Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

உங்கள் குழந்தைக்கு சொட்டு மருந்து போட்டுவிட்டீர்களா? போலியோ பற்றி ஜோதிடம் கூறும் ரகசியங்கள!

Subscribe to Oneindia Tamil

- அஸ்ட்ரோ சுந்தரராஜன்

சென்னை: இன்று தமிழகம் முழுவதும் ஐந்து வயதிற்குட்பட்ட குழந்தைகளுக்கு போலியோ தடுப்பு மருந்து இலவசமாக வழங்கப்படுகிறது. போலியோ எனும் இளம்பிள்ளைவாத நோய் முற்றிலும் ஒழிக்கப்பட்ட நிலையில் அந்நோயினால் பிற்காலத்தில் யாரும் பாதிக்காமல் இருக்கவேண்டும் என கருதி இன்று உலக போலியோ தினம் அனுஷ்டிக்கப்படுகிறது.

பொதுவாக குழந்தைகள் நோய்க் கிருமிகளுக்கு சுலபமாக் பாதிப்படைவர்கள் ஆதலால் அபாயகரமான நோய்களில் இருந்து அவர்களை பாதுகாக்க முறையான தடுப்பு ஊசிகளை போடுவது அவசியம், குழந்தைகளை பாதிக்கும் பல்வேறு நோய்களில் இளம்பிள்ளை வாதம் முக்கியமானது.

இளம்பிள்ளை வாதம் என்ற போலியோவுக்கு முதன்முறையாகத் தடுப்பு மருந்தைக் கண்டுபிடித்த டாக்டர் ஜோனஸ் சால்க் அவர்களின் நினைவாக உலகப் போலியோ தினம் ஒவ்வொரு ஆண்டும் அக்டோபர் 24-ஆம் தேதி கடைபிடிக்கப்படுகிறது. உலக அளவில் போலியோ தடுப்பு மருந்தினால் 99 சதவிதம் கட்டுப்படுத்தப் பட்டுள்ளது.

World Polio Day is an opportunity for the global polio eradication community

இளம் பிள்ளை வாதம் எனப்படும் சுரவாத நோயையை போலியோ என்று ஆங்கிலத்தில் கூறுவார்கள்.இது ஒரு கொடிய வைரஸ் வியாதி. இந்த வைரஸ் குழந்தைகளை வெகுவாகத் தாக்குகிறது. அதை போலியோ வைரஸ் என்று அழைக்கிறோம். அவை போலியோ வைரஸ் ரகம் 1 ,2 , 3 என்று மூன்று ரகங்கள் உள்ளன. இந்த வைரஸ் வகைகள் குறிப்பாக மூளையையும் நரம்பு மண்டலத்தையும் தாக்கும் தன்மை மிக்கவை. முதுகுத் தண்டு நரம்புகளையும் தலை நரம்புகளையும் அதிகமாக தாக்குகின்றன. இதனால் தசைகளை இயங்கச் செய்யும் செயல் நரம்புகள் செயல் இழந்து போகின்றன. குறிப்பாக கை கால்கள் பாதிக்கப்பட்டால் அவை சூம்பிப்போகின்றன. அதனால் அவர்களால் நடக்க முடியாமல் போய்விடுகிறது.உலக முழுதும் போலியோ வியாதி காணப்பட்டாலும், அது தோன்றும் அளவு தற்போது குறைந்துள்ளது இதற்குக் காரணம் மக்களிடையே உண்டான சுகாதார விழிப்புணர்வு, முறையான கழிவறைகள், பரவலான தடுப்பு மருந்துகள் பயன்படுத்துவது போன்றவை எனலாம்.

முன்று வயதுக்குட்பட்ட குழந்தைகளை இது பாதிக்கும், இதனால் குழந்தைகள் முடமாகும் வாய்ப்புகள் ஏற்படலாம். முதல் 3 நாட்களுக்கு காய்ச்சலும் பிறகு காய்ச்சல் குறைந்து தலை வலிக்க தொடங்கும், கழுத்தை திருப்புவதில் சிரமமும், தசைகளில் வலியும் இருக்கும், நோய் கவனிக்கப் படாமல் தீவிரமடைந்தால் 7 நாட்களில் கால் அல்லது தோள் செயலிழக்கலாம், இதற்கெல்லாம் தற்போது தடுப்பு ஊசி மருந்துகள் வந்து விட்டன, ஆகவே குறித்த காலத்தில் தடுப்பு ஊசிகளை போடுவதன் மூலம் இந்த நோயை அறவே தவிர்க்கலாம்.

