சுக்கிரன் பெயர்ச்சி.. கொட்டித்தரப்போகும் சுக்கிரன்..அதிர்ஷ்டத்தை அனுபவிக்கப்போகும் ராசிக்காரர்கள்
சுக்கிரன் தனது ராசியான ரிஷபத்தில் ஆட்சி பெற்று அமர்ந்து யோகத்தை தரப்போகிறார். மேஷம் முதல் மீனம் வரை 12 ராசிக்காரர்களுக்கும் என்ன மாதிரியான பலன்கள் கிடைக்கும் என்று பார்க்கலாம்.
சென்னை: நவகிரகங்களில் சுக்கிரன் சுகத்தை தரக்கூடியவர். இன்று முதல் ரிஷப ராசியில் ஆட்சி பெற்று அமர்ந்துள்ள சுக்கிரனால் மேஷம் முதல் மீனம் வரை எந்த ராசிக்காரர்களுக்கு என்ன மாதிரியான பலன்கள் கிடைக்கும். சுக்கிரன் தரும் யோகத்தால் என்ன மாதிரியான அதிர்ஷ்டம் கிடைக்கப்போகிறது என்றும் பார்க்கலாம்.
சுக்கிரன் ரிஷப ராசியின் அதிபதி. இந்த ராசியில் அமர்ந்துள்ள சுக்கிரன் சந்திரனுடன் இணையும் போது சில மாற்றங்களை ஏற்படுத்துவார். புதனோடு சேர்ந்து பயணிக்கும் காலத்தில் சில அதிர்ஷ்டங்களைத் தரப்போகிறார்.
சுகங்களை அள்ளித் தருவதில் சுக்கிரனுக்கு நிகர் சுக்கிரன்தான். சுக்கிரன் மற்ற கிரகங்களுடன் சேர்ந்திருக்கும்போது பலன்கள் மாறுபடும். இன்று முதல் இன்னும் சில வாரங்கள் ரிஷப ராசியில் பயணிக்கும் சுக்கிரன் தரும் பலன்களைப் பார்க்கலாம்.

மேஷம்
தனம், குடும்பம், வாக்கு ஸ்தானத்தில் பயணிக்கும் சுக்கிரனால் உங்களுக்கு யோகங்கள் அதிகரிக்க வாய்ப்பு உள்ளது. தன வருமானம் கூடும். பொருளாதார வளம் அதிகரிக்கும். வார்த்தைகளுக்கு மதிப்பு மரியாதை கூடும். இனிமையான வார்த்தைகளைப் பேசுங்கள். கடும் வார்த்தைகள் வேண்டாம்.

ரிஷபம்
ராசியில் அமரும் சுக்கிரனால் முகப்பொலிவு கூடும். அழகு சாதன பொருட்களை அதிகரிகரிப்பீர்கள். நட்பு வட்டாரம் அதிகரிக்கும். ஆளுமைத்திறமை அதிகரிக்கும். உங்கள் நட்பு வட்டத்தில் சிறப்பு கவனம் செலுத்தி நல்ல நண்பர்களிடம் மட்டும் பழகுங்கள்.

மிதுனம்
நீங்கள் பணத்தை செலவழித்து வெளிநாட்டு பயணத்தை அனுபவிக்க வேண்டியிருக்கும். நீங்கள் எங்காவது சுற்றுலா செல்ல திட்டமிட்டிருந்தால், இது அதற்கு உகந்த நேரம். ஆன்மீக பயணங்களும் அதிகரிக்கும். ஆலய தரிசனம் செய்வீர்கள்.

கடகம்
மனதில் உற்சாகமாக இருப்பீர்கள். மூத்த சகோதரியின் ஆதரவைப் பெறுவீர்கள். பெண்களுடன் எச்சரிக்கையுடன் இருங்கள். சண்டை சச்சரவு நீங்கும். உடல் ஆரோக்கியத்தில் கவனம் தேவை. நேரம் தவறி சாப்பிடுவதை தவிர்க்கவும்.
தொழில் வியாபாரத்தில் அதிகரிக்கும். திடீர் பண வரவு வந்து திக்குமுக்காட வைக்கும்.

சிம்மம்
சிம்ம ராசிக்காரர்களுக்கு வேலையில் உற்சாகம் ஏற்படும். புதிய உத்திகளைப் பயன்படுத்துவீர்கள். புதிய வேலைக்கு முயற்சி செய்வீர்கள். வேலையில் புரமோசன் கிடைக்கும். உங்களுக்கு இந்த காலத்தில் அதிக வெற்றிகள் கிடைக்கும்.

கன்னி
பாக்ய ஸ்தானத்தில் அமரும் சுக்கிரனால் கன்னி ராசிக்காரர்களுக்கு அதிர்ஷ்டம் அதிகரிக்கும். தடைபட்ட காரியங்கள் வெற்றிகரமாக முடிவடையும். பதவி உயர்வும் இந்த காலகட்டத்தில் ஏற்படும். தாய்வழி உறவினர்களுடன் தகராறு வேண்டாம். மன நிம்மதியும் சந்தோஷமும் அதிகரிக்கும். அப்பா வழி உறவுகளினால் ஆதாயம் ஏற்படும்.

