• search
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

அத்திவரதரை பார்க்க முடியலையா அத்தி மரத்தில் உருவான ஶ்ரீவானமுட்டி பெருமாளை தரிசிக்கலாம்

|

நாகப்பட்டினம்: அத்திவரதரின் தரிசனம் பார்க்க காஞ்சிபுரத்தில் லட்சக்கணக்கான பக்தர்களின் கூட்டம் அலைமோதுகிறது. ஆகஸ்ட் 17 வரை மட்டுமே அத்திவரதரின் தரிசனம் கிடைக்கும் என்பதால் அவரின் தரிசன காலத்தை 48 நாட்களுக்கு மேலாக நீடிக்க வேண்டும் என்று பக்தர்கள் கோரிக்கை வைக்கின்றனர். பக்தர்களின் கோரிக்கை நிறைவேறுமா இல்லையா தெரியாது அத்திவரதரை காஞ்சிபுரம் சென்று தரிசிக்க இயலாதவர்கள் கவலைப்பட வேண்டாம் நாகை மாவட்டம் கோழிக்குத்தியில் எழுந்தருளும் ஸ்ரீவானமுட்டி பெருமாளை தரிசிக்கலாம் அவரும் அத்திமரத்தினால் உருவான பெருமாள்தான்.

அத்திமரமே பெருமாளாக இருக்கும் க்ஷேத்திரம் மயிலாடுதுறை அருகே சுமார் ஐந்து கிலோமீட்டர் தொலைவில் கோழிகுத்தி என்னும் இடத்தில் உள்ளது. மூலவர் ஶ்ரீநிவாஸ பெருமாள் அவரைத்தான் ஶ்ரீவானமுட்டி பெருமாள் என்றே அழைக்கின்றனர். காஞ்சிபுரம் அத்திவரதர் போல் இல்லாமல் இப்பெருமாளை தினமும் வருடம் முழுவதும் பார்க்கலாம். உலகிலேயே இங்கு மட்டுமே நாம் ஒரே அத்திமரத்தில் செய்யப்பட்ட பெருமாளின் ரூபத்தை பார்க்கமுடியும்.

12 அடி உயரத்தில் அத்தி மரத்தாலேயே நிர்மாணிக்கப்பட்ட ஸ்ரீ வானமுட்டி பெருமாள் திருவுருவச் சிலை பிப்பல்ல மகரிஷிக்கு விஸ்வரூப தரிசனம் தந்த ஸ்ரீநிவாச பெருமாள். 1400 வருடங்களுக்கு முன் நிர்மாணிக்கப்பட்டதாக கருதப்படும் இந்த திருக்கோயில் ஸ்ரீவானமுட்டி பெருமாளை தரிசித்தால் அமைதி, ஐஸ்வர்யம் மன திருப்தியை தரும் என்கின்றனர் பக்தர்கள். வானமுட்டி பெருமாளாக காட்சி தரும் ஸ்ரீநிவாச பெருமாளுக்கு துணையாக ஸ்ரீ தயாலக்ஷ்மி தாயாரும் வீற்றிருக்கும் இத்திருக்கோயிலில் ஸ்ரீ யோக நரசிம்மர் மற்றும் சப்தஸ்வர ஹனுமார், இராமானுஜர், நர்த்தன கிருஷ்ணர் மற்றும் விஸ்வக்சேனர் ஆகியோர் சன்னதிகளும் உள்ளன.

ஆடித்தபசு 2019: திருமணத்தடை, குழந்தைபேறு தடை நீக்கும் சங்கரன்கோவில் கோமதி அம்மன்

தோல் நோய் நீங்கும்

தோல் நோய் நீங்கும்

நிர்மலன் என்ற அரசன் குஷ்ட நோயால் பாதிக்கப்பட்டு மிகவும் துன்பப்பட்டான். நோய் தீர்க்க வேண்டி மகா விஷ்ணுவை பிரார்த்தனை செய்தபொழுது அவருக்கு தரிசனம் தந்த விஷ்ணு பகவான் காவிரிக்கரையோரமாக செல்லும் பொழுது மார்க்க சகாயேசுவரர் அருளால் இந்த சரும நோய் விலகும் திருத்தலத்தை அடையலாம் எனவும் அங்கு 48 தினங்கள் கோயில் குளத்தில் நீராடி பெருமாளை தரிசனம் செய்து வந்தால் நோய் வர காரணமாயிருந்த தோஷம் விலகி நோய் விலகும் என்று அருளினார். இறைவன் ஆணைப்படி அவர் காவிரியில் நீராடி எல்லா திருக்கோயில்களிலும் வழிபட்டு யாத்திரையை தொடர்ந்தார். அவர் மூவலூரில் சிவனை வழிபடும் போது மூலவர் ஶ்ரீமார்க்க சகாயேஸ்வரர் அவருக்கு வடக்கு பக்கமாக செல்ல வழி காட்டினார். மன்னரும் அங்கிருந்து வடக்கு திக்கில் சென்றார்.

அத்திமரத்தில் காட்சி கொடுத்த இறைவன்

அத்திமரத்தில் காட்சி கொடுத்த இறைவன்

வடக்கில் சென்று அவர் காவிரியில் நீராடி அருகில் இருக்கும் கிராமத்திற்கு வந்தார். இறைவனை வழிபடலானார். அங்கு இருந்த பெரிய அத்திமரத்தில் ஶ்ரீவிஷ்ணு அவருக்கு காட்சி தந்து மன்னரை அங்கேயே தங்க சொன்னார். மன்னரும் அங்கேயே அமர்ந்து தவம் செய்ய ஆரம்பித்தார். அவரது மேனியிலிருந்த நோய் மறைந்தது. அந்த கிராமம்இன்று கோழிகுத்தி என்று அழைக்கப்படுகிறது. இறைவன் "வான்முட்டி பெருமாள்" என்று அழைக்கப்படுகிறார். பின்காலத்தில் அம்மன்னர் தவவலிமையால் பிப்பல்ல மகரிஷி என்று அழைக்கப்படலானார்.