போலியோவைப் பற்றி நாம் அறிய வேண்டியவை

போலியோ பரவும் ஒரு வைரல் நோய். கடும் நோயாளிகளுக்கு மூச்சு விடுவதில் சிரமமும் குணப்படுத்த முடியாத வாதமும் ஏற்படும்.

இது போலியோ வைரசால் உண்டாகிறது. இந்த வைரஸ் மல-வாய் மூலம் நபருக்கு நபர் பரவுகிறது. குறுகிய அளவில், அசுத்த நீர் அல்லது உணவு போன்றவற்றாலும் பரவலாம். குடலில் இந்த வைரஸ் பலுகிப்பெருகும்.

5 வயதுக்குட்பட்ட குழந்தைகளையே பெரும்பாலும் இது பாதிக்கும்.

ஒரே ஒரு போலியோவால் பாதிக்கப்பட்ட குழந்தை இருக்கும் வரை ஒரு நாட்டில் இருக்கும் அனைத்து குழந்தைகளுக்கும் ஆபத்துள்ளது.

போலியோவைத் தடுக்கவே முடியும்; குணப்படுத்த முடியாது. போலியோ தடுப்பு மருந்து குழந்தையை வாழ்நாள் முழுதும் காக்கும்.

இரு வகை தடுப்பு மருந்து உண்டு. ஒன்று வாய் மூலம் கொடுக்கும் சொட்டு மருந்து. இன்னொன்று வயதுக்கு ஏற்றபடி கை அல்லது காலில் அளிக்கும் ஊசி மருந்து.

போலியோவின் அறிகுறிகள்

காய்ச்சல்

தலைவலி

தொண்டைவலி

வாந்தி

களைப்பு

கழுத்து, முதுகு, கை அல்லது காலில் வலி அல்லது விறைப்பு

தசை பலவீனம்

இந்த அறிகுறிகள் தொற்று ஏற்பட்டு 10 தினங்கள் வரை இருக்கும்.

போலியோவால் வாதம் ஏற்படுத்தும் ஆபத்துக் காரணிகள்

போலியோவைக் குணப்படுத்த முடியாது என்பதால் அதைத் தடுப்பு மருந்தின் மூலம் தடுக்கவே முடியும். முறைப்படி அளிக்கப்படும் போலியோ தடுப்பு மருந்து குழந்தையை வாழ்நாள் முழுதும் பாதுகாக்கும். இரு வகை தடுப்பு மருந்து உண்டு. ஒன்று வாய் மூலம் கொடுக்கும் சொட்டு மருந்து. இன்னொன்று வயதுக்கு ஏற்றபடி கை அல்லது காலில் போடப்படும் ஊசி மருந்து.

போலியோ தடுப்பு மருந்தின் அளவு

போலியோ சொட்டு மருந்து 5 தடவைகளாக அளிக்கப்படுகிறது: பிறப்பின் போது முதல் வேளை. 6,10, 14 வாரங்களில் மூன்று முறை. 16-24 மாதத்தில் ஊக்க மருந்தாக ஒருமுறை. 2016-ல் ஒரு புது அறிமுகம் நடைமுறைப் படுத்தப்பட்டுள்ளது. இது ஊசிமூலம் செலுத்தக் கூடிய செயலிழப்பு செய்யப்பட்ட போலியோ தடுப்பு மருந்தாகும். 3 வது

இளம்பிள்ளை வாதத்திற்க்கான ஜோதிட காரணங்கள்:

இளம்பிள்ளை வாதம் எனும் போலியோ வாத நோய் பிரிவை சேர்ந்ததாக ஆயுர்வேதம் கூறுகிறது. மேலும் இந்த நோய் கடுமையான சுரத்திற்க்கு பிறகு ஏற்படுவதால் இது சுரவாதம் என்றும் அழைக்கப்படுகிறது. வாத நோய்க்கான காரக கிரஹமான சனைஸ்வர பகவானே இளம்பிள்ளை வாத நோய்க்கும் காரக கிரஹம் ஆகிறார்.

