Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

சுக்கிரன் பெயர்ச்சி பலன் 2022: மகர ராசியில் சனியுடன் கூட்டணி சேரும் சுக்கிரன்..கொட்டப்போகும் பணம்

Subscribe to Oneindia Tamil

சென்னை: நெருப்பு ராசியான தனுசு ராசியில் சூரியனுடன் பயணம் செய்யும் காதல் நாயகன் சுக்கிரன் வரும் வாரத்தில் இந்த ஆண்டின் இறுதியில் மகர ராசியில் சனியுடன் இணைந்து பயணம் செய்யப்போகிறார். இந்த கூட்டணி மற்றும் பயணத்தினால் மேஷம் முதல் மீனம் வரை 12 ராசிக்களுக்கும் கிடைக்கப்போகும் பலன்களைப் பார்க்கலாம்.

கிரகங்களின் கூட்டணி, சஞ்சாரத்தை வைத்து ராசிக்காரர்களுக்கு நன்மையும் தீமையும் நடைபெறும். சுக்ரன் களத்திரகாரகன் இல்லற வாழ்வுக்குறியவர். சுக்கிரன் மனைவி யோகம் தருபவர் ஆணுக்கு மனைவியைப்பற்றியும், பெண்ணுக்கு மண வாழ்க்கையைப் பற்றியும் சொல்லுகின்றவர். ஆகையால் சுக்கிரன் நமது ஜாதக கட்டத்தில் நல்ல யோக அம்சத்துடன் இருப்பது அவசியம். இவருடைய தசா காலமான 20 வருடங்களில் மிகப்பெரிய ராஜ யோக பலன்கள் உண்டாகும்.

சுக்கிரன் சிற்றின்பம், திருமணம் முதலான சுகத்தை ஆணுக்கு அளிப்பவர். அதே போல் பெண்களுக்கு நளினத் தன்மையையும் அழகான தோற்றம், கவர்ச்சி, வீரியசக்தி, அறிவாற்றல், மனத்துக்கிசைந்த கணவனை அடையும் தகுதியையும், சுக போகங்களில் திளைத்து மகிழும் ஆற்றலையும் வழங்குவார். சுக்கிரன் என்றால் இன்பம். மனித வாழ்க்கையில் அன்பு, பாசம், காதல் ஆகிய மூன்று இன்பங்களை அளிக்கக் கூடியவர். சுக்கிரன் சுக போகங்களின் அதிபதி. இந்த சுக்கிரன் பெயர்ச்சியால் மேஷம் முதல் மீனம் வரை 12 ராசிகளுக்கும் கிடைக்கப்போகும் பலன்களையும் பரிகாரங்களையும் பார்க்கலாம்.

மேஷம்

மேஷம்

சுக்கிரன் உங்கள் ராசிக்கு 10வது வீட்டில் தொழில் ஸ்தானத்தில் சஞ்சரிக்கப் போவதால் உங்கள் வேலையில், தொழிலில் உற்சாகத்தை ஏற்படுத்தும். வேலை செய்யும் இடத்தில் வார்த்தைகளில் கவனம் தேவை. அமைதியாக நிதானமாக பேசவும். கோபப்பட்டு பேசி நல்லதை கெடுத்துக்கொள்ள வேண்டாம். குடும்பத்தில் மனைவி அல்லது காதலியுடன் சின்னச் சின்ன ஊடல் ஏற்படலாம் சமாளியுங்கள். சனியுடன் பயணம் செய்யும் சுக்கிரன் நிறைய பண வரவைத் தருவார். வெள்ளிக்கிழமைகளில் பசுவிற்கு வெல்லம் வாங்கித்தர பாதிப்புகள் குறைந்து நன்மைகள் நடைபெறும். அம்மன் கோவில்களில் சந்தனம் தானம் செய்யலாம்.

