திருப்பதி ஏழுமலையான் கோவிலில் சுப்ரபாதம், கல்யாண உற்சவ சேவைக்கட்டணங்கள் உயர்வு - பக்தர்கள் கலக்கம்
ஏழுமலையான் கோவிலில் சுப்ரபாத சேவைக்கட்டணம் முதல் கல்யாண உற்சவ சேவைக்கட்டணம் வரை அதிரடியாக உயர்த்தப்பட்டுள்ளதால் பக்தர்கள் அதிருப்தி அடைந்துள்ளனர்.
திருப்பதி: திருமலையில் மலையப்பசுவாமி கல்யாண உற்சவ சேவைக்கான கட்டணம் ஆயிரத்தில் இருந்து 2,500 ஆகவும், சுப்ரபாத தரிசன கட்டணம் ரூபாய் 240 இலிருந்து 2000 ஆகவும் உயர்த்தப்பட்டுள்ளதால் பக்தர்கள் கலக்கமடைந்துள்ளனர். வஸ்திர அலங்கார சேவைக்கட்டணமும் ரூ. 1 லட்சமாக உயர்ந்துள்ளது.
உலகப் பிரசித்தி பெற்ற திருப்பதி ஏழுமலையான் கோயிலுக்கு பக்தர்கள் கூட்டம் லட்சக்கணக்கில் வருவது வழக்கம் . தொற்று பரவலுக்கு பிறகு பெரும் கட்டுப்பாடுகளுடன் ஏழுமலையானை தரிசனம் செய்ய பக்தர்கள் அனுமதிக்கப்பட்டு வருகிறார்கள்.
கடந்த இரண்டு ஆண்டுகளாக ஆன்லைனில் இலவச சாமி தரிசனம் மற்றும் சிறப்பு தரிசன டிக்கெட்டுகள் விற்பனையாகி வந்தன. தற்போது தொற்று பரவல் குறைந்து வரும் நிலையில், கடந்த சில தினங்களுக்கு முன்பிலிருந்து இலவச தரிசன டிக்கெட் மற்றும் சிறப்பு தரிசன டிக்கெட் ஆகியவை நேரடியாக கவுன்டர்களில் வழங்கப்பட்டு வருகிறது.

சாமி தரிசனம்
திருப்பதி தேவஸ்தானம் சார்பில் தங்கும் விடுதிகள் உள்ளன. திருமலையிலும் திருப்பதியிலும் தங்குவதற்கு ஆன்லைன் மூலம் முன்பதிவு செய்யலாம். நேரடியாக சென்று வரிசையில் காத்திருந்து தங்கும் விடுதிகளுக்கு அறைகளை முன்பதிவு செய்து கொள்ளலாம். குறைவான கட்டணத்தில் வசதியான தங்கும் விடுதிகள் உள்ளன.
அடையாள அட்டையாக ஆதார் கார்டு, வாக்காளர் அடையாள அட்டை, பான்கார்டு என ஏதாவது ஒரு அடையாள அட்டைகளை திருப்பதிக்கு கொண்டு சென்று நேரடியாக இலவச தரிசன டிக்கெட்டுகளை பெற்று சாமி தரிசனம் செய்யலாம்.

சுப்ரபாத தரிசன கட்டணம்
திருப்பதி ஏழுமலையான் கோயிலில் தினசரியும் அதிகாலை 3 மணிக்கு திறக்கப்பட்டு 3.30 வரை சுப்ரபாத தரிசனம் நடக்கும். காலையில் சுவாமியை எழுப்புவதற்கு 2 அர்ச்சகர்கள், 2 ஊழியர்கள், தீப்பந்தம் பிடிக்கும் ஒருவர், வீணை வாசிக்கும் ஒருவர் என 6 பேர் சன்னதி முன்னால் உள்ள தங்க வாசலுக்கு வந்து சேருவார்கள். முதலில் துவார பாலகர்களுக்கு நமஸ்காரம் செய்வார்கள். பின்னர் அர்ச்சகர் ஒரு ஊழியரிடம் சாவியை வாங்கி சன்னதியை திறப்பார். பின்னர் சுவாமியை வணங்கிவிட்டு சன்னதி கதவை சாத்திவிட்டு உள்ளே செல்வார்கள். அந்நேரத்தில் "கௌசல்யா சுப்ரஜா ராம... என்ற சுப்ரபாதம் வெளியே நிற்கும் ஒரு குழுவினரால் பாடப்படும். இந்த சேவையை தரிசிக்க முன்பதிவு அவசியம் கட்டணம் 240 ரூபாயில் இருந்து 2500 ரூபாயாக உயர்த்தப்பட்டுள்ளது.