இந்த நோய் குழந்தைகளையே தாக்கும் நோயாகும். ஒரு குழந்தைக்கு பாலாரிஷ்ட்ட அமைப்பும் வாதநோய்க்கான கிரஹ அமைப்பும் இருந்தால் அவர்களுக்கு இளம்பிள்ளை வாத நோய் வருவதற்க்கான சாத்திய கூறுகள் அதிகமிருப்பதாக மருத்துவ ஜோதிடம் கூறுகிறது.

இளம்பிள்ளை வாத நோயை கர்மாவோடு தொடர்புடைய நோயாக ஜோதிட சாஸ்திரம் கூறுகிறது. எந்த குழந்தையோ அல்லது பெற்றோரோ தங்கள் பெற்றோர் அல்லது குழந்தைகளையோ உடன் பிறந்தவர்களையோ தீர்மானிக்க முடியாது. மாறாக அவரவர் கர்ம விணைகளுக்கு ஏற்பவே அமைகிறது.

ஒரு குழந்தை பிறந்ததிலிருந்து 12 வயதுவரை ஜாதகம் பார்க்க கூடாது என ஜோதிட சாஸ்திரம் வலியுறுத்துகிறது. குழந்தையின் முதல் நான்கு வயது வரை தாயின் பாப கர்மத்தையும் ஐந்து வயது முதல் எட்டு வயது வரை தந்தையின் பாப கர்மத்தையும் ஒன்பது வயது முதல் பன்னிரெண்டு வயது வரை தனது சுய பாப கர்மத்தையும் அனுபவிக்கும் காலமாகும். எனவே எந்த வயதில் ஒருவருக்கு நோய் ஏற்பட்டுள்ளது என்பதை பொருத்து கர்ம வினையை தீர்மானிக்கலாம். என்றாலும் பன்னிரெண்டு வயது வரை பாலாரிஷ்ட தோஷங்களை அறிய ஜோதிடம் தடை செய்யவில்லை..

பாலாரிஷ்ட தோஷங்கள்:

சந்திரனின் நிலை:

பாலரிஷ்டத்தை குறிப்பிடுவதில் சந்திரனின் நிலை முதன்மையானது என ஜோதிட சாஸ்திரம் குறிப்பிடுகிறது. சந்திரனின் பலம்/பலவீனம், சுப அசுப தன்மைகள் ஒரு குழந்தையின் பாலரிஷ்டத்தை தீர்மானிக்கிறது. சந்திரனின் அசுப தன்மைக்கு ஏற்றவாரு குழந்தையில் ஏற்படும் நோய் மற்றும் குழந்தை இறப்பு ஆகியவை அமைந்து விடுகிறது.

லக்னத்தின் பலம்:

சந்திரனை அடுத்து ஒரு குழந்தையின் லக்னத்தின் பலமே குழத்தையின் ஆரோக்கியம் மற்றும் ஆயுளை தீர்மானிக்கிறது. லக்னம் மற்றும் லக்னாதிபதி 6/8/12 அதிபதிகளுடன் மற்றும் பாதகாதிபதி, அசுப கிரஹ தொடர்பு ஏற்படாமல் இருப்பதும் அவர்களின் தசா புத்தி குழந்தை பருவத்தில் ஏற்படாமல் இருப்பதும் அவசியம் ஆகும்.

