Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

சனி பெயர்ச்சி பலன் 2023.. ஏழரை சனியின் பிடியில் மீனம்.. 2030 வரைக்கும் என்ன செய்யலாம்?செய்யக்கூடாது

Subscribe to Oneindia Tamil

சென்னை: ஏழரை ஆண்டுகாலங்கள் சனி பகவான் கஷ்டப்படுத்துவார். மீன ராசிக்காரர்களுக்கு ஏழரை சனி இந்த ஆண்டு தொடங்கியுள்ளது. 2030ஆம் ஆண்டு வரைக்கும் சனியின் பிடியில் சிக்கியுள்ள மீன ராசிக்காரர்களும், 5 ஆண்டுகாலம் சனியால் சங்கடப்படபோகும் கும்ப ராசிக்காரர்களும், இரண்டரை ஆண்டுகாலம் சனியின் இறுதி காலத்தில் சிக்கியுள்ள மகர ராசிக்காரர்களும் என்ன பரிகாரம் செய்யலாம் என்று பார்க்கலாம்.

யாருக்கு நிம்மதி: இந்த சனிப்பெயர்ச்சியினால் அதிகம் நிம்மதி அடைவது மேஷம், தனுசு, மிதுனம் ராசிக்காரர்கள்தான் காரணம் தனுசு ராசிக்காரர்களுக்கு ஏழரை சனி முடிகிறது. தைரிய ஸ்தான சனி ஆரம்பிக்கிறது. மிதுனம் ராசிக்காரர்களுக்கு அஷ்டம சனி முடிந்து பாக்ய சனி ஆரம்பிக்கிறது. இந்த சனி பெயர்ச்சி காலத்தில் மீனம் ராசிக்காரர்களுக்கு ஏழரை சனி ஆரம்பிக்கிறது. மகரம் ராசிக்காரர்களுக்கு பாத சனியாகவும், கும்பம் ராசிக்காரர்களுக்கு ஜென்ம சனியாகவும் தொடர்வதால் இந்த மூன்று ராசிக்காரர்களும் சனிபகவானால் சோதனைகளைகளை சந்திக்கப் போகிறார்கள். இதை எளிதாக உணர்த்தும் வகையில் ஜோதிடர்கள் மீம்ஸ் ஆக பதிவிட்டுள்ளனர்.

What is Elarai sani? Effects and remedies for Makaram, Kumbam and Meenam

ஏழரை சனி: ஒரு ராசிக்காரர்களுக்கு ஏழரை ஆண்டுகாலம் ஏழரை சனி நடைபெறும். இதில் விரைய சனி இரண்டரை ஆண்டுகள், ஜென்ம சனி இரண்டரை ஆண்டுகள், பாத சனி இரண்டரை ஆண்டுகள் என மொத்தம் ஏழரை ஆண்டுகாலம் நடைபெறுகிறது. அப்போது தசாபுத்தியும் சரியில்லாத நிலையில் இருந்தால் சங்கடங்களை அதிகம் சந்திக்க வேண்டியிருக்கும். சனியின் பிடியில் இருந்து அந்த ஈசனே தப்பிக்க முடியாது என்று சொல்லும் வகையில் புராண கதையே உள்ளது. சனிபகவான் நீதிமான் என்பதால் தவறு செய்தவர்களுக்கு மட்டுமே தண்டனை தருவார். நல்லவர்களை தண்டிக்க மாட்டார் சோதனை கொடுப்பதோடு படிப்பினைகளை தருவார். தவறு செய்தவர்களை கண்டிப்பாக சனிபகவான் தண்டிப்பார்.

என்ன பாதிப்பு வரும்: பிறக்கும் போதே சிலர் ஏழரை சனியின் பிடியில் இருப்பார்கள். அவர்களுக்கு நோய் தாக்கும். மாணவர்களாக இருந்தால் படித்தது மறந்து போகும். சிலர் தேர்வில் கூட தோல்வியடைவார்கள். சிலர் சோம்பேறிகளாக இருப்பார்கள். பள்ளி, கல்லூரி காலத்தில் ஏழரை சனியால் பாதிக்கப்பட்டவர்கள் சிலருக்கு நல்ல எதிர்காலம் உண்டு. காரணம் ஏழரை சனி கொடுத்த படிப்பினையால் வேலை செய்யும் இடத்தில் நன்றாக வேலை செய்து நல்ல பெயரெடுப்பார்கள்.