கல்யாண உற்சவம்
உற்சவரான மலையப்ப சுவாமிக்கும் ஸ்ரீதேவி, பூதேவிக்கும் திருமணம் நடத்தப்படும். பதினைந்தாம் நூற்றாண்டில் இருந்து இந்த திருமணம் நடந்து வருவதாக சொல்லப்படுகிறது. திருமண தடை உள்ள ஆண், பெண்கள் இந்த நிகழ்ச்சியில் முக்கியமாக கலந்துகொள்கிறார்கள். சுவாமிக்கும் தாயார்களுக்கும் மத்தியில் ஒரு திரை போடப் படும். பின்னர் அந்த திரை அகற்றப்பட்டு ஹோமங்கள் நடக்கும். ஒரு புரோகிதர் தாயார்களுக்கும் சுவாமிக்கும் திருமணம் செய்துவைப்பார். விழாக்காலங்களில் மட்டும் இந்த திருமணம் நிறுத்தி வைக்கப்படும். நிகழ்ச்சியில் பங்கேற்பவர்களுக்கு இரண்டு லட்டு, ஐந்து வடை, ஒரு பட்டு அங்கவஸ்திரம் மற்றும் ரவிக்கைத் துணி பிரசாதமாக தரப்படும். கல்யாண வைபவம் ஒருமணி நேரம் நடக்கும். பகல் 12 மணிக்கு திருமண உற்சவம் துவங்கும். திருமண சேவைக்கட்டணம் 1000 ரூபாயாக இருந்த நிலையில் தற்போது 2500 ரூபாயாக அதிகரிக்கப்பட்டுள்ளது.

வஸ்திரம் அலங்கார சேவை
வஸ்திரம் அலங்கார சேவைக்கான கட்டணம் 50 ஆயிரத்திலிருந்து ஒரு லட்சமாக உயர்த்தப்பட்டுள்ளது. கல்யாண உற்சவ சேவைக்கான கட்டணம் ஆயிரத்தில் இருந்து 2,500 ஆகவும், சுப்ரபாத தரிசன கட்டணம் ரூபாய் 240 இலிருந்து 2000 ஆகவும் உயர்த்தப்பட்டுள்ளது. ஏழுமலையான் அணியும் புடவை, 21 முழ நீளமும் 6 கிலோ எடையும் கொண்ட பட்டுப் பீதாம்பரமாகும். இந்த ஆடையை கடையில் வாங்க முடியாது. ஆனால், இதனை சாத்துவதாக ஒரு பக்தர் வேண்டிக்கொள்ளலாம். அவர், திருப்பதி தேவஸ்தான அலுவலகத்தில் உரிய கட்டணம் செலுத்த வேண்டும். வாரத்தில் ஒருமுறை வெள்ளிக்கிழமை அன்று மட்டும்தான் வஸ்திரம் சாத்துவார்கள். இது மேல் சாத்து வஸ்திரம். பணம் செலுத்திய பிறகு இப்படி வஸ்திரம் சாத்தப்படுவதைக் காண்பதற்கு அந்த பக்தர் மூன்று வருடங்கள் காத்திருக்க வேண்டும்.

கட்டண சேவைகள்
உள் சாத்து வஸ்திரம் சாத்தவும் உரிய கட்டணம் உண்டு. ஒவ்வொரு வெள்ளிக்கிழமையும் 15 வஸ்திரங்கள் சாத்துவதற்கு சமர்ப்பிக்கப்படும். பணம் செலுத்தியபிறகு இந்த உள் சாத்து வஸ்திரம் சாத்துவதைக் காண பத்து வருடங்கள் காத்திருக்க வேண்டும். பக்தர்கள் சமர்ப்பிக்கும் வஸ்திரங்கள் தவிர அரசாங்கம் சமர்ப்பிக்கும் சீர் வஸ்திரங்களும் ஆண்டுக்கு இரண்டுமுறை சாத்தப்படுகிறது.

பக்தர்கள் கலக்கம்
இந்நிலையில் ஏழுமலையானை தரிசிக்க வரும் பக்தர்கள் கூட்டம் அதிகரித்துள்ளதால் சில நாட்கள் காத்திருந்து தரிசனம் செய்ய வேண்டும் என்றும் அதற்கேற்ப முன்னேற்பாடுகளுடன் வரவேண்டும் என்றும் திருமலை திருப்பதி தேவஸ்தானம் அறிவித்துள்ளது. சேவைக்கட்டணங்கள் உயர்த்தப்பட்டுள்ளதால் பக்தர்கள் கலக்கமடைந்துள்ளனர்.
-
ஸ்டாலின் மீதிருந்த கோபம்.. தவெகவிற்கு தாவுகிறார் திமுகவின் இளம் நம்பிக்கை? பெரிய டீமும் போகுது -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா? -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
திடீரென டெல்லியில் டிஜிபி சந்தீப் ராய் ரத்தோர்.. அமித்ஷா – உள்துறை செயலாளருடன் சந்திப்பு.. பின்னணி -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
இன்பதுரை வெற்றி செல்லாது என்ற தீர்ப்பால் அடுத்து என்ன நடக்கும்? முன்னாள் சபாநாயகர் அப்பாவு விளக்கம்












Click it and Unblock the Notifications