For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

புரட்டாசி மாதத்தில் திருமணம், வீடு கிரகப்பிரவேசம் செய்யலாமா? - குழந்தை பிறந்தால் என்ன பலன்

புரட்டாசி மாதம் முன்னோர்களுக்கும் தெய்வீக வழிபாட்டிற்கும் உரிய மாதம் என்பதால் இந்து திருமணங்கள் நடைபெறுவதில்லை. அதே போல இந்த மாதத்தில் வீடு கட்ட வாஸ்து பூஜையோ, கிரகப்பிரவேசமோ செய்ய மாட்டார்கள்.

Google Oneindia Tamil News

சென்னை: புண்ணியம் தரும் புரட்டாசி மாதம் தெய்வீக வழிபாட்டிற்கு மட்டுமே உரியது. இந்த மாதத்தில் திருமணம் செய்யலாமா? வளைகாப்பு நடத்தலாமா? வீடு கிரகப்பிரவேசம் உள்ளிட்ட நல்ல காரியங்கள் செய்யலாமா என்று பலரும் கேட்கின்றனர். தமிழ் இந்து குடும்பத்தினர் புரட்டாசியில் திருமணம் உள்ளிட்ட சுபகாரியங்கள் செய்வதில்லை. அதே போல புரட்டாசி மாதத்தில் குழந்தை பிறந்தால் எதுவும் பிரச்சினை வருமா என்றும் கேட்கின்றனர். புரட்டாசி மாதத்தில் என்ன செய்யலாம் என்ன செய்யக்கூடாது என்று பார்க்கலாம்.

சுப காரியங்களை சில குறிப்பிட்ட மாதங்களில் மட்டுமே செய்ய வேண்டும் என்று ஜோதிட சாஸ்திரம் கூறுகிறது. சித்திரை, வைகாசி, ஆவணி, தை, பங்குனி ஆகிய மாதங்களில் திருமணம் செய்யலாம். இந்த மாதத்தில் திருமணம் செய்தால் மணமக்கள் மகிழ்ச்சியுடன் வாழ்வார்கள் குழந்தை பாக்கியம் நன்றாக அமையும். பொதுவாக எந்த சுபகாரியங்களையும் வைகாசி மற்றும் கார்த்திகை மாதத்தில் செய்யலாம். அது தடையின்றி மங்களகரமாக நடைபெறும். ஆடி, புரட்டாசி, மார்கழி ஆகிய மாதங்களில் சுபகாரியங்கள் செய்யக்கூடாது.

தமிழ் மாதத்தில் ஆறாவது மாதம் புரட்டாசி இந்த மாதத்தில் முக்கியமான விரதங்கள் உள்ளன. முன்னோர்களை வழிபடும் மகாளயபட்சம், மகாளய அமாவாசை விரதம் கடைபிடிக்கப்படுகிறது. புரட்டாசி மாதம் பெருமாள் மாதம். கன்னி ராசியில் சூரியன் சஞ்சரிக்கும் மாதம். நவராத்திரி பண்டிகைகளை கொண்டாடப்படும் மாதம் என்பதால் இந்த மாதத்தில் திருமணம் உள்ளிட்ட பண்டிகைகளை கொண்டாடுவதை தவிர்த்து விட்டனர்.

புரட்டாசி மாத ராசிபலன்கள் 2021: மேஷ ராசிக்காரர்களே வேலையில் கவனம் தேவை புரட்டாசி மாத ராசிபலன்கள் 2021: மேஷ ராசிக்காரர்களே வேலையில் கவனம் தேவை

வீடு கிரகப்பிரவேசம் செய்ய வேண்டாம்

வீடு கிரகப்பிரவேசம் செய்ய வேண்டாம்

புரட்டாசியில் வீடு கட்ட வாஸ்து செய்யக்கூடாது. வாஸ்து பகவான் உறங்கிக்கொண்டிருப்பார். அவர் சில மாதங்கள் மட்டுமே விழித்திருப்பார். அந்த மாதத்தில் வாஸ்து பூஜை செய்தால் மட்டுமே தடைகள் இன்றி வீடு கட்ட முடியும். அதேபோல இந்த மாதத்தில் வீடு பால்காய்ச்சி குடி போகக்கூடாது. வாடகை வீடாக இருந்தாலும் வீடு குடிபோகக் கூடாது.