What is Elarai sani? Effects and remedies for Makaram, Kumbam and Meenam

2030வரை ஏழரை சனி: சனி தரும் சங்கடங்கள் ஏழரை ஆண்டுகாலம் நடக்கும். அந்த ஏழரை ஆண்டுகால படிப்பினையை வைத்து 30 ஆண்டு காலம் சந்தோசமாக இருக்கலாம். சனிபகவான் ஏழரை தொடங்கும் காலத்தில் விரைய சனியாக ஆரம்பிக்கிறது. மீனம் ராசிக்காரர்களுக்கு ஏழரை சனி விரைய சனியாக ஆரம்பிக்கிறது. இதுநாள் வரை லாப சனியாக இருந்த போது சம்பாதித்த பணத்தை சொத்துக்களாக நகைகளாக சுப விரையங்களாக மாற்றலாம். 2023ஆம் ஆண்டு தொடங்கி 2030ஆம் ஆண்டு வரைக்கும் ஏழரையின் பிடியில் சிக்கியுள்ள மீன ராசிக்காரர்கள் என்ன செய்யப்போகிறார்களோ என்று ஒரு ஜோதிடர் மீம்ஸ் ஆக பதிவிட்டுள்ளார்.

ஏழரை சனி எபெக்ட்: கும்பம் ராசியில் சஞ்சரிக்கப் போகும் சனிபகவான் தனது மூன்றாம் பார்வையால் மேஷ ராசியை பார்க்கிறார். இது மீன ராசிக்கு ராசிக்கு இரண்டாம் வீடு. அதே போல சிம்ம ராசியை பார்க்கிறார் இது ஆறாம் வீடு. விருச்சிகம் ராசியை சனி தனது பத்தாம் பார்வையாக பார்க்கிறார். இது மீனம் ராசிக்கு ஒன்பதாம் வீடு. மீன ராசிக்காரர்களுக்கு தனம், ருணம், பாக்ய ஸ்தானங்களை சனிபகவான் பார்க்கிறார். இந்த கால கட்டத்தில் பணப்பிரச்சினைகள், குடும்பத்தில் சிக்கல்கள், கடன் தொல்லைகள் ஏற்படும். பண விரையத்தின் போதுதான் பணத்தின் அருமை தெரியும். சனிபகவான் கும்பம் ராசிக்கு அதிபதி அவர் ஆட்சி பெற்று 12ஆம் வீட்டில் பயணம் செய்வதால் அதிகம் சங்கடங்கள் தராமல் சில படிப்பினைகளை தருவார். மீன ராசிக்காரர்களுக்கு சில நேரங்களில் விபரீத ராஜயோகத்தையும் தரப்போகிறார் சனி பகவான்.

What is Elarai sani? Effects and remedies for Makaram, Kumbam and Meenam

கும்பம் ஜென்ம சனி: கும்பம் ராசிக்காரர்களுக்கு சனிபகவான் ஜென்மசனியாக அமர்கிறார். தூக்கம் தொலையும் கஷ்டங்கள் என்றால் என்னவென்று புரியவைப்பார். உடல்நிலை பாதிப்பு, தேர்வில் தோல்வி, காதல் தோல்வி, மன அழுத்தம் ஆகியவற்றை ஜென்மசனி காலத்தில் ஏற்படுத்துவார். கும்பம் ராசிக்கு அதிபதி சனிபகவான் என்பதால் இதுபோன்ற பிரச்சினைகளைத் தரமாட்டார். சனியின் பார்வை கும்பம் ராசிக்கு முயற்சி ஸ்தானத்தையும், களத்திர ஸ்தானத்தையும், தொழில் ஸ்தானத்தையும் பார்க்கிறார். திருமண வாழ்க்கை துணை, காதலின் துணையைப் பற்றிய உண்மையை உணரவைப்பார். வேலை செய்யும் இடத்தில் சிலருக்கு திடீர் பிரச்சினைகள் ஏற்படும். சிலருக்கு தொழில் முடக்கம் தொழில் நஷ்டம் ஏற்படும். எல்லாம் ஆணவத்தில் ஆடுபவர்களுக்குத்தான் சிக்கல்களும் இடைஞ்சல்களும் உண்டாகும்.

மகரம் பாத சனி: சனிபகவான் பாத சனியாக மகர ராசியை பிடிக்கிறார். ஐந்தரை ஆண்டுகாலம் சனியின் பிடியில் சிக்கியிருந்தவர்கள் இனி இரண்டரை ஆண்டுகாலம் கடந்து விடுவார்கள். சனியின் பார்வை நான்காம் வீடு, எட்டாம் வீடு, பதினொன்றாம் வீடுகளின் மீது விழுகிறது. இதுநாள்வரை நஷ்டப்பட்டு, அவமானப்பட்டு இருந்தவர்களுக்கு நல்ல நிலையை தருவார். சங்கடங்களை துடைப்பார். ஏழரை ஆண்டுகால முடிவில் நல்ல படிப்பினைகளை தந்து விட்டு செல்வார். அந்த படிப்பினை போதும் ஏழரை சனி சோதனைகளை தருவதே நன்மைக்காகத்தான் என்று கடந்து செல்பவர்களுக்கு எந்த பிரச்சினையும் இருக்காது.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+