சனி பெயர்ச்சி 2022: துன்பம் தொலைந்தது இப்போ... நிம்மதி பெருமூச்சு விடும் ராசிக்காரர்கள் யார்?
சனிபகவானின் பிடியில் இருந்தும் தீய பார்வையில் இருந்தும் சில ராசிக்காரர்கள் விடுபடப்போகிறார்கள். அந்த அதிர்ஷ்டசாலிகள் யார் என்று பார்க்கலாம்.
சென்னை: சனிபகவானால் சங்கடங்களை சந்தித்து வந்த சில ராசிக்காரர்கள் இனி துன்பம் தொலைந்தது என்று சந்தோஷப்படப்போகிறார்கள். கும்ப ராசியில் ஆட்சி பெற்று அமர்ந்துள்ள சனிபகவானின் பிடியில் இருந்து தப்பிய ராசிக்காரர்கள் யார் யார் என்று பார்க்கலாம்.
ஏழரை சனி காலத்தில் மட்டும் சிலருக்கு சங்கடங்கள் ஏற்படாது அர்த்தாஷ்டம சனி, அஷ்டம சனி, கண்டச்சனி காலத்திலும் சிலருக்கு கஷ்டங்களும் துன்பங்களும் வந்து போகும். வாழ்க்கையில் சோதனைகளைக் கொடுத்து அனுபவிக்க வைத்து படிப்பினைகளைத் தருவார் சனிபகவான்.
ஆணவக்காரர்களின் தலையில் தட்டி வைத்து சரியான தண்டனைகளைத் தருவார் சனிபகவான். நீதிமானாக திகழும் சனிபகவான் தனது தசாபுத்தி காலத்தில் பாடங்களைக் கற்றுத்தருவார். இப்போது நிகழ்ந்துள்ள அதிசார சனி பெயர்ச்சியால் எந்த ராசிக்காரர்களின் துன்பங்கள் முடிவுக்கு வரும் என்று பார்க்கலாம்.

சனியின் பிடியில் இருந்து தப்பும் தனுசு
தனுசு ராசி குருபகவானின் வீடு. நெருப்பு ராசிக்காரர்கள். கடந்த ஏழரை ஆண்டுகாலமாக சனியால் பட்டபாடு கொஞ்ச நஞ்சமல்ல. பெற்றோர்கள், உறவினர்கள், சுற்றத்தார் என பலரது எதிர்ப்புகளையும் சம்பாதித்து இருப்பீர்கள். சனிபகவானின் பிடியில் சிக்கிய நீங்கள் அல்லல்பட்டு துயரப்பட்டு வந்திருப்பீர்கள். இனி உங்கள் துயரங்கள் குறையும், சங்கடங்கள் தீரும் காலம் வந்து விட்டது.

வெற்றிகள் தேடி வரும்
குடும்ப பாவத்தில் இருந்த சனி விலகுவதால் திருமணத்திற்கு முயற்சி செய்யலாம். பிரிந்து போன குடும்ப உறவுகள் ஒன்று சேர்வார்கள். குடும்ப ஒற்றுமை ஏற்படும். உடல் நலத்தினால் கஷ்டப்பட்டவர்களுக்கு பாதிப்புகள் குறையும். கால்வலி பிரச்சினை தீரும் ஆரோக்கியம் கூடும். தேவையான தனவரவை தருவார். பணப்பற்றாக்குறை தீரும். இதுநாள் வரை நஷ்டங்களை ஏற்படுத்திய சனி இனி லாபங்களைத் தருவார். எடுத்த காரியங்கள் வெற்றியை கொடுக்கும். மன நிம்மதி கொடுக்கும். சனிபகவான் புதிய வேலையை தருவார். வெற்றியும் முன்னேற்றமும் தேடி வரும். பண ஆதாயத்தால் கௌரவம் உயரும். தொழில், வியாபாரத்தில் இருந்த தடைகள் நீங்கும். குடும்பத்தில் வாழ்க்கைத் துணை மற்றும் குழந்தைகளால் மகிழ்ச்சியான சூழல் உருவாகும்.

மிதுனம் கஷ்டங்கள் நீங்கும்
மிதுன ராசிக்காரர்களுக்கு சனியின் தீய தாக்கத்திலிருந்து விடுதலை கிடைக்கும். கடந்த இரண்டரை ஆண்டுகாலமாக அஷ்டம சனியால் நிறைய கஷ்டங்களை அனுபவித்தீர்கள். சனி உங்கள் ராசிக்கு 8 மற்றும் 9 ஆம் வீட்டு அதிபதி. இனி புனித யாத்திரை செல்வீர்கள். ஏப்ரல் மாத இறுதியில் இருந்து ஜூலை நடுப்பகுதி வரை ஒன்பதாம் வீட்டில் சனி சஞ்சரிப்பதால், கொடுத்த பணம், பொருட்கள் சற்று தாமதமானாலும் வந்து சேரும். தேவையற்ற பேச்சுகளை தவிர்ப்பது நல்லது.

காதல் இனிக்கும் கவலை நீங்கும்
உடன் பிறந்த சகோதர, சகோதரிகளுக்கு வேலை மாற்றம், திருமணம் போன்ற சுப காரியங்கள் இனிதே நடக்கும். புதிய தொழில்கள் தொடங்குவதற்கு முன் நன்கு ஆலோசிக்க வேண்டும். காதல் விஷயங்கள் திருப்திகரமாக இருக்கும். கணவன் மனைவி உறவு மகிழ்ச்சிகரமாக அமையும். கிடைத்த வேலையை திருப்திகரமாக செய்து வரவும். வேறு வேலை மாறும் முன் நன்கு ஆலோசித்து செய்யவும். வெளியூர் பயணங்களால் அலைச்சல்களும் வேதனைகளும் ஏற்படும். பெண்கள் தங்கள் உடல் நலனில் அக்கறை காட்டவும்.

துலாம் ராசிக்கு புண்ணிய சனி
துலாம் ராசிக்காரர்கள் புதிய விஷயங்களைக் கற்க சந்தர்ப்பம் அமையும். எதிர்பார்த்த நல்ல செய்திகள் சாதகமாக வந்து சேரும். புதிய ஆடை, ஆபரணங்கள், வண்டி வாகனங்கள் வந்து சேரும். வேலை இல்லாமல் இருப்பவர்களுக்கு வேலை கிடைக்கவும். வேலைக்கு ஏற்ற ஊதிய உயர்வும் கிடைக்கும். கையில் பணப்புழக்கம் சரளமாக இருக்கும். புதிய தொழில் தொடங்க வாய்ப்பும், லாபமும் கிடைக்கும்.

சுப பலன்கள் வந்து சேரும்
ஏற்றுமதி இறக்குமதி, தகவல் தொடர்பு துறைகளில் லாபம் அதிகரிக்கும். தங்க நகைகளை கவனமாகக் கையாளுங்கள். குழந்தைகளின் வருங்காலம் குறித்து ஒரு வித பயம் உண்டாகும். குடும்ப உறுப்பினர்களைக் ஆலோசிக்காமல் எந்த ஒரு முக்கிய முடிவும் எடுக்க வேண்டாம். சனியின் ராசி மாற்றம் துலா ராசிக்காரர்களுக்கு சுப பலன்களைத் தரும். பணி இடத்திலும் குடும்பத்திலும் மகிழ்ச்சி பொங்கும். பாதிப்புகள் குறைய ஆஞ்சனேயரை வணங்க நன்மைகள் நடைபெறும்.












Click it and Unblock the Notifications