ரிஷபம்

ரிஷபம்

ராசி அதிபதி சுக்கிரன், உங்கள் ராசிக்கு 9ஆவது வீடான பாக்ய ஸ்தானத்தில் சனியுடன் இணைந்து பயணம் செய்யப்போகிறார். பணத்தட்டுப்பாடு நீங்கும், வீட்டில் மனைவியின் அன்பான ஆதரவு கிடைக்கும். காதலி நண்பர்கள், உறவினர்களுடன் உற்சாகமாக இருக்கும் காலம் இது. காதலிப்பவர்களுக்கு இந்த மாதம் குதூகலமாக அமையும். வெளிநாடு யோகம் கைகூடி வருகிறது. பாஸ்போர்ட் எடுத்தவர்கள் விசாவிற்கு முயற்சி செய்யலாம். பணவரவும் அதிகரிக்கும். அப்பாவழியில் உதவி கிடைக்கும் சிவனுக்கு வெள்ளிக்கிழமைகளில் சந்தனம் அபிஷேகத்திற்கு வாங்கித்தரலாம். பசுமரத்திற்கு தண்ணீர் ஊற்றலாம்.

மிதுனம்

மிதுனம்

உங்க ராசிக்கு ஏழாம் வீட்டில் இருந்த சுக்கிரன் எட்டாம் இடத்தில் சனியுடன் மறையப்போகிறார். பண, விலை உயர்ந்த நகைகளை பத்திரமாக வைக்கவும். உங்க மனைவியின் உடல் நலத்தில் அக்கறை செலுத்தவும். இல்லாவிட்டால் மருத்துவ செலவுகள் எற்படும். பணத்தை யாருக்கும் கடன் கொடுக்க வேண்டாம். இருவருமே கவனமாக இருந்தால் பொருள், நகை பாதிப்பை தவிர்க்கலாம். விலை உயர்ந்த பொருட்களை பத்திரப்படுத்துங்கள். பணத்தை பத்திரப்படுத்துங்கள் விலை உயர்ந்த நகைகளை யாருக்கும் இரவல் கொடுக்க வேண்டாம். வெள்ளிக்கிழமை அம்மாவிற்கு வெள்ளிப்பொருட்கள் வாங்கி பரிசளித்து ஆசிர்வாதம் பெறலாம்.

கடகம்

கடகம்

காதல் நாயகன் சுக்கிரன் உங்கள் ராசிக்கு 7ஆம் இடத்தில் களத்திர ஸ்தானத்தில் சனி, புதன் உடன் அமரப்போவதால் வாழ்க்கை துணை உடனான காதல் உணர்வுகள் அதிகரிக்கும். சுக்கிரன் பார்வை உங்கள் ராசிக்கு கிடைப்பதால் சிலருக்கு காதல் கணிந்து திருமணத்திலும் முடிய வாய்ப்பு உள்ளது. தொழில் விசயத்தில் ஜாக்கிரதையாக இருக்கவும். சிறிய அளவில் உடல்நலக்குறைவு ஏற்படும். பெண்கள் விசயத்தில் சற்று கவனமாக இருக்கவும். இல்லை எனில் சமூகத்தில் மதிப்பு மரியாதைக்கு பிரச்சினை ஏற்பட்டு விடும். சுக்கிரனால் சுகங்கள் ஏற்பட வெள்ளிக்கிழமைகளில் சுக்கிர ஓரையில் விளக்கேற்றி வழிபடலாம்.

சிம்மம்

சிம்மம்

சுக்கிரன் உங்கள் ராசிக்கு 6வது இடத்தில் மறைவதால் உங்கள் உடல் நலனையும் பாக்கெட்டில் உள்ள பணத்தையும் பத்திரமாக பார்த்துக்கொள்ளவும். வீட்டில் வாழ்க்கைத்துணையினால் சின்னச்சின்ன சச்சரவுகள், ஊடல்கள் ஏற்பட்டு அதனால் சிலருக்கு மன அழுத்தம் ஏற்படும். உடல் ஆரோக்கியத்தில் கவனம் தேவை. வேலை பார்க்கும் இடத்தில் கடும் உழைப்பை கொடுக்க வேண்டிய காலமிது. கவலைகள், சங்கடங்கள் சூழும் காலம் என்பதால் ஸ்படிக மாலை அணிந்து கொள்வது நல்லது. மாணவர்கள் படிப்பில் அக்கறை காட்டுவது அவசியம். வெள்ளிக்கிழமை அம்பிகையை வணங்க நன்மைகள் நடைபெறும்.

