For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

நிலவுக்கு அருகே வானில் வரிசை கட்டும் கிரகங்கள்..நாளை சூரிய அஸ்தமனத்திற்குப் பின்.. மிஸ் பண்ணாதீங்க

Google Oneindia Tamil News

சென்னை: அந்தி மாலையில் சூரிய அஸ்தமனத்திற்குப்பிறகு தொடுவானத்தின் மேற்கு பக்கத்தில் 5 கிரகங்கங்களின் அணிவகுப்பை நாம் வெறும் கண்ணால் பார்க்கலாம். அதில் நமது கண்களுக்கு வரிசையாக குரு, சுக்கிரன். செவ்வாய், புதன், யுரேனஸ், கூடவே சந்திரனையும் பார்க்கலாம். கிரகங்களின் இந்த அணிவகுப்பு நாட்டு மக்களுக்கு பாதிப்பை ஏற்படுத்துமா? அரசியல் தலைவர்களின் உயிருக்கு ஆபத்தாக முடியுமா என்ற கேள்வி எழுந்துள்ளது.

சில தினங்களுக்கு முன்பாக வானத்தில் சந்திரனும், சுக்கிரனும் அருகருகே வானத்தில் பிரகாசமாக ஜொலித்ததை பலரும் பார்த்து ரசித்தனர். இந்த வாரத்தில் நாளைய தினம் 5 கிரகங்கள் ஒரே வரிசையில் இருப்பதை காண முடியும்.

சூரியன் அஸ்தமனத்துக்கு பிறகு மேற்கு தொடுவானை உற்றுக் கவனிக்க வேண்டும் என்று நாசா விண்வெளி ஆய்வாளர் பில் குக் குறிப்பிட்டுள்ளார்.

மிஸ்டர் ராகுல் காந்தி! சாவர்க்கரை இழிவுபடுத்தாதீங்க- 'பங்காளி' கட்சி தலைவர் உத்தவ் தாக்கரே வார்னிங்! மிஸ்டர் ராகுல் காந்தி! சாவர்க்கரை இழிவுபடுத்தாதீங்க- 'பங்காளி' கட்சி தலைவர் உத்தவ் தாக்கரே வார்னிங்!

கிரகங்கள் வரிசை

கிரகங்கள் வரிசை

ராசி மண்டலத்தில் இன்றைய தினத்தில் கும்ப ராசியில் சனி, மீன ராசியில் சூரியன், புதன், குரு, மேஷ ராசியில் ராகு, சுக்கிரன், ரிஷப ராசியில் சந்திரன், மிதுனராசியில் செவ்வாய் என கிரகங்கள் பயணம் செய்கின்றன. துலாம் ராசியில் கேது பயணம் செய்கிறார். இந்த கிரகங்களின் வரிசையை நாளை வானத்திலும் தெளிவாக வெறும் கண்களில் காணலாம். சூரியன் மறைந்த அரைமணி நேரத்திற்குள் இந்த கிரகங்களின் வரிசை பார்த்து ரசிக்கலாம். அப்போது செய்யும் வேண்டுதலுக்கு அற்புதமான பலன்கள் கிடைக்கும்.

மேற்கில் கிரக வரிசை

மேற்கில் கிரக வரிசை

மேற்குப்பகுதியில் வானம் தௌிவாக இருக்கும்போது உலகத்தின் எந்த மூலையில் இருந்தும் இந்த 5 கிரக வரிசையை பார்த்து ரசிக்கலாம். வியாழன், வெள்ளி, செவ்வாய் கிரகங்கள் பிரகாசமானவை என்பதால் அவற்றை தெளிவாக பார்த்து ரசிக்கலாம். சந்திரனும் அருகில் இருக்க நாம் பிரகாசமாக ஒளிரும் கிரகங்களைப் பார்க்கலாம்

செவ்வாய் அருகில் நிலவு

செவ்வாய் அருகில் நிலவு

அதிலும் செவ்வாய் கிரகம் செந்நிறத்தில் நிலவுக்கு அருகில் இருப்பதை பார்க்கலாம். யுரேனஸ், புதன் கிரகங்களையும் சுக்கிரனுக்கு மேலே பச்சையாக ஒளிர்வதை பார்க்கலாமாம். கடந்த ஆண்டு கோடைகாலத்தில் 6 கிரகங்கள் அதிகாலையில் கிழக்குப் பகுதியில் வரிசையாக தோன்றின. இப்போது மேற்கில் 5 கிரகங்கள் வரிசையாக தோன்றப்போகின்றன.

ஒரே ராசியில் கிரகங்கள்

ஒரே ராசியில் கிரகங்கள்

கடந்த 3 ஆண்டுகளுக்கு முன்பு 2019ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் இறுதியில் சூரிய கிரகணம் நிகழ்ந்தது. அப்போது ஆறு கிரகங்கள் தனுசு ராசியில் சஞ்சரித்தன. சூரியன், சனி, கேது, குரு, புதன், சந்திரன் ஆகிய கிரகங்கள் தனுசு ராசியில் இணைந்திருக்க கூடவே சூரிய கிரகணமும் நிகழ்ந்தது. அது மிகப்பெரிய பேரழிவை ஏற்படுத்தும் என்று ஜோதிடர்கள் அப்போது கணித்தனர்.ஜோதிடர்கள் சொன்னது போலவே கொரோனா என்ற கொடிய வைரஸ் உலகத்தை தாக்கியது. மக்கள் கொத்து கொத்தாக பாதிக்கப்பட்டனர். பல லட்சம் பேர் உயிரிழந்தனர்.

ஒரே வரிசையில் கிரகங்கள்

ஒரே வரிசையில் கிரகங்கள்

கடந்த ஆண்டு ஏப்ரல் மாதம் இறுதியில் சுக்கிரன், குரு, சனி, செவ்வாய், சந்திரன் ஆகிய கிரகங்கள் ஒரே நேர் கோட்டில் வரிசையாக அணிவகுத்தன. பூமியில் இருந்து இதை வெறும் கண்களால் காண முடிந்தது. இந்த ஆண்டு இதுபோல கிரகங்களின் அணிவகுப்பு நிகழப்போகிறது. பொதுவாக இதுபோன்ற கிரகங்களின் சேர்க்கை அணிவகுப்பின் போது ஏதாவது ஒரு அதிசயம் நிகழும். சில நேரங்களில் நிலநடுக்கம், பூகம்பம், சுனாமி போன்ற மிகப்பெரிய விபத்துக்கள் கூட நிகழ்ந்துள்ளது.

பாதிப்பு வருமா?

பாதிப்பு வருமா?

இந்த கிரகங்களின் அணிவகுப்பினால் மக்களுக்கு எதுவும் பாதிப்பு ஏற்படுமா என்று யாரும் எதுவும் கணித்து சொல்லாவிட்டாலும் இந்த ஆண்டு புதிய விஷ காய்ச்சல் வேகமாக பரவும் என்றும் குழந்தைகள் மற்றும் நடுத்தர வயதுடையவர்களுக்கு வைரஸ் காய்ச்சல் பாதிக்கும் என்றும் சோபகிருது வருட தமிழ் பஞ்சாங்கத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது. சுனாமி,நிலநடுக்கம் போல புதிதாக இயற்கை பேரிடர் ஏற்படுமா என்ற அச்சம் எழுந்துள்ளது.

English summary
5 Planets line up in the sky: Five planets including Venus, Mars, Jupiter, Mercury and Uurenus will align in a straight line in the Western sky for around after the sunrise.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X