முன்னோர்கள் சொன்ன வழி

முன்னோர்கள் சொன்ன வழி

கர்ப்பிணி பெண்களுக்கு ஒற்றைப்படை மாதமாக புரட்டாசி வரும் பட்சத்தில் வளைகாப்பு நடத்தலாம். அது ஒருநாள் பண்டிகைதான் முடிந்து விடும். அதேபோல புரட்டாசி மாதம் பிறந்தவர்களுக்கு அறுபதாம் கல்யாணம், எண்பதாம் திருமணம் இதனால் பாதிப்பு எதுவும் வருவதில்லை. சித்திரை, வைகாசி, ஐப்பசி, கார்த்திகை, தை, மாசி ஆகிய மாதங்களில் வீடு கட்டும் வேலையைத் தொடங்கினால் தடையில்லாமல் விரைவாக முடியும். சித்திரை, வைகாசி, ஆனி ஆகிய மாதங்களில் கிணறு வெட்டினால் அது என்றும் வற்றாது. ஆனி, ஆடி, புரட்டாசி, மார்கழி, பங்குனி ஆகிய மாதங்களில் வீடு வாங்கவும் கூடாது. வீடு குடியேறவும் கூடாது என்று முன்னோர்கள் வகுத்துக் கொடுத்துள்ளனர்.

திருமணம் செய்யக்கூடாது

திருமணம் செய்யக்கூடாது

புரட்டாசி மாதத்தில் மகாளய பட்சம் முன்னோர்களுக்காக அனுசரிக்கப்படுகிறது. அதே போல பெருமாளுக்கு விரதம் இருக்கும் மாதம், நவராத்திரி பண்டிகைகளை கொண்டாடப்படும் மாதம் என்பதால் இந்த மாதத்தில் திருமணம் உள்ளிட்ட சுப காரியங்கள் நடத்துவதை முன்னோர்கள் தவிர்த்து விட்டனர். முன்னோர்களின் வழியை பின்பற்றினால் நமக்கு தொந்தரவு இல்லைதானே.

தொழில், வியாபாரம் தொடங்கலாம்

தொழில், வியாபாரம் தொடங்கலாம்

புரட்டாசி மாதத்தில் நவராத்திரி பண்டிகை நாளின் கடைசி நாளான விஜய தசமியன்று கல்வி கற்றுக்கொள்ளத் தொடங்கினால் நல்ல கல்வியறிவு கிடைக்கும். வாழ்க்கைக்கும் பயன்படும். அதேபோல விஜயதசமியன்று குழந்தைகளுக்கு புதிய விசயங்களை கற்றுக்கொடுக்கத் தொடங்கலாம். புதிய தொழில் தொடங்கலாம் மேன்மேலும் வளரும்.

புரட்டாசியில் குழந்தை பிறப்பு

புரட்டாசியில் குழந்தை பிறப்பு

புரட்டாசியில் பிறக்கும் குழந்தை புரட்டி எடுப்பார்கள் என்று பெற்றோர்கள் பயப்படுவார்கள். இது தவறானது. புரட்டாசியில் பிறந்தவர்கள் புத்திசாலிகள். சித்திரையில் கத்திரி வெயில் காலம் குழந்தை பிறப்பை தவிர்ப்பது போல மழை மாதமான புரட்டாசியில் பச்சிளம் குழந்தைகளுக்கு நோய் தாக்கும் என்பதால்தான் இந்த மாதத்தில் குழந்தை பிறப்பதை பலரும் விரும்புவதில்லை. புத ஆதிபத்யம் நிறைந்த இந்த மாதத்தில் பிறக்கும் குழந்தைகளுக்கு இயல்பாகவே புத்திசாலித்தனம் நிறைந்திருக்கும்.

அறிவாளி பிள்ளைகள்

அறிவாளி பிள்ளைகள்

விரதங்கள், பண்டிகைகள் நிறைந்த மாதத்தில் பிறந்தவர்கள் ஆன்மீக குணம் நிறைந்தவர்களாக இருப்பார்கள். கற்பூர புத்திக்கொண்டவர்கள் இடம் பொருள் நேரம் பார்த்து பேசுவார்கள். பழகுவதற்கு இனிமையானவர்கள்.
வித்தை அறிவு கணிதம் ஆகியவற்றிற்கு உரிய புதனின் வீடான கன்னி ராசியில் சூரியன் சஞ்சரிக்கும் மாதத்தில் பிறந்தவர்கள் நிறைய விசயங்களை எளிதில் கற்றுக்கொள்வார்கள்.

நேர்மையான குணம்

நேர்மையான குணம்

புரட்டாசியில் பிறந்தவர்களின் குணநலன்களை எளிதில் புரிந்து கொள்ள முடியாது அதே நேரத்தில் இவர்கள் மற்றவர்களின் எண்ண ஓட்டங்களை எளிதில் புரிந்து கொள்வார்கள். பிறர் மனது புண்படாத வகையில் நடந்து கொள்வார்கள் அதே நேரத்தில் சுயகவுரவம் ரொம்ப பார்ப்பார்கள். ஒருதடவை வாக்கு கொடுத்து விட்டால் எப்பாடு பட்டாவது காப்பாற்றுவார்கள். உற்றார் உறவினர்கள், சுற்றார்களுடன் அனுசரித்து அவர்களுடன் இணைந்து வாழ்வார்கள். வெளிப்படையாக பேசுவார்கள். உள்ளொன்று வைத்து புறமொன்று பேச மாட்டார்கள்.