கன்னி

கன்னி

உங்க ராசி நாதன் சுக்கிரன் பூர்வ புண்ணிய ஸ்தானத்திற்கு பெயர்ச்சி அடைவதால் குழந்தைகளுக்கு சுப காரியங்கள் நடைபெறும். குழந்தைகளுக்கு வேலைகள் கிடைக்கும். வாழ்க்கையில் செட்டில் ஆவார்கள். பொருளதார நிலை உயரும். படிப்பில் நாட்டம் அதிகரிக்கும். திருமணமாகாத பிள்ளைகளுக்கு நல்ல வரன் தேடி வரும். பூர்வீக சொத்துக்களின் பாக பிரிவினையில் இருந்த பிரச்சினைகள் நீங்கும். ஆசைகள் நிறைவேறும். குடும்பத்தில் இருந்த பிரச்சினைகள் நீங்கும். கணவன் மனைவிக்குள் அன்பும் நெருக்கமும் அதிகரிக்கும். வெற்றிகரமான கால கட்டம் இது. நண்பர்களுடன் கூட்டணி அமைத்து தொழில் செய்வீர்கள்.பணவரவு அதிகரிக்கும். காசு மேல காசு வந்து கொட்டுகிற நேரமிது. குழந்தைகள் மீது அன்பும் பாசமும் அதிகரிக்கும். வாழ்க்கைத் துணைவர் உங்கள் மீது காதல் மழை பொழியும் நேரமிது. வெள்ளிக்கிழமை அம்மன் கோவில்களில் விளக்கேற்ற மேலும் நன்மைகள் நடைபெறும்.

துலாம்

துலாம்

சுக்கிரன் நான்காம் வீடான சுகஸ்தானத்தில் பயணம் செய்யப்போவதால் நினைத்த காரியங்கள் நிறைவேறும். செயல்களால் புகழ் அடைவீர்கள். வீட்டிற்குத் தேவையான பொருட்கள் வாங்குவீர்கள். புதிய வீடு கட்டுபவர்களுக்கு லோன் கிடைக்கும். ஆண்கள் பெண்களுக்கு உடல் நலத்தில் அக்கறை காட்டுங்கள் மருத்துவ செலவுகளுக்கு கடன்கள் ஏற்படும். வம்பு வழக்கு பிரச்சினையால் அலைச்சல் அதிகமாகும். பணியிடத்தில் இருந்த பிரச்சினை விலகும். வேலைப்பளு குறையும் மேலதிகாரிகளின் பாராட்டு கிடைக்கும். அம்மாவின் உடல் ஆரோக்கியத்தில் அக்கறை தேவை. வண்டி வாகனம் வாங்கும் போது மட்டும் கவனமாக வாங்க வேண்டும் இல்லை எனில் செலவு இழுத்து விட்டு விடும். வெள்ளிக்கிழமைகளில் சில ஆலயங்களில் அம்மனுக்கு மல்லிகை, முல்லை பூக்களை வாங்கித் தர நன்மைகள் நடைபெறும்.

விருச்சிகம்

விருச்சிகம்

களத்திர ஸ்தான அதிபதியும் விரைய ஸ்தான அதிபதியுமான சுக்கிரன் உங்கள் ராசிக்கு 3ஆம் இடமான முயற்சி ஸ்தானத்தில் அமரப்போகிறார். செய்யும் முயற்சிகளில் வெற்றி கிடைக்கும். தங்கைகளுக்கு வரன் கூடி வரும் திருமணத்தை சிறப்பாக நடத்துவீர்கள். தொலைந்த விலை உயர்ந்த பொருட்கள் கிடைக்கும். அண்டை அயலாருடன் இருந்த பிரச்சினைகள் தீரும். பிள்ளைகள் தீய பழக்க வழக்கங்களுக்கு ஆளாக நேரிடும். மகளின் திருமணத்தை சற்றே தள்ளிப்போடுவது நல்லது. பூர்வீக சொத்துக்களில் பாகப்பிரிவினைகள் ஏற்படும். காதல் ஜோடிகள் கவனமாக இருக்கவும். வெள்ளிக்கிழமை மகாலட்சுமி தாயாரை விளக்கேற்றி வழிபட நன்மைகள் நடக்கும். சிவன் கோவிலுக்கு சென்று சந்தனம் வாங்கித் தர பாதிப்புகள் குறையும்.

