சுபகிருது தமிழ் புத்தாண்டில் யாருக்கெல்லாம் கல்யாண யோகம் தேடி வரும் தெரியுமா?
சுபகிருது தமிழ் புது வருடம் பிறக்கப் போகிறது. இந்த தமிழ் புத்தாண்டில் சிம்மம், கன்னி,துலாம், விருச்சிகம் ராசிக்காரர்களுக்கு எப்படி இருக்கப் போகிறது என்று பார்க்கலாம்.
சென்னை: தமிழ் புத்தாண்டு சுபகிருது புது வருடம் ஏப்ரல் 14ஆம் தேதி பிறக்க உள்ளது. தமிழ் புத்தாண்டு சுபகிருது வருடம் பிறக்கப்போகிறது. 60 தமிழ் வருடங்களில் சுபகிருது வருடம் 36வது ஆண்டாகும். புத்தாண்டில் நவ கிரகங்களின் சஞ்சாரம் இடப்பெயர்ச்சியால் சிம்மம், கன்னி, துலாம், விருச்சிகம் ராசிகளில் பிறந்தவர்களுக்கு என்ன மாதிரியான பலன்கள் கிடைக்கும், யாருக்கெல்லாம் கல்யாண யோகம் தேடி வரும் பரிகாரம் என்ன செய்யலாம் என்று பார்க்கலாம்.
சுபகிருது என்றாலே நற்செய்கை என்று பொருள். தமிழ் புத்தாண்டில் ஆண்டு கோள்களில் சுப கிரகமான குரு பகவான் மீன ராசியில் ஆட்சி பெற்று பயணம் செய்ய உள்ளார். சனிபகவான் மகரம், கும்பம் ராசியிலும் பயணம் செய்வார். ராகு மேஷ ராசியிலும் கேது துலாம் ராசியிலும் பயணம் செய்வார்கள். சனிபகவான் சித்திரை மாதம் 16ஆம் தேதி ஏப்ரல் 29ஆம் தேதி வெள்ளிக்கிழமையன்று காலை 7.54 மணிக்கு அதிசாரமாக மகர ராசியில் இருந்து கும்ப ராசிக்கு இடப்பெயர்ச்சி ஆகிறார். ஆனி 28ஆம் தேதி ஜூலை 27ஆம் தேதியன்று செவ்வாய்கிழமை வக்ர கதியில் மீண்டும் மகர ராசிக்கு திரும்புகிறார்.
திருக்கணித பஞ்சாங்கப்படி 2023ஆம் ஆண்டு ஜனவரி 17ஆம் தேதி நேர்கதியில் சனிபகவான் கும்ப ராசிக்கு இடப்பெயர்ச்சி அடைகிறார். மாத கோள்களின் சஞ்சாரத்தை பார்த்தால் ஏப்ரல் 14ஆம் தேதி சூரியன் மேஷ ராசியில் தனது பயணத்தை தொடங்க, கூடவே, புதன், ராகு இணைந்திருக்கின்றனர். சிம்ம ராசியில் சந்திரன், செவ்வாய் சுக்கிரன் கும்ப ராசியிலும் பயணம் செய்கின்றனர். இந்த கிரகங்களின் பயணத்தால் என்ன பலன்கள் கிடைக்கப் போகிறது என்று பார்க்கலாம்.