நேர்மையான குணம்

நேர்மையான குணம்

புரட்டாசியில் பிறந்தவர்களின் குணநலன்களை எளிதில் புரிந்து கொள்ள முடியாது அதே நேரத்தில் இவர்கள் மற்றவர்களின் எண்ண ஓட்டங்களை எளிதில் புரிந்து கொள்வார்கள். பிறர் மனது புண்படாத வகையில் நடந்து கொள்வார்கள் அதே நேரத்தில் சுயகவுரவம் ரொம்ப பார்ப்பார்கள். ஒருதடவை வாக்கு கொடுத்து விட்டால் எப்பாடு பட்டாவது காப்பாற்றுவார்கள். உற்றார் உறவினர்கள், சுற்றார்களுடன் அனுசரித்து அவர்களுடன் இணைந்து வாழ்வார்கள். வெளிப்படையாக பேசுவார்கள். உள்ளொன்று வைத்து புறமொன்று பேச மாட்டார்கள்.

 தலைமைபதவி தேடி வரும்

தலைமைபதவி தேடி வரும்

புரட்டாசியில் பிறந்தவர்கள் எதையும் தெளிவாக பேசி தீர்க்கமாக முடிவெடுப்பார்கள். நேர்மையானவர்கள். நேர்மையான அணுகுமுறை பலருக்கு ஒத்து வராது. இவர்களின் குணத்தால் எளிதில் பகையை சம்பாதிப்பார்கள் மனக்கசப்பும் ஏற்படும். இந்த மாதத்தில் பிறந்தவர்களுக்கு செவ்வாய், சூரியன், சனி பலமாக இருந்தால் ராணுவம், தீயணைப்பு போன்ற துறைகளில் தலைமை பதவிகளில் இருப்பார்கள். படிப்பறிவோடு பட்டறிவும் கை கொடுக்கும். தலைமை பதவிகள் தேடிவரும்.

சொத்து சுகம் தேடி வரும்

சொத்து சுகம் தேடி வரும்

பூர்வீக சொத்துக்கள் எளிதில் கிடைக்கும். தாய் வழி சொத்துக்கள் கிடைக்கும். மனைவி வழியில் சொத்துக்கள் சேரும். சூரியன் சாதகமாக இருந்தால் அப்பா வழியில் சொத்துக்கள் சேரும், சந்திரன் சாதகமாக இருந்தால் அம்மாவழி சொத்துக்கள் சேரும். புத்திசாலித்தனம் மிக்கவர்கள் என்பதால் எதையும் ஒருமுறைக்கு இருமுறை சிந்தித்து செயல்படுவார்கள். அவ்வளவு சீக்கிரம் கடனாளியாக மாட்டார்கள். வேறு வழியின்றி கடன் வாங்க நேரிட்டாலும் அதை எப்பாடு பட்டாவது அடைத்துவிடுவீர்கள்.

 தொழில் வருமானம்

தொழில் வருமானம்

புத்திசாலித்தனம் கொண்ட இவர்கள் மூளையை உபயோகித்து ஜெயிப்பார்கள். கலைத்துறையில் சாதிப்பார்கள். கற்பனை சக்தி கொண்டவர்கள். சிறந்த எழுத்தாளர்கள், சினிமா துறையில் ஜெயிப்பார்கள். பத்திரிகைதுறையில் கால் பதித்து வெற்றி பெறுவார்கள். நகை, ஜவுளித்துறையில் கொடிகட்டிப்பறப்பார்கள். நகைச்சுவை உணர்வு கொண்டவர்கள். விட்டுக்கொடுக்கும் தன்மை இருப்பதால் இவர்களைச் சுற்றி நண்பர்கள் அதிகம் இருப்பார்கள். இவரால் யோகங்கள் அதிகம் கிடைக்கும். அதே நேரத்தில் புரட்டாசியில் பிறந்தவர்களுக்கு எளிதில் நரம்பு பிரச்சினை தாக்கும். அதிகம் டென்சன் பேர்வலி இதனால் தலைவலி அதிகமாகும். சிலருக்கு பார்வை கோளாறுகளும் ஏற்படும். நேரத்திற்கு சாப்பிடாவிட்டால் வயிறு கோளாறும் ஜீரண கோளாறும் ஏற்படும். நேர்முக எதிரிகள் இருக்க வாய்ப்பில்லை. மறைமுக எதிர்ப்புகளை எளிதில் சமாளிப்பீர்கள். நீங்களும் புரட்டாசி மாதத்தில் பிறந்தவரா? உங்க குணாதிசயம் இதோடு ஒத்துப்போகுதா? உங்க கருத்தை சொல்லுங்க மக்களே.

English summary
Tamil Month of Purattasi, pitru paksham Mahalayam is covered for a fortnight. we don't do Grahapravesam house warming ceremony and go to new house in the above months.at the same time, if other functions at home like, Birthdays Seemandham, can be celebrated as these cannot be postponed .
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X