பிப்பல்லருக்கு தரிசனம்

பிப்பல்லருக்கு தரிசனம்

சனி காயத்திரி மந்திரத்தை உருவாக்கியவர் தான் பிப்பல்ல மகரிஷி. "கோடி ஹத்தி விமோசன புரம்" என்ற பெயர் மருவி கோழிக்குத்தி ஆனதாகவும் பிப்பல்லருக்கு நோய் நீங்கிய திருத்தலம் தான் கோழிக்குத்தியாக மாறியது. இக்கோயிலின் தீர்த்தத்தை விஸ்வ புஷ்கரணி என அழைக்கிறார்கள். கோயிலின் வலப்பக்கமுள்ளது புஷ்கரிணி. இதில் தினசரியும் குளித்து பெருமாளை தரிசனம் செய்பவர்களுக்கு செய்வோருக்கு நோய் நொடிகள் விலகும் என்பது நம்பிக்கை

விஸ்வரூப தரிசனம்

விஸ்வரூப தரிசனம்

ஹத்தி என்றால் கொலை பாபம் என்று பொருள். இங்கு சகல பாபங்களும் நிவர்த்தியாகும் என்பதால் இந்த புனிதமான தலம் "கோடி ஹத்தி" என்று வழங்கலாயிற்று, அதுவே மருவி இன்று "கோழிகுத்தி" என்று அழைக்கப்படுகிறது. பெருமாள் மன்னருக்கு விஸ்வரூப தரிசனம் தந்ததால் வானினும் மேலாக நின்றமையால் பெருமாளுக்கு "வான்முட்டி பெருமாள்" என்று பெயர் வந்தது.

மூலவரின் தரிசனம்

மூலவரின் தரிசனம்

மஹாலக்ஷ்மி தாயார் மூலவரின் வலது மார்பில் வசிப்பதால் இங்கு தாயருக்கு தனி சன்னதி கிடையாது. ஶ்ரீபூமா தேவி கர்ப்பகிருஹத்திலேயே பெருமாளுக்கு பக்கத்தில் இருக்கிறார். கர்ப்பகிருஹத்தை ஒட்டி யோக நரசிம்மர் பக்த பிரஹல்லாதனை ஆசீர்வதித்த வண்ணம் காணப்படுகிறார். மூலவர் அத்திமரத்தினால் ஆனவர் என்பதால் திருமஞ்சனம் கிடையாது. உற்சவர் யோகநரசிம்மருக்கு திருமஞ்சனம் நடத்தப்படுகிறது.

அலங்கார ரூபன் வானமுட்டி பெருமாள்

அலங்கார ரூபன் வானமுட்டி பெருமாள்

வேருடன் இருக்கும் அத்திமரத்தில் ஶ்ரீநிவாஸர் சதுர்புஜனாக எழுந்தருளி இருக்கிறார். நான்கு திருக்கரங்களில் பின் இரு திருக்கரங்களில் சங்கு, சுதர்ஸனம், வைத்துள்ளார். முன் இடது திருக்கரத்தில் கதையும், முன் வலது திருக்கரத்தினால் பக்தர்களுக்கு அபயம் அளிக்கிறார். பெருமாள் துளசி மாலை, பூணூல் மற்றும் பல ஆபரணங்கள் அணிந்துள்ளார். அவரது திருப்பாதங்கள் அத்திமரத்தின் வேரில் ஊன்றியிருக்கிறது.

பாவங்கள் நீங்கும்

பாவங்கள் நீங்கும்

கோழிக்குத்தி ஸ்ரீவானமுட்டி பெருமாள் கோவிலுக்கு சென்று ஶ்ரீநிவாஸரை தரிசனம் செய்தால் நமது உடல் குறைகள் நிவர்த்தியாகும். யோக நரசிம்மருடைய தரிசனம் பாபங்களை நிவர்த்தி செய்யும், ஆஞ்சநேயரின் தரிசனம் ஜன்ம ஜன்மத்திற்கும் ஆனந்தத்தை தரும். எனவே காஞ்சிபுரம் சென்று அத்திவரதரை தரிசிக்க முடியாதவர்கள் நாகை மாவட்டத்தில் உள்ள கோழிக்குத்தி அத்திவரதரை தரிசனம் செய்து வாருங்கள்.

திருமணம் ஆகாதவரா? இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் பதிவு இலவசம்!

 
 
 
English summary
Vanamutti Perumal Temple is dedicated to Hindu God Vishnu located at Kozhikuthi Village near Mayiladuthurai town in Nagapattinam District.Deity of Sri Vishnu in Fig wood Sri Srinivasa perumal. Fig wood is very rare and is considered the most sacred. This form of rare deity is seen in Sri Varadaraja Swamy temple, Kanchipuram. The deity here is known by the name Sri Athi Varadhar and resides inside a holy tank inside the temple.
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
We use cookies to ensure that we give you the best experience on our website. This includes cookies from third party social media websites and ad networks. Such third party cookies may track your use on Oneindia sites for better rendering. Our partners use cookies to ensure we show you advertising that is relevant to you. If you continue without changing your settings, we'll assume that you are happy to receive all cookies on Oneindia website. However, you can change your cookie settings at any time. Learn more