சிம்மம்
சிம்ம ராசிக்காரர்களே உங்கள் ராசியில் உயர்வும் வளர்ச்சியும் அதிகரிக்கும். தைரியம் தன்னம்பிக்கை கூடும். கடன் பிரச்சினை நீங்கும். அரசியலில் இருப்பவர்களுக்கு புதிய மாற்றங்கள் ஏற்படும். செல்வ செழிப்பு ஏற்படும். சுப காரியங்கள் அதிகம் நடைபெறப்போகிறது. குரு பகவானின் பார்வை விரைய ஸ்தானம், குடும்ப ஸ்தானம், சுக ஸ்தானங்களின் மீது விழுவது அதிர்ஷ்டத்தை தரும். பூர்வீக சொத்துக்கள் மூலம் லாபம் அதிகரிக்கும். கடன் பிரச்சினைகள் தீரும் புதிய கடன்கள் வாங்கலாம். வீடு சொத்து வாங்குவதற்கு கடன் பெறலாம். வியாபாரம் செய்பவர்களுக்கு நல்ல லாபம் கிடைக்கும். அடுத்தவர்களை நம்பி தொழில் வியாபாரத்தை ஒப்படைப்பதை தவிர்க்கவும். சனி பகவான் ஆறாம் வீடான ருண ரோக சத்ரு ஸ்தானத்தில் பயணம் செய்கிறார். பொருளாதாரத்தில் ஓரளவு லாபம் கிடைத்தாலும் சுப செலவுகள் அதிகரிக்கும். வாகன பயணங்களில் கவனமாக இருப்பது நல்லது. குலதெய்வ வழிபாடு அடிக்கடி செய்து வர பாதிப்புகள் குறையும் தொழிலில் நல்ல வருமானமும் லாபமும் கிடைக்கும். சனிபகவான் ஏப்ரல் மாதத்தில் கும்ப ராசிக்கு அதிசாரமாக செல்வது இந்த இடங்களை கண்டச்சனி காலமாகும். குடும்பத்தில் இருப்பவர்கள் சண்டை சச்சரவுகளைத் தவிர்க்கவும். சகோதரர்களுடன் சொத்துப் பிரச்சினைகள் ஏற்படும். விட்டுக்கொடுத்து செல்வது நல்லது. குழந்தை இல்லாதவர்களுக்கு புத்திர பாக்கியம் கிடைக்கும். மின்சாரம் நெருப்பு போன்றவற்றில் கவனமாக இருப்பது நல்லது குடும்பத்தில் சுபகாரியங்கள் நடைபெறுவதற்கு நல்ல ஆண்டாக அமைந்துள்ளது. பணத்தட்டுப்பாடு நீங்கும். புதன்கிழமைகளில் ஸ்ரீசக்கரத்தாழ்வாருக்கு நெய் தீபம் ஏற்றி வழிபடலாம் ஞாயிற்றுக்கிழமைகளில் ராகு காலத்தில் லட்சுமி நரசிம்மரை வழிபடலாம் அதேபோல சரபேஸ்வரரை வழிபட பாதிப்புகள் நீங்கும். துர்க்கை அம்மனை வெள்ளிக்கிழமைகளில் வேப்ப எண்ணெய் தீபம் ஏற்றி வழிபடலாம் பசுவுக்கும் பைரவருக்கும் தினமும் உணவுப் பொருட்களில் கொடுக்கம் பாதிப்புகள் நீங்கும். மொத்தத்தில் சுபகிருது வருடம் அற்புதங்கள் நிறைந்த ஆண்டாக அமைந்துள்ளது.

கன்னி
புதன் பகவானை ராசி அதிபதியாகக் கொண்ட கன்னி ராசிக்காரர்களே, உங்கள் ராசி அதிபதி புதன் சூரியனுடன் இணைந்து பயணம்செய்கிறார். வேலையில் இருந்த சிக்கல்கள் நீங்கும். நிறைய சாதிக்கப் போகிறீர்கள்.
குருபகவான் உங்கள் ராசிக்கு ஏழாம் வீட்டில் பயணம் செய்வது சிறப்பான பலன்களை கொடுக்கும். குரு பகவானின் பார்வையும் உங்களுடைய ராசிக்கு கிடைக்கிறது நேரடியான குரு பார்வையால் களத்திர ஸ்தானத்தில் உள்ள குரு உங்களுக்கு குடும்பத்தில் உள்ள சிக்கல்களை தீர்க்கும். குடும்பத்தை விட்டு பிரிந்து வாழ்ந்தவர்கள் மீண்டும் குடும்பத்தோடு இணைய வாய்ப்புள்ளது கணவன் மனைவி இடையேயான பிரச்சனைகள் முடிவுக்கு வரும். நல்லதொரு தமிழ் புத்தாண்டு பிறப்பதால் வரவேற்க தயாராகுங்கள். வேலையில் இருந்த பிரச்சினைகள் முடிவுக்கு வரும். அலுவலகத்தில் உயர் அதிகாரிகளின் ஆதரவு கிடைக்கும். இளைய சகோதரர்களின் மூலம் உதவிகள் தேடி வரும். குரு பலம் வந்திருப்பதால் திருமண சுப காரியம் கை கூடி வரப்போகிறது. ஒரு புதிய சொத்துக்களை வாங்குவதற்கு வாய்ப்பு கைகூடி வருகிறது. சிலருக்கு நல்ல வேலை மாற்றங்கள் ஏற்படும். சனி பகவான் ஐந்தாம் இடம் பூர்வ புண்ணிய ஸ்தானம் பலமாக பயணம் செய்கிறார். வெளியூர் பயணங்களால் நன்மைகள் ஏற்படும். வெளிநாட்டில் வேலை கிடைக்கும் வாய்ப்பு கை கூடி வரும். புதிய அளவில் புதிதாக தோட்டம் வீடு நிலம் வாங்க வாய்ப்பு உள்ளது. பேச்சைக் குறைத்து செயலை அதிகரிக்க வேண்டும். மொத்தத்தில் இந்த தமிழ் புத்தாண்டு சுபங்கள் நிறைந்த யோகமான தமிழ் புத்தாண்டாக அமைந்துள்ளது.

