For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

திருப்பதி ஏழுமலையானுக்கு ஒரே நாளில் ரூ.6.18 கோடி காணிக்கை..குரு பூர்ணிமா..ஆனிவார ஆஸ்தானம் எப்போது?

திருப்பதி ஏழுமலையான் கோவிலில் தேவஸ்தான வரலாற்றில் இல்லாத அளவுக்கு ஒரே நாளில் ரூ.6.18 கோடி காணிக்கை வசூலாகியுள்ளது.

Google Oneindia Tamil News

திருப்பதி: ஏழுமலையான் கோவிலில் தேவஸ்தான வரலாற்றில் இல்லாத அளவுக்கு ஒரே நாளில் ரூ.6.18 கோடி காணிக்கை கிடைத்துள்ளது.

ஹைதராபாத் : திருப்பதி ஏழுமலையான் கோவிலில் தேவஸ்தான வரலாற்றில் இல்லாத அளவுக்கு ஒரே நாளில் ரூ.6.18 கோடி காணிக்கை கிடைத்துள்ளது.இதற்கு முன்னர் 2012ம் ஆண்டு ஏப்ரல் 1ம் தேதி பக்தர்கள் செலுத்திய ரூ. 5.73 கோடியே அதிகபட்ச காணிக்கையாக இருந்தது.

திருப்பதி ஏழுமலையான் கோவிலுக்கு பல்வேறு மாநிலங்களில் இருந்து பக்தர்கள் வருகின்றனர். வார விடுமுறை நாள் என்பதால் ஏழுமலையான் கோவிலில் பக்தர்கள் கூட்டம் அலைமோதுகிறது.தினமும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் தரிசனம் செய்து வருகின்றனர். அப்போது அவர்கள் உண்டியலில் காணிக்கை செலுத்துகிறார்கள். அதேபோன்று வேண்டுதலை நிறைவேற்ற முடி காணிக்கையும் செலுத்தி வருகிறார்கள்.

நாளை ரொம்ப முக்கியம்.. என்ன பண்ணலாம்? விசாரித்த எடப்பாடி.. 3 நாளை ரொம்ப முக்கியம்.. என்ன பண்ணலாம்? விசாரித்த எடப்பாடி.. 3

கோடை விடுமுறையையொட்டி கடந்த மாதம் திருப்பதி ஏழுமலையான் கோவிலுக்கு பக்தர்கள் வருகை பல மடங்கு அதிகரித்து காணப்பட்டது. இதனால் பக்தர்கள் இரண்டு நாட்கள் வரை காத்திருந்து தரிசனம் செய்தனர்.

அலைமோதம் கூட்டம்

அலைமோதம் கூட்டம்

கோடை விடுமுறை முடிவடைந்த நிலையிலும் ஏழுமலையானை தரிசிக்கும் பக்தர்களின் கூட்டம் குறையவில்லை. வார விடுமுறை என்பதால் ஏழுமலையான் கோவிலில் நேற்றும் இன்றும் பக்தர்கள் கூட்டம் அலைமோதியது. இலவச தரிசனத்திற்காக 15 மணி நேரமும் சிறப்பு தரிசனத்திற்காக 5 மணி நேரமும் பக்தர்கள் காத்திருந்தனர்.

நிரம்பி வழியும் பக்தர்கள்

நிரம்பி வழியும் பக்தர்கள்

வைகுண்டம் கியூ காம்ப்ளக்சில் உள்ள 31 அறைகள் பக்தர்களால் நிரம்பியது. சனிக்கிழமையன்று ஒரே நாளில் மட்டும் 88 ஆயிரம் பேர் சாமி தரிசனம் செய்த நிலையில் உண்டியல் காணிக்கையாக ரூ.4 கோடியே 34 லட்சம் கிடைக்கப்பெற்றதாக தேவஸ்தானம் தெரிவித்துள்ளது.

ரூ.6.18 கோடி காணிக்கை

ரூ.6.18 கோடி காணிக்கை

ஞாயிறன்று திருப்பதி ஏழுமலையான் கோவிலில் தேவஸ்தான வரலாற்றில் இல்லாத அளவுக்கு ஒரே நாளில் ரூ.6.18 கோடி காணிக்கை கிடைத்துள்ளது.இதற்கு முன்னர் 2012ம் ஆண்டு ஏப்ரல் 1ம் தேதி பக்தர்கள் செலுத்திய ரூ. 5.73 கோடியே அதிகபட்ச காணிக்கையாக இருந்தது.

ஆனிவார ஆஸ்தானம்

ஆனிவார ஆஸ்தானம்

திருமலை ஏழுமலையான் கோவிலில் இந்த மாதம் பல்வேறு சிறப்பு உற்சவங்கள் நடைபெற உள்ளது. அதன்படி, வருகிற 10ஆம் தேதி முதல் ஏகாதசி சாதுர்மாஸ்ய விரதம் தொடங்குகிறது. இதையொட்டி ஜூலை 13ம் தேதி குரு பவுர்ணமி கருட சேவை, 17ஆம் தேதி ஆனிவார ஆஸ்தானம் நடைபெற உள்ளது.

 சக்கரத்தாழ்வார் தீர்த்தவாரி

சக்கரத்தாழ்வார் தீர்த்தவாரி

23ஆம் தேதி ஆண்டாள் திருவாடிப்பூரம் உற்சவம், 24ஆம் தேதி சர்வ ஏகாதசியும், 29ஆம் தேதி ஸ்ரீசக்கரத்தாழ்வார் தீர்த்தவாரி, ஸ்ரீபிரதிவாதி பயங்கர அன்னாவின் வருட திருநட்சத்திர உற்சவம் நடைபெற உள்ளது என தேவஸ்தானம் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

English summary
Tirumala Tirupati Devasthanams hundial revenue: (திருமலை திருப்பதி தேவஸ்தானம் உண்டியல் வருமானம்)6.18 Crores have been received in a single day in the Tirupati Ezhummalayan temple which is unprecedented in the history of the Devasthanam. Earlier, on April 1, 2012, the devotees paid Rs. 5.73 crore was the highest donation.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X