துலாம்
ராசிநாதன் சுக்கிரன் எட்டாம் வீட்டில் பயணம் செய்கிறார். பண விஷயங்களில் கவனம் தேவை. எதிர்காலத்திற்காக அதிகம் திட்டமிடுவீர்கள். உங்களின் ஆரோக்கியத்தில் அதிக கவனம் செலுத்துங்கள்.

விருச்சிகம்
ராசிநாதன் சுக்கிரன் ஏழாம் வீட்டில் பயணம் செய்கிறார். இந்த ராசிக்காரர்கள் நல்லவர்களை சந்திப்பார்கள். பழைய நண்பர்களையும் சந்திக்க நேரிடும். புதிய உறவுகள் தேடி வரும். அலுவலகத்தில் பதவி உயர்வு கிடைக்கவும் வாய்ப்பு உள்ளது. சம்பள உயர்வும் அதிகரிக்கும்.

தனுசு
தனுசு ராசிக்காரர்களே, வேலை தொழிலில் பதவி உயர்வும் சம்பள உயர்வும் கிடைக்கும். திடீர் இடமாற்றம் ஏற்படும். வேலை செய்யும் இடத்தில் பளு அதிகரிக்கும். கடுமையாக உழைப்பீர்கள். உற்சாகமான மனநிலையில் இருப்பீர்கள்.

மகரம்
சுறுசுறுப்புக்கு சொந்தக்காரர் நீங்கள். உற்சாகமாக இருப்பீர்கள். எண்ணம் போல வாழ்க்கை என்பது போல நல்ல மனதிற்கு ஏற்ப நல்ல செய்திகள் தேடி வரும். பிள்ளைகள் மூலம் சுப காரியங்கள் நடைபெறும். நடக்கும் காரியங்கள் நற்காரியங்களாக அமையும்.

கும்பம்
சுக்கிரன் உங்கள் ராசிக்கு நான்காம் வீட்டில் சுக ஸ்தானத்தில் பயணம் செய்வது யோகமான கால கட்டம். வேலை தேடுபவர்களுக்கு நல்ல வேலை கிடைக்கும். தொழிலதிபர்களுக்கு இது நல்ல நாள். ஆடைகள் வாங்கவும் வீட்டினை அழகு படுத்தவும் அக்கறை காட்டுவீர்கள். ஆடம்பர பொருட்களை வாங்குவீர்கள்.

மீனம்
முயற்சி ஸ்தானத்தில் பயணம் செய்யும் சுக்கிரனால் புது முயற்சிகளுக்கு வெற்றி கிடைக்கும். வாழ்க்கை துணை மூலம் உதவிகள் கிடைக்கும். கணவன் மனைவி இடையே நெருக்கம் கூடும். நற்காரியங்கள் அதிகம் நடைபெறும் மாதமாக இந்த சுக்கிரப்பெயர்ச்சி தரப்போகிறது.
-
அமெரிக்காவால் ஈரானுக்கு தங்க புதையல்.. ஹார்முஸ் ஜலசந்தியில் கப்பல்களுக்கு டோல்கேட்.. பெரிய திட்டம் -
கண்ட்ரோல் எடுத்த அமித் ஷா.. பவர் போன எடப்பாடி.. இனி டெல்லி தர்பார்.. அதிமுகவின் பிடி நழுவுகிறது? -
Magaram: சிகரத்தில் ஏறப்போகும் மகர ராசியினர்.. எதிர்பாராத அதிர்ஷ்டம் காத்திருக்கு -
என்னது தனித்து போட்டியா? உங்க சீட்டே வேண்டாம்.. விஜய் முடிவால் தெறித்து ஓடும் தவெக நிர்வாகிகள் -
1 மணி ஃப்ளைட்.. இரவே வீடியோ கால்.. தாமரையில் போட்டியிடுங்க.. டிடிவி, அன்புமணிக்கு அமித் ஷா செக்? -
மணிக்கணக்கில் வெயிட்டிங்.. இரவில் எடப்பாடி கே.பழனிசாமியை அதிர வைத்த அமித் ஷாவின் உளவுத்துறை அறிக்கை -
6 + 1 முடிந்த டீல்? திமுக கூட்டணியில் விசிகவுக்கு எத்தனை தொகுதி? திருமாவை சமாதானம் செய்த ஸ்டாலின் -
ஒரு தொகுதிக்கு ஒருவர்.. புஸ்ஸி ஆனந்த் பரிந்துரை கட்டாயம்.. விஜய் செய்யும் புது வகையான நேர்காணல்! -
ஈரானிடம் மண்டியிடும் அமெரிக்கா.. கச்சா எண்ணெய் மீதான தடையை நீக்க முடிவு.. அடிபணிந்த டிரம்ப் -
VCK: 10+1 கேட்டு விசிக விடாபிடி! திருமாவளவன் பிடிவாதத்தின் பின்னணி என்ன? இறங்கி வரும் ஸ்டாலின்? -
அமெரிக்கா.. இந்த ஒற்றைச் சொல்.. இனி உலகத்தை ஆட்டிப்படைக்காது.. வீழும் சாம்ராஜ்ஜியம்.. என்ன நடக்குது? -
அண்ணாமலை + நயினார் + வானதி.. தோல்வி பயத்தில் தொகுதி மாற தயாராகும் பாஜக தலைவர்கள்.. இத்தனை பேரா?












Click it and Unblock the Notifications