துலாம்
சுக்கிரனை ராசி அதிபதியாகக் கொண்ட துலாம் ராசிக்காரர்களே உங்கள் ராசிக்கு இந்த ஆண்டு நவ கிரகங்களின் சஞ்சாரம் சாதகமாக உள்ளது. சமூகத்தில் மதிப்பு மரியாதை கூடும். சுபங்களை தரக்கூடிய ஆண்டாக அமைந்துள்ளது. வாழ்க்கையும் உயர்வும் மகிழ்ச்சியும் வரப்போகிறது. ராசியில் கேது ஏழாம் வீட்டில் ராகு, ஐந்தாம் வீட்டில் ராசி அதிபதியுடன் செவ்வாய் இணைந்துள்ளார். ஏழாம் வீட்டில் சூரியன், புதன் ராகு இணைந்திருப்பது சிறப்பு. மாணவர்களுக்கு மருத்துவக் கல்வி படிக்க வேண்டும் என்று நினைப்பவர்களுக்கு சிறப்பான ஆண்டு. நல்ல வாய்ப்புகள் வந்து வாசல் கதவைத் தட்டும் போது பயன்படுத்திக்கொள்ளுங்கள். விழிப்புடன் இருந்தலே தடைகள் நீங்கி காரிய வெற்றி உண்டாகும். மாணவர்களுக்கு கல்லூரி கல்வி படிப்பதில் இருந்த தடைகள் விலகப்போகிறது. அம்மாவின் உடல் ஆரோக்கியத்தில் ஏற்பட்ட பிரச்சினைகள் முடிவுக்கு வரும். உடல் ஆரோக்கியத்தில் கவனம் செலுத்துவது அவசியம். சரியான நேரத்தில் சத்தான உணவுகளை சாப்பிடுங்கள் உடல் ஆரோக்கியத்தில் இருந்த பிரச்சினைகள் நீங்கும். பெண்களுக்கு சுறுசுறுப்பு கூடும். அலுவலகத்தில் புரமோசன் கிடைக்கும். மன ஆசைகள் நிறைவேறும் காதல் கைகூடும். காதலிப்பவர்களுக்கு திருமணம் கை கூடி வரும். தொழில் வியாபாரம் செய்வீர்கள் சாதிக்கப் போகிறீர்கள். தினசரியும் விநாயகரை வழிபட பாதிப்புகள் குறையும் நன்மைகள் நடைபெறும். வாய்ப்புகள் வந்து வாசல் கதவைத் தட்டும்.

