பங்குனி உத்திர ஆராட்டு விழா: சபரிமலை ஐயப்பன்கோவில் நடை இன்று திறப்பு - நாளை கொடியேற்றம்
பங்குனி மாத பூஜை மற்றும் ஆராட்டு திருவிழாவை முன்னிட்டு கோவில் நடை இன்று திறக்கப்பட்டு 19ஆம் தேதி வரை சிறப்பு பூஜைகள் நடைபெறும்.
பத்தனம்திட்டா: பங்குனி மாத பூஜை மற்றும் ஆராட்டு திருவிழாவை முன்னிட்டு சபரிமலை ஐயப்பன் கோவில் நடை இன்று திறக்கப்பட்டு 19ஆம் தேதி வரை சிறப்பு பூஜைகள் நடைபெறும். மார்ச் 9ம் தேதி திருவிழா கொடியேற்றம் நடைபெறும். 18ஆம் தேதி பம்பையில் ஐயப்பனுக்கு ஆராட்டு விழா நடைபெறும்.
சபரிமலை ஐயப்பன் கோவிலில் ஒவ்வொரு மாதப்பிறப்பின் போதும், மாதாந்திர பூஜை, படி பூஜை, சித்திரை விசுபூஜை, மண்டல பூஜை, மகர விளக்கு பூஜை, பங்குனி உத்திர ஆராட்டு திருவிழா பூஜை என அனைத்தும் புகழ்பெற்றதாகும். இதில் மற்ற நாட்களில் மற்றும் விஷேச நாட்களில் பூஜைகள் நடைபெறும்போது 10 வயது முதல் 50 வயதுக்குட்பட்ட பெண்கள் யாரும் அனுமதிக்கப்படுவது கிடையாது

கேரளா மாநிலம், சபரிமலை ஐயப்பன் கோயில் சன்னிதான நடை மாதாந்திர பூஜையை முன்னிட்டு கடந்த 12ஆம் மாலை திறக்கப்பட்டது. தொடர்ந்து 13ஆம் தேதி முதல் வழக்கமான பூஜைகள் மற்றும் வழிபாடுகள் நடைபெற்று வந்தன. 5 நாட்கள் நடைபெற்ற சிறப்பு பூஜைகளுக்கு பின்பு, நேற்று இரவு சபரிமலை சன்னிதான நடை அடைக்கப்பட்டது.
இந்நிலையில், வரும் பங்குனி மாதம் 10 நாட்கள் நடைபெறும் ஐயப்பன் ஆராட்டு திருவிழா மற்றும் மாதாந்திர பூஜைகளை முன்னிட்டு, சபரிமலை சன்னிதான நடை வரும் மார்ச் 8ஆம் தேதி மாலை 5:30 மணிக்கு திறக்கப்படுகிறது. சபரிமலை தந்திரி கண்டரரு மகேஷ் மோகனரு முன்னிலையில் மேல்சாந்தி பரமேஸ்வரன் நம்பூதிரி சன்னிதான நடையை திறந்து வைக்கிறார்.
நாளைய தினம் மார்ச் 9ஆம் தேதியன்று சபரிமலை ஐயப்பன் கோயிலில் பங்குனி ஆராட்டுத் திருவிழா தொடங்க உள்ளது. அதை முன்னிட்டு, அன்றைய தினம் காலை 10:30 மணியில் இருந்து 11.30 மணிக்குள் ஆராட்டுத் திருவிழாக் கொடியை தந்திரி கண்டரரு மகேஷ் மோகனரு ஏற்றி வைக்கிறார்.
பங்குனி மாதத்தில் சபரிமலை ஐயப்பனுக்கு பம்பா நதிக்கரையில் நடைபெறும் பங்குனி உத்திர ஆராட்டு திருவிழாவில் பாரபட்சமில்லாமல், அனைத்து வயதுடைய பெண்களும் கலந்துகொண்டு சபரிமலை ஐயப்பனை கண் குளிர தரிசிக்கலாம்.
ஐயப்பனை பெண்களும் தரிசிக்க வேண்டும் என்ற நோக்கத்தில் தான் ஆராட்டு திருவிழா நடத்தப்படுவதாக கூறப்படுகிறது. இதனால் தான், மற்ற விழாக்களை விட பங்குனி உத்திர ஆராட்டு திருவிழாவை காண அனைத்து வயது பெண்களும் ஆவலோடு காத்திருப்பார்கள்.
ஆராட்டு திருவிழாவின் போது, சபரிமலையில் இருந்து தர்மசாஸ்தாவான ஐயப்பனின் உற்சவர் சிலை பம்பை ஆற்றுக்கு கொண்டுவரப்பட்டு, ஆராட்டு உற்சவம் நடைபெறும். பின்னர் ஐயப்பனை நன்கு அலங்கரித்து அங்குள்ள விநாயகர் கோவிலின் முன்பு சுமார் மூன்று மணி நேரம் வரை வைத்திருப்பார்கள். அந்த சமயத்தில் அனைத்து வயதுடைய பெண்களும் கலந்து கொண்டு பிரம்மச்சாரிய கடவுளான தர்மசாஸ்தா ஐயப்பனை கண்குளிர தரிசனம் செய்வார்கள்.
ஆராட்டுத் திருவிழாவில் 10ஆம் தேதி முதல் 17ஆம் தேதி வரை நாள்தோறும் ஸ்ரீபூதபலி, உற்சவபலி ஆகிய நிகழ்ச்சிகள் நடைபெறும். 17ஆம் தேதியன்று இரவு சரங்குத்தியில் ஐயப்பன் பள்ளிவேட்டை வைபவம் நடைபெறும். வரும் 18ஆம் தேதியன்று, விழாவின் முக்கிய நிகழ்ச்சியாக, காலை 11 மணியளவில், பம்பை ஆற்றங்கரையில் ஐயப்பனுக்கு ஆராட்டு வைபவம் நடைபெறும். அதைத் தொடர்ந்து வழக்கமான பூஜைகளுக்கு பின்பு, மாலையில் கொடியிறக்க வைபவம் நடைபெற்று 10 நாள் ஆராட்டு திருவிழா வைபவம் நிறைவு பெறும்.
மார்ச் 19ஆம் தேதியன்று இரவில் சபரிமலை சன்னிதான நடை அடைக்கப்படும். பங்குனி ஆராட்டுத் திருவிழாவை முன்னிட்டு, தரிசனத்திற்கு கூடுதல் பக்தர்களை ஆன்லைன் முன்பதிவு அடிப்படையில் அனுமதிப்பது தொடர்பாக அரசிடம் கோரிக்கை வைக்கப்படும் என்று திருவிதாங்கூர் தேவஸ்தான தலைவர் அனந்த கோபன் தெரிவித்துள்ளார்.
-
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
திருமணம் முதல் அஜித் தாயார் அஞ்சலி வரை! சுப, துக்க நிகழ்வுகளில் மட்டும் விஜய்யுடன் வருகிறாரா த்ரிஷா?












Click it and Unblock the Notifications