கேந்திர திரிகோணங்களின் நிலை:

ஒரு குழந்த்தைக்கு கேந்திர திரிகோணங்களில் அசுப கிரஹம் அமைவதும் குழந்தையின் ஆயுள் ஆரோக்யத்தை பாதிக்கும் காரனிகளாக அமைந்துவிடுகிறது. முக்கியமாக ஒரு ஜாதகத்தில் கேந்திர ஸ்தானங்கள் என்பவை தூண்களை போல அமைந்துவிடுகிறது. கேந்திரங்களில் சுப கிரஹங்கள் இருப்பது ஜாதகருக்கு பலத்தை தருகிறது. மாறாக கேந்திர ஸ்தானங்களில் அசுப கிரஹங்கள் நிற்பது அல்லது அசுப தொடர்புகள் ஏற்படுவது மற்றும் கேந்திராதிபதிகள் வக்கிரம் பெறுவது, கேந்திராதிபதிகள் மாந்தி சேர்க்கை பெறுவது ஆகியவை பாலாரிஷ்டத்தை முக்கியமாக இளம்பிள்ளை வாத நோய் ஏற்படும் அமைப்பாகிறது.

அசுப தசாபுத்தி மற்றும் கோச்சாரம்:

குழந்தை பருவத்தில் அசுப கிரஹங்கள் தசா புத்தியை நடத்துவது மற்றும் அசுப கிரஹங்களின் கோச்சார சேர்க்கை லக்னம், 6/8/12 பாவங்களுடன் ஏற்படுவது ஆகியவை குழந்தை பருவத்தில் நோய் மற்றும் கண்டம் ஆகியவற்றை ஏற்படுத்துகிறது.

பாலாரிஷ்ட கிரஹ சேர்க்கை:

1. சந்திரன் லக்னத்திற்க்கு 6/8/12 ஆகிய வீடுகளில் நின்று அசுபர்களுடன் தொடர்பு கொள்வது.

2.வக்கிரம் பெற்ற இயற்க்கை சுபர்கள் 6/8/12 வீடுகளில் நிற்பது.

3. குழந்தை பிறந்த காலம் சூரியோதய/அஸ்தமன காலம், சந்திர ஹோரை,

நக்‌ஷத்திர கண்டாந்தம், திதி கண்டாந்தம், கடகம்/விருச்சிகம்/மீனம் ஆகிய ராசிகளின் கடைசி நக்‌ஷத்திர பாதம் அல்லது, மேஷம்/சிம்மம்/குரு ஆகிய ராசிகளின் முதல் நக்‌ஷத்திர பாதமாகவோ அமைந்து கண்டாந்த ராசிகளில் நிற்பது ஆகியவை பாலரிஷ்டத்தை ஏற்படுத்தும் அமைப்பகும்.

4. குழந்தையின் ஜெனன ஜாதகத்தில் லக்னாதிபதி பாப கர்தாரி யோகம் பெற்று அசுபத்தன்மை அடைந்து நிற்பது.

5. சந்திரன் அசுப அசுபத்தன்மை அடைந்து கேந்திரங்களில் நிற்பது.

6. காலபுருஷனுக்கு எட்டாம் வீடான விருச்சிகம் லக்னமாக அமைந்து அனைத்து அசுப கிரஹங்களும் 1 முதல் 7 வரையான வீடுகளிலும் அனைத்து சுபர்களும் 7 முதல் 1 வரையான வீடுகளிலும் நின்று வஜ்ர முஷ்டி யோகம் பெருவது.

7. சனி வக்ரம் பெற்று மேஷம், விருச்சிகம், 6/8/12 வீடுகளில் நிற்பது மற்றும் பலமான செவ்வாயுடன் தொடர்பு கொள்வது.

போலியோ எனும் இளம்பிள்ளை வாத நோய்க்கான கிரஹ சேர்க்கைகள்:

பாலரிஷ்ட அமைப்போடு கீழ்கண்ட வாத நோய்க்கான கிரஹ அமைப்பை பெற்று இருப்பது போலியோ எனும் இளம்பிள்ளை வாத நோய் ஏற்படும் அமைப்பாகிறது:-

1. சனி லக்னத்தில் நின்று செவ்வாய் 5,7,9 வீடுகளில் நிற்பது

2.சனியும் சந்திரனும் 12ம் வீட்டில் நிற்பது.

3.சூரியன், சந்திரன் மற்றும் சனி லக்னத்தோடு தொடர்பு கொள்வது.

4.குரு லக்னத்தில் நின்று சனி மூலை ராசியான மிதுனத்தில் அல்லது 7ம் வீட்டில் நிற்பது.