விருச்சிகம்
செவ்வாய் பகவானை ராசி அதிபதியாகக் கொண்ட விருச்சிக ராசிக்காரர்களே, பூர்வ புண்ணிய ஸ்தானத்தில் குரு பகவான் ஆட்சி பெற்று அமர்ந்திருப்பது சிறப்பு. வெற்றி மீது வெற்றிகள் வந்து சேரப்போகிறது. கண்ணுக்கு எட்டிய தூரம் வரைக்கும் எதிரிகளே இல்லை என்ற நிலை உருவாகும். குருபகவானின் பார்வையால் பண மழை பொழியப்போகிறது. சமுதாயத்தில் இதுநாள் வரை இருந்த பிரச்சினைகள் முடிவுக்கு வரும். புதிய தொழில் தொடங்கலாம். உங்கள் ராசிக்கு தன காரகனின் பார்கை கிடைப்பதால் பாக்கெட்டில் பணம் நிறையும் அளவிற்கு பணப்புழக்கம் உண்டாகும். அலுவலகத்தில் பதவி உயர்வு தேடி வரும். சம்பள உயர்வும் கிடைக்கும். கௌவரவம் அந்தஸ்த்தும் தேடி வரப்போகிறது. மாணவர்களுக்கு உயர்கல்வி யோகம் தேடி வரும். அதிர்ஷ்டமான ஆண்டாக அமையப்போகிறது. நினைத்த கல்லூரிகளில் படிக்க வாய்ப்பு தேடி வரப்போகிறது. தொழில் வியாபாரத்தில் புதிய யுக்தியை புகுத்தி வெற்றி பெறுவீர்கள். சுப காரியங்களுக்காக கடன் வாங்குவீர்கள். கோச்சார ரீதியாக குருபலன் கை கூடி வந்துள்ளது. திருமண பந்தத்தில் அடி எடுத்து வைக்கப் போகிறீர்கள். மகாலட்சுமி யோகம் தேடி வரும் செல்வ நிலை உயரப்போகிறது. நோய்கள் நீங்கி ஆரோக்கியம் அதிகரிக்கப் போகிறது. விருச்சிக ராசிக்காரர்களுக்கு இந்த ஆண்டு மன மகிழ்ச்சி நிறைந்த ஆண்டாக அமையப்போகிறது. பண விவகாரங்களில் கவனம் தேவை. யாரை நம்பியும் ஜாமீன் கையெழுத்து போட்டு பணம் வாங்கித்தர வேண்டாம். மிகப்பெரிய வெற்றிகளைப் பெறப்போகிறீர்கள். செவ்வாய்கிழமை முருகப்பெருமானை வணங்குங்கள் நன்மைகள் வீடு தேடி வரப்போகிறது.
-
லால்குடியில் களமிறங்கிய ஆதவ் அர்ஜுனா மாமியார்.. அதிமுகவில் இணைந்த 1 மாதத்தில் சீட் கொடுத்த எடப்பாடி -
ரசிகர்கள் எதிர்பார்த்த வீடியோவை வெளியிட்ட திரிஷா.. ஒரு வழியாக எல்லோரும் கேட்டது நடந்துடுச்சு.. குவியும் பாராட்டு -
ஓசூரில் சத்தமின்றி புரட்சி.. ரெடியாகும் தமிழ்நாட்டின் 6-வது பிரம்மாண்ட 'டைடல் பார்க்'.. தரமான வேகம் -
பாதாளத்தில் பாய்ந்த அமெரிக்கா! டிரம்ப் கொஞ்சம் கூட எதிர்பார்க்காத சம்பவம்.. மொத்தமா போச்சு! -
வாழ்க்கை துணை கிடைச்சிடுச்சு.. இவர்தான் ஜென்டில்மேன்! சர்ச்சைக்கு மத்தியில் திரிஷாவின் லேட்டஸ்ட் பதிவு -
தமிழ் புத்தாண்டு பலன்: குருவின் அருளால் மகர ராசிக்கு அடிக்கும் ஜாக்பாட்.. பிரகாசமாகப் போறீங்க -
இடி, மின்னலுடன் மழை கொட்டப்போகுது.. அடிக்கும் வெயிலுக்கு ஜில் அப்டேட் கொடுத்த வானிலை மையம்! -
ஸ்டாலின் களமிறக்கும் "மிசைல்" விஐபி! அதிமுக எதிர்பார்க்கல! விஸ்வநாதனுக்கு செக்? திமுக சர்ப்ரைஸ் மூவ் -
உங்கள் வீட்டு பீரோவில் 62 சவரன் தங்கம் இருக்கா? நகைக்கு இந்த ஒரு கணக்கு இல்லனா ஐடி நோட்டீஸ் வரலாம் -
பெங்களூர் மாணவியிடம் கிட்ட நெருங்கிய ஆசிரியர்! அந்த பயங்கர காட்சி.. உடனே செருப்பை கழட்டி! என்னாச்சு -
எடப்பாடி பழனிசாமி வைத்த பொறி.. சிக்கிய அண்ணாமலை.. சல்லி சல்லியாக உடைந்த பர்னிச்சர் -
செங்கோட்டையனுக்கு பதில் கோபியில் பிரபு! 127 வேட்பாளர்களை அறிவித்தார் எடப்பாடி பழனிசாமி












Click it and Unblock the Notifications