங்களின் சஞ்சாரத்தினால் உங்கள் ராசிக்கு நன்மைகள் அதிகம் நடைபெறும். புதன் உங்கள் ராசியில் உச்சமடைந்து பயணம் செய்வதால் மன தைரியம் அதிகரிக்கும். விடியல் பிறந்து விட்டது. கவலைகள் தீரும் காலம் வந்து விட்டது. 16ஆம் தேதிக்கு மேல் சூரியன் உங்கள் ராசியில் இணைந்து புத ஆதிபத்ய யோகம் கிடைக்கிறது. மனதில் தெளிவு பிறக்கும். நிம்மதியும் சந்தோஷமும் அதிகரிக்கும். செயல்களில் கவனம் அதிகரிக்கும். இரண்டாம் வீட்டில் ஆட்சி பெற்று பயணிக்கும் சுக்கிரனால் குடும்பத்தில் சந்தோஷம் அதிகரிக்கும். கணவன் மனைவி இடையே ஏற்பட்ட பிரச்சினைகள் நீங்கி நெருக்கம் அதிகரிககும். காதலர்களுக்கு இடையே ஏற்பட்ட பிரச்சினைகள் முடிவுக்கு வரும் காதல் இனிக்கும். திருமண யோகம் கை கூடி வந்துள்ளது.

திருமணமான தம்பதியினருக்கு புத்திரபாக்கியம் கை கூடி வந்துள்ளது. போஜன யோகம் கிடைக்கும். சுவையான உணவு சாப்பிடலாம், ஆடை ஆபரண சேர்க்கை ஏற்படும். நன்றாக உறக்கம் வரும். மாத பிற்பகுதியில் குரு உங்களுடைய ராசிக்கு ஐந்தாம் வீட்டிற்கு வந்து சனியோடு இணைந்து பயணம் செய்கிறார். குருவின் பார்வை உங்கள் ராசிக்கு கிடைப்பதால் மனதில் ஏற்பட்ட கலக்கங்கள் நீங்கி கவலைகள் முடிவுக்கு வரும் காலம் வந்து விட்டது. புதிய ஆடை ஆபரண சேர்க்கை ஏற்படும். தொழில், வியாபாரத்தில் லாபம் இரட்டிப்பு மடங்கு அதிகரிக்கும். பணம் அபரிமிதமாக கிடைக்கும். மாணவர்களுக்கு உயர்கல்வி யோகம் கை கூடி வந்துள்ளது. கல்வியில் திறமை பளிச்சிடும். குழந்தைகளால் சந்தோஷம் அதிகரிக்கும். மகிழ்ச்சிகரமான குடும்ப சூழ்நிலை ஏற்படும். குடும்ப உறுப்பினர்களின் ஒத்துழைப்பு கிடைக்கும். செப்டம்பர் மாதத்தில் கன்னி ராசிக்காரர்களுக்கு கவலைகள் நீங்கி நன்மைகள் அதிகம் நடைபெறும் மாதமாகும்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+