5.சனியும் சந்திரனும் 6 அல்லது 9ம் வீட்டில் நிற்பது.

6. சனியும் ராகுவும் 2அல்லது மூன்றாம் வீட்டில் நிற்பது.

7.சூரியன் கடகத்தில் நின்று சனியுடன் எந்தவிதத்திலாவது தொடர்பு கொள்வது.

8. லக்னாதிபதி லக்னத்திலேயே நின்று சனி 6ம் வீட்டில் நிற்பது.

9.சூரியனும் சுக்ரனும் தசா புத்தி நாதர்களாக அமைவது.

10. சனியும் செவ்வாயும் 6 அல்லது 12 வீட்டில் நிற்பது.

11. சூரியன், சந்திரன், செவ்வாய் ஆகிய எலும்போடு தொடர்புடைய கிரஹஙள் லக்னத்தில் நின்று சனியோடு தொடர்பு கொள்ளும்போது வாத நோய் ஏற்படுகிறது.

போலியோ சொட்டு மருந்து பெற்று நோய் எதிர்ப்பு சக்தி தரும் கிரஹ அமைப்பு:

1. ஒருவருக்கு நோய் எதிர்ப்பு சக்தி நிறைந்து நோய் தடுப்பாற்றலுடன் விளங்க அவருக்கு ஜாதகத்தில் லக்னாதிபதி பலம் நிறைந்து நிற்க்க வேண்டும்.

2. லக்னாதிபதி லக்னத்திலேயே நிற்பது சிறப்பு. அதிலும் அவர் ஆட்சியாகவோ உச்சமாகவோ நின்றுவிட்டால் மிக்க பலமிக்கவராவார். அவ்வாறு நிற்க்கும்போது அவருக்கு நோய் தடுப்பாற்றல் இயற்க்கையாகவே மிகுந்து இருக்கும்.

3 ஆத்மகாரகன் எனப்படும் சூரியன் உலகிற்கெல்லாம் அளப்பறிய சக்திகளை வழங்குபவன் ஆவான். சூரியனின் நிலை ராகு கேதுவுடன் இனைந்து கிரகண தோஷம் பெறாமலும், 6/8/12 தொடர்புகள் பெறாமலும் இருக்க வேண்டும். இந்த நிலை ஜெனன ஜாதக ஆத்ம காரக கிரகத்துக்கும் பொருந்தும்.

4. உடம்பு மற்றும் ரத்தத்தின் காரகன் சந்திரன் ஆகும். இவரே மனதிற்கும் காரகன் ஆவார். தன்னம்பிக்கை பெற்று மனோ திடம் நிறைந்திருந்தால்தான் நோய் எதிர்ப்பு சக்தி பலனளிக்கும்.

5. நோய் தடுப்பாற்றலை தரும் கிரகம் குரு பகவானாவார். குருபகவானின் அருள் பார்வை இருந்தால் மட்டுமே ஓருவருக்கு நோய் தடுப்பாற்றல் பலனளிக்கும்.

இளம்பிள்ளை வாதம் எனும் போலியோ நோய்க்கு ஜோதிட ரீதியான பரிகாரங்கள்:

இளம்பிள்ளை வாதத்தால் பாதிப்படைந்த பின் மருந்துகளோ அல்லது பரிகாரமோ பலனளிக்காது. எனவே குழந்தைக்கு கடுமையான காய்ச்சல் ஏற்படும்பொழுதே ஜோதிடரை அனுகி பாலரிஷ்ட தோஷ நிலைகளை அறிந்து கீழ் கண்ட பரிகாரங்களையும் செய்து தகுந்த மருத்துவமும் செய்து வர பாதிப்பின்றி தப்பிக்க வழி செய்யும்.

1. குழந்தை பிறந்தது முதல் ஜென்ம நக்‌ஷத்திர நாளில் ஆயுஷ்ய ஹோமம் செய்வது, குல தெய்வ வழிபாடு செய்வது ஆகியவை கர்ம வினையிலிருந்து குழந்தைகளை காக்கும்.

