சபரிமலை ஐயப்பன் கோவில் ஆடி மாத பூஜைக்காக இன்று நடை திறப்பு - பக்தர்களுக்கு இதெல்லாம் கட்டாயம்
ஆடி மாத பூஜைக்காக சபரிமலை ஐயப்பன் கோவில் நடை இன்று மாலை திறக்கப்படுகிறது. நாளை முதல் ஆன்லைனின் முன்பதிவு செய்த 5 ஆயிரம் பக்தர்களுக்கு மட்டும் சாமி தரிசனம் செய்ய அனுமதி வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
திருவனந்தபுரம்: சபரிமலை ஐயப்பன் கோவில் ஆடி மாத பூஜைக்காக இன்று மாலை திறக்கப்படுகிறது.
ஆன்லைனின் முன்பதிவு செய்த 5 ஆயிரம் பக்தர்கள் மட்டும் நாளை முதல் சாமி தரிசனம் செய்ய அனுமதி வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. ஐயப்பனை தரிசிக்க வரும் பக்தர்கள் கொரோனா நெகட்டிவ் சான்றிதழ் அல்லது கொரோனா தடுப்பூசி 2 டோஸ்கள் போட்டதற்கான ஆன்லைன் சான்றிதழ் கட்டாயம் கொண்டு வர வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
கொரோனா பரவலைத் தொடர்ந்து கேரளாவில் கடந்த ஆண்டு மார்ச் மாதம் முதல் சபரிமலை ஐயப்பன் கோவிலில் பக்தர்கள் அனுமதிக்கப்படவில்லை. மாதாந்திர பூஜை பக்தர்கள் இன்றி நடைபெற்றது. படிப்படியாக தளர்வுகள் அறிவிக்கப்பட்ட பின்னர் ஐப்பசி மாத பூஜையில் பங்கேற்க பல்வேறு கட்டுப்பாடுகளுடன் பக்தர்கள் அனுமதிக்கப்பட்டனர். ஆன்- லைனில் முன்பதிவு செய்த 1000 பக்தர்களுக்கு அனுமதி வழங்கப்பட்டது.

கார்த்திகை மாதம் மண்டல பூஜை காலத்தில் தினமும் 3 ஆயிரம் பக்தர்களுக்கும், மகர விளக்கு பூஜை காலத்தில் 5 ஆயிரம் பக்தர்களுக்கும் சாமி தரிசனம் செய்ய அனுமதி வழங்கப்பட்டது. கொரோனா நெகட்டிவ் சான்றிதழ் கட்டாயம் உள்ளிட்ட பல்வேறு கட்டுப்பாடுகள் காரணமாக பக்தர்கள் வருகை குறைவாக இருந்தது.
சித்திரை மாத விஷூ பூஜைக்குப் பிறகு கோவில் நடை அடைக்கப்பட்டது.
கொரோனா 2வது அலை நாடு முழுவதும் தீவிரமடைந்ததை முன்னிட்டு கடந்த மே மாதம் முதல் பல கட்டுப்படுகள் விதிக்கப்பட்டன. கோவில்கள், வழிபாட்டுத்தலங்களுக்குள் பக்தர்கள் அனுமதிக்கப்படவில்லை. வழக்கமான பூஜைகள் பக்தர்கள் பங்கேற்பின்றி நடைபெற்றது.
கேரளாவில் கொரோனா பரவல் விகிதம் படிப்படியாக குறைந்து வருவதால் ஊரடங்கில் பல்வேறு தளர்வுகள் அறிவிக்கப்பட்டன. வழிபாட்டு தலங்களை திறக்க கேரள அரசு அனுமதி அளித்துள்ளது. அதனால் கோவில்கள், ஆலயங்கள், மசூதிகள் உள்பட வழிபாட்டு தலங்கள் திறக்கப்பட்டன.