தனுசு

தனுசு

சுக்கிரன் உங்கள் ராசியில் இருந்து இரண்டாவது வீட்டிற்கு பயணம் செய்யப்போகிறார். தன ஸ்தான சுக்கிரனால் பண வருமானம் அதிகாிக்கும். குடும்பத்தில் சுப நிகழ்ச்சிகள் நடைபெறும். கணவன் மனைவிக்கு இடையே காதல் உணர்வுகள் அதிகரிக்கும். திருமண வயதில் இருப்பவா்களுக்கு திருமண பாக்கியம் கிடைக்கும். திருமணமானவர்களுக்கு புத்திர பாக்கியம் கைகூடி வரும். பெண்கள் விலை உயர்ந்த நகைகள் பணம் வாங்குவீர்கள். சனிக்கிழமைகளில் ஆஞ்சநேயர் கோவிலுக்கு சென்று செந்தூரம் வாங்கி தந்து வழிபட மேலும் நன்மைகள் நடைபெறும்.

மகரம்

மகரம்

காதல் நாயகன் சுக்கிரன் உங்கள் ராசியில் சனியுடன் குடியேறப்போகிறார். சிலருக்கு வயிற்றில் பிரச்சினைகள் வரலாம் என்பதால் ஆரோக்கியமான உணவுகளை மட்டுமே சாப்பிட வேண்டும். இல்லாவிட்டால் வயிறு கோளாறுகள் வந்துவிடும். நல்ல வருமானம் வரும். பொன்னும் பொருளும் சேரும் நேரம் இது. தங்க நகைகள் வாங்கலாம். ஆடம்பரமான பொருட்களை வாங்குவதால் சுப செலவுகள் ஏற்படும். மாணவர்களுக்கு மேற்படிப்பு படிக்க வழி ஏற்படும். கணவன் மனைவி இடையே காதல் உணர்வுகள் அதிகரிக்கும். வெள்ளிக்கிழமைகளில் அம்மன் கோவிலுக்கு சென்று சிவப்பு ரோஜா வைத்து வணங்கி வர நன்மைகள் மேலும் அதிகரிக்கும்.

கும்பம்

கும்பம்

உங்கள் ராசிக்கு விரைய ஸ்தானமான 12வது வீட்டில் சுக்கிரன் குடியேறப்போகிறார். பண வரவு அதிகரிக்கும்.சுப விரைய செலவுகள் ஏற்படும். வீட்டிற்குத் தேவையான டிவி பிாிட்ஜ் ஏசி பொருட்கள் வாங்கலாம். குடும்பத்தில் சுப நிகழ்ச்சிகள் நடைபெறும். கணவன் மனைவி இடையே உற்சாகம் அதிகரிக்கும். குடும்பத்தில் ஒற்றுமை அதிகரிக்கும். வாழ்க்கை துணையுடன் அந்நியோன்னியம் அதிகரிக்கும். பணவரவு சிலருக்கு உற்சாகத்தை தரும். பணம் வரும் போது பத்திரப்படுத்துங்கள். சிலருக்கு வெளிநாட்டு வாய்ப்பை எற்படுத்தி கொடுக்கும். படிப்புக்காக சிலர் வெளிநாடு செல்வார்கள். வெள்ளிக்கிழமைகளில் சிவ ஆலயத்திற்கு அபிஷேகத்தில் பால் வாங்ககிக் கொடுக்கலாம்.

மீனம்

மீனம்

உங்க முயற்சி ஸ்தான அதிபதி சுக்கிரன் உங்க ராசிக்கு 11வது வீடான லாப ஸ்தானத்தில் அமரப்போகிறார். அரசனுக்கு இணையான வாழ்க்கை கிடைக்கும் காலமாகும். திருமண வாழ்க்கையில் உற்சாகமடைவீர்கள். மகிழ்ச்சியடையும் வகையில் பல செயல்கள் நடைபெறும் மாதம் இது. பண வருவாய் அதிகாிக்கும். பிள்ளைகள் வழியில் சிறப்பான பலன்களை எதிா்பாா்க்கலாம். வீடு நிலம் வகையில் ஆதாயம் கிடைக்கும். வாகன வசதி மேம்படும். சிலருக்கு குழந்தை பாக்கியம் கிடைக்கும். வெள்ளிக்கிழமை அம்மன் கோவிலுக்கு சென்று விளக்கேற்றி வர நன்மைகள் நடக்கும்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+