2. அவரவர் கர்ம வினைக்கேற்ப நன்மை தீமைகளை வழங்கும் கர்ம காரகன் சனைஸ்வர பகவானுக்கு உகந்த சனி கிழமை மற்றும் புதனுக்கு உகந்த புதன் கிழமைகளில் எண்ணை (நல்லெண்ணை) தேய்த்து குளிப்பது. பெண்கள் செவ்வாய் மற்றும் வெள்ளிக்கிழமைகளில் எண்ணை ஸ்நானம் செய்யலாம். இதில் நல்லெண்ணை சனியின் காரகம் பெற்று மூட்டுகளுக்கு உயவுப்பொருளாக பயன்படுவதால் மூட்டு தேய்மானத்தை குறைக்கிறது.

3. வாத பித்த கப தோஷங்களை சமன் செய்யும் திரிபலா சூரணம், யோகராஜ குக்குலு, வாத ராக்ஷஷ ரஸம் போன்ற ஆயுர்வேத மருந்துகளை தகுந்த மருத்துவ ஆலோசனையுடன் எடுத்துக்கொள்வது.

4. மேலும் ஆயுர்வேத மருந்து மற்றும் சனியின் காரகம் பெற்ற ப்ரபஞ்சன விமர்தன தைலம், கொடன்சுகாதி தைலம், நாராயணாதி தைலம், கற்பூராதி தைலம், பிண்ட தைலம் போன்றவற்றை மிதமான சூட்டில் தேய்த்து விடுவதும் சிறந்த பலனளிக்கும்.

5. சனிஸ்வர பகவானுக்கு சனிக்கிழமைகளில் எள் விளக்கேற்றுவது, முதியவர் மற்றும் ஊனமுற்றவர்களுக்கு இயன்ற உதவி (செருப்பு, குடை கைத்தடி) செய்வது, திருநள்ளாறு, திருநாரையூர், குச்சனுர், சென்னை பல்லாவரத்தை அடுத்த பொழிச்சலுர் ஆகிய சனி ஸ்தலங்களுக்கு அவ்வப்பொது சென்று வருவது.

6. சூரிய நமஸ்காரம் செய்வது மற்றும் ஆதித்ய ஹ்ருதயம் போன்ற ஸ்லோகம் சொல்வது மற்றும் கேட்பது எலும்புக்கு காரகனாம் சூரியனுக்கு உகந்தது. சென்னையில் உள்ளவர்கள் வியாசர்பாடியில் உள்ள அருள்மிகு ரவிஸ்வரர் கோயிலுக்கு ஞாயிற்று கிழமைகளில் சென்று தரிசித்து வருவது சிறந்த பலனளிக்கும்.

7. புதனுக்கு உகந்த புதன் கிழமைகளில் பெருமாள் கோயில் அல்லது நவக்ரக புதன் சன்னதிகளில் நரம்பை பலப்படுத்தும் புரத சத்து மிகுந்த பாசிப்பயறு சுண்டல் செய்து சிறுவர்கள் மற்றும் முதியோர்களுக்கு விநியோகம் செய்துவிட்டு சாப்பிடுவது.

8. செவ்வாயின் காரகம் நிறைந்த பிஸியொதிரபி எனப்படும் உடற்பயிற்சியை செய்வது, மின்சார சிகிச்சை அளிப்பது

9. ஜாதகத்தில் தாய் அல்லது தந்தைக்கு ஜாதகத்தில் புத்திர ஸ்தானம், புத்திர ஸ்தானதிபதி, புத்திரகாரகன், சூரியன் ஆகியவர்களுக்கு மாந்தி, வக்கிரம் பெற்ற சனி ஆகிய கிரஹ தொடர்புகள் இருந்தால் குழந்தை பெறுவதற்க்கு முன்பே மாந்தி மற்றும் சனைஸ்வர பகவானுக்கு தேவையான பரிகாரங்கள் செய்வது கர்ம வினை பாதிப்பை குறைக்கும்.

10. குடும்பத்தில் பித்ருக்களுக்கு தவறாமல் தர்ப்பணம், சிரார்தம் ஆகியவை செய்வது.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+