Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

ஸ்ரீரங்கம் வைகுண்ட ஏகாதசி : நம்மாழ்வாருக்கு மோட்சம் அளித்த நம்பெருமாள் - பக்தர்கள் தரிசனம்

வைகுண்ட ஏகாதசி திருவிழாவின் ராப்பத்து விழாவின் முக்கிய நிகழ்ச்சியான நம்மாழ்வார் மோட்சம் இன்று நடைபெற்றது. இதில் ஏராளமான பக்தர்கள் பங்கேற்றனர்.

Subscribe to Oneindia Tamil

திருச்சி: ஸ்ரீரங்கம் ரங்கநாதர் ஆலயத்தில் வைகுண்ட ஏகாதசி விழாவின் நிறைவு நிகழ்ச்சியான நம்மாழ்வார் மோட்சம் நடைபெற்றது. நம்பெருமாளின் திருவடியில் நம்மாழ்வார் மோட்சம் பெற்ற நிகழ்வை ஏராளமான பக்தர்கள் கண்டு தரிசனம் செய்தனர்.

மகாவிஷ்ணுவின் 108 திவ்ய தேசங்களில் முதன்மையானது ஸ்ரீரங்கம் ரங்கநாதர் ஆலயம். பூலோக வைகுண்டம் என போற்றப்படும் ஸ்ரீரங்கம் ரங்கநாதர் கோவிலில் வைகுண்ட ஏகாதசி விழா கடந்த 3ஆம் தேதி திருநெடுந்தாண்டகத்துடன் தொடங்கியது.

விழாவின் முக்கிய நிகழ்ச்சியான சொர்க்கவாசல் திறப்பு ராப்பத்து உற்சவத்தின் முதல் நாளான 14ஆம் தேதி நடைபெற்றது. பரமபத வாசல் வழியாக நம்பெருமாள் எழுந்தருளினார். இராப்பத்து உற்சவத்தின் 7 ஆம் நாளன்று நம்பெருமாள் திருக்கைத்தல சேவை நடைபெற்றது.

தங்கக் குதிரை வாகனம்

தங்கக் குதிரை வாகனம்

ராப்பத்து விழாவின் 8 ஆம் நாளான்று திருமங்கை மன்னன் வேடுபறி வைபவம் கோயிலின் நான்காம் பிரகாரத்தின் கிழக்கில் உள்ள மணல்வெளியில் மிக விமர்சியாக நடைபெற்றது. பரமபதவாசல் திறப்பு கிடையாது. வேடுபறி நிகழ்ச்சியையொட்டி மாலை 5 மணிக்கு சந்தனு மண்டபத்தில் இருந்து நம்பெருமாள் தங்க குதிரை வாகனத்தில் புறப்பட்டு மாலை 5.30 மணிமுதல் மாலை 6 மணிவரை வையாளி வகையறா கண்டருளினார்.

தீர்த்தவாரி

தீர்த்தவாரி

ராப்பத்து உற்சவத்தின் 10ஆம் நாளான நேற்று நம்பெருமாள் தீர்த்தவாரி கண்டருளும் நிகழ்ச்சி நடைபெற்றது.
இதையொட்டி காலையில் மூலஸ்தானத்திலிருந்து நம்பெருமாள் புறப்பட்டு பரமபதவாசல் கடந்து சந்திரபுஷ்கரணியில் தீர்த்தவாரி கண்டருளினார். அங்கிருந்து புறப்பட்டு நண்பகல் 12 மணிக்கு திருமாமணி ஆஸ்தான மண்டபம் சென்றடைந்தார்.

நம்பெருமாள் தரிசனம்

நம்பெருமாள் தரிசனம்

நம்பெருமாள் நேற்றிரவு முழுவதும் ஆயிரங்கால் மண்டபத்தில் உள்ள திருமாமணி ஆஸ்தான மண்டபத்தில் எழுந்தருளி ஆழ்வார்கள், ஆச்சார்யர்களுடன் பக்தர்களுக்கு காட்சியளிப்பார். இன்று காலை 6 மணி முதல் காலை 7 மணி வரை உற்சவர் நம்பெருமாள் நம்மாழ்வாருக்கு மோட்சம் அளிக்கும் நிகழ்ச்சி ஆயிரங்கால் மண்டபத்தில் உள்ள திருமாமணி ஆஸ்தான மண்டபத்தில் நடைபெற்றது.

திருவடியில் சரணடைந்த நம்மாழ்வார்

திருவடியில் சரணடைந்த நம்மாழ்வார்

பரமபதவாசலுக்கு செல்லும் வழியில் ஒரு பக்தன் வேடத்தில் நம்மாழ்வார் வெள்ளை உடை உடுத்தி பன்னிரு நாமமும், துளசி மாலையும் தரித்து காட்சியளிப்பார். அதன்பின் நம்மாழ்வாரை அர்ச்சகர்கள் இருவர் கொண்டு சென்று ஆயிரங்கால் மண்டபத்தில் உள்ள திருமாமணி ஆஸ்தான மண்டபத்தில் எழுந்தருளியிருக்கும் நம்பெருமாள் திருவடியில் நம்மாழ்வாரின் நெற்றி படும்படி சரணாகதியாக படுக்கை வசத்தில் சமர்ப்பிப்பர்.

துளசி மாலை அணிந்த நம்பெருமாள்

துளசி மாலை அணிந்த நம்பெருமாள்

பின்னர் நம்மாழ்வாரை துளசியால் அர்ச்சகர்கள் பல்வேறு வேதங்கள் சொல்லியபடி மூடினர். அதன்பின் பல்வேறு வேதங்களை சொல்லியபடி நம்மாழ்வார் மீது மூடப்பட்டிருந்த துளசியை மெதுவாக அகற்றினர். பின்னர் நம்பெருமாள் முன் நம்மாழ்வாரை தூக்கி காண்பித்து மோட்சம் அடைந்ததாக தெரிவித்தனர். இதனையடுத்து நம்மாழ்வாருக்கு நம்பெருமாளுடைய கஸ்தூரி திலகமும், துளசிமாலையும் அணிவிக்கப்படும். இதை ஏராளமான பக்தர்கள் கண்டு தரிசனம் செய்தனர். பின்னர் காலை 8 மணிமுதல் காலை 9 மணிவரை உபயக்காரர் மரியாதையுடன் பக்தர்களுக்கு நம்பெருமாள் காட்சியளித்தார்.

வைகுண்ட ஏகாதசி விழா நிறைவு

வைகுண்ட ஏகாதசி விழா நிறைவு

திருமாமணி ஆஸ்தான மண்டபத்தில் இருந்து நம்பெருமாள் புறப்பட்டு படிப்பு கண்டருளி, ஆழ்வார், ஆச்சார்யர் மரியாதையாகி மூலஸ்தானம் சென்றடைந்தார். அதன் பின் மூலஸ்தானத்தில் இரவு இயற்பா பிரபந்தம் தொடங்கும். இன்று இரவு 9 மணிமுதல் நாளை அதிகாலை 2 மணிவரை சந்தனு மண்டபத்தில் இயற்பா பிரபந்த சேவை நடைபெறும். அதன் பின் அதிகாலை 2 மணி முதல் அதிகாலை 4 மணி வரை திருவாராதனம் வகையறாவும், அதிகாலை 4 மணி முதல் அதிகாலை 5 மணிவரை சாற்றுமறையும் நடைபெறும். அத்துடன் வைகுண்ட ஏகாதசி விழா நிறைவுபெறும்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+