இந்நிலையில் நாளை ஆடி மாதம் பிறக்க போவதையொட்டி இன்று மாலை 5 மணி முதல் நடை திறக்கப்படுகிறது. 21ஆம் தேதி வரை பூஜைகள் நடைபெறும். ஆன்லைன் முன்பதிவு அடிப்படையில் தினசரி 5000 பக்தர்கள் அனுமதிக்கப்படுவார்கள் என தேவசம்போர்டு அறிவித்துள்ளது.
சாமி தரிசனத்திற்கு வரும் பக்தர்கள் 48 மணி நேரத்திற்குள் எடுக்கப்பட்ட ஆர்டிபிசிஆர் நெகட்டிவ் சான்றிதழ் அல்லது கொரோனா தடுப்பூசி 2 டோஸ் போட்டதற்கான ஆன்லைன் சான்றிதழ் கண்டிப்பாக கொண்டு வர வேண்டும். இந்த சான்றிதழ்கள் அல்லாத பக்தர்கள் தரிசனத்திற்கு அனுமதிக்கப்பட மாட்டார்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதிகாலை 5 மணிக்கு நடை திறக்கப்பட்டு நிர்மால்ய தரிசனம், கணபதி ஹோமம், உஷபூஜை, உச்ச பூஜைக்கு பின்பு மதியம் 1 மணிக்கு நடை அடைக்கப்படும். பின்னர் மாலை 5 மணிக்கு நடை திறக்கப்பட்டு 6 மணிக்கு தீபாராதனை, அபிஷேகம், இரவு 8.30 மணிக்கு ஹரிவராசனம் பாடி நடை அடைக்கப்படும்.
-
ரூட்டை மாற்றிய இந்திய ஐடி நிறுவனங்கள்.. இனியும் சும்மா இருந்தா வேலைக்கு ஆகாது! -
மேகதாதுவில் அணை கட்ட தமிழகத்தின் அனுமதி தேவையில்லை.. கர்நாடக முதல்வரானதும் டிகே சிவக்குமார் பேச்சு -
விஜய்யின் ஆலோசகர் + 2 அமைச்சர்களால் நேர்ந்த அவமானம்.. சட்டசபை செயலாளர் சீனிவாசன் பதவி விலகியது ஏன்? -
தமிழகம் முழுவதும் டாஸ்மாக் கடைகள், பார்களை தனியாரிடம் ஒப்படைக்க திட்டம்? விஜய் எடுக்க போகும் முடிவு? -
75 பவுன்ஸ் ஆன செக்குகள்.. நடிகர் கரண் வாழ்க்கையை கெடுத்தது அந்த பெண்ணா? உண்மையை உடைத்த பிரபலம் -
எலக்ட்ரீஷியன் நள்ளிரவில் வாஷ்பேசினில் பண்ண காரியம்! உறைந்து போன 4 பிஞ்சு குழந்தைகள்! பதைபதைத்த கேரளா -
பனையூர் பாபுவின் மாஸ் மூவ்... அந்த தொகுதிதான் காரணமா? 7ம் தேதி திமுகவில் சர்ப்ரைஸ்.. ஆடிப்போன விசிக -
விஜய்யை இப்படியே விடக்கூடாது.. பாஜக பாணியை கையில் எடுக்கும் திமுக.. பெரிய மாற்றம் வரப்போகுது -
டாஸ்மாக் தனியார் மயம் ஆகிறதா? மிகப்பெரிய சீர்திருத்தம் வரப்போகிறது.. அமைச்சர் விக்னேஷ் தகவல் -
விஜய் அமைச்சரவை கூட்டத்தின் Exclusive Footage.. திமுக ஐடி விங் பதிவிட்ட வீடியோ! -
திருச்செந்தூர் முருகனின் விஸ்வரூப தரிசனம்! அடுத்தடுத்து முதல்வர்களான விஜய், டி.கே.சிவக்குமார்! -
தவெக அரசின் முதல் பிரம்மாண்ட முதலீடு: எல் அண்ட் டி உடன் ₹18,600 கோடி ஒப்பந்தம்.. 8,200 வேலைவாய்ப்பு!












Click it